Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


17. அய்யாவும் அகிலத்திரட்டு அம்மானையும்

இந்துக்களுக்கு பகவத்கீதை எப்படியோ, கிறிஸ்தவர்களுக்கு பைபிள் எப்படியோ, இஸ்லாமியர்களுக்கு குர்ஆன் எப்படியோ அது போன்று அய்யா வழி மக்களுக்கு உரிய வேதநூல்தான் அகிலத்திரட்டு அம்மானை. அகிலம், அகிலத்திரட்டு என்ற பெயர்களிலும் இதை அழைக்கிறார்கள். இதை எழுதியவர் அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரிகோபாலன் என்பவர். அய்யாவின் வாய் வார்த்தைகளாகவே, அதாவது அய்யாவே நேரடியாக சொல்வது போன்று பாடல் வரிகளாக அகிலத்திரட்டு எழுதப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகள்வரை பனை ஓலையில் பாதுகாக்கப்பட்டு வந்த அகிலத்திரட்டு அம்மானை கி.பி.1939 ஆம் ஆண்டு முதன் முறையாக அச்சில் ஏற்பட்டது.

இந்த அகிலத்திரட்டு பிறந்த கதை கொஞ்சம் வித்தியாசமானது. இதை எழுதிய அரிகோபாலன் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஒரு வேதத்தை, ஆகமத்தை எழுத முடியும்? இதுவும் அய்யா வைகுண்டரின் அற்புதமே!

அது கி.பி.1840ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி வெள்ளிக்கிழமை

அன்று இரவு 12 மணிக்கு அரிகோபாலன் கனவில் தோன்றிய அய்யா வைகுண்டர் (இந்த காலக்கட்டத்தில் அய்யா சாமித்தோப்பில் 6 ஆண்டுகால தவம் மேற்கொண்டிருந்தார்), ‘ஏரணியும் மாயோன்...’ என்ற முதல் அடியை எடுத்துக் கொடுக்க... திடுக்கிட்டு எழுந்த சகாதேவன், பக்திப் பெருக்கால் பரவசம் ஆனார். தம்முள் வைகுண்டர் உறைந்திருப்தைப் போன்ற ஓர் உணர்வு அவரை மெய்மறக்கச் செய்தது. அந்த நேரம் அவரது கண்களுக்கு மகாவிஷ்ணு, மகாலட்சுமியிடம் உலக வரலாற்றை கூறுவதைப் போன்ற ஒரு காட்சி தெரிந்தது.அந்த அருட்காட்சியில் கேட்டவை அனைத்தையும் அப்படியே அம்மானை ராகத்தில் பனை ஓலைகளில் எழுத ஆரம்பித்தார். 14 நாட்களில் அதை எழுதி நிறைவு செய்தார். இது, இறைவனால் அம்மாவுக்குச் சொன்ன செய்தி ஆகையால், அந்த ஆகமத்திற்கு ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்று வைகுண்டரின் அனுமதியோடு பெயர் சூட்டினார் அவர்.

அகிலத்திரட்டை எழுதிய அரிகோபாலனை, அதை எழுதும் ஒரு கருவியாக அய்யா பயன்படுத்திக் கொண்டார் என்பது அய்யா வழி மக்களின் நம்பிக்கை. அய்யா வைகுண்டம் சென்ற பிறகுதான், இந்த ஏடு கட்டவிழ்க்கப்பட்டு, அதில் அய்யா கூறிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அய்யா வழியும் பரப்பப்பட்டது.

அகிலத்திரட்டானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகம் தோன்றியது முதல் வைகுண்ட அவதாரத்திற்கு முன்பு வரையிலான சம்பவங்கள் முதல் பகுதியாகவும், வைகுண்டர் அவதாரம் முதல் தர்மயுகம் வரை உள்ள நிகழ்வுகள் இரண்டாவது பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இப்போது படிப்போரின் வசதிக்காக அகிலத்திரட்டானது ஒன்று, இரண்டு, மூன்று... என்று 17 பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது. நீடிய யுகம், சதுர யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய 5 யுகங்களில் நடந்த சம்பவங்கள், மகாவிஷ்ணுவின் திருவிளையாடல்கள், கலியுகம் அழித்து தருமத்தை நிலைநாட்ட குரோணி என்னும் அசுரன் படைக்கப்பட்ட வரலாறு, சம்பூர்ணதேவன் அய்யா வைகுண்டராக பூமியில் அவதாரம் எடுத்தல், 18ஆம் நூற்றாண்டில் நாஞ்சில் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்ட 18 ஜாதியினர் அனுபவித்த கொடுமைகள், நாடார் சமூகத்தின் மேன்மைகள், கலிநீசனை வென்று தருமயுகத்திற்கான பணிகளை நிர்மாணித்தல், அதன் தொடர்ச்சியாக மீண்டும் அய்யா வைகுண்டர் திருமால் மலரடி செல்லுதல்... என்று விரிவாக விரிகிறது அகிலத்திரட்டு அம்மானை.

