Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


38. திகில் நிமிடங்கள்

"இன்ஸ்பெக்டர்... நீங்க நினைக்கற மாதிரி நான் சாந்தியை எதுவும் செய்யவில்லை. ஆனந்த் கூட நான் ஊட்டிக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி அவங்களை மீட் பண்ணி பேசினேன். “உங்களுக்குப் பதிலா நான் ஆனந்த் கூட ஊட்டிக்கு போக ஆசைப்படுறேன்”னு நான் அவங்ககிட்ட சொன்னப்போ கொஞ்சம் பதறித்தான் போனாங்க. “நீங்க நினைக்கற டூர் இல்ல இது; நான் ஒரு கால் கேர்ள். என் கூட சந்தோஷமா இருக்கத்தான் இவர் பணம் எல்லாம் கொடுத்திருக்கார். திடீர்னு நீங்க, நான் போறேன்னு சொல்றீங்க. ஒருவேளை நீங்க அங்கே போனா, ஓர் ஆண் கால் கேர்ள்கிட்ட எப்படி நடந்துப்பானோ அப்படித்தான் இந்த ஆனந்த்தும் உங்ககிட்ட நடந்துப்பான். இதனால பாதிக்கப்படப் போறது நீங்கதான்”னு சாந்தி என்கிட்ட சொன்னாங்க.

ஆனந்தோட லவ் மேட்டர் பற்றி அவங்ககிட்ட சொன்னேன். அதோடு, ஹனிமூன் கொண்டாடுறதுக்காக ஊட்டிக்கு வரும் குணசீலன் மற்றும் அமுதா பற்றி தெரிஞ்சுகிட்டு, ஏதோ ஒரு ப்ளானோடத்தான் அவர் ஊட்டிக்குப் போறாரு; அந்தத் திட்டத்தால அவருக்கு எந்தப் பாதிப்பும் நேரக்கூடாது. அதேநேரம், என்னோட உயிர்த்தோழி சாவுக்கு காரணமான குணசீலன் நிச்சயம் தண்டிக்கப்படணும். அவனால, அவன் வாழ்க்கையில புதுசா வந்து இருக்குற அமுதா பாதிக்கப்படக் கூடாது. அதே அமுதா, இந்த ஆனந்த்துக்கு மனைவியா ஆகணும். அதுக்கு நான் அவர்கூடப் போய்த்தான் ஆகணும்னு சாந்திகிட்ட நிறைய விளக்கங்களுடன் சொன்ன பிறகுதான் அவங்க இதற்கு ஒப்புக்கொண்டாங்க.”

ஷ்ரவ்யா இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கேட்டார்.

“அப்படீன்னா... சாந்தி இப்போ எங்கே இருக்காங்க? அவங்க, ஆனந்த் கூட ஊட்டிக்கு வரலங்கறது அவங்களை அனுப்பி வைப்பதாகக் கூறி பணமும் வாங்கிக்கொண்ட கும்பலுக்குத் தெரியும்”

“தெரியாது சார். ஊட்டிக்குப் போகுறதா சொல்லிட்டுக் கிளம்பின சாந்தி, திருப்பூர் பக்கத்துல இருக்கற அவங்களோட சொந்த ஊருக்குப் போய் இருக்காங்க. அவங்களை அங்கே அனுப்பி வெச்சதில எனக்கு இன்னொரு திருப்தியும் கிடைச்சிருக்கு. காதலனால ஏமாற்றிச் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, விபச்சாரக் கும்பல்கிட்ட மாட்டிக்கிட்ட அவங்க 10 மாசத்துக்குப் பிறகு இப்பதான் சொந்த ஊருக்கு அப்பா, அம்மாவை பார்க்கப் போறாங்க. ஊட்டிக்கு நான் சாந்திங்கற பேருல வந்ததுனால, அவங்களுக்கு விபச்சார கும்பல்கிட்ட இருந்து நிரந்தர விடுதலை கிடைச்சிருக்கு. என்னோட உயிர்த்தோழி லேகா உயிர என்னால காப்பாற்ற முடியல. அதே நேரத்துல, விபச்சாரக் கும்பல்கிட்ட சிக்கித் தினமும் செத்துக்கிட்டு இருந்த ஓர் அப்பாவிப் பெண்ணை காப்பாற்றினதில எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!”



ஷ்ரவ்யாவின் பேச்சில் ஆழ்ந்த அர்த்தமும், எதையோ சாதித்துவிட்ட திருப்தியும் வெளிப்பட்டது.

“மிஸ் ஷ்ரவ்யா... உங்ககிட்ட இன்னொரு முக்கியமான கேள்வி. ஆனந்த் ஆபீஸ்க்கு நீங்க போனப்போ, உங்களோட மொபைல் நம்பர்தானே அவருக்கு தவறுதலா மாறிப்போய் கிடைச்சது. அதே நேரத்துல, சாந்தி நம்பர் உங்ககிட்ட எப்படி வந்தது?”

“எதார்த்தமா நடந்த தவறுதான் இது. நான் அங்கிருந்த ஆபீஸ் பையன்கிட்ட ஆனந்த் மொபைல் நம்பரை நியூஸ் பிரிண்ட் நோட் பேடில் எழுதி, அந்தத் தாளைக் கிழித்து எடுத்து வரும்போது, அதில் இன்னொரு நம்பரும் இருந்தது. அதாவது, நான் அங்கே போவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சாந்தியின் மொபைல் நம்பரை ஆனந்த் வாங்கி, அதை அந்த நோட் பேடில் எழுதி வைத்திருக்கிறார். அது தெரியாமல் நான் அந்தத் தாளை கிழித்துக் கொண்டு வந்து விட்டேன். ஆனந்த் என்னிடம், சாந்திங்கற பேருல பேசின பிறகுதான், நாம் கிழித்து எடுத்துவந்த தாளில் உள்ள நம்பர் சாந்தியுடையது என்று முடிவு செய்தேன். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்ட போது சாந்தியே பேசினார். அவங்களைத் தனியா ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு வந்து பேசும்போதுதான், நாங்களும் ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்தோம்.”

“ரொம்ப நன்றி ஷ்ரவ்யா. நீங்க தைரியமா உண்மைகளைச் சொல்றத பார்க்கும் போது, உங்களுக்கும் நடந்த கொலைக்கும் தொடர்பு இருக்காதுன்னு நினைக்கறேன். அடுத்ததா ஆனந்த்கிட்ட கொஞ்ச நேரம் விசாரணை பண்ண வேண்டியிருக்கு. நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க...” என்று இன்ஸ்பெக்டர் சொல்லவும் இன்ஸ்பெக்டர் அறையில் இருந்து வெளியேறினாள் ஷ்ரவ்யா.

அவளுக்கு எதிரே மறுபடியும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஆனந்த் வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒருவித பதற்றம் தெரிந்தது. “ஒருவேளை குணசீலனைக் கொன்றது இவளாகத்தான் இருக்குமோ..!” என்றுகூட நினைத்தான்.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5al.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License