Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


36. நடந்தது என்ன?

"ஷ்ரவ்யா... உங்க தோழி லேகாவுக்கு நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. அவள் எடுத்தது தவறான முடிவு. தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என உணர்ந்த அடுத்த நொடியே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் தந்து இருக்கலாம். அதுவும் இல்லன்னா... அவன் தப்பானவன்; அவன்கூட இனி எந்தத் தொடர்பும் வெச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி, அவனுடைய தொடர்பு அத்தனையையும் துண்டிச்சு இருக்கலாம்."

"ஸாரி... இன்ஸ்பெக்டர். இந்த இடத்துலதான் நீங்க மட்டுமல்ல; இந்த ஒட்டுமொத்த சமூகமே தப்பு பண்ணுது. ஒரு பொண்ணு ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு இருக்கா. அதுவும், அவளை அவளுக்குத் தெரியாமலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சுட்டு, அதை வீடியோவும் எடுத்து இன்டர்நெட்ல பரவவிட்டு இருக்கான். அவனைத் தண்டிக்காம, அந்தப் பொண்ணு ஒதுங்கி இருக்கலாம்னு சொல்றீங்களே..."

"ஸாரி ஷ்ரவ்யா... நான் சொல்றத நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கறேன். லேகா தப்பு பண்ணினாங்கன்னு நான் சொல்லற வரல. அவங்க எடுத்த முடிவுதான் தப்புன்னு சொல்ல வர்றேன்."

"லேகா எடுத்த முடிவு தப்புண்ணு நீங்க சொல்றீங்க. அவளை அப்படியொரு முடிவு எடுக்க தூண்டியதே இதே போலீஸ்தானே?"

"என்ன சொல்றீங்க ஷ்ரவ்யா?" -இலேசான அதிர்ச்சியை முகத்தில் காட்டிக் கொண்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.



"ஆமாம் இன்ஸ்பெக்டர். குணசீலன் பெரிய இடத்து பையன். ஐ.டி. கம்பெனியில மாதம் ரெண்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கறான். அரசியல் பலமும் ஆள் பலமும் இருக்கு. இந்த பலங்களுக்கு முன்னாடி என்னோட லேகா வெறும் தூசுதான். அதனாலத்தான், அத்தனை பலங்களுக்கு முன்னால போராட முடியாம அப்படியொரு முடிவை எடுத்துட்டா."

"ஷ்ரவ்யா... உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது. லேகா விஷயத்துல காவல்துறை கண்டுக்கவில்லைன்னு சொல்றீங்களா?"

"ஆமா! காதல்ங்கற பேர்ல தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசம் போனது பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் கொடுக்கப் போனா. தப்பு பண்ணினவன் பெரிய இடத்து பையன்னதும், அவன் வீட்டுக்கு போன்ல தகவல் சொல்லிட்டு, நீதானே அந்த பையன்கூட விருப்பப்பட்டு படுத்தியாம். வீடியோ எடுத்தது கூட உன் சம்மதத்தோடதான் நடந்ததாமே என்று விசாரணை பண்ணின போலீஸ் அதிகாரி கேட்க... பாவம் என் லேகா! இந்தக் கேஸை நீங்க பதிவு பண்ணவே வேண்டாம்னு சொல்லிட்டு, ஹாஸ்டலுக்கு வந்து உயிர விட்டுட்டா. அவளோட சாவுல கூட அவளுக்கு நியாயம் கிடைக்கல. வயிற்றுவலி தாங்க முடியாமல் கல்லூரி மாணவி தற்கொலைன்னு, நடந்த விபரீதத்தை அப்படியே மறைத்து விட்டார்கள். நடந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னாடி அவ எனக்கு போன் பண்ணலன்னா, பல விஷயங்கள் எனக்கும் தெரியாம போயிருக்கும்..." என்று சொல்லிவிட்டு நீண்ட அழுகையை வெளிப்படுத்தினாள் ஷ்ரவ்யா.

சிறிது நேரம் அங்கே நிலவிய மவுனத்துக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேசினார்.

"ஷ்ரவ்யா... உங்க தோழிக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக நான் வருந்துகிறேன். காபி வாங்கிட்டு வரச் சொல்றேன். அதை சாப்பிட்டு நீங்க ரிலாக்ஸ் ஆனபிறகு நான் பேசுறேன்..." என்ற இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்றார்.

