Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


24. கண்ணாடியில் தெரிந்த அழகு!

அன்று, மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கியிருந்தது ஊட்டி. குணசீலனும் அமுதாவும் ஊட்டியில் உள்ள ரோஸ் கார்டன், போட்டிங் ஹவுஸ், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய இடங்களுக்கு காரில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, ஊட்டியில் தங்கியிருக்கும் லாட்ஜூக்கு வந்து சேர்ந்தனர்.

சுற்றிப் பார்க்கச் சென்ற இடத்தில் அமுதா தன்னுடன் முழுஅளவில் ஒத்துழைக்காததால் கோபமாய் இருந்த குணசீலன், ஊட்டிக் குளிருக்கு இதமாக வெந்நீர் குளியல் போட பாத்ரூமுக்குள் நுழைந்தாள். ஜீன்ஸ், டீ - ஷர்ட்டில் இருந்த அமுதா, எப்போது அந்த ஆடையில் இருந்து விடுதலை ஆகலாம் என்கிற எண்ணத்துடன் பாத்ரூமுக்கு எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடி முன்பு வந்து நின்றவள், தனது ஆடையைக் களையத் தயாரானாள். அப்போதுதான், அந்த ஆடையில் தன்னைத்தானே முதன் முதலாகப் பார்த்தாள்.

இடுப்புக்குக் கீழேப் போக மறுத்து அடம்பிடித்து நின்றுகொண்டிருந்த டீ - ஷர்ட் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. ஒயிட், எல்லோ மிக்ஸிங் ஷர்ட் அது என்பதால், அவள் அணிந்திருந்த சிவப்பு நிறப் பிரா அப்பட்டமாகத் தெரிந்தது. குனிந்து நிமிர்ந்தபோது, அவளது மார்பழகு பளிச்சென்று வந்து போனது.



“நாம் இன்னிக்கு எத்தனை இடங்களில் இப்படிக் குனிந்து நிமிர்ந்திருப்போம்? ஒருசிலர் திரும்பத் திரும்ப நம்மை பார்த்தது, இதையெல்லாம் ரசிப்பதற்குத்தானா? ச்சீ... என்ன ஜென்மங்கள் அவர்கள்?” என்று மனதிற்குள் புழுங்கியபடியே டீ - ஷர்ட்டைக் கழற்ற முயன்றாள்.

குணசீலன் கட்டிய தாலிச் செயின் டீ - ஷர்ட்டின் பட்டனில் சிக்கிக் கொண்டதால், கழற்றுவதற்குச் சிரமப்பட்டாள்.

சரி, பாத்ரூமிற்குள் போனபிறகு கழற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அவள் திரும்பிய போது அங்கே 20 வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

அவனை எதிர்பாராதவிதமாகப் பார்த்து அதிர்ச்சி ஆனவள், அவரசம் அவசரமாக டