வைணவத் திருத்தலங்களில் பஞ்ச ராமர் தலங்கள், பஞ்ச கிருஷ்ண தலங்கள், பஞ்சரங்க தலங்கள் என்று போற்றப்படும் திருத்தலங்கள் இருக்கின்றன. இந்த பஞ்சத் திருத்தலங்களில் ஒன்று மட்டும் கர்நாடகா மாநிலத்திலும், மற்ற திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும் அமைந்திருக்கின்றன.
பஞ்ச ராமர் தலங்கள்
தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமருக்கான ஐந்து தலங்களை, பஞ்ச ராமர் தலங்கள் அல்லது பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்று அழைக்கின்றனர். அவை;
1. முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
2. அதம்பார் கோதண்டராமர் கோயில்
3. பருத்தியூர் ராமர் கோயில்
4. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
5. வடுவூர் கோதண்டராமர் கோயில்
பஞ்ச கிருஷ்ண தலங்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கான ஐந்து தலங்களை, பஞ்ச கிருஷ்ண தலங்கள் அல்லது பஞ்ச கிருஷ்ண சேத்தரங்கள் என்று அழைக்கின்றனர். அவை;
1. திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில் (நாகப்பட்டினம் மாவட்டம்)
2. திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில் (திருவாரூர் மாவட்டம்)
3. திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில் (திருவாரூர் மாவட்டம்)
4. கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
5. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
பஞ்சரங்க தலங்கள்
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் காவிரி நதிக்கரைகளில் அமைந்திருக்கும் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை;
1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
3. அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில், திருஇந்தளூர், மயிலாடுதுறை (தமிழ்நாடு)