15 நிமிடங்களுக்குப் பிறகு, காபி குடித்துவிட்டு, சற்று சோகம் கலைந்திருந்த ஷ்ரவ்யாவிடம் மறுபடியும் விசாரணையை ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.

"ஷ்ரவ்யா... இன்னிக்குள்ள விசாரணையை முடிச்சிடணும்னு நினைக்கறேன். நான் கேட்கற கேள்விக்கு சரியா பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கறேன்..."



இன்ஸ்பெக்டர் சொல்ல, சரி என்பது போல் தலையாட்டினாள் ஷ்ரவ்யா.

"லேகா உயிர்விட்டதுக்குப் பலி வாங்கத்தான் குணசீலனை கொலை செய்ய ஊட்டி வந்தீங்களா?"

"ஆமா."

"குணசீலன் ஊட்டிக்கு ஹனிமூன் கொண்டாட வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்? அதுவும், ஆனந்த்தோட அத்தை மகள்தான் அமுதாங்கறதும் எப்படி தெரியும்?"

"இதுக்கு நான் உங்களுக்கு பெரிய விளக்கமே சொல்ல வேண்டியது இருக்கும்..."

"தாராளமா சொல்லுங்க..!"

"லேகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட ... பத்திரிகை நிருபர் ஆனந்த், இந்தத் தற்கொலையின் பின்னணியில் பண பலமும் படை பலமும் விளையாடி இருக்கலாம் என்கிற சந்தேகத்தை எழுப்பி இருந்தார். நடந்த உண்மைச் சம்பவம் எனக்கு மட்டும்தானே தெரியும்? இவருக்கு எப்படித் தெரியும் என்று நான் விசாரித்தபோது, அவர் நேரடியாகக் கல்லூரிக்கு வந்து விசாரித்துவிட்டு செய்தி வெளியிட்டது தெரிய வந்தது. அந்தச் செய்தி வெளியான மறுநாளே இந்த வழக்கு தொடர்பாக சிறப்புக் கட்டுரை ஒன்றையும் அவர் எழுதி இருந்தார். அதில், லேகா குணசீலனை காதலித்தது பற்றியும், அவனால் அவள் மோசம் போனது பற்றியும் எழுதி இருந்தார். அதோடு, லேகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வெளியான வீடியோவே அவளது தற்கொலை முடிவுக்கு காரணம் என்றும் எழுதி இருந்தார். இந்தச் செய்தி வெளியான அன்று என்ன நடந்ததோ தெரியவில்லை. மறுநாள் அதுதொடர்பான ஃபாலோ-அப் செய்தியே வெளியாகவில்லை. தவிர, வேறு எந்தப் பத்திரிகையும் இந்த சம்பவத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.

உண்மையை எழுதியதற்காக அதை எழுதிய ஆனந்த் குண்டர்களால் மிரட்டப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையிலும், அவரிடம் மேற்கொண்டு பல உண்மைகளைச் சொல்லவும் அவரது பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அவரது கேபினில் அவர் இல்லை. ஆபீஸ் பாய் சற்றுநேரம் காத்திருக்கச் சொன்னான். ஆனந்த் வருவதற்கு வெகுநேரம் ஆனதால் அந்த ஆபீஸ் பையனிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். நான் எந்தச் செய்தி விசயமாக வந்திருக்கிறேன் என்பதை சொன்னதும், அவன் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டான். அதாவது, போலீஸ் எப்.ஐ.ஆரில் பதிவு செய்ததற்கு மாறாக உண்மைச் செய்தியை வெளியிட்டதால் வெளியாட்களால் ஆனந்த் மிரட்டப்பட்டு இருந்த அதே நேரத்தில், அவரது பத்திரிகை ஆசிரியரும் கண்டித்து இருக்கிறார். நம்ம பத்திரிகை பாலிசிக்கு எப்.ஐ.ஆர். செய்தியை அப்படியே போட்டுவிட்டுப் போகவேண்டியதுதானே? தேவையில்லாமல் உண்மையைக் கிளறி எழுதப்போய், மினிஸ்டர், அவன், இவன்னு எல்லார் கிட்டேயும் இருந்து பிரஸ்ஸர் வருது. சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்டரை வேலையை விட்டே நீக்கிடுங்கன்னு என்கிட்டேயே சொல்றாங்க... என்று ஆனந்தின் பத்திரிகை ஆசிரியர் அவரிடம் கோபப்பட்டு இருக்கிறார். இது நான் அங்கே வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நடந்திருக்கிறது. அந்த டென்ஷனில்தான் அவர் வெளியே சென்றிருக்கிறார்.



