Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

மீனாட்சி சுந்தரமூர்த்தி


நவக்கிரகத் தலங்களில் ஏழாவது தலமாகவும், சனிபகவானுக்குரிய தலமாகவும் தமிழ்நாட்டிற்கு அருகில், பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியிலிருக்கும் காரைக்கால் நகருக்கு அருகிலுள்ள திருநள்ளாறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் தலமாக இருப்பது தர்ப்பாரண்யேசுவரர் கோயில். இக்கோயில் தேவாரப் படல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 52 வது தலமாக இருக்கிறது.

தலவரலாறு

முன்பொரு காலம், பிரம்மதேவன் தவம் செய்ய ஏற்ற இடம் தேடி அலைந்த போது, சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கும் இவ்விடம் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே தவமியற்றத் தொடங்கினார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானிடம் பிரம்மன், தனது படைப்புத் தொழில் சரியானதாக இருக்க வேண்டி அவரது அருளைப் பெற்றான். தான் கேட்ட வரம் கிடைத்ததில் மகிழ்ந்த பிரமன், இங்கு வேதாகம விதிப்படி அரனுக்கு அழகிய கோயில் அமைத்தான். சிவபெருமானுக்கும், அன்னைக்கும் மற்றும் சில பரிகார தேவதைகளுக்கும் சந்நிதிகள் அமைத்தான். அதன் பிறகு, கீழ்த்திசையில் அம்பைச் செலுத்தி. அந்த அம்பு சென்று விழுந்த இடத்தில் தனது பிரம்ம தண்டத்தால், ‘பிரம்ம தீர்த்தம்’ உண்டாக்கினான். கலைவாணியும், ‘வாணிதீர்த்தம்’ அமைத்தாள். பிரமனின் வாகனமான அன்னமும் மேற்கிலிருந்து வடக்கு வரை, ‘ஓம்’ எனும் பிரணவ வடிவில் தீர்த்தமும் அதன் கரையினில் சிவலிங்கம் ஒன்றும் அமைக்க அது, ‘ஹம்ச தீர்த்தம்’ஆனது.

பிற்காலத்தில், விதர்ப்ப நாட்டு இளவரசியான தமயந்தி தனது சுயம்வரத்தில்தேவர்களைப் புறக்கணித்து விட்டு நிடத நாட்டு மன்னன் நளனை மணந்தாள். இதனால் சினமுற்ற தேவர்கள் நளனைத் தண்டிக்க சனிபகவானின் உதவியை நாடினர். சனியும் நளனைப் பிடிக்கப் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தான். ஒருநாள் வழிபாடு செய்யப்புகும் முன் நளன் கால்களைச் சரியாகக் கழுவாத நிலையில் சனியால் பற்றப்பட்டான். தனது பங்காளியான புட்கரன் என்பவனோடு சூதாடி நாடு நகரம் இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிக் கானகத்தில் மனைவியையும் பிரிந்தான்.

காட்டுத் தீயில் சிக்கிய கார்க்கோடகன் எனும் பாம்பினைக் காப்பாற்றினான். ஆனால், அது அவனைக் கடித்தது. நஞ்சு உடலில் பரவி நளன் கருத்து அங்கம் குறுகி அடையாளம் மாறினான். நளன் அதனிடம், ‘நன்மை செய்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா?’ என வினவ, ‘உன் நன்மை கருதியே’ இதைச் செய்தேன். இந்த ஆடைகளை அணிந்தால் பழைய உருவம் பெறுவாய்’ எனச் சொல்லி ஆடைகள் தந்து சென்றது. நளன் அயோத்தி மன்னனிடம் சமையல் பணி புரிந்தான்.

விதர்ப்ப நாடடைந்த தமயந்தி நளனைத் தேட முயன்று மீண்டும் சுயம்வரம் ஏற்பாடு செய்து அயோத்தி மன்னனுடன் வந்த நளனை அடையாளம் கண்டு சேர்ந்தாள். நாரதர் வழிகாட்ட நளன் இத்தலம் மனைவி மக்களோடு வந்தான். ஆலயத்தின் வாசலை நளன் தாண்டியதுமே சனிஅவனை விட்டு நீங்கினார். தர்ப்பாரண்யேசுவரர் ஈசுவரப் பட்டம் அருளி நுழைவாயிலிலேயே தங்க வைத்தார். இவன் நீராடிய குளம், ‘நளதீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நளனின் சரிதம் கேட்டவரை சனி வருத்த மாட்டார் என்பது வரலாறு. நளன் கோவிலைப் புதுப்பித்து குடமுழுக்குச் செய்து, நித்திய பூசைக்கான ஏற்பாடுகளும் செய்தான் என்று இக்கோயிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

சனியின் தன்மையும் உகந்தவையும்


‘சனியைப் போல் கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்பது வழக்கு. இங்கு அருளை மட்டுமே தருபவராக விளங்குகிறார் சனி.

