உளியால் செதுக்கப் பெறாத இறைவர் விடங்கர் என்று அழைக்கப்படுகிறார். ஏழு தலங்களில் சிவபெருமான் விடங்கராகக் காட்சியளிக்கிறார். அவை;
1. திருவாரூர் - வீதிவிடங்கர் (அசபா நடனம்).
2. திருநள்ளாறு - நகவிடங்கர் (உன்மத்த நடனம்).
3. திருநாகைக் கோரணம் என்கிற நாகப்பட்டிணம் - சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).
4. திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல் - ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).
5. திருக்கோளிலி என்கிற திருக்குவளை - அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).
6. திருவாய்மூர் - நீல விடங்கர் (கமல நடனம்).
7. திருமறைக்காடு என்கிற வேதாரண்யம் - புவனி விடங்கர் (அம்சபாத நடனம்)