சைவ தத்துவங்கள் எண்ணும் எழுத்தும் குறிப்பவை:
ஒன்று (1)
* ஆண்டவன்
* அறிவு
* முக்தி
இரண்டு (2)
* இரு செல்வங்கள் - கல்வி, பொருள்
* இரு அறங்கள் - இல்லறம், துறவறம்
* இரு தோற்றங்கள் - சரம், அசரம்
* இரு வினைகள் - நல்வினை, தீவினை
* இரு பிறப்புக்கள் - இம்மை, மறுமை
மூன்று (3)
* மூன்று புரம் - பொன்மதில், வெள்ளி மதில், இருப்பு மதில்
* மூன்று பலை (காய்) - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
* மூன்று (திரி) கடுகம் (மருந்து) - சுக்கு, மிளகு, திப்பிலி
* மூன்று தானம் - உத்தம தானம், மத்திம தானம் ,அதம தானம்
* மூன்று குணம் - சாத்துவீக குணம், இராச(ச) குணம், தாமத குணம்
* மூன்று உயிர்த்தீ - உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி.
* மூன்று மொழிகள் - பழித்தல், புகழ்தல், மெய்கூறல்.
* மூன்று சுடர்கள் - சூரியன், சந்திரன், அக்கினி.
* மூன்று குற்றங்கள் - காமம், வெகுளி, மயக்கம்.
* மூன்று உலகங்கள் - பூமி, அந்தரம், சுவர்க்கம்.
* மூன்று தொழில்கள் - படைத்தல், காத்தல், அழித்தல்.
* மூன்று காலங்கள் - இறந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம்.
* மூன்று பொறிகள் - வாக்கு, காயம், மனம்.
* மூன்று பிறப்புக்கள் - உம்மை, இம்மை, மறுமை.
* மூன்று பாவ புண்ணியப் பழக்கங்கள் - செய்தல், செய்வித்தல், உடன்படல்.
* மூன்று நாடிகள் - வாத நாடி, பித்த நாடி, சிலேத்துமம். நாடி
நான்கு (4)
* நான்கு உபாயங்கள் - சாமம், பேதம், தானம், தண்டம்.
* நான்கு புண்ணிய தோற்றங்கள் - தவம், ஒழுக்கம், கொடை, கல்வி.
* பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
* ஆடவர் குணம் நான்கு - அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி
* நான்கு இழிச்சொல் - குறளை, பொய், கடுஞ்சொல், பயனிலசொலல்.
* நாற் கதி - தேவர், மானுடர், விலங்கு, நரகர்.
ஐந்து (5)
* ஐந்து துரக கதி - மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி.
* ஐந்து உணவு - கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்.
* ஐம் பூதங்கள் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
* ஐந்து வேள்விகள் - தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்யாகம், மானுடயாகம்.
* ஐந்து தொழில்கள் (இறைவன்) - படைத்தல், காத்தல், அழித்தல்., மறைத்தல், அருளல்.
* ஐந்து அவத்தைகள் - சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.
* ஐந்து வினாக்கள் - அறியான் வினாவல், அறிவொப்புக்காண்டல்,
* ஐந்து கர்ம இந்திரியங்கள் - வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்(ஸ்)தம்.
* ஐந்து கர்ம இந்திரிய விடயங்கள் - வசனம், கர்மம், கமனம், விசர்ச(ஜ)னம், ஆநந்தம்.
* ஐந்து ஞான இந்திரியங்கள் - துவக்கு, சட்சு(க்ஷு), சுரோத்திரம், சிகு(ஜிஹ்)வை, ஆக்கிராணம்.
* ஐந்து தன் மாத்திரைகள் - சப்த, பரிச, ரூப, ரச, கந்தம்.
* ஐந்து அந்தக் கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம்.
* ஐந்து வாயுக்கள் - பிராணண், அபானன், வியனன், உதானன், சமானன்.
* ஐந்து உப வயுக்கள் - நாகன், கூர்மன், கி(க்)ருகரன், தேவதத்தன், தநஞ்சயன்(தனஞ்சயன்).
