Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


45. கேமரா பதிவில் கத்தி

அமுதாவை பிடிப்பதற்காக பாய்ந்த குணசீலனின் கால்களில், அவனால் உருவி வீசப்பட்டுக் கிடந்த அமுதாவின் சேலை சிக்கிக் கொள்ள... சட்டென்று தடுமாறினான். அக்கணமே நிலைதடுமாறி விழலானான். தன் மீது அவன் விழுந்து விடாமல் இருக்க விலகிக் கொண்டாள் அமுதா. ஓடிவந்த வேகத்தாலும், தடுமாறவிட்ட சேலையாலும் வேகமாக அப்படியே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்... "அம்மா" என்று பலமாகக் கத்தினான். கஷ்டப்பட்டு அவன் திரும்பிய போது, அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் வேகமாகப் பீறிட்டது. அந்தக் காட்சியைக் கண்டு அமுதாவும் கத்திவிட்டாள். சாதாரண பெண்ணான அவளால் நடுங்க மட்டுமே முடிந்தது. அந்த நடுக்கத்திலும், அபரிக்கப்பட்டு கீழே கிடந்த தனது சேலையை எடுத்து வேகவேகமாகத் தனது மார்புக்கு முன்னே கொண்டு வந்து மறைத்தாள்.

கத்திக் குத்துப்பட்ட குணசீலனால் அழுத்தம் திருத்தமாக பேச முடியவில்லை. முணகியவாறே பேசினான்.

“ஏன்டி... என்னை பழி வாங்கிட்டல்ல... உன்னைச் சும்மா விடமாட்டேன். என்னைக் கொலை பண்ண முயற்சி பண்ணினேன்னு போலீஸ்ல எல்லாம் கம்ப்ளெய்ன்ட் பண்ண மாட்டேன். இப்பவே உன்னை கொன்றுவிடுகிறேன்...” என்றவன், எழுந்திருக்க முயன்றான். இதயப் பகுதியில் கத்திக்குத்து விழுந்திருந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறிப் பலவீனமாகியிருந்த அவனால் சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை. அந்த நிலையிலும் அவனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய தயாராக இருந்தாள் அமுதா.



“ஸாரி...” என்றபடியே, எழுந்திருக்க முயன்ற அவனுக்கு உதவ முன்வந்தாள். ஆனால், குணசீலனின் நடவடிக்கையோ வேறுமாதிரியாக இருந்தது. தன் மார்பில் குத்தியிருந்த கத்தியை உருவி, அதனால் ஏற்பட்ட வலியால் பலமாகக் கத்தியவன், அதே கத்தியால் அமுதாவைக் குத்த முயன்றான். அவள் விலகிக் கொண்டாள்.

“என்னடி... தப்பிச்சிடலாம்னு பாக்குறீயா-? உன்னக் கொல்லாம விடமாட்டேன்...” என்ற குணசீலன் எழுந்திருக்க முயன்றான். அவனது கால்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடம்புமே பலவீனமாக இருந்ததால் தடுமாறினான். ஆனால், அருகில் கிடந்த பெட்டைப் பிடித்து மெதுவாய் எழுந்து, உடம்பு ஆட்டம் கண்டபடியே நின்றான். அந்த நிலையிலும் அவன் கண்களில் கொலைவெறி தணியவில்லை.

“என்னிய இந்த நிலைமைக்கு ஆளாக்கின உன்னைக் கொன்னாத்தான் எனக்கு நிம்மதி” என்றவன், அந்தத் தள்ளாடிய நிலையிலும் தனது ரத்தக்கறை படிந்திருந்த கத்தியைக் கொண்டு அவளைக் குத்த முயன்றான். அந்தப் பலவீனமான நிலையிலும், அவளை அடிப்பது போன்று கத்தியை ஓங்கிச் சுழற்றினான். அவன் கத்தியைச் சுழற்றத் துவங்கிய அக்கணமே அதிர்ச்சியில் மயக்கமானாள் அமுதா. சட்டென்று கீழே சாய்ந்தாள். தள்ளாடிய குணசீலன் ஓங்கி சுழற்றிய கத்தி அவள் தலைக்கு மேலே வட்டமடித்து, மறுபடியும் அவனை நோக்கிச் சென்றது. தன்னால் முடிந்த மட்டும் சக்தியைத் திரட்டிக் கொண்டு அமுதாவைக் கத்தியால் குத்த முயன்ற குணசீலன், அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான். அவனது கால்கள் தடுமாற... தொப்பென்று பெட்டில் தலைகுப்புற விழுந்தான். அப்போது அவனே எதிர்பார்க்காத வகையில், அவன் கையில் இருந்த கத்தி, அவனது கை பலவீனத்தால் அவனது கழுத்தில் சட்டென்று செருகியது. அந்த ஓரிரு நொடிகளிலேயே அவன் உயிர் பிரிந்தது. அந்தக் காட்சியை ஆதாரத்தோடு பதிவு செய்தது, அந்த அறையில் வெகுநேரமாக கண் விழித்திருந்த கீ -செயின் கேமரா.



