1. வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், வாங்குவோனுக்கும் விற்பவனுக்குமிடையில் சமமான இலாபம் இருக்கிறது.
2. வியாபார நடவடிக்கைகளில் விற்பவன் ஒரே ஒரு தடவைதான் இலாபம் பெறுகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான நடவடிக்கைகளில் கடன் கொடுத்தவன் தன் மூலதனத்தின் (அசல்) மீது தொடர்ச்சியாக இலாபம் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அந்தத் தொகை வட்டிக்கு மேல் வட்டியாகி அதிகரித்து இறுதியில் கடன்பட்டவனைப் பாழாக்கி விடுகிறது.
3. வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஒருவன் தன் உழைப்பு, அறிவு இவற்றின் இலாபத்தை அடைகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான தொழிலில் கடன் கொடுத்தவன் கடன்பட்டவனுடைய வருமானத்திலிருந்து கொள்ளை இலாபம் பெறுகிறான். மேலும், கடன் வாங்கியவனுக்கு இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமேற்பட்டாலும் சரி, கடன் கொடுத்தவன் இலாபமே அடைகிறான்.
1. அது உலோபித்தன்மை, சுயநலம், இரக்கமின்மை, பணத்தைப் பூஜித்தல் முதலான தீமைகளை உண்டாக்குகிறது. அனுதாப உணர்ச்சி, பரஸ்பர உதவி செய்தல், கூட்டுறவு ஆகியவற்றையும் அது அழித்து விடுகிறது. மக்கள் பணத்தைச் சேர்த்துத் தங்கள் சொந்த நலத்திற்காக மட்டும் அதைச் செலவு செய்யும்படி தூண்டுகிறது. செல்வம் சமுதாயத்தின் எல்லாப் பாகங்களிலும் தடையின்றிச் சுற்றி வருவதைத் தடுக்கின்றது. ஏழைகளிடமிருந்து பணக்காரரிடம் செல்லும் ஒரு பாதையை உண்டாக்குகிறது. அதன் விளைவாக, சமுதாயத்தின் செல்வம் ஒரு சிலருடைய பணப்பெட்டிகளில் குவிந்து, இறுதியாக அது சமுதாயம் முழுவதையும் பொருளாதார வீழ்ச்சியிலும் அழிவிலும் கொண்டு சேர்த்து விடுகின்றது.
2. ஏராளமான பணம் படைத்தோர் அதை வட்டிக்குக் கடன் கொடுத்து, இன்னும் ஏராளமான பணத்தை அதிகரிக்கிறார்கள். இந்த அதிகரிப்பு தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் குறைத்ததிலிருந்து கிடைத்தது. இவ்வாறு பணக்காரர் பெரும் பணக்காரராகின்றார்கள். ஏழைகள் மேலும் மேலும் வட்டிக்குக் கடன் வாங்கி பரம ஏழைகளாகின்றார்கள். இறுதியாக சமுதாயம் ஆட்டம் கண்டுவிடுகிறது.
எல்லாச் சட்டங்களின், அதிகாரியான ஆண்டவன் வியாபாரம் போன்ற ஒன்றை அனுமதித்து, வட்டி போன்ற மற்றொன்றின் மீது தடை வித்தித்துள்ளான். ஒன்று ஒளியுடனும், மற்றொன்று இருளுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் ஒரு தொழிலுமல்ல, வியாபாரமுமல்ல என்பது உண்மையிலும் உண்மையாகும். தனிக் கல்வியோ, தொழில் அறிவோ தேவையில்லாததால் அது ஒரு தொழில் அல்ல. அது ஒரு அலுவல். மனிதர்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதனால் வளர்ச்சியடையும் இந்த வேலை எப்போதும் இழிவு. இந்த அலுவலில் ஈடுபட்டவர்கள் பொதுவாக இரக்கமற்ற இழிவானவர்கள். பணக்கஷ்டத்திலுள்ளோரை பலவகைகளிலும் துன்புறுத்தி, அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தித் தங்கள் பணத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.