தேவதை - ஈசுவரன்

நிறம் - கருப்பு

தானியம் - எள்

குணம் - தாமசம்

சுபாவம் - குரூரர்

சுவை - கசப்பு

திக்கு - மேற்கு

உடல் அங்கம் - தொடை

தாது - நரம்பு

நோய் - வாதம்

பஞ்சபூதம் - காற்று.

ஆடை - கருப்பு

மலர் - கருங்குவளை

இராசி - மகரம்,கும்பம்


கோவில் அமைப்பு

கோவிலின் வெளிமுற்றம் விசாலமாகப் பரந்து விரிந்துள்ளது. இதன் வடப்புறம் வாகன மண்டபமும் பசுமடமும் உள்ளன. கோவில் சந்நிதியின் வலப்புறம் இடையனின் சந்நிதி உள்ளது. அதில் இடையன்,அவன் மனைவி மற்றும் கணக்கனின் சிலைகள் உள்ளன. இதன் பின்புறம் வெளிப்பிரகாரம். முற்றவெளியை அடுத்து ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுர வாயில். அதனை அடுத்து, இரண்டாம் பிரகாரம். இதன் வடமேற்கு மூலையில் தியாகேசரின் வசந்த மண்டபம், வடக்கிலும் தெற்கிலும் நந்தவனங்கள், இதன் கீழ்ப்புறம் கட்டைக் கோபுர வாயிலில் கற்பக விநாயகர், இதனை அடுத்து மூன்றாம் பிரகாரம் உள்ளது. இதில் அறுபத்து மூவர், தேவார நால்வர், விநாயகர், தர்ப்பாரண்யேசுவரர் லிங்கம் அமைந்திருக்க, தனியொரு மண்டபத்தில் நளனும் லிங்கத் திருமேனியும் உள்ளது. கோவிலின் கன்னி மூலையில் சொர்ண விநாயகரை அடுத்து, சோமாஸ்கந்தர், விடங்கத் தலங்களின் திருமேனிகள், அருகினில் நின்ற கோல நெடுமால், பைரவரை அடுத்துத் தனிச் சந்நிதியில் வள்ளி தெய்வானையுடன் முருகன், வடமேற்குக் கோடியில் எண்ணெய்க் காப்பு மண்டபம் அமைந்துள்ளது. ஈசான மூலையில் சிவகாமியோடு நடராஜர், வடபக்கம் சூரியன் காட்சி. நிதமும் சூரிய பூஜை முடித்தே நாட்கால பூசை தொடங்கப் பெறும். இரண்டாம் கோபுரத்தின் உட்புறம் கொடிமரம் உள்ளது. இதனை அடுத்து தியாகேசர் மண்டபத்தின் பக்கவாயிலை அடுத்து நள்ளாற்றீசர் சந்நிதி உள்ளது. தெற்கு வாயிலைத் தாண்டிய சந்நிதியில் வெள்ளி விமானத்தில் தியாகேசர், பெட்டகத்தில் மரகத விடங்கர், மூலவருக்கு வடபால் சண்டேசுவரர். வெளி வாயிலில் மூலவர் சந்நிதியின் வலப்புறம் இத்தலத்தின் சிறப்பு தெய்வமான சனி பகவான் கட்டைக் கோபுரச் சுவரின் சிறிய மண்டபத்தில் அருள் வழங்குகிறார். அருகினில் தெற்கு நோக்கி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் தர்ப்பைப் புல் ஆகும்.


திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

வழிபாடுகள்

இக்கோயிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 18 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு விழாவாத இருக்கிறது. இதே போன்று, புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாளிலும், நவராத்திரி நாட்கள் மற்றும் விநாயக சதுர்த்தசி நாள் போன்றவைகளிலும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சனிக்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் தீர்த்தத்தில் நீராடி எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இக்கோவிலின் தெய்வங்களை முதலில் வணங்கி, கடைசியாகச் சனி பகவான் சந்நிதியில் வந்து வழிபட வேண்டும் என்று சொல்கின்றனர். சனி பகவான் சந்நிதியில் சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வழிபாட்டுப் பலன்கள்

1. உடல் பிணி, சோகை நோய் நீங்க இங்கிருக்கும் இறைவனை வழிபடலாம்.

2. சித்தபிரமை உடையவர்களை இக்கோயிலுக்கு அழைத்து வந்து வழிபடச் செய்து குறை நீங்கப் பெறலாம்.

3. வணிகம், செய்யும் தொழில் செழிக்க இக்கோயிலுக்கு வந்து வழிபடலாம்.


தலச்சிறப்பு

1. சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று,‘விடங்க’ என்றால் உளிபடாத மூர்த்தி என்று பொருள்.

ஒரு முறை திருமால் பிள்ளைப்பேறு வேண்டி ஈசனை வேண்ட இறைவன் உமாதேவி முருகனுடன் (சோமாஸ்கந்தர்) காட்சி தந்து அருளினார். இதனைக் கண்டு உளம் உவந்த `திருமால் விஸ்வகர்மாவிடம் சொல்லிச் சிலை வடித்து வழிபட்டார். பின் தேவர்களின் நலனுக்காக அத்திருவுருவை இந்திரனிடம் தந்தார். இந்திரன் தினமும் அதற்கு வழிபாடியற்றி வந்தான். திருவாரூரைத் தலைநகராகக் கொண்ட முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு, ‘வலன்’எனும் அசுரனுடன் நிகழ்ந்த போரில் உதவியதால் மகிழ்ந்த இந்திரன் விரும்பியதைக் கேட்கச் சொன்னான். முசுகுந்தன் அவன் வழிபடும் விடங்கத் திருவுருவை வேண்டினான். இந்திரன் அதைப் போல இன்னும் ஆறு திருமேனியை உருவாக்கித் தான் வழிபடுவது எதுவெனத் தெரிந்து எடுத்துக் கொள்ளச் சொன்னான். சிவனருளால் முசுகுந்தன் அதனைத் தேர்ந்திட இந்திரன் தான் உருவாக்கிய ஆறு திருமேனிகளையும் சேர்த்து ஏழினையும் அவனுக்கு அளித்தான். முசுகுந்தன் மூலத்திருமேனியைத் திருவாரூரிலும் ஏனைய ஆறினைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வைத்து வழிபட்டான். அதில் நள்ளாறும் ஒன்று.

2. நவக்கிரகத் தலங்களில் சனிக்கு உரியது. சூரியனின் மனைவியான உஷாதேவி அவனது வெம்மைத் தாங்காது தனது நிழலைத் உருவாக்கி, அவளுக்குச் ‘சாயாதேவி’ எனும் பெயரிட்டு வைத்து விட்டுத் தன் தந்தை இல்லம் சென்று தவம் செய்கிறாள். சூரியனுக்கும் சாயாவிற்கும் பிறந்த மகனே சனி ஆவார். இவர் தனது தவவலியால் கிரகப் பதவி பெறுகிறார். சனியே இங்கு முதன்மை பெறுகிறார். சனி பகவானால் எத்தகையப் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தலம் வந்து இவரை வணங்கிட நன்மை அருளுவார்.

3. திருஞானசம்பந்தர் மதுரையை ஆண்ட கூன்பாண்டியனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மீட்க, அவன் மனைவி மங்கையர்க்கரசியின் வேண்டுதலால் மதுரை வந்து மன்னனின் வெப்பு நோய் தீர்க்கிறார். சமணருடன் ஏற்பட்ட வாதில், தீயில் பச்சை ஓலையில் பதிகம் எழுதித் தீயில் இட எவர் ஓலை எரியாதோ அவரே வென்றவர் எனும் நிபந்தனைப்படி, ‘போகம் ஆர்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும், ‘நள்ளாற்றுப் பதிகம்’ எழுதித் தீயில் இடுகிறார். அது அப்படியேப் பசுமை மாறாது மீண்டது. அதனால் இப்பதிகம், ‘பச்சைப் பதிகம்’ எனச் சிறப்பு பெற்றது.

