நடராசர் அபிசேகங்கள் என்பது சிவன் கொண்டிருக்கும் 64 மூர்த்தி வடிவங்களில் முக்கிய மூர்த்தி வடிவமான நடராசர் குடி கொண்டுள்ள சிவன் கோயில்களில் ஆண்டு ஒன்றுக்கு ஆறு அபிசேகங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ் ஆண்டின் மூன்று நட்சத்திர நாட்களிலும், மூன்று திதி நாட்களிலும் நடராசர் அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. தமிழ் மாதங்களில் நட்சத்திரங்களின் அடிப்படையில், சித்திரை திருவோணம், ஆனி உத்தரம், மார்கழி திருவாதிரை ஆகிய மூன்று நாட்களிலும், திதி அடிப்படையில், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தி ஆகிய மூன்று நாட்களிலும் ஆக மொத்தம் வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே சிவாலயங்களில் நடராசருக்கு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.
ஆனித் திருமஞ்சனம் என்றழைக்கப்படும் ஆனி உத்தரம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய இரண்டு நாட்களும் சூரிய உதயத்திற்கு முன்பே நடராசருக்கு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.
நடராசர் அபிசேகங்கள் நடக்கும் நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னதிகளில் ஆராதனைகள் செய்வதாகத் தொன்ம நம்பிக்கை இருக்கிறது.