3. வட்டியால் விளையும் நாசவேலைகளை ஒவ்வொருவரும் அறிவோம். அதனால் ஏற்படும் தீமைகள் ஒன்றிரண்டல்ல. அது இரக்கமின்மையை உண்டாக்குகின்றது. வீண் செலவையும் நீதி தவறிய வாழ்க்கையையும் விளைவிக்கின்றது. பேராசையைப் பெருக்குகின்றது. பொறாமைக்கு வழி வகுக்கின்றது. உலோபித்தனத்தை உற்சாகப்படுத்துகின்றது. வெட்கம் கெட்ட கேவலமான நிலைக்கு மனிதனைத் தாழ்த்தி விடுகின்றது. ஆனால், இசுலாம் மார்க்கம் ஒன்றே இந்த துர்லாபமான வழக்கத்தை முற்றிலும் சட்ட விரோதமானதென்று பிரகடனம் செய்து தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. கிரேக்க, ரோம நாகரீகங்களில் மக்கள் அதன் ப்ழுவால் நசுக்கப்பட்டார்கள். ஆனால், தற்கால ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்களைப் போன்றே, அந்த நாடுகளின் சட்டம் சமைத்தோர் அதை முற்றிலும் தடுக்கவில்லை. பைபிளில் வட்டி தடுக்கப்பட்ட போதிலும் யூதரல்லாதவர்களிடம் யூதர்கள் வட்டி வாங்குவதை அனுமதித்துள்ளது. குர் ஆன் ஒன்றே எல்ல வகைகளிலும் வட்டியைத் திட்டவட்டமாகத் தடுத்து உலகம் முடியும் வரை புகழைப் பெற்றுக் கொண்டது.
4. மாபெரும் பெருமைக்குரிய முஹம்மது நபியவர்கள் இந்த வட்டித் தொழில் செய்வோரால் ஏற்படும் துன்பத்தையும் அறிந்து கொண்டு, முஸ்லீம்களுக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கலாகாதென்று உபதேசித்தார்கள். நிச்சயமாக, இது பொருளாதாரச் சட்டங்களில் மிக்க அறிவு நிறைந்த சட்டமாகும். எந்தெந்த நாடுகளில் உயர்ந்த வட்டி ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கைத்தொழிலிலும், வியாபாரத்திலும் முன்னேற்றமடைய முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
இறுதி மக்கா புனித யாத்திரை - ஹஜ் - செய்த புனிதமான தினத்தில், நபிபெருமானாரவர்கள் அறியாமைக் காலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய வட்டிப் பணங்களெல்லாம் ரத்து செய்யப்பட்டன என்று விளம்பரம் செய்ததோடு, அதற்கு உதாரணமாகத் தங்கள் பெரிய தந்தை அப்பாஸ் என்பவருக்கு வர வேண்டிய வட்டித்தொகை நிராகரிக்கப்பட்டு விட்டதென்று அறிக்கையிட்டார்கள். அதுமட்டுமல்ல, இந்த வட்டியில் தொடர்புடைய எல்லோரும் - பத்திரம் எழுதுவோரும் - சாட்சிகளும் - அல்லாவின் சாபத்திற்குள்ளாவார்கள் எனவும் கூறியுள்ளார்கள். ரிபா - கடுமையான வட்டி மட்டும் தடுக்கப்பட்டுள்ள்தெனவும், வேறுவிதமான முறைகள் அனுசரிக்கப்படலாம் என்பதும் இந்தக் கட்டளைகளின் பொருளல்ல. ஆனால், இந்தப் போதனைகளெல்லாம் முதலாளித்துவக் கொள்கையின் மனப்பான்மை, ஒழுக்க நிலைகள், கலாச்சாரம், பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அழிக்கவே வெளியிடப்பட்டன. மேலும் ஒரு புதிய அமைப்பை உண்டாக்கி, அதில் உலோபித்தனத்திற்குப் பதிலாகத் தானதருமம், சுயநலத்திற்குப் பிரதியாக அனுதாபம், கூட்டுறவு, வட்டிக்குப் பிரதியாக ஜகாத், பாங்க் முறைகக்குப் பதிலாக பைத்துல்மால் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டுறவுச் சங்கங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், எதிர்கால நலனை நோக்கி ஏற்பட்ட சேமிப்பு முதலியன ஏற்படுத்தப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கவும் இந்தப் போதனைகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.