வைணவக் கடவுளான திருமாலின் படைத்தளபதியாக இருப்பவர், விசுவக்சேனர். இவரைத் தமிழில், ‘சேனை முதலியார்’ என்று அழைக்கின்றனர். சேனை முதலியார் வர்ணனின் மகனாவார். முக்கியமான பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகமக் கோயில்களில் இவர் இருப்பார். எந்த ஒரு வைணவச் சடங்குகள் நடைபெற்றாலும், முதலில் சேனை முதலியார் வணங்கப்படுகிறார்.
விஷ்வக்ஸேனரைப் பற்றி பஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள லட்சுமி தந்திரம் கூறுகிறது. சேனை முதலியார் நான்கு கைகளுடன் பாஞ்சசன்யம், தாமரையை பிடித்துக் கொண்டு இருப்பார். மறுபுறமுள்ள இரு கைகளில், ஒரு கையில் வாள், மற்றொரு கையில் ஒரு தடியை ஏந்திக் கொண்டு இருப்பார். மஞ்சளாடை அணிந்து இருப்பார். தாடி மற்றும் புருவம், நான்கு பற்கள் கொண்டிருக்கும் இவரது கண்கள் பளபளப்பாக இருக்கும், சேனை முதலியார் திருமாலின் அனைத்து ஆயுதங்களையும் ஏந்திக் கொண்டு இருப்பார், ஸ்ரீவஸ்தா போன்ற திருமாலின் சின்னங்களும் உட்படும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சேனை முதலியார் நான்கு கைகளுடன் மேல் இரண்டு கைகளில் சுதர்சன சக்கரமும் பாஞ்சசன்யமும் ஏந்திக் கொண்டுள்ளார். கீழ் இரண்டு கைகளில் கதையை ஏந்திக் கொண்டு அவ்கானா ஹஸ்தத்தில் காட்சியளிக்கிறார்.
கூர்மம் புராணத்தின் படி, சிவன் பிட்சாடனர் வடிவத்தில் வைகுண்டத்திற்கு வருகை தந்தார். வைகுந்த வாயில் காவலரான சேனை முதலியார், சிவனை அடையாளம் காணாமல் அவரை உள்ளேச் செல்ல அனுமதிக்கவில்லை. பிட்சாடனர் உருவத்தில் இருந்த சிவன் தனது பயங்கரமான வடிவத்தை எடுத்து விஷ்வக்ஸேனருடன் போர் புரிந்தார். இருப்பினும், காலவேகத்தை விஷ்வக்சேனன் தோற்கடித்தான். சேனை முதலியார் பைரவரை நோக்கிச் சென்றதால், பைரவரே தனது திரிசூலத்தை எடுத்து விஷ்வக்சேனரைக் கொன்று, அவரது சடலத்தை அதன் மீது ஏற்றினார். பைரவரின் இந்த வடிவம் கண்கலமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.