கல்வி கற்றுத் தரும் குருவை மட்டுமின்றி, குருவின் குருக்களையும் சில அடைமொழிகளுடன் போற்றி வணங்கும் மரபு சீடர்களுக்கு உள்ளது.
இந்து சமய மரபுப்படி, ஆன்மீகக் குருவின் தகுதிக்கேற்ப சில அடைமொழிகளுடன் குரு அழைக்கப்படுகிறார். அவை;
* குரு - சீடர்களுக்குத் தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.
* பரம குரு - ஒரு குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்ட குரு - சீட மரபை நிலைநாட்டிய குரு. இதற்கு உதாரணமாக, ஆதிசங்கரர், அத்வைத மரபைத் தன் சீடர்கள் மூலம் நிலைநாட்டிய பரம குரு.
* பராபர குரு – பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு - சீட மரபுகளைத் தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு. இதற்கு உதாரணமாக, வேத வியாசர். இவர், அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்துவைதம் போன்ற மரபுகள் இந்து சமயத்தில் தோண்றக் காரணமாக இருந்தவர்.
* பரமேஷ்டி குரு – முக்தி வழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. இதற்கு உதாரணமாக, தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகிருஷ்ணர், மகாவீரர் மற்றும் புத்தர்