ஜகாத் - தானம்
இசுலாமியச் சட்டப்படி ஒவ்வொரு மனிதனும் தன் சொத்தில் ஒரு பகுதியை ஏழையான அண்டை அயலாருக்கு உதவி செய்யும்படி கடமையாக்கப்பட்டுள்ளான். ஒருவனுடைய பொருட்கள், எல்லாவிதமான சொத்துக்கள், வியாபாரத்தில் இலாபம் முதலியவற்றி நாற்பதில் ஒரு பாகம், அதாவது இரண்டரை சதவிகிதத்தை பிறருக்கு உதவிட கடமையாக்கப்பட்டுள்ளான்.
சொத்து ஒரு குறிப்பிட்ட தொகை வரை இருந்தால்தான், அவனிடம் அது ஓராண்டு முழுமையும் இருந்தால்தான் தானம் உரியதாகும்.
வேளாண்மையிலும், சுமை சுமப்பதிலும் பயன்படுத்தப்படும் காலநடைகளுக்காக ஜகாத் இல்லை. இதையன்றி, ரமலான் மாத இறுதியிலும், ஈதுல் ஃபித்ர் பெருநாளன்றும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன் சார்பிலும் தன் குடும்பத்தினர் ஒவ்வொருவர் சார்பிலும் ரமலான் மாதம் நோன்பு நோற்று நித்திரை செய்யும் விருந்தாளியின் சார்பிலும் ஒரு படி கோதுமை, வாற் கோதுமை, பேரீச்சை, திராட்சை, அரிசி அல்லது வேறு தானியம், அதனதன் விலை கொடுக்க வேண்டும்.
ஜகாத் பெற்றுக் கொள்ளும் உரிமையுள்ளோர்
1. ஏழைகள், தேவையுள்ளோர்.
2. ஜகாத் வசூலித்து விநியோகிப்போர்.
3. விடுதலையடைய விரும்பும் ஆனால், அதற்கான வசதியில்லாத அடிமைகள்.
4. வாங்கிய கடனைக் கொடுக்கச் சக்தியற்ற கடன்பட்டோர்.
5. பயணிகளும், புதியவர்களும்.
-சையித் இப்ராஹிம் தொகுத்த "குர் ஆன் போதனைகள்" நூலிலிருந்து கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.