Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 8
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில்

உ. தாமரைச்செல்வி


“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பதற்கேற்ப இப்பாடல்களில் பக்திச் சுவையும், கேட்பவர் மனதை உருக்கும் தன்மையும் அதிகம். தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும் திருவாசகத்தைப் பாடியவர் மாணிக்கவாசகர். பெரிய அளவிலான சிவன் கோயில்களில் சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவராக மாணிக்கவாசகர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகருக்கு என்று தனிக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாணிக்கவாசகர்

மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் சம்புபாதா சிருதர் - சிவஞானவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாதவூரார். பதினாறு வயதுக்குள்ளாகவே பல்வேறு கலை அறிவுகளையும் பெற்றுச் சிறப்பு பெற்ற அவரது அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட அப்போதைய பாண்டிய நாட்டு மன்னன் அரிமர்த்தனப் பாண்டியன் அவரைத் தனது நாட்டின் தலைமை அமைச்சராக்கினான். வாதவூரார் குறுகிய காலத்திலேயே தனது தமிழ்ப் புலமையால் “தென்னவன் பிரம ராயன்” என்ற பட்டத்தையும் பெற்றார். புலமை, உயர் பதவி, செல்வம் என்று அனைத்தையும் அவர் அடைந்தாலும் அவையெல்லாம் வாழ்வின் நோக்கம் இல்லை என்று உணர்ந்து, சிவ வழிபாட்டையே தன் வாழ்க்கையின் குறிக்கோள்களாகக் கொண்டு வாழத் தொடங்கினார்.


இந்நிலையில் மன்னன் தனது நாட்டின் குதிரைப்படையை விரிவுபடுத்திட விரும்பி, அதற்குத் தேவையான நல்ல திறனுடைய உயர் வகைக் குதிரைகளை வாங்கி வரும்படி அறிவுறுத்தி, அதற்கான பொன்னும், பொருளும் அவரிடம் கொடுத்துத் துணையாகச் சிலரையும் அனுப்பி வைத்தான்.

குதிரை வாங்கச் சென்ற திருவாதவூரார் சோழநாட்டிலிருந்த திருப்பெருந்துறை எனும் ஊரை அடைந்தார். அங்கு குருந்த மரத்தினடியில் இறைவன் குரு வடிவில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் ஈர்க்கப்பட்ட வாதவூரார் தன்னுடைய அமைச்சர் கோலத்தை அகற்றிச் சாதாரணமான மனிதனாக அவர் முன் போய் வீழ்ந்து, தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி வணங்கினார். அந்தக் குருவும் அவருக்கு திருவைந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்துத் தனது சீடனாக ஆக்கிக் கொண்டார். குருவின் திருவருள் பெற்ற வாதவூரார் தமது குருநாதரின் திருவடிகளுக்குத் தம்மை ஆட்கொண்ட கருணையைப் புகழ்ந்து பல சொல் மாலைகளைச் சூட்டினார்.

குரு இந்தச் சொல் மாலைகளை மாணிக்க வாசகங்களாக உணர்ந்ததால் அவருக்கு “மாணிக்கவாசகர்” என்ற புதிய பெயரையும் சூட்டினார். மாணிக்கவாசகராகக் குருநாதரை வணங்கி, “என்னை ஆட்கொண்ட போதே என்னுயிரும், என்னுடமைகளும் தங்களுடையதாகின. நான் கொண்டு வந்திருக்கும் பொன்னையும் பொருளையும் என்ன செய்யலாம்?” என்று கேட்டார். குருநாதரும் “அந்தப் பொருட்களைக் கொண்டு சிவப்பணி செய்க” என்றார். அக்கட்டளையை ஏற்ற மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் திருக்கோயில் ஒன்றைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் அமைத்தார். பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொன், பொருள் அனைத்தும் சிவப்பணிகளில் செலவாகிப் போனது.

