கி. பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர், இந்தியாவில் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளில், கர்நாடக மாநிலத்திலுள்ள சிருங்கேரி, ஒரிசாவிலுள்ள பூரி, குஜராத்திலுள்ள துவாரகா, மற்றும் உத்திரப்பிரதேசத்திலுள்ள ஜோதிர்மத் எனும் நான்கு இடங்களில் நான்கு மடங்களை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்த நான்கு மடங்களும் நான்கு மாதாக்களாகக் கொள்ளப்படுகிறது. ஆதிசங்கரர் போதனையை ஏற்று, அந்த மரபு வழி வந்த சந்நியாசிகளின் மடங்களைச் சேர்ந்தவர்களை தசநாமி மரபு (Dashanami Sampradaya) வழியினர் என்கின்றனர்.
இந்த நான்கு மடங்களில் துவாரகை மடாதிபதிகள் தீர்த்தர் மற்றும் ஆசிரமம் இரண்டு பெயர்களில் ஒன்றையும், பூரி கோவர்த்தன மடாதிபதிகள் வனம் அல்லது ஆரண்யம் என இரண்டு பெயர்களில் ஒன்றையும், ஜோஷி மடாதிபதிகள் கிரி, பர்தவம், சகரம் என்ற மூன்று பெயர்களில் ஒன்றையும், சிருங்கேரி சாரதா மடாதிபதிகள் புரி, பாரதி அல்லது சரசுவதி என மூன்று பெயர்களில் ஒன்றையும் தங்கள் துறவுப் பெயருடன் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பத்து பின்னொட்டுப் பெயர்களைக் கொண்ட சன்னியாசிகளை, அத்வைத வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்களையே தசநாமி மரபினர் என்று அழைக்கின்றனர்.
வட இந்தியாவில், தசநாமி சன்னியாசிகள் பல அகாதாக்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். ஜுனா, நிரஞ்சனி, மஹாநிர்வாணி, அதல், அவஹான், ஆனந்தா மற்றும் அக்னி என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வகையினரில் அக்னி அகதாவைத் தவிர, மற்ற அனைத்து அகாதாக்களின் உறுப்பினர்களும் தசநாமி துறவிகளால் ஆனவை. இந்த அகதாக்களுக்கு மஹாமண்டலேஸ்வரர்கள் என்று அழைக்கப்படும் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பொதுவாக, கும்பமேளாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தக் கும்பமேளா நிகழ்வு, பல புதிய சன்னிதிகளை தொடங்குவதற்கு அக்தாக்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
தசநாமி சன்னியாசிகள் தங்கள் மாதாக்களுடன் பெயரளவு தொடர்பை மட்டுமேக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையாக இவர்கள், தங்கள் அகதாக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். தசநாமி எனப்படும் பத்துப் பெயர்களில் ஆரண்யா, ஆஸ்ரமம், பர்வதம், வனம், சாகாரம் என்பன இப்போதெல்லாம் மிகவும் அரிதாகவேக் காணப்படுகின்றன. அனைத்து தசநாமித் துறவிகளும் ஏகாந்தி சன்னியாச மரபு வழியைச் சேர்ந்தவர்கள். பிரம்மன் மற்றும் ஆத்மாவின் அத்தியாவசிய அடையாளத்தைக் குறிக்கும் ஒற்றை மரக் குச்சியைக் கொண்ட ஒரு தடியை அவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
ஒரு மாதாவில் பட்டத்தின் வாரிசு, பொதுவாக, அந்த மாதாவின் தலைவர் சங்கராச்சார்யாவால் பரிந்துரைக்கப்படுவார். சங்கராச்சாரியர்களை இல்லறத்தவராக இல்லாமல், மாணவர் வாழ்க்கையிலிருந்து நேரடியாகப் பார்ப்பது மிகவும் சாதாரணமானது. இது குறிப்பாக, சிருங்கேரி பரம்பரையில் உள்ள வழக்கம். எனவே, ஒரு சங்கராச்சார்யா தனது மாதாவில் பொறுப்பேற்கும் போது, சில சமயங்களில் தனது பதின்ம வயதிற்கு வெளியே மிக இளைஞராக இருக்கலாம். மறுபுறம், பூரி வம்சாவளியினர் இல்லற வாழ்க்கை நிலையைக் கடந்து, தங்கள் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக சன்னியாசிகளாக மாறிய பல தலைவர்களைப் பார்த்திருக்கிறார்கள்.
வாரிசுகளைப் பரிந்துரைக்காமல் சங்கராச்சாரியார் காலமானால், அல்லது வாரிசு தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டால், மற்ற மாதாக்களில் ஒன்றின் தலைவரிடம் ஆலோசனை கேட்கப்படும். இந்த நூற்றாண்டிலேயே, சிருங்கேரி, துவாரகா மற்றும் பூரி சங்கராச்சாரியர்கள் மற்ற மாதாக்களில் ஒன்றின் வாரிசுப் பிரச்சினைகளைத் தீர்க்க அழைக்கப்பட்ட நிகழ்வுகள் உள்ளன.
சிருங்கேரி வம்சாவளியினர் சங்கராசார்யா பட்டத்திற்கு முப்பத்தாறு வாரிசுகளைப் பெயரிட்டுள்ளனர், அதே வேளையில் துவாரகாவிற்கு எழுபது பேர் உள்ளனர். சங்கராச்சாரியார்களின் பூரி பட்டியலில் இன்றுவரை 140-க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. இந்த இரண்டு பட்டியலிலும் அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் முன்வைக்கப்பட்ட சங்கராச்சாரியர்களில் பலர் முன்னாள் இல்லறத்தினர் என்பதால், அவர்கள் ஒப்பீட்டளவில் வயதான காலத்தில் பொறுப்பேற்றனர். அதனால், குறுகிய காலத்திற்கேப் பொறுப்பேற்றனர். ஜோதிர்மத் வரியில் பல இடைவெளிகள் உள்ளன, வரலாற்றின் ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை எனப்படுகிறது.