Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


43. அமுதாவின் வாக்குவாதம்

அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சிறிதுநேரத்துக்கு மவுனமே நிலவியது. அந்த மவுனத்தை கலைத்துக் கொண்டு கத்தியது காலிங்பெல். வெளியில் சென்ற குணசீலன்தான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்கிற கணிப்போடு, கேமராவில் தன்னைப் பதிவு செய்தாள் அமுதா. திடீரென்று என்ன நினைத்தாளோ, கதவைத் திறப்பதற்காகச் சென்றவள், ஷெல்ஃப் கண்ணாடி அருகில் வந்து நின்றாள். அவளது முகம் அந்தக் கண்ணாடியில் எந்த அளவுக்கு க்ளோஸ்-அப் காட்சியாக தெரிந்ததோ, அதே அளவுக்குக் கேமராவின் கண்களிலும் பதிவாகி இருந்தது.

தான் அழும் ஓசை வெளியில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பாத்ரூமில் இருந்து கொண்டு அழுததால் முகம் முழுக்க பரவியிருந்த கண்ணீர்க் கறையைக் கர்ச்சிப்பால் துடைத்து அப்புறப்படுத்தினாள். அப்படியும், சோகக் கறை போகவில்லை, அவள் முகத்தில் இருந்து... பக்கத்தில் இருந்த இசட் முகப்பவுடரை முகத்தில் மேலோட்டமாக அப்ளை செய்து கொண்டு, மறுபடியும் கதவு பக்கம் போனாள்.

அமுதா எதிர்பார்த்தது போலவே குணசீலனே வந்திருந்தான். காலையில் சாப்பிடுவதற்குத் தேவையான டிபனை வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

“இன்னிக்கு என்னவோ தெரியல, ஹோட்டல்ல நிறைய கூட்டம். அதனால, இவ்ளோ லேட் ஆயிடுச்சு. நிறையபேர் டிஃபன் ஆர்டர் கேட்டு கியூவுல நின்னதால நான் அங்கேயே சாப்பிட்டுட்டேன். உனக்கு மட்டும்தான் வாங்கி வந்திருக்கேன். சாப்பிட்டுக்கோ!” என்றான் குணசீலன்.

ஆனால், அமுதாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

“அமுதா உனக்கு என்ன ஆயிற்று? அமைதியாகவே இருக்க? டிபன் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு, இவ்ளோ லேட்டா வந்துட்டானேன்னு கோபமா?”



அமுதாவிடம் மறுபடியும் மவுனம்தான்.

அப்போதுதான் தனது லேப்-டாப்பைக் கவனித்தான் குணசீலன். அந்த மடிக்கணினி திரையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அவனது ஃபேஸ்புக் பக்கம் பளிச்சிட்டது. அதில், அவன் பதிவேற்றம் செய்த அமுதாவின் கவர்ச்சியான படங்களும் தெரிந்தன.

நடந்த எல்லாம் குணசீலனுக்குப் புரிந்து விட்டது. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அமுதாவின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டது அவளுக்கு தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவன், அமுதா பக்கம் திரும்பினான்.

“என்ன அமுதா... இதுக்குப் போயா மூஞ்ச உம்முன்னு வெச்சிட்டு இருக்க? நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கற படத்தைதானே ஃபேஸ்புக்ல வெளியிட்டேன். உன்னோட அழகை பாராட்டி இதுவரைக்கும் 100 பேருக்கு மேலே கமென்ட் போட்டு இருக்காங்க. நீ எனக்கு மனைவியா கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்னு எல்லோரும் சொல்றாங்க.”

“உங்களுக்கு வேணும்னா நான் அதிர்ஷ்டமாத் தெரியலாம். என்னைப் பொருத்தவரை நீங்க எனக்கு புருஷனா வாய்ச்சது துரதிர்ஷ்டம்தான்!” என்று சொன்ன அமுதா, அடக்கி வைத்திருந்த அழுகையைப் பொசுக்கென்று வெளிப்படுத்தி விட்டாள்.

“ஏ...ஏய்..! அழதே... அமுதா..! ஃபேஸ்புக்ல என்னோட ப்ரெண்ட்ஸ்ங்க போட்டு இருக்கற கமென்ட்டை பார்த்து நீ பெருமைப்படுவன்னு நினைச்சேன். ஆனா, நீ சீரியஸா அழுற! இதுவரைக்கும் தள்ளிப் போன நம்மளோட ஹனிமூனை இன்னிக்குப் பகல்ல எப்படியாவது கொண்டாடிடனும்னு நினைச்சு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா? ஆனா நீ, எப்போதும்போல அழுதுட்டே இருக்க.”