இதனைக் கண்டு அவருடன் வந்தவர்கள் அச்சமடைந்தனர். அவர்கள் மதுரைக்குத் திரும்பிச் சென்று மன்னனிடம் நடந்தவற்றைக் கூறினர். இதைக் கேட்ட மன்னன் கோபமடைந்து அவரை உடனடியாக மதுரைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டு அரச ஆணையை அனுப்பினான். அரசனின் ஆணையைக் குருவிடம் காண்பித்த மாணிக்கவாசகர் “தான் என்ன செய்வது” என்று அவரிடமே கேட்டு நின்றார். குருநாதர் அவரிடம் விலையுயர்ந்த மாணிக்கக் கல் ஒன்றை அவர் கையில் கொடுத்து, “அஞ்ச வேண்டாம், ஆவணி மூல நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேரும்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். மாணிக்கவாசகரும் மன்னனிடம் அந்த மாணிக்கக் கல்லைக் கொடுத்து, “வருகிற ஆவணி மூல நாளில் குதிரைகள் மதுரை வந்தடையும்” என்று தெரிவித்தார். மன்னனும் தன் நாட்டிற்கு உயர் வகைக் குதிரைகள் வந்து சேரும் என நம்பினான். வாதவூராரை மீண்டும் முதன்மை அமைச்சராகப் பணியில் தொடரச் செய்தான்.மன்னனும் தன் குதிரைப் படைக்குப் புதிய குதிரைகள் வரும் ஆவணி மூல நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆவணி மூல நாளுக்குச் சில நாட்கள் முன்பாக அமைச்சர்களுள் சிலர் மன்னனிடம், “வாதவூரார் சொல்வது அனைத்தும் பொய். அவர் எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும் திருப்பெருந்துறையில் கோயில் பணிகளில் செலவிட்டு விட்டார். அவரை நம்ப வேண்டாம். இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. மதுரைக்கு எந்தப் பகுதியிலுமிருந்து குதிரைகள் கொண்டு வரப்படுவதாகத் தெரியவில்லை” என்று குறை கூறினர். மன்னனும் அமைச்சர்கள் சொல்வது உண்மையா என்று அறிந்து வர அனைத்துப் பகுதிகளுக்கும் ஒற்றர்களை அனுப்பி வைத்தான். சென்று திரும்பிய ஒற்றர்கள் மன்னனிடம், “அமைச்சர்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எந்தப் பகுதியிலும் குதிரைகள் கொண்டு வரப்படுவது போல் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த மன்னன் வாதவூராரை எரிக்கும் வெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினான். கொடுஞ்சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். இதனால் வேதனையடைந்த வாதவூரார் இறைவனிடம் தன் வருத்தம் போக்க வேண்டினார். வாதவூராரின் வருத்தத்தைப் போக்க, இறைவன் குதிரை வணிகனாக மாறி, நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றித் தேவர்களையெல்லாம் குதிரைச் சேவகர்களாக்கி மதுரை நோக்கி வந்தான். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த மன்னன் வாதவூராரை விடுவித்தான்.

குதிரை வணிகனாக வந்த இறைவன் மன்னனிடம் குதிரைகள் அனைத்தையும் ஒப்படைத்தார். அவனுக்குக் குதிரைகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் எடுத்துச் சொன்னார். தான் கொடுத்த பொன் பொருளுக்கு அதிகமாக, விலையுயர்ந்த உயர் வகைக் குதிரைகள் கிடைக்கப் பெற்ற மன்னன் மகிழ்ந்து போனான். குதிரை வணிகனுக்குப் பட்டாடை ஒன்றையும் பரிசாக அளித்தான். குதிரை வணிகன் அதைக் கையில் வாங்காமல் தன்னிடமிருந்த சவுக்கால் வாங்கிக் குதிரை ஒன்றின் மேல் போட்டு விடை பெற்றார்.அன்றிரவு இறைவன் கொண்டு வந்த குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறின. அவைகளனைத்தும் அரண்மனைக் குதிரைக் காப்பகத்தில் முன்பிருந்த குதிரைகளையும் கடித்துக் காயப்படுத்தி வெளியேறிச் சென்றன. காலையில் இதையறிந்த மன்னன் வாதவூராரைத் தான் கொடுத்த பொன், பொருள் திரும்பத் தரும் வரைத் துன்புறுத்தும்படி உத்தரவிட்டான். படை வீரர்களும் வாதவூராரை வைகையாற்றுக் கரையில் சுடுமணலில் நிறுத்தி வைத்தனர். துன்பமடைந்த வாதவூரார் மீண்டும் இறைவனை வேண்டி நின்றார்.

இறைவன் வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வைகையாற்று வெள்ளம் கரையை உடைத்து மதுரை மாநகருக்குள் நுழைந்தது. இதனால் மதுரை மாநகர் அழிந்து விடுமோ என்று அச்சமடைந்த மன்னன் வீட்டுக்கு ஒருவர் உடைந்த கரைகளை அடைக்க வேண்டுமென்று உத்தரவிட்டான். மதுரையில் பிட்டு விற்று வாழ்க்கை நடத்திய வந்திக் கிழவிக்குத் தன் அளவுக்குப் பகிர்ந்து கொடுத்த பங்கை அடைக்க ஆளில்லாமல் வருந்தினாள். இறைவன் அவள் முன்பு கூலியாளாகத் தோன்றி, அவளுடைய பங்கை அடைப்பதாகக் கூறி அவளிடம் அதற்குக் கூலியாகப் பிட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

