Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 7
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

சுடலை மாடசாமி கோயில்கள்

உ. தாமரைச்செல்வி


தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோயில்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பெரும்பான்மையாகத் திறந்தவெளியில் காவிக் கோடுகள் போடப்பட்ட திண்ணையின் மேல் முக்கோண வடிவிலான பீடங்களாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. சில கோயில்களில் இந்தப் பீடங்களின் முன்பகுதியில் சுடலை மாடசாமியின் உருவப்படம் வரையப்பட்டிருக்கின்றன. ஒரு சில பெரிய கோயில்களில் மட்டுமே சுடலை மாடசாமியின் உருவத்திலான சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுடலை மாடசாமி பெரிய மீசையுடன் வலது கையில் அரிவாள், இடது கையில் கம்பு போன்றவைகளுடன் மாட்டினை வாகனமாகக் கொண்டு காட்சியளிக்கிறார்.

சுடலை மாடசாமி

சுடலை மாடசாமி குறிப்பிட்ட சில சமூகத்தினர்களின் குலதெய்வமாகவும், சில கிராமங்களில் கிராமக் காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறார். இக்கோயில் திருவிழாக்களில் நடத்தப்பெறும் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளில் சுடலை மாடசாமியின் தோற்றம் குறித்த கதை சொல்லப்படுகிறது.

கைலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் வினைப்பயன்களின்படி உணவு அளிக்கும் நோக்கத்துடன் கிளம்பினார். அன்று சிவபெருமான் இந்தப் பணியை முழுமையாகச் செய்துவிடுகிறாரா? என்று பார்வதிக்குச் சிறு சந்தேகம் எழுந்தது. அவள் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துக் காற்று கூட புகமுடியாத குமிழ் ஒன்றில் அடைத்து வைத்தாள். தன் பணியை முடித்துத் திரும்பிய சிவபெருமானிடம் பார்வதி, “சுவாமி, இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டீர்களா?” என்று கேட்டாள். சிவபெருமான், “ஆமாம், நான் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டேன். உனக்கு இதிலென்ன சந்தேகம்?” என்றார்.

இந்தக் குமிழில் அடைபட்டிருக்கும் சிற்றெறும்புக்கும் உணவளித்து விட்டீர்களா? என்றபடி குமிழின் மூடியைத் திறந்தாள். அந்தச் சிற்றெறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்தது. பார்வதிக்குத் தன் தவறு புரிந்தது. இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். “என்னுடைய மனைவியான நீ என் பணியில் சந்தேகமடைந்து என்னைச் சோதிப்பதா? என்னைச் சோதித்த நீ காட்டுப்பேச்சியாக மாறிக் காடுகளில் அலைந்து கொண்டிரு” என்று சாபமிட்டார்.பார்வதி தன் செயலுக்காக மன்னிப்பு கோரி சாபவிமோசனமும் வேண்டினார். சிவபெருமான், “வனப்பேச்சியாகக் காட்டில் அலையும் நீ மயானத்தில் என்னை வேண்டித் தவமிரு... உரிய காலம் வரும்போது நானே உன்னை வந்து மீட்பேன்” என்று சாப விமோசனமும் அளித்தார். பார்வதி காட்டுப்பேச்சியம்மனாக மாறிக் காடுகளில் அலைந்து திரிந்து, கடைசியில் மயானத்தில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் தோன்றிய சிவபெருமான் அவளின் சாபத்தை நீக்கி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்றார்.


கயத்தாறு சுடலை மாடசாமி

பார்வதி, “சுவாமி, எனக்கு இரு புதல்வர்களைக் கொடுத்தீர்கள். அவர்கள் தனித்துச் சென்று விட்டார்கள். எனக்குத் தாங்கள் இன்னுமொரு குழந்தையைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமான், “இந்த மயானத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிணம் நன்றாக எரியும் போது, நீ என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்தி வேண்டிக் கொள். உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்” என்று வரமளித்து மறைந்தார்.

பார்வதி பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தியபடி சிவபெருமானை நினைத்து வேண்டி நின்றார். பிணம் நன்கு சுடர் விட்டு எரிந்த நிலையில் அதிலிருந்து சில சுடலை முத்துக்கள் பார்வதியின் முந்தானையில் வந்து விழுந்தன. அது குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை, உறுப்புகள் எதுவுமில்லாமல் பிண்டமாக இருந்தது. ஆனால், அதற்கு உயிர் இருந்தது. இதைப் பார்த்த பார்வதி மீண்டும் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் அந்தப் பிண்டத்தை அழகிய குழந்தையாக மாற்றிக் கொடுத்தார். பார்வதியும் அந்தக் குழந்தையுடன் கைலாயம் திரும்பினார்.

பார்வதியும் சுடலை முத்துக்களிலிருந்து தோன்றிய குழந்தை என்பதால் அதற்கு சுடலை மாடன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். பார்வதி ஒரு நாள் இரவு அந்தக் குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டாள். நள்ளிரவு நேரம் சுடுகாட்டில் பிணம் ஒன்று எரியும் வாசனை அந்தக் குழந்தைக்கு எட்டியது. அந்தக் குழந்தை அங்கிருந்து சுடுகாட்டுக்கு வந்து, எரியும் பிணங்களை எடுத்துத் தின்றது. பேய்களோடு விளையாடி மகிழ்ந்தது. அதிகாலையில் கைலாயம் திரும்பிப் படுத்துக் கொண்டது. பார்வதி காலையில் குழந்தையைக் கையிலெடுத்த போது அந்தக் குழந்தையிடமிருந்து பிண வாசனை வந்தது கண்டு திகைத்தாள். நள்ளிரவில் நடந்த்தை அறிந்து வருந்தினாள். இதுபற்றிச் சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான், “பிணம் தின்ற இவன் இனி கைலாயத்திலிருக்க இயலாது. இவன் பூலோகம் சென்று பிழைத்துக் கொள்ளட்டும்” என்று சொன்னார்.

இதைக் கேட்ட சுடலை மாடன், “நான் பூமியில் எப்படி வாழ்வது? தினமும் பிணங்களை எதிர்பார்த்து வாழ முடியுமா? எனக்கு நல்லறிவு வழங்கி நல்லதொரு வரமளிக்க வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமானும் “உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்?” என்று கேட்டார். சுடலை மாடன், “பேய்கள் அனைத்தையும் நானே அடக்கி ஆள வேண்டும். நான் கொடுக்கும் மயானச் சாம்பலில் அனைத்து நோய்களும் தீர்ந்திட வேண்டும். தீயவர்களை அழிக்கத் துணை புரிய வேண்டும்” என்று வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரங்களைத் தந்து அனுப்பினார்.

சுடலை மாடன் பூலோகத்தில் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டபடியே கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரக்கரை எனும் ஊரை வந்தடைந்தார். இந்த ஊரிலிருந்த பகவதியம்மன் அவருடைய தாயைப் போல் தோன்றியதால், அவருடன் இருக்க விரும்பினார். பகவதியம்மனிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். பகவதியம்மன் அவரை மகனாக ஏற்றுக் கொண்டதுடன், அவரிடமிருக்கும் புதையலைக் காக்கும் பணியையும் வழங்கினார். சுடலை மாடன் அம்மனின் அனுமதியைப் பெற்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், பிறநாட்களில் பகவதி அம்மனின் புதையலுக்குக் காவலாகவுமிருந்தார். இந்நிலையில், கேரளாவின் நந்தம்புனலூர் எனும் ஊரிலிருந்த பெரும் மந்திரவாதியான காளிப்பெரும்புலையன் என்பவன் பகவதியம்மனிடம் இருக்கும் புதையலைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் திருடவும் திட்டமிட்டான். அவன் புதையலுக்குச் சுடலை மாடன் காவலாக இருப்பதையும், அவர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் சென்று விடுவதையும் அறிந்தான். அவன் ஒரு வெள்ளிக்கிழமை நாளில், சுடலை மாடன் மயான வேட்டைக்குச் சென்ற போது, பகவதியம்மனின் புதையலைத் திருடிச் சென்று விட்டான். மயான வேட்டைக்குச் சென்று திரும்பிய சுடலை மாடன் பகவதியம்மனின் புதையல் திருடு போனதை அறிந்தான். உடனே கேரளாவிலிருக்கும் நந்தம்புனலூர் சென்று காளிப்பெரும்புலையனின் மந்திர வித்தைகள் அனைத்தையும் தந்திரமாக முறியடித்து அவனைக் கொன்று புதையலை மீட்டு வந்தார்.சுடலை மாடன் புதையலை மீட்டு வந்ததை அறிந்த கொட்டாரக்கரை மக்கள் அவரைத் தங்கள் காவல் தெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, கொட்டாரக்கரையிலிருந்து வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய ஊர்களில் சுடலை மாடனுக்குத் தனிக் கோயில்கள் வைத்து வழிபடத் தொடங்கினர். இதனால், சுடலை மாடன் தென் மாவட்டங்களில் பல ஊர்களில், மாடசாமி, பெரிய மாடசாமி, புலமாடசாமி, வேம்படி மாடசாமி, கரையடி மாடசாமி, கொம்பு மாடசாமி, பட்டணத்து மாடசாமி, ஆற்றங்கரை மாடசாமி, சுடலை வீரன், சங்கிலி மாடசாமி, பொன் மாடசாமி, ஆகாச மாடசாமி, பூக்குழி மாடசாமி என்று பல்வேறு பெயர்களில் கோயில் கொண்டிருக்கிறார்.


கயத்தாறு சுடலை மாடசாமி உடனான துணைத் தெய்வங்கள்


கயத்தாறு ஆற்றங்கரை சுடலை மாடசாமி

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பல்வேறு சுடலை மாடசாமி கோயில்கள் இருப்பினும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவிலுள்ள ஆற்றங்கரை சுடலை மாடசாமி கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கொடை விழா தமிழ்நாடு முழுவதும் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கிறது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் சுடலை மாடசாமி கோயிலும் தீயசக்திகளை விரட்டுவதற்குப் புகழ் பெற்றதாக இருக்கிறது. இதுபோல் மேலும் பல சுடலை மாடசாமி கோயில்கள் தென்மாவட்டங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன.

இழந்த பொருளை மீட்டுக் கொடுக்கும் கடவுள்

சுடலை மாடசாமி கொட்டாரக்கரை பகவதியம்மன் புதையலை மீட்டுக் கொடுத்தது போல், தங்களுக்குச் சொந்தமான உடைமைகள், விலங்குகள் என்று எதுவாக இருந்தாலும், அதை ஏதாவதொரு வழியில் இழந்து விட்டால் அவைகளைச் சுடலை மாடசாமி மீட்டுக் கொடுத்துவிடுவார் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. இதனால், சுடலை மாடசாமி கோயில்கள் அனைத்திலும், பக்தர்கள் இழந்து விட்ட தங்கள் பொருள்களை மீட்டுக் கொடுக்க வேண்டி வழிபடுவது வழக்கத்திலிருக்கிறது. இதுபோல், தீயசக்தியால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, அவர்களிடமிருக்கும் தீயசக்திகளை விரட்டுவதற்கும் சுடலை மாடசாமி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வழிபாடு

சுடலை மாடசாமி கோயில்கள் அனைத்திலும் தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப் பெறும் கொடை விழாவில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது சுடலை மாடசாமிக்குப் பொங்கல் வைத்து, ஆடு, கோழி, பன்றி போன்றவைகளைப் பலியிட்டு அசைவ உணவு சமைத்து, மது, சுருட்டு போன்றவைகளையும் சேர்த்துப் படைத்து வழிபடும் நடைமுறை வழக்கத்திலிருக்கிறது.

(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p38.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License