சரணாகதி என்பது இந்து சமயத்தின் வைணவ அடியார்கள், எவ்விதப் பலனும் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளான திருமாலிடத்தில் ஒப்புவிக்கும் ஒரு வகையான பக்தியாகும். சரணாகதித் தத்துவம் இராமானுசர் மற்றும் சைதன்யர் ஆகியவர்களால் வலியுறுத்தப்பட்டதாகும். பக்தனின் உயர்ந்த குறிக்கோளான திருமாலையும் இலக்குமியையும் அல்லது கிருஷ்ணரையும் இராதையையும் அடைவதற்கு, சரணாகதியே எளிதானது என இராமானுசரும், சைதன்யரும் போதிக்கின்றனர்.
வீடணன் மற்றும் கஜேந்திரன் முறையே இராமர் மற்றும் பெருமாளிடம் செய்த சரணாகதி வைணவ சமயத்தில் பெரிதும் போற்றப்படுகிறது.