பின்னர் ஆற்றின் ஓரத்தில் கூடையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொன்டார். ஒவ்வொருவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பங்கை அடைத்து விட்டனர். வந்திக் கிழவியின் பங்கு மட்டும் அடைபடாமல் கிடந்தது. ஆற்றின் கரை முழுமையாக அடைக்கப்பட்டு விட்டதா என்று பார்வையிட வந்த மன்னன், வந்திக் கிழவிக்குப் பதிலாகக் கூலியாளாக வந்தவன் தன் வேலையைச் செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபமடைந்தான். மன்னன் அந்தக் கூலியாளின் முதுகில் தான் கொண்டு வந்த கைப்பிரம்பால் அடித்தான். மன்னன் அடித்த பிரம்படி மன்னன் மட்டுமின்றி அரசி, அமைச்சர், காவலர்கள், மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மேலும் விழுந்தது. இதன் பிறகு கூலியாளாக வந்த இறைவன் ஒரு கூடை மண்ணை மட்டும் உடைப்பில் கொட்டி மறைந்தான். கரையும் அடைபட்டது.வாதவூராருக்காக இறைவன் செய்த திருவிளையாடலைக் கண்ட மன்னன், வாதவூராரை விடுவித்ததுடன் அவரை இறைவன் திருப்பணிக்குச் செல்லவும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். அதன் பின்னர், வாதவூரார் மாணிக்கவாசகராக பல்வேறு சிவத் தலங்களுக்கு சென்று, அங்கிருக்கும் இறைவனை வாழ்த்திப் பல்வேறு பாடல்களைப் பாடினார். சிதம்பரத்தில் இவர் பாடிய பாடல்களை இறைவனே அந்தணர் உருவில் வந்து இவருக்காக எழுதிக் கொடுத்தார். இந்தப் பாடல்கள் திருவாசகம் என்று போற்றப்படுகிறது. மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றிப் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்று தமிழ் மொழியிலான இலக்கியங்களாக இடம் பெற்றிருக்கின்றன. மாணிக்கவாசகர் தனது முப்பத்திரண்டாவது வயதில், ஆனி மாதம் மகம் நட்சத்திர நாளில், சிதம்பரம் நடராசர் கோயிலில் இறைவன் திருவடிகளில் இரண்டறக் கலந்தார்.

மாணிக்கவாசகர் கோயில்

மாணிக்கவாசகரின் திருவாசகம், திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அடியவர் ஒருவர் தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகருக்குத் தனிக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். தென் திசை நோக்கி அமைந்திருக்கும் இக்கோயிலின் கருவறையில் மாணிக்கவாசகர், வலது கையில் சின் முத்திரையுடன், உருத்திராட்ச மாலையும், இடது கையில் ஏட்டுச் சுவடிகளும் கொண்டு மூலவராக இருக்கிறார். இங்கு காசிவிசுவநாதர், விசாலாட்சி ஆகியோர் துணைக் கடவுள்களாகத் தனிச் சன்னதி கொண்டிருக்கின்றனர்.

சிவன் கோயில்களில் சண்டிகேஸ்வரர் அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இங்கு சிவலிங்கத்தை வேண்டிய நிலையில் நின்று கொண்டிருக்கிறார். அருகில் விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. சிவன் சன்னதி எதிரில் சித்திரகுப்தன் ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கிறார்.

இக்கோயிலில் மாணிக்கவாசகருக்கு இரு உற்சவர் சிலைகள் இருக்கின்றன. ஒன்று மாணிக்கவாசகரின் உருவிலானது. மற்றொன்று நடராசரின் திருவருளைப் பெற்று அவருடன் கலந்த மாணிக்கவாசகரை இங்கு நடராசராகக் கருதி வழிபடுவதால் நடராசர் உருவிலானது.


வழிபாடு

இக்கோயிலில் தமிழ் மொழியினால் சிவனருள் பெற்ற மாணிக்கவாசகருக்குத் தமிழ் மொழியிலேயே தினசரி வழிபாடுகள் செய்யப் பெறுகின்றன. தமிழ் மாதத்தில் வரும் மகம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. மாணிக்கவாசகர் இறைவனுடன் கலந்ததாகக் கருதப்படும் ஆனி மாதம் மகம் நட்சத்திர நாளன்று குரு பூசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவனடியார்களைச் சிவனாகக் கருதி, மகேஸ்வர பூசை செய்யப்படுகிறது. இந்நாளில் மாணிக்கவாசகர் தனியாக நகர் வலம் செல்கிறார். ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் உத்திரம் நட்சத்திர நாளில் மாணிக்கவாசகர், நடராசர் என இரு உற்சவர்களும் ஒரே தேரில் நகர்வலம் செல்கின்றனர். மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன நாளில் மூலவரான மாணிக்கவாசகர் விரித்த சடையுடன் நடனக் காட்சியில் நடராசராக அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

சிறப்புகள்

1. திக்குவாய்க் குறைபாடுடையவர்கள் இங்கு வந்து திருவாசகத்தின் “திருச்சாழல் பதிகம்” பாடினால் குறைகள் நீங்கப் பெறுவர்.

2. இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சிறந்த இலக்கியங்களைப் படைத்துப் பாராட்டுகளைப் பெறுவர்.

3. தங்கள் குழந்தைக்கான கல்வி சிறப்பாக அமைய வேண்டுமென்று விரும்புபவர்கள் இங்கு தங்கள் குழந்தையுடன் வந்து வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை சிறந்த கல்வியைப் பெற்றுச் சிறந்த கல்வியாளராக உயர்வடையும்.

4. இங்கு குழந்தை வேண்டும் தம்பதியர்களுக்கு அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கும் என்பது போன்ற சிறப்புகள் நம்பிக்கைகளாக இருக்கின்றன.

அமைவிடம்

தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் 24 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சின்னமனூர் எனும் ஊரில், மார்க்கையன் கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் வழியில் முல்லையாற்றின் கரையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.
*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p22.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License