வீடுபேறு (அ) முக்தி அடைவதற்குரிய வழிமுறைகளின் எண்ணிக்கை 4 ஆக இருக்கின்றன. அவை;
1. சரியை (தாஸ மார்க்கம்) எனும் முக்தி வழியில் ஆன்மாக்கள் சாலோகம் சென்றடைகின்றன. இவ்வழிமுறையைப் பின்பற்றி, திருநாவுக்கரசர் பத முத்தி எனும் நிலையினை அடைந்தார்.
2. கிரியை (சற்புத்திர மார்க்கம்) எனும் முக்தி வழியில் ஆன்மாக்கள் சாமீபம் சென்றடைகின்றன. இவ்வழிமுறையைப் பின்பற்றி, ஞானசம்பந்தர் பத முத்தி எனும் நிலையினை அடைந்தார்.
3. யோகம் (சக மார்க்கம்) எனும் முக்தி வழியில் ஆன்மாக்கள் சாரூபம் சென்றடைகின்றன. இவ்வழிமுறையைப் பின்பற்றி, சுந்தரர் பத முத்தி எனும் நிலையினை அடைந்தார்.
4. ஞானம் (சன்மார்க்கம்) எனும் முக்தி வழியில் ஆன்மாக்கள் சாயுஜ்ஜியம் சென்றடைகின்றன. இவ்வழிமுறையைப் பின்பற்றி, மாணிக்கவாசகர் பர முத்தி எனும் நிலையினை அடைந்தார்.
மேற்காணும் நான்கு வழிமுறைகளையும் 1. அரும்பு, 2. மலர், 3. காய், 4. கனி என்று தாயுமானவர் ஒப்பிட்டு விளக்கியிருக்கிறார்.