நம்மாழ்வார் (Nammalvar) வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் 'மாறன் சடகோபன்' என்ற பெயரில் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தார்.[1][2] நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழப்படுகிறார். கம்பர் இயற்றிய "சடகோபர் அந்தாதி" எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார்.
கீழ்கண்ட 35 பெயர்கள் அனைத்தும் நம்மாழ்வாரின் பிற பெயர்களாகும்.
1. சடகோபன்
2. மாறன்
3. காரிமாறன்
4. பராங்குசன்
5. வேதம் தமிழ் செய்த மாறன்
6. வகுளாபரணன்
7. குருகைப்பிரான்
8. குருகூர் நம்பி
9. திருவாய்மொழி பெருமாள்
10. பெருநல்துறைவன்
11. குமரி துறைவன்
12 பவரோக பண்டிதன்
13. முனி வேந்து
14. பரப்ரம்ம யோகி
15. நாவலன் பெருமாள்
16. ஞான தேசிகன்
17. ஞான பிரான்
18. தொண்டர் பிரான்
19. நாவீரர்
20. திருநாவீறு உடையபிரான்
21. உதய பாஸ்கரர்
22. வகுள பூஷண பாஸ்கரர்
23. ஞானத் தமிழுக்கு அரசு
24. ஞானத் தமிழ் கடல்
25. மெய் ஞானக் கவி
26. தெய்வ ஞானக் கவி
27. தெய்வ ஞான செம்மல்
28. நாவலர் பெருமாள்
29. பாவலர் தம்பிரான்
30. வினவாது உணர்ந்த விரகர்
31. குழந்தை முனி
32. ஸ்ரீவைணவக் குலபதி
33. பிரபன்ன ஜன கூடஸ்தர்
34. மணிவல்லி
35. பெரியன்