“நான் எப்போதும் அழுதுட்டே இருக்கறதுக்கு காரணமும் நீங்கதான். உங்க மனசுக்குள்ள என்னப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியல. என்னை உங்களோட மனைவியா பார்க்கறதை விட, ஓர் ஆண், விபச்சாரப் பெண்ணை எப்படிப் பார்ப்பானோ... அப்படி பார்க்கற மாதிரிதான் எனக்குத் தோணுது.”

“அப்படியெல்லாம் சொல்லாத அமுதா. நீ என் ஒய்ஃப். அந்த உரிமையிலதான் நான் உன்கிட்ட பேசுறேன், நடந்துக்கறேன்.”

குணசீலன் இப்படிச் சொன்னதும், அவனது லேப்-டாப் அருகில் சென்ற அமுதா, அதன் திரையில் தெரிந்த தனது படத்தை கிளிக் செய்தாள். அந்தப் படம் இன்னும் பெரியதாக ஓப்பன் ஆகியது.



ஊட்டி ரோஸ் கார்டனில் எடுக்கப்பட்ட படம் அது. அங்கிருந்த ரோஜா செடி அருகே அமுதாவை, இன்னும் குனி... இன்னும் குனி... என்று குணசீலன் சொல்லிச் சொல்லி எடுத்த படம் அது. குணசீலனின் வற்புறுத்தலின்பேரில் அமுதா அணிந்திருந்த இறுக்கமான டி&ஷர்ட்டின் இறுக்கத்துடன் போராட முடியாமல் வெளியேறும் முயற்சியில் இருந்தன அவளது மார்பகங்கள். அதுபோன்ற அமுதாவின் கவர்ச்சியான போட்டோக்களைத்தான் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தான் குணசீலன். அந்தப் படங்களைப் பார்த்து, கிறங்கிப் போய்த்தான் அவனது நண்பர்கள் பலவாறு கமென்ட் போட்டிருந்தார்கள். சிலர் இன்னும் திறந்த மனதாக, “உன் ஒய்ஃபுக்கு பெரிய ச்செஸ்ட்டுடா; ரொம்ப அழகா, கவர்ச்சியா இருக்கு” என்றெல்லாம் எழுதியிருந்தனர்.

அதையெல்லாம் சுட்டிக்காட்டிய அமுதா, “எந்தவொரு புருஷனும் தன்னோட மனைவி போட்டோவ இப்படி ஊர் உலகத்துக்கெல்லாம் போட்டுக் காட்ட மாட்டான். தன்னோட மனைவியை மாடர்ன் ட்ரெஸ்ல கவர்ச்சியாப் பார்க்க ஆசைப்பட்டா, அந்த ட்ரெஸ்ஸை வீட்டுக்குள்ளதான் போடச் சொல்வான். நீயும் இருக்கீயே... இவள் கிராமத்துல பொறந்து வளர்ந்த பொண்ணாச்சே... அவளை இப்படியெல்லாம் ஜீன்ஸ்லயும், டி-ஷர்ட்லயும் நிக்க வெச்சு, கேவலமா போட்டோ எடுக்குறோமேங்கற உறுத்துதல் கொஞ்சம்கூட இல்லாத நீயெல்லாம் எனக்கு புருஷனா இருக்க முடியாது. அதுக்கான தகுதி உனக்கு இல்லவே இல்ல. இன்னிக்கு இப்போ நான் முடிவு பண்ணிட்டேன். இனி, நான் உன்கூட வாழ மாட்டேன். தயவு செய்து என்னைவிட்டுடு. என் போட்டோக்களை எல்லாம் இப்படி இன்டர்நெட்ல போட்டு கேவலப்படுத்தாத. நீ வளர்ந்த கல்ச்சர்ல உனக்கு இது சாதாரணமா இருக்கலாம். ஆனா, நான் அப்படி கிடையாது. மானம் போகும்னா அதுக்காக உயிரையே கொடுக்கத் தயங்காத கிராமத்துல பொறந்த பொண்ணு நான். அதனாலதான் சொல்றேன்; எனக்கு இனி, நீ வேண்டவே வேண்டாம். நீ என் கழுத்துல தாலி கட்டுன ஒரே காரணத்துக்காகத்தான் இவ்வளவு நாளும் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேன். தாலி கட்டுன பொண்டாட்டிய வீதியில அலங்கோலமா வீட்டு ரசிக்க நினைக்கற உன்னோட நினைப்புல இவ்வளவு நாள் நான் இருந்ததே உனக்கு அதிர்ஷ்டம்தான்...”

எங்கிருந்து வந்தன என்று தெரியாமல், வார்த்தைகளை அள்ளித் தெளித்து குணசீலனை நிலைகுலையச் செய்துவிட்டாள் அமுதா. அவள், இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அதனால், அமுதாவே எதிர்பார்க்காத அந்த முடிவுக்கு சட்டென்று வந்துவிட்டான்.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5aq.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License