Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


35. தோழியின் காதல்!

ஊட்டியின் அன்றைய காலைப்பொழுது வழக்கம்போல் குளுகுளுவென்று இருந்தது. ஆனால், போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அமர்ந்திருந்த ஆனந்துக்கும் ஷ்ரவ்யாவுக்கும் வியர்த்துக்கொட்டியது.

மேஜையில் லேப்- டாப்பை ஆன் செய்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆனந்த் - ஷ்ரவ்யா இருவரது முகத்தையும் மாறிமாறி உற்றுப் பார்த்துவிட்டு, இறுதியாக ஷ்ரவ்யாவை பார்த்தார்.

"மேடம்... இன்னிக்கு விசாரணையை உங்ககிட்டே இருந்தே ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க ஒரு கால் கேர்ள். ஒரு வார அக்ரிமென்ட் போட்டுதான் உங்களை இங்கே கூட்டி வந்திருக்கறதா ஆனந்த் சொல்றாரு. உங்களோட நடவடிக்கைகளை பார்த்தால் ஒரு கால் கேர்ள் மாதிரி தெரியல. அதனால உண்மையை மறைக்காமல் சொல்லிடுங்க. எங்க விசாரணையும் ஈஸியா முடிஞ்சிடும்...” என்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது இருக்கையில் பலமாக அமர்ந்து கொண்டு ஆனந்தை நிமிர்ந்து பார்த்தார்.

“மிஸ்டர் ஆனந்த். இந்த விசாரணையோட முக்கியச் சாட்சியா இருக்கற வீடியோ காட்சிகளை நீங்க இன்னிக்கு மறுபடியும் பாக்கறதுக்கு முன்னாடி ஷ்ரவ்யா கிட்ட கொஞ்சம் விசாரணை நடத்த வேண்டியது இருக்கு. நீங்க கொஞ்சநேரம் வெளியில வெயிட் பண்ணிட்டு இருங்க. விசாரணை முடிஞ்சதும் கூப்பிடுறேன்.”



இன்ஸ்பெக்டர் சொல்லவும் எழுந்து நகர்ந்தான் ஆனந்த். அவனது கண்களில் ஒருவித கலவரம் தெரிந்தது.

“ஷ்ரவ்யா... நீங்க யாருங்கற விசாரணையில நாங்களும் ஈடுபட்டு இருக்கோம். நிச்சயமா, ஆனந்த் சொல்றபடி நீங்க கால் கேர்ள் இல்லை. இதுதான் உண்மை. அப்படீன்னா நீங்க யாரு? நீங்க ஏதோ ஒரு திட்டத்தோடதான் இங்கே வந்து இருக்கீங்க. அதுவும், ஆனந்துக்கு தெரியாம, அவரோட கால் கேர்ளா வந்து இருக்கீங்க? எதுக்காக நீங்க இவ்ளோ ரிஸ்க் எடுக்கறீங்க?”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் கேள்வியை உள்வாங்கிக் கொண்ட ஷ்ரவ்யா சிறிது நேரம் மவுனமாக எதையோ யோசித்தாள். பிறகு, மெள்ள வாய் திறந்தாள்.

“இன்ஸ்பெக்டர்... நான் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு. என்னோட சொந்த ஊர் மதுரை. சென்னையில என்ஜினீயரிங் காலேஜ்ல இந்த வருஷம்தான் படிப்பை முடிச்சேன். எனக்கு ஆனந்தைவிட குணசீலனை நன்றாகத் தெரியும். அதுவும், என் தோழி லேகா மூலமாகத்தான். இவளும் என்கூட ஒண்ணா படிச்சவதான். நானும் லேகாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருப்போம். எங்க ரெண்டு பேரையும் அக்கா, தங்கச்சின்னே ஹாஸ்ட்டல்ல உள்ள எல்லோரும் சொல்வாங்க. லேகாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. நாங்க ரெண்டு பேரும் பிரைவேட் லேடீஸ் ஹாஸ்ட்டல்ல ஒண்ணா தங்கியிருந்து படிச்சிட்டு வந்தோம்.

ஒருநாள் ஜூரம் வந்ததுனால என்னால காலேஜ்க்கு போக முடியல. அன்னிக்கு ரோட்ட கிராஸ் பண்றப்போ பைக்ல வந்த ஒருத்தன் லேகா மேல இடிச்சிட்டான். பைக் மோதின வேகத்துல இவ கீழே விழுந்துட்டா. அப்போதான் அவ பக்கத்துல வேகமா வந்து நின்ன கார்ல இருந்து குணசீலன் இறங்கி இருக்கான். மயக்கமாகிக் கிடந்த லேகாவை தன்னோட கார்ல தூக்கிப் போட்டுட்டு போய் இருக்கான். அவ தன்னோட ப்ரெண்டுன்னும், விளையாடும்போது தவறி கீழே விழுந்துட்டான்னும் பொய் சொல்லி ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கான். லேசான காயம்தான் லேகாவுக்கு. பைக் மோதுன அதிர்ச்சியிலதான் மயக்கமாகி இருக்கா. கொஞ்ச நேரத்துலயே அவ கண் முழிச்சி இருக்கா. தனக்கு உதவினது குணசீலன்னு தெரிஞ்சப்போ, யாருன்னே தெரியாத தனக்கு உதவின அவனோட மனிதாபிமானத்துக்கு தேங்ஸ் சொல்லி இருக்கா. இந்த சம்பவத்துக்குப் பிறகு அவங்க ரெண்டு பேரும் திக் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. ஒருகட்டத்துல குணசீலன் லேகாவை காதலிக்கறதா சொல்ல... இவளுக்கு கொஞ்சம் தயக்கம். என்கிட்ட வந்து அதுபத்தி சொன்னா. “உன் மனசுக்கு என்ன தோணுதோ அதைச் செய்”ன்னு சொன்னேன்.



