Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


28. ஃபேஸ்புக் தந்த அதிர்ச்சி!

"அமுதா... இன்னிக்கு நாம வெளியே எங்கேயும் போகல. இன்னிக்கு முழுக்க நாம லாட்ஜ்லதான் இருக்கப் போறோம். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா... இதுவரைக்கும் நமக்குள்ள நடக்காத ஃபர்ஸ்ட் நைட், ஃபர்ஸ்ட் பகலா இன்னிக்கு நடக்கப் போகுது. தயவுசெய்து, வழக்கம்போல ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முயற்சிக்காத. அப்படியே நீ முடியாதுன்னு மறுத்தாலும், நான் விடப்போறதாவும் இல்ல..."

சினிமாவில் வரும் வில்லன் மாதிரியே பேசினான் குணசீலன். அவனது பேச்சு அமுதாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

"அரை மணி நேரம் உனக்கு டைம் தர்றேன். இப்போ மணி 9.10 ஆகுது. இன்னிக்கு நாம சாப்பிடுறதுக்கு ஓட்டலுக்குப் போக வேண்டாம். நானே டிபன் வாங்கிட்டு வந்திடுறேன். அதுக்குள்ள நல்லா யோசிச்சு முடிவெடுத்துக்க. நான் வந்ததும், இன்னிக்கு முழுக்க என்ஜாய் பண்ணுறோம்..."

- இப்படிச் சொன்ன குணசீலன், தான் நோண்டிக் கொண்டிருந்த லேப்-டாப்பை ஆப் செய்யாமல், அப்படியே வைத்துவிட்டு, ஓட்டலுக்குப் புறப்பட்டான்.



அமுதாவின் நிலை பரிதாபமாக இருந்தது. “எப்படியாவது மனசை மாத்திட்டு இவனோடு வாழ்ந்துடலாம்னுதான் நினைக்கறேன். ஆனா... என்னோட மனசு முழுக்க நீ இருக்கும் போது, அப்படியொரு முடிவை எடுக்க முடியமாட்டேங்குதே...” என்று, முன்னாள் காதலன் அசோக்கை நினைத்து ஏங்கியவள் கண்ணீர்விட்டு அழத் துவங்கிவிட்டாள்.

அப்போது அவளது பார்வையில், அதுவரையில் குணசீலன் பயன்படுத்திக் கொண்டிருந்த லேப்-டாப் பட... அதில் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறான் என்பதை அறிய அதன் அருகே சென்றாள். அங்கே மானிட்டரில் அவள் கண்ட காட்சி அப்படியே அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அமுதாவை டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்டில் வெளியே அழைத்துச் சென்று விதவிதமாகப் போட்டோ எடுத்திருந்த குணசீலன், அந்தப் படங்களில் சிலவற்றை தனது ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்திருந்தான். குறிப்பாக, அமுதா செக்ஸியாக தெரியும் போட்டோக்களை இணைத்திருந்தான். மார்பகங்கள் பளிச்சென்று தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த அமுதாவைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுதியிருந்தான் குணசீலன்.

“ஹாய் ஃப்ரெண்ட்ஸ். இந்த பியூட்டி யாருன்னு நீங்க கேட்கறதுக்கு முன்னாடியே, இவளைப் பற்றி நானே சொல்லிவிடுகிறேன். இவதான் என் புது மனைவி அமுதா. வில்லேஸ் கேர்ள். பொறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே வில்லேஜ் என்றாலும், அவளை சிட்டி கேர்ள் ஆக்கிவிட்டேன். அவளைப் பார்த்தாலே, உங்களுக்கு அது தெரியும். என் புது மனைவி உங்கள் பார்வைக்கு எவ்வளவு அழகாக தெரிகிறாள்? அவளுக்கு என்ன மார்க் தரலாம்? நீங்களே சொல்லுங்கள், ஃப்ரெண்ட்ஸ்” என்று எழுதியிருந்தான் அவன்.

அமுதா படத்தைப் பார்த்ததும் அவனது நண்பர்கள் பட்டியலில் உள்ள பல பேர் சில நிமிடங்களிலேயே அங்கே வந்து தங்களது கருத்துக்களைக் கொட்டித் தீர்த்து பதிவு செய்து விட்டார்கள்.

“உன் மனைவி ரொம்ப சூப்பரா இருக்காடா...” என்பது துவங்கி, “உன் மனைவிக்கு அழகே அந்த பெரிய மார்பகங்கள்தான்” என்பது வரையில், அவளைப் பற்றி எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கருத்துக்களைச் சொல்லி இருந்தார்கள் அந்த ஃபேஸ்புக் நண்பர்கள்.

