கோவணாண்டி முருகன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
கோவணத்துடன் உள்ள பழனியாண்டியான முருகனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்று சிலரிடம் தவறான எண்ணம் இருக்கிறது.
அப்படி வழிபட்டால் நம்மையும் மொட்டையடித்து எல்லாவற்றையும் துறக்கச் செய்து விடுவான் என்கிற பயமே அதற்கான காரணமாக இருக்கிறது. இது சரியா?
இவ்வுலகிலுள்ள துன்பங்களிருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால், இவ்வுலகில் நாம் உடையவை என்ரு கருதுகிற பொருள்களில் உள்ள ஆசையை விட்டுவிட வேண்டும். அப்படி ஆசையை விடவிடத்தான் பெற வேண்டிய பேறுகளைப் பெறலாம்.
உலக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன் அந்த உலகத்து உடைமைகளிலேயே, பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படி பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும்? ஆதலால், அவன் உடைமைகளை எல்லாம் துறக்கிறான். அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதனால்தான் நாம் பெறுதற்கரிய பேறுகளை எல்லாம் பெற முடிகிறது. அவன் துறவியானது நம்மைத் துறவியாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக அருள் உடையவர்களாக நம்மை ஆக்குவதற்குத்தான். எல்லாம் கடந்த அவனுக்கு ஏது பற்றும் துறவும்?
ஆகவே பழநி ஆண்டவன் படத்தைத் தாராளமாக வைத்து வழிபடலாம்.
- “ஸ்ரீ தாத்தாத்ரேய விஜயம் நூலிலிருந்து” சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.