மறுநாள் அவ காலேஜ்க்கு வரலன்னு சொல்லிட்டு லீவு போட்டா. நான் வழக்கம்போல் காலேஜ்க்கு போயிட்டேன். லேகாவோ குணசீலனோட ஈ.சி.ஆர். ரோட்ல இருக்கற ரிசார்ட் ஒன்றுக்கு போய் இருக்கறா. தன் மனசாட்சிபடி குணசீலனை தாராளமா லவ் பண்ணலாம்னு அவ முடிவெடுத்து இருக்கா. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவன் அவளை அங்கே அழைச்சிட்டுப் போய் இருக்கான். பார்ட்டிங்கற பேர்ல ஒரு ரூமை அந்த ரிசார்ட்ல புக் பண்ணி இருக்கான் குணசீலன். லேகாவுக்காகவே ஸ்பெஷலா உணவு எல்லாம் ஆர்டர் பண்ணி, அவ எதிர்பார்க்காத உலகத்துக்கே அழைச்சிட்டு போய் இருக்கான். கடைசியா அவ குடிச்ச கூல் டிரிங்ஸ் கோக் என்பது மட்டும்தான் அவளுக்கு ஞாபகம். மறுநாள் காலை வரை என்ன நடந்தது என்பதே தெரியாமல் போனது. லேகாவை அடையணும்னு நினைச்சே குணசீலன் அங்கே அழைச்சுட்டு போய் இருக்கான். கோக் குடிச்சி மயங்கின லேகாவை அவள் உணர்விழந்த நிலையிலேயே கற்பழிச்சதோட மட்டுமில்லாம, அவளை ஆடையில்லாம போட்டோ, வீடியோவும் எடுத்து இருக்கான் அந்த ராஸ்கல்.

மறுநாள் காலையில் கண் விழிச்ச லேகா, தனக்கு என்னமோ நடந்ததாக உணர... அவள் அருகே படுத்திருந்த குணசீலன் பலமாக சிரித்து இருக்கிறான்.

“என்ன லேகா... கோக் குடிச்சி மயங்கிட்ட? அதுல கொஞ்சம்தான் ஒயின் மிக்ஸ் பண்ணி இருந்தேன். அதுக்கே நீ இப்படி ஆவேன்னு எதிர்பார்க்கல” என்று அவன் சொன்னாலும், அவளுக்குள், ஏதோ தப்பு நடந்து விட்டதாகவே ஒரு உறுத்துதல் இருந்தது. ஆனா, அவளால தனக்கு நேர்ந்ததை சட்டுன்னு உணர முடியல.



குணசீலனோடு சண்டையிடும் அளவுக்கு அவளுக்கு அப்போது தெம்பு இல்லாமல் போய்விட்டதால், அவனோடு சம்பிரதாயத்துக்காக கோபப்பட்டுவிட்டு திரும்பி இருக்கிறாள். அவள் ஹாஸ்டலுக்கு திரும்பின பிறகு அவளோட மொபைலுக்கு குணசீலன் எம்.எம்.எஸ். அனுப்பி இருக்கான். ஆடையின்றி படுத்து இருந்த லேகாவை 5 நிமிடங்களுக்கும் மேலாக காட்டியது அந்த வீடியோ. அதிர்ச்சி ஆன லேகா, குணசீலனை அவனோட ஆபீஸ்க்கே பார்க்க போய் இருக்கா. அங்கே அவ போட்ட கூச்சலால தனக்கு அவமானம் ஏற்பட்டதா நினைச்ச அவன், அவளை பழிவாங்க தன்னோட ஃபேஸ்புக்லேயும் லேகாவின் அந்த மாதிரியான வீடியோ மற்றும் படங்களை போஸ்ட் பண்ணிட்டான். எங்க காலேஜ் பையன் ஒருத்தன் குணசீலனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ப்ரெண்ட் ஆக இருக்க... இவன் அந்த வீடியோ மற்றும் படங்களை எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் டேக் பண்ணிவிட்டான்.

அதன் விளைவு... ஹாஸ்டல்லயே தூக்கில் தொங்கிவிட்டாள் லேகா. என் உடன் பிறவா சகோதரியாக வலம் வந்த அவள், இப்போது இல்லாமலேயே போய்விட்டாள்...”

இதற்கு மேலும் ஷ்ரவ்யாவால் தெம்பாகப் பேச முடியவில்லை. அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாய்க் கொட்டியது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் விழியோரமும் ஈரமானது.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5ai.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License