வேதங்களில் தர்மத்தின் மூலமாய் அமைந்த சுருதிகளை அடிப்படையாகக் கொண்டு சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிச் சொல்வதாக அமைந்தவையேத் தர்மசாத்திரங்கள் என்ப்படுகின்றன. இவை, மனித வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்று பொருள் கொள்ளலாம். தர்மசாத்திரங்களுள் குறிப்பிடத்தக்கவையாகக் கீழ்க்காணும் சாத்திரங்கள் அமைந்திருக்கின்றன.
1. மனுதரும சாத்திரம்
2. ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்
3. விதுர நீதி
4. ஆசாரக்கோவை
5. கௌதம சூத்திரம்
6. விஷ்ணு தர்ம சூத்திரம்
7. போதாயன தர்ம சூத்திரம்
8. நாரத ஸ்மிருதி
9. சுக்கிர நீதி
10. காமாண்டக நீதி சாரம்
11. பிரகஸ்பதி ஸ்மிருதி
12. ஆங்கிரச ஸ்மிருதி
13. வியாச ஸ்மிருதி
14. தக்ஷ ஸ்மிருதி
15. யாக்யவல்க்கிய ஸ்மிருதி
16. சம்வர்த்த ஸ்மிருதி
17. அத்ரி ஸ்மிருதி
18. காத்யாயன ஸ்மிருதி
19. எம ஸ்மிருதி
20. வசிஷ்ட தர்ம சூத்திரம்
21. சங்க ஸ்மிருதி
22. லகு ஹாரித ஸ்மிருதி
இவையனைத்தும், எழுதியவர்களின் பெயர்களைக் கொண்டே வழங்கப்பெறுகின்றன.
இந்தத் தருமசாத்திரங்களை ஆசார காண்டம், வியவகார காண்டம், பிராயச்சித்த காண்டம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.