அமுதாவின் மார்பக அழகு பற்றி விமர்சித்த நண்பனுக்குப் பதிலும் சொல்லி இருந்தான் குணசீலன். “அதைத் தொடக்கூடிய வாய்ப்பு எனக்கு இன்னிக்குதான்டா கிடைக்கப் போகுது. அதைத் தொட்டு அனுபவிச்சப் பிறகு, அந்த அனுபவத்தை சொல்றேன்” என்று அவன் கமென்ட் போட... வில்லங்கமான நண்பன் ஒருவன், “உனக்கு முன்னாடியே அதை நான் தொட்டுட்டேனே...” என்று கிறுக்குத்தனமாக எழுதி இருந்தான்.



“என்னடா சொல்ற? இவளை ஏற்கனவே உனக்கு தெரியுமா? அப்போ, என்னை ஏமாத்திட்டாங்களா?” என்று குணசீலன் பதிலுக்குக் கேட்க... “டேய் மச்சான், தப்பா நினைச்சுக்காதடா. என்னோட கம்ப்யூட்டர் ஸ்கிரீன்லதான்டா “அதை”த் தொட்டேன்...” என்று சொல்லியிருந்தான் அந்த ஃபேஸ்புக் நண்பன்.

தன்னுடைய கவர்ச்சியான போட்டோக்களை ஃபேஸ்புக்கில் போட்டு, குணசீலனும் உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள அவனது நண்பர்களும் கொச்சையாக கமென்ட் அடித்துக் கும்மியடிப்பதைப் பார்த்த அமுதாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

“ஆடை விலகிய ஒரு போட்டோவை வைத்து இவன் இவ்வளவு செய்கிறானே... என்னை முழுமையாக இவனிடம் ஒப்படைத்து விட்டால்... கண்டிப்பாக இன்னும் என்னவெல்லாமோ செய்வான். அசோக்கைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியா இருந்திருந்தா, இப்படியொரு நிலைக்கு வந்திருக்காதே...” என்று அவளது மனம் அழுதது.

அதேநேரம், நம்பியார் ரேஞ்சுக்குக் கையைப் பிசைந்து கொண்டு பலமாகத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான் ரூம் பாய் விவேக். அமுதா ஆடையின்றி குளிப்பதை வீடியோவாகப் பதிவு செய்ய கீ-செயின் கேமராவை பாத்ரூமுக்குள் ஒளித்து வைத்துவிட்டுப் போனானே, அதே ரூம் பாய்தான்!

சிறிதுநேரத்தில், தன்னந்தனியாக இருக்கும் அமுதாவின் அறைக்கு அவன் மட்டுமே வந்தான். ஹாலிங் பெல்லை அழுத்தினான். அழுது கொண்டிருந்த அமுதா, கண்ணீரை வேகமாகத் துடைத்துவிட்டுக் கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்த குணசீலனுக்குப் பதிலாக ரூம் பாய் விவேக் நின்று கொண்டிருந்தான்.

“மேடம்... என்னோட வண்டி கீ-செயினைத் தவறவிட்டுட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் இங்கே வந்தப்ப அதை மறதியா இங்கே பாத்ரூம்ல வெச்சிட்டுப் போய் இருக்கலாம்னு நினைக்கறேன். நான் அதை தேடிப் பார்க்கலாமா?” என்று கேட்டவன் அமுதாவை மேலும் கீழுமாகப் பார்த்தான். அவள் குளித்து முடித்து விட்டாளா என்று அலசி ஆராய்ந்தன அவனது கண்கள்.



ஏற்கனவே ஃபேஸ்புக் காட்சிகளைப் பார்த்து சோகத்தில் இருந்த அமுதா, “சரி... போய் பார்த்துவிட்டுப் போ...” என்று அவனுக்கு அனுமதி தந்தாள். பாத் ரூமுக்குள் வேகமாக நுழைந்த விவேக், தான் வைத்த இடத்தில் கேமரா கீ-செயினைத் தேடினான். ஆனால், வைத்த இடத்தில் அது இல்லை. கீ-செயின் கேமரா காணாமல் போனதில் அவனுக்குப் பயங்கர அதிர்ச்சி. வேறு யாருடைய கையிலும் அது சிக்கி, பெரும் பிரச்னை ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அமுதா குரல் கொடுத்தாள்.

“பார்த்திட்டியாப்பா... கீ-செயின் கிடைச்சதா?”

“இல்ல மேடம். இங்கே இல்லை! வேற எங்கேயாவது விழுந்திருக்குமான்னும் தெரியல. உங்க கையில அது கிடைச்சா, வேற யார் கிட்டேயும் குடுத்திடாதீங்க. நானே வந்து வாங்கிக்கறேன்...” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் விவேக். அவனது இதயம், பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5ab.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License