* ஐந்து ஆச்ரயங்கள் - அமராச்சரயம், விபச(ஜ)னாச்ரயம், ச(ஜ)லாச்ரயம், மலாச்ரயம், சுக்கிலாச்ரயம்.
* ஐந்து கோசங்கள் - அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆநந்தமயம்.
* ஐந்து வடிவங்களூம், திசைகளூம்
1. சத்யோ ஜாதம் - படைத்தல் - மேற்கு - நிலம் - பால் நிறம்.
2. வாமதேவம் - காத்தல் - வடக்கு - நீர் - சிவப்பு நிறம்
3. அகோரம் - அழித்தல் - தெற்கு - நெருப்பு - அஞ்சன (கறுப்பு) நிறம்
4. தற்புருடம் - மறைத்தல் - கிழக்கு - காற்று - மஞ்சள் குங்கும நிறம்
5. ஈசானம் - அருளல் - வடகிழக்கு - ஆகாயம் - படிக நிறம்
ஆறு (6)
* ஆறு வேதாங்கங்கள் - சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம்.
* ஆறு உட்பகைகள் - அவா, வெகுளி, இவறல், மயக்கம், செருக்கு, பொறாமை(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.)
* ஆறு புறச்சமயங்கள் - உலோகாதயம், பௌத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்.
* ஆறு அகச்சமயங்கள் - சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்.
ஏழு (7)
* நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு - விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.
* ஏழு முனிவர் - அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
* ஏழு நரகம் - கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.
* ஏழு கீழுலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.
* ஏழு மேலுலகம் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.
* ஏழு கடல் - உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்.
* ஏழு திரைகள்
1. கருப்பு - மாயா சக்தி
2. நீலத்திரை - கிரியா சக்தி
3. பச்சை - பரா சக்தி
4. சிவப்பு – இச்சா சக்தி
5. பொன்வண்ணம் - ஞான சக்தி
6. வெண்மை - ஆதி சக்தி
7. கலப்பு - சிற்சக்தி
* ஏழு பிறப்பு
1. ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
2. அவயவங்கள் உற்பத்திக் காலம்.
3. பிண்டம் வெளிப்பட்ட காலம்.
4. குழந்தைப் பருவம்.
5. பாலப் பருவம்.
6. குமரப் பருவம்.
7. முதுமைப் பருவம்.
இதில் சூட்சமப் பிறப்பு 7
1. சாக்கிரம்
2. சொப்பனம்
3. சுழுத்தி
4. சாக்கிரத்தில் சொப்பனம்
5. சாக்கிரத்தில்சுழுத்தி
6. சொப்பனத்தில் சொப்பனம்
7. சொப்பனத்தில் சுழுத்தி
* ஏழு தாதுக்கள் - இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து.
எட்டு (8)
* எட்டு சித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
* எட்டு யோகாங்கங்கள் - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி
* எட்டு தருமாங்கங்கள் - அறமையப் படாமை, விருப்பமின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிலை நிறுத்தல், அறுசமயத்தோர்க்கு அன்பு, அறம் விளக்கல்.
* எட்டு மெய்ப்பரிசங்கள் - தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்.
* எட்டு உடற்குறைகள் - குறள், செவிடு, மூங்கை, கூன், மருள்(அலி), குருடு, மா(விலங்கு உறுப்புடையது), உறுப்பில்லாப் பிண்டம் (ஊனமுற்றது).
ஒன்பது (9)
* ஒன்பது தாரணை - நாம தாரணை, மாயா தாரணை, வச்சிர தாரணை, சித்திர தாரணை, சத்த தாரணை, வத்து தாரணை, சதுரங்க தாரணை, செய்யுள் தாரணை, எண்பொருட்டாரணை (நினைவு,குறைவு ஆகிய).
* பெரியோருக்குச் செய்யும் புண்ணியம் ஒன்பது - எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்தல், கால் கழுவல், அருச்சித்தல், தூபங்காட்டல், தீபங்காட்டல், துதித்தல், அமுதூட்டல்.