அந்த நேரத்தில்தான் அவரது மேஜை மீது கிடந்த போட்டோவைக் கவனித்தேன். அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். மாலை சகிதமாக குணசீலனும் அமுதாவும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர், அந்தப் போட்டோவில்..! அந்தப் போட்டோவை நான் கையில் வைத்திருந்ததை பார்த்துவிட்ட ஆபீஸ் பையன், நான் எதிர்பார்க்காத அந்தத் தகவலையும் சொன்னான்.

"மேடம்... இந்தப் போட்டோவுல இருக்குற பொண்ணு பேரு அமுதாவாம். எங்க ஆனந்த் ஸாரோட அத்தைப் பெண்ணாம். அந்தப் பெண்ணும், இவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இப்போது, வேறு யாருடனோ திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாளில் கல்யாணமாம்” என்கிற தகவலையும் சொன்னான்.

ரொம்ப நேரம் ஆகியும் ஆனந்த் அங்கே வராததால் ஆனந்தின் மொபைல் நம்பர் தர முடியுமா என்று ஆபீஸ் பையனிடம் கேட்டேன். அவன் தந்தான். ஆனந்தின் மொபைல் நம்பரை எனது மொபைலில் டயல் செய்வதற்காக மொபைலை எடுத்தபோது அது சார்ஜ் இல்லாமல் “ஆப்” ஆகி இருந்தது. அவரது டேபிளில் பேப்பர் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிய போது, நியூஸ் பிரிண்ட் நோட் பேடு இருந்தது. அந்த நோட் பேடின் முதல் பேப்பரில் அவரது மொபைல் எண்ணை எழுதி, தாளைக் கிழித்து எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

“மேடம்... உங்க நம்பரையும் நோட்ல எழுதி வெச்சிட்டுப் போயிடுங்க. ஸார் வந்ததும் நீங்க தேடி வந்தது பற்றி சொல்லிடுறேன்” என்றான். நானும் எனது மொபைல் நம்பரை எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

பத்திரிகை ஆபீஸைவிட்டு வெளியே வந்து கால் டாக்ஸியில் ஏறியதும், காரில் சிறிது நேரம் எனது மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு ஆனந்துக்கு பேசுவதற்காக நம்பரை டயல் செய்ய முயன்றேன். அதற்குள் எனது மொபைல் அலறியது. மொபைல் திரையில் தெரிந்தது ஆனந்த் மொபைல் நம்பர்.

நான் ஹலோ சொல்லவும், அவரே பேச ஆரம்பித்துவிட்டார்.

"சாந்தி... புரோக்கர் பிரகாஷ் உங்க நம்பரைக் குடுத்தார். என் பெயர் ஆனந்த். நான் .... பத்திரிகையில வேலை பார்க்குறேன். ஒரு வாரத்துக்கு நீங்க என்கூட தங்கப் போறீங்க. அதுக்கான அமவுன்ட்டை நான் பிரகாஷ் அக்கவுண்ட்க்கு அனுப்பிட்டேன். இப்போ இதுக்கு மேலே நான் உங்ககிட்ட பேச முடியாது. இன்னிக்கு ஈவ்னிங் 6.30க்கு, எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கற ஆனந்தபவனுக்கு வந்திருங்க. நாம அங்கே பேசிக்கலாம்...” என்று சொல்லிவிட்டு அவராகவே துண்டித்துக் கொண்டார். இங்கேதான் விதி விளையாட ஆரம்பித்தது!”

நீண்ட விளக்கத்தைச் சொல்லிவிட்டு, அருகே இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து வேகமாகக் குடிக்க ஆரம்பித்தாள் ஷ்ரவ்யா. விதி எப்படி விளையாடி இருக்கும் என்கிற சிந்தையில் ஆழ்ந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5aj.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License