“தரும யுகமாக்கி தரணியை ஆட்சி செய்ய கர்மக் கலியில் கடவுளர் வந்த கதை” என்று அகிலத்திரட்டு பற்றி அந்த நூலிலேயே குறிப்பிடுகிறார், அதை இயற்றிய அரிகோபாலன்.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிக்க ஜாதியினர், 18 ஜாதியினரை ஒதுக்கி வைத்து, அவர்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்களையும் அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது அகிலத்திரட்டு. தங்கள் இஷ்டப்படி சமஸ்தான மன்னரை தலையாட்ட வைத்த திருவிதாங்கூர் நம்பூதிரிகள், அப்பாவிப் பெண்களுக்கு எதிராக இழைத்த பாலியல் கொடுமைகள் ஏராளம்... ஏராளம்..! அன்றே கோவிலில் சாமியைத் தேடி வந்த பெண்களின் மார்பை பிடித்து இழுத்து சில்மிஷங்கள் செய்ததோடு, பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டு, தங்களை ஒரு வெறியர்களாகவே அவர்கள் காட்டிக் கொண்டார்கள். நம்பூதிரிகளால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிறைய.

அப்பாவிப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த வன் கொடுமைகளை பொங்கியெழுந்து சாடுகிறது அகிலத்திரட்டு.

“வெங்கப் பயல் சிலர் வேசையுட ஆசையினால்
என்னைக் கெணியாமல் என் கோவிலுக்குள்ளே தான்
சன்னை சொல்லி பெண்களுடன் சரசமிட்டு எச்சிட்டான்
இருபேரும் ஒத்து இருந்தாலும் பழுதல்லவே...

ஒருவன் பெண்ணாளை ஒரு நம்பூரி பிடித்து
எனக்கு ஏவல் பண்ணி ஏந்திழையால் போகுகையில்
மனம் பொத்தாக்குழலி மார்பின் கலைபிடித்து
இழுத்து வலித்து இழுக்கோடு செய்யவென்று
பழுத்துச் சழிந்த பருத்த ஒரு நம்பூரி

மேல்தலையில் இட்ட முத்திரி கழற்றாமல்
மால மயக்கத்தாலே மனம் கலங்கி நம்பூரி
மங்கை மனம் கலங்க வாரிப் பிடித்து இழுத்துக்
கொங்கைதனைப் பங்கமதாய் கூறழியவே கிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி என் பேரில் ஒரு சாபம் கூறினாள்...
சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து
சீவனது விடவே சிவனே கண் நோக்கினளே...”

என்கிறது அகிலத்திரட்டு.அதே போல், பெண்களை வாழவிடாத நாடும் கெட்டு குட்டிச்சுவராகப் போய்விடும் என்றும் எச்சரிக்கிறது அகிலத்திரட்டு.

“வாழாத மங்கையரை வைத்திருந்த ராச்சியத்தில்
தர்மம் தலைகெடுங் காண் சாஸ்திரத்துக் கேராது
வர்மம் வந்து சிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பம் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்பு கெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை அழியும் குளங்கரைகள் தாணிடியும்
நாட்டை முடிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்...”

என்று, தனது வயிறெரிய குறிப்பிடுகிறது அது.

இப்படி, அன்றைய நாட்டு நடப்புகளை அப்பட்டமாக அகிலத்திரட்டு வழியாக குறிப்பிட்ட அய்யா, எதிர்கால நிகழ்வுகளையும் எளிய தமிழில் கூற தவறவில்லை.

சாமிவேதம் மறந்து சுழல்வேதம் உண்டாகும்
பாரிகட்கு மூப்பு பார்மீதில் உண்டாகும்
பொளிணிச் சேத்திரக் குருக்கள் பூமிதனில் மேவிவரும்
சிவ ஆலயங்கள் தேளிணிந்து சுவரிடியும்...

கிணறு பாழாகும் கீழுற்றுப் பொளிணியாகும்
காமோக வெறியால் கனபழிகள் உண்டாகும்
மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
மாட்டின் வயிற்றில் மனிதர்போல் தான் பிறக்கும்...

காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும்
மாணிக்கம் தங்கம் வைரம் மிக மறையும்
மாநிலத்தில் வேளாண்மை மழையால் கெடுதிவரும்
கூடப் பிறப்பைக் கொடும்பகைபோல் எண்ணிடுவார்...

நட்சத்திரம் உதிரும் நடக்கும் வழிகுறுகும்
வானம் உறுமும் மழைகீழ் சொரியாது
ஈனருக்குக் காலம் நிரம்பமிக உண்டாகும்
காளிணிதல் பெருகும் கஞ்சா அபின்பெருகும்...

சன்னாசி நிஷ்டை தவறி அலைவார்கள்
அக்னியால் தண்ணீரால் அநேகச் சீமையழியும்
கொலை களவு நிரம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்
தலைஞான வேதமதைத் தடுமாறிக் கைவிடுவார்...

கள்ளக் கணவருடன் கருத்துமிக மாதருக்காம்
கூடி உடன்பிறந்தக் கோதையரைப் பெண்ணெனவே
நாடி அவரெண்ணி நாணி இறப்பார் கோடி
இராச நெறிநீதம் இராட்சியத்தில் காணாது...

பிராயம் வரும்முன்னே பெண்கள் நிலையழிவார்
தனுவாளிணிப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
வாரி கோபிக்கும் வாங்கும் சில இடங்கள்...

சாதிவரம்பு தப்பி நிலை மாறும்
நட்சத்திரம் உதிரும் நடக்கும் வழி குறுகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மாமோக ஆசையினால் மா சண்டை உண்டாகும்

வானத்து இடிகள் வருடா வருடந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலையதிரும்
இலைகள் உதிரும் இருவேதம் பொய்யாகும்
தானம் அழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்

நாட்டை அரசாங்கம் நாலுரண்டு மூன்றாக்கும்
அதிலே சிலபேர் அரசுவுனக்கு எனக்கெனவே
விதியை அறியாமல் வெட்டிக் கொண்டே மாள்வார்
நேர்மைக்குக் காலம் நெகிந்திருக்கும் பார்மீதில்
போருக்கு எவரும் புத்தியாய் தானிருப்பார்

கேடு தொடுத்துலகம் கெட்டவரும் நாடு தனில்
மழைதழைத்துப் பெய்யாமல் வானம் சுறுங்கி வரும்
களைகள் பயிரில் கலக்குமே விளையாது
வெள்ளத்தால் பஞ்சம் வரும் வெண்சாவி ஆகிவிடும்
பள்ளத்தாலும் நெற்பயிர் நடுங்கும் சனங்களுற்ற
பட்டணங்கள் தோறும் பசிநோய் அதிகமதாய்...

பனியாலும் விசக்காற்றாலும் வெயிலினாலும்
சீறுமிருகமதால் செத்திடுவார் வீறுகெட்டு
வானம் திசைமாறும் கூலிக்குப் பார்க்கும் பாழ்நரகில்
ஏறு அக்னியாம் நாள்தோறும் பூமி நடுக்கமுண்டாம்

மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிரண்டு
முன்று வரும் கோ என்று பெட்டை கூலிடும்
நீசரால் வெள்ளத்தினால் சிலவூர் மூழாமல் தாழ்ந்துவிடும்
மின்னல் இடியால் சிலவூர் வேகுமே பள்ளமதாய்
தாழுமே சிலவூர் சமுத்திரம் வந்தே பெருகும் மாளும்
சிலவூர்கள் இக்குடனே மண் மாரி பெய்துவிடும்

நாள்தோறும் பூமியெல்லாம் காடு தணிந்து வரும்
கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம்
வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றி வரும்
மேல்மேலும் வெள்ளமது பெருகும் வேகமதிலே
இருந்து மீனும் விழும் மழையிலே மேகமதாய்
வில்லும் வெவ்வேறாகிவிடும்
ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி
குன்றிவிடும் தாக்குப் பொறுக்காது
ஜனங்களுக்கு ஆயுள்தான் குறையும்...”

என்று, இப்போது நடைபெறும் இயற்கை, கலாச்சார சீரழிவுகள் பற்றி அன்றே அழகாக கூறியுள்ளார் அய்யா.

முக்காலப் பெட்டகமாக விளங்கும் அகிலத்திரட்டு அம்மானையை அரிகோபாலன் எழுதி முடித்தது, சாமித்தோப்பு அருகே உள்ள தாமரைக்குளம் பதியில் வைத்துதான். அவர் அதை எழுதி நிறைவு செய்த நாளை நினைவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தாமரைக்குளத்துப் பதியில் திரு ஏடு வாசிப்பு என்கிற வைபவம் தொடங்கி, தொடர்ந்து 7 நாட்களுக்கு அது வாசிக்கப்படுகிறது. பின்பு, அடுத்து வரும் மூன்றாம் வெள்ளிக்கிழமை சாமிதோப்பில் ஏடு வாசிப்பு தொடங்கி மார்கழி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைகிறது.

சாமிதோப்பில் இந்த ‘17 நாள் திரு ஏடு வாசிப்பு’ நிறைவு பெற்ற மறுநாள், மார்கழி மாத முதல் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கி மார்கழி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நிறைவடைகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1q.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License