ஊட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்த அந்தக் காட்சியை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். பக்கத்தில் இருந்த அமுதாவை பார்த்தார். வெகுநிதானமான நிலையில், ஏற்கெனவே நடந்த காட்சியைப் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக பெருக்கெடுத்தது. முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டு பொசுக்கென்று அழுதாள்.

“அழாதீங்க அமுதா. ஏதோ... உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கப் போய்தான், இப்போ நீங்க என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. இஷ்டப்படாத வாழ்க்கை உங்களை இந்த அளவுக்கு கொண்டுவந்து விட்டுடுச்சு. இதே வாழ்க்கைதான் இனி காலம் முழுக்க வரப்போகுதுன்னு நினைக்காதீங்க. உங்களுக்குன்னு நல்ல வாழ்க்கை காத்துட்டு இருக்கு. காதல்ல வெற்றி, தோல்விங்கறது சகஜம்தான். அதுல வெற்றி கிடைச்சுச்சுன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறோம். அதே காதல், சூழ்நிலைகளால தோல்வியில முடியும்போது மட்டும் வாழ்க்கையே வெறுத்துப் போயிடுறோம். தற்கொலைக்கு முயற்சி பண்ணுறோம். இன்னும் சிலர், தனக்குக் கிடைக்காதவள் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு நொடியில முடிவெடுத்துக் காரியத்துல இறங்கிடுறாங்க. உங்களோட காதலர் ஆனந்த் இருக்காரே... அவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான். ஆனா, இவர் உங்களைக் கொல்லணும்னு நினைக்கல. எந்தச் சூழ்நிலையிலும், குறிப்பா... நீங்க இன்னொருத்தருக்கு மனைவியாகிவிட்ட பின்னரும் கூட, உங்களால் அந்த இன்னொருத்தருடன் வாழமுடியாதுங்கறதப் புரிஞ்சிக்கிட்டு, அவர்கிட்ட இருந்த உங்களைப் பிரிச்சி, மறுபடியும் உங்களைக் காதலியா - மனைவியா அடையறதுக்கு முயற்சி பண்ணி இருக்காரு இந்த ஆனந்த். நடந்த சம்பவங்களால நீங்க யாருமே பயப்பட வேண்டாம். நடந்த சம்பவத்துக்கு ஆதாரமா வீடியோ இருக்கு. இறந்த குணசீலனை நீங்களோ அல்லது ஆனந்தோ கொல்லவில்லை. அந்த முடிவு அவனா தேடிக்கிட்டது. அது ஒரு விபத்து. அந்த விபத்துல இருந்து அதிர்ஷ்டவசமா நீங்க தப்பிச்சி இருக்கீங்க. உங்களோட காதல் ஆனந்த் கூட உங்களோட வாழ்க்கை மறுபடியும் மலரும்னு அந்தக் கடவுளே எழுதி வெச்சிருக்காருன்னு நினைக்கிறேன். அதனாலதான், இந்தக் கொலை வழக்குல உங்களுக்கு எல்லாமே சாதகமாக இருக்கு...” என்று சொல்லி நிறுத்தியவர், ஆனந்த் பக்கம் திரும்பினார்.



“மிஸ்டர் ஆனந்த். நடந்த கொலையால உங்களுக்கோ, உங்களது காதலிக்கோ எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. போலீஸ் விசாரணை எல்லாத்தையும் இன்னிக்கே முடிச்சிடலாம். என்ன நடந்ததுங்கறதுக்கு வீடியோ ஆதாரம் இருக்குது. நாளைக்கு உங்க ரெண்டு பேரையும் கோர்ட்ல ஆஜர்படுத்துவோம். இந்த வழக்குல மறைக்கறதுக்கு எதுவுமே இல்ல. எல்லாமே தெளிவா இருக்கு. அதனால நீங்க தைரியமா ஆஜராகலாம். ஜட்ஜ் கிட்ட உண்மையைச் சொல்லலாம். அதுக்குள்ள, முன்ஜாமீன் வாங்கறதுக்கான முயற்சியையும் பண்ணிடுங்க. இல்லன்னா... நானே எனக்குத் தெரிஞ்ச லாயர் மூலமா அதைப் பண்ணிடுறேன். இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழுங்க. எந்தச் சூழ்நிலையிலும் பிரிஞ்சிடாதீங்க. நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா வாழ முடியாதுன்னு தெரியுது. எனிவே... ஆல் த பெஸ்ட் அன்ட் அட்வான்ஸ் விஸ்ஸஸ் டூ யுவர் ஹேப்பி மேரிடு லைஃப்..!” என்று சொல்லிவிட்டு, தனது இருக்கையில் இருந்து எழுந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அமுதாவின் கையைப் பிடித்து, ஆனந்த் கையோடு இணைத்து வைத்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகான அந்த ஸ்பரிசத்தில் மெய்மறந்து நின்றனர், ஆனந்தும் அமுதாவும்! அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரவ்யாவின் கண்களிலோ கண்ணீர் பெருகியது.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5as.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License