அமாவாசை நாள்.
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்திருந்தார் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்.
கோவிலுக்குள் நுழைந்த மன்னருக்கு பக்தர்கள் விலகி வழி விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் வழி விடாமல், அபிராமி அம்மனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே, அவளது தெய்வீக நினைவுகளில் மூழ்கியிருந்தார்.
அவர் அபிராமி பட்டர். தமிழ் மொழியுடன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அன்னை அபிராமவல்லியின் பக்தராக அல்லாமல் பித்தராகவே இருந்து வந்தார்.
அபிராமி அம்மனைக் கண் குளிர தரிசித்து விட்டு அபிராமி பட்டர் திரும்பிய போது எதிரே மன்னர் நின்று கொண்டிருந்தார். அவரது கண்கள் லேசாக சிவந்திருந்தன.
‘யார் நீ?’ என்று மன்னர் கேட்க, அதற்கு அபிராமி பட்டர் தனது பெயரை கூறியதோடு, தான் அந்த கோவிலில் பஞ்சாங்கம் பார்ப்பவன் என்றும், அபிராமி அம்மனை எப்போதும் பாடிக் கொண்டிருப்பவன் என்றும் கூறினார்.
உடனே மன்னர், “அப்படியென்றால், இன்று என்ன திதி?” என்று கேட்டார்.
அன்னை அபிராமி அம்மனின் பேரொளி முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் அன்றைய தினம் அமாவாசை என்பதை மறந்து, “இன்று நிறைந்த பவுர்ணமி நாள்” என்று கூறி விட்டார்.
அந்த எதிர்மறையான பதிலைக் கேட்ட மன்னனின் கோபம் மேலும் அதிகமானது.
மன்னர் உடனே, “அப்படியென்றால், இன்று இரவு நீர் முழு நிலவைக் காட்ட வேண்டும்” என்றார்.
அபிராமி பட்டரும் மன்னரிடம், பவுர்ணமி முழு நிலவைக் காட்டுவதாக உறுதி கூறினார்.
உடனே மன்னர், “இன்று இரவு முழு நிலவு தோன்றாவிட்டால் நீர் அக்னி குண்டத்தில் ஏற்றப்படுவீர்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டார்.
அபிராமி பட்டருக்கு ஒன்றும் ஓடவில்லை. மன்னர் சென்ற பிறகுதான், அவருக்கு அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்தது. அன்னை அபிராமவல்லியின் அழகு பொங்கும் பொன் முகத்தை நீண்டநேரம் பார்த்த மதி மயக்கத்தில் தவறாக கூறி விட்டோமே என்று எண்ணி வருந்திய அவர், தனக்காக அந்த அபிராமவல்லியே முழுநிலவை வரவழைப்பாள் என்று நம்பினார்.
ஆனால், அமாவாசை அன்று எப்படியும் முழு நிலவு தோன்றாது என்பதால், அபிராமி பட்டரை அக்னிக்குண்டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
‘நீயே கதி என்று உன்மேல் பக்தி கொண்டிருந்த எனக்கு கிடைத்த தண்டனையா இது?’ என்று, அன்னை அபிராமவல்லியை வேண்டிய அபிராமிபட்டர், அந்த அபிராமவல்லியை புகழ்ந்து அந்தாதி பாட ஆரம்பித்தார். ஒரு பாடலின் முடிவும், அதற்கு அடுத்த பாடலின் தொடக்கமும் ஒன்றாக வருமாறு பாடினார்.
அபிராமிபட்டர் மீது இரக்கம் கொண்ட அன்னை அபிராமவல்லி அங்கே தோன்றினாள்.
தனது காதில் பிரகாசித்துக் கொண்டிருந்த ஜொலிக்கும் தாடங்கம் ஒன்றைக் கழற்றி விண்ணை நோக்கி வீசினாள். அது வானில் பிரகாசமாக ஒளி வீசியது. அது, பவுர்ணமி நிலவை விட அதிக ஒளியை உலகம் முழுவதும் பரப்பியது.
அந்த காட்சியைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் எல்லாம் பரவசம் ஆனார்கள். மன்னன் சரபோஜியும் அமாவாசை இரவு பவுர்ணமியாய் ஜொலிப்பதைப் பார்த்து சிலிர்த்தார்.
தனக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய அன்னை அபிராமவல்லியை கைகூப்பி வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார் அபிராமிபட்டர்.
சிறிது நேரத்தில் சரபோஜி மன்னரும் அங்கே வந்தார். அபிராமி பட்டரிடம் பணிந்து மன்னிப்பு வேண்டினார்.
தொடர்ந்து, அபிராமி அம்மன் சன்னதிக்குச் சென்ற அபிராமிபட்டர், தொடர்ந்து அந்தாதியை பாடிக் கொண்டே வந்தார். மொத்தம் 102 பாடல்களை பாடி முடித்தார்.
இன்றும் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி தினமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தனக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய அன்னை அபிராமவல்லியை கைகூப்பி வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார் அபிராமிபட்டர்.v