இந்து சமயத்தில் இறைவனை வணங்கும் முறைகள் (நமஸ்காரம்), ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் என வணக்கும் பொழுது பயன்செய்யும் உடல் அங்கங்களைப் பொறுத்து பெயரிடப்பட்டுள்ளன. அவை;
1. ஓரங்க நமஸ்காரம் - தலை குனிந்து வணங்குவது.
2. மூன்று அங்க நமஸ்காரம் - தலை மீது இரு கைகளையும் கூப்பி வணங்குவது.
3. பஞ்சாங்க நமஸ்காரம் - தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.
4. அஷ்டாங்க நமஸ்காரம் - தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.
5. சாஷ்டாங்க நமஸ்காரம் - தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.