4. கலிங்க மன்னன் ஒருவன் நீதிநெறி வழுவாது ஆட்சி புரிந்து வந்தான். அவன் அசுவமேத யாகம் செய்ய விழைந்து முனிவர் பலரையும் அழைக்கிறான். குறித்த நாளுக்கு முந்திய நாள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உபசரித்து தங்குமிடம் தந்து அமர்த்திவிட்டு அந்தப்புரம் செல்கிறான். அவ்வேளையில் பார்க்கவர் எனும் முனிவர் வருகிறார். ஏவலாளிடம் சொல்லி அனுப்புகிறார். அவன் அந்தப்புறம் செல்லத் தயங்கி சென்று சொல்லாது விட வெகு நேரம் காத்திருந்த பார்க்கவர், ‘செருக்குற்ற மன்னனும் அவன் சுற்றமும் காட்டு யானைகளாகத் திரிந்திடுக’ எனச் சாபமிட்டுச் சென்றார். அக்கணமே மன்னனும் மற்றோரும் யானைகளாகிக் காடு சென்றனர். ஒரு முறை காட்டிற்கு வந்த நாரத முனிவரின் அறிவறுத்தலின்படி யானைகள் நள்ளாறு வருகின்றன. அன்று மாசிமாத மக நட்சத்திர தினமாகும். நளதீர்த்தத்தில் நீராடி வந்தவர்களின் தலையிலிருந்து தெறித்த நீர்த்துளிகள் யானைகளின் மீதுபட சாபவிமோசனம் பெற்றனர் மன்னனும் மற்றோரும் இறையருள் பெற்ற இவன் சோணாட்டில் சிலகாலம் தங்கித் திருப்பணிகளும் பூசைகள் செய்ய நிவந்தங்களும் அருளினான்.

5. முன்னொரு காலத்தில் இடையன் ஒருவன் மன்னன் கட்டளைப்படிக் கோவிலுக்குப் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் கணக்குப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர் அந்த இடையனிடம், தன் வீட்டிற்குத் தரும் பாலையும், கோவில் கணக்கில் எழுதிடச் சொன்னான். அதற்கு உடன்படாத இடையன் மீது பொய்க்குற்றம் சுமத்தி, மன்னனிடம் தண்டனை பெறச் செய்ய முற்பட்டான். இடையனைக் காத்திட நள்ளாற்றீசன் தனது சூலத்தை ஏவிக் கணக்கனின் தலையைக் கொய்தார். சூலத்திற்கு வழிவிடப் பலிபீடம் மண்டபத்தின் பக்கம் விலகியதை இன்றும் காணலாம்.

6. மூர்த்திச் சிறப்பு உடையது. ஆதி மூர்த்தியாம் தர்ப்பாரண்யேசுவரர் தருப்பைப்புல் வனத்தில் இருந்தத் தழும்புகளோடு லிங்கத் திருமேனியாக இருப்பது, விடங்க மூர்த்தியான தியாகேசர், மரகத லிங்கமும் அமைந்தச் சிறப்படையது.

7. தீர்த்தச் சிறப்பும் பெற்ற தலம். இங்கு வந்து வழிபட்ட தெய்வங்களும், முனிவர்களும், அரசரும் தத்தம் பெயரில் தீர்த்தங்களை உருவாக்கினர். திக்குப் பாலகரால் உருவான எண்திசைத் தீர்த்தங்கள், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், ஹம்ச தீர்த்தம், நள தீர்த்தம், கங்கா கூபம், அகத்தியர் தீர்த்தம், செங்கழுநீர்ப் பூக்கள் மிகுதியாகப் பூக்கும் செங்கழுநீர் ஓடை என்பனவே அவை.

8. தர்ப்பாரண்யம், நைமி சாரண்யம் (முனிவர் சிலர் தவமியற்ற ஏற்றதோரிடம் காட்ட வேண்ட பிரமன் தருப்பைப்புல்லினைச் சக்கரமாக்கி உருட்டி அது நிற்குமிடம் ஏற்க என்றார். அது இங்கு நின்றதால் இப்பெயர் ஏற்பட்டது) மண்ணுலகச் சிவபுரம், நகவிடங்கபுரம் எனப் பல பெயர் பெற்ற தலம்.

அமைவிடம்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலிருக்கும் காரைக்கால் நகரிலிருந்து 5 கி.மீ தொலைவிலும், பேரளம் எனுமிடத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும் இருக்கும் திருநள்ளாறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குச் செல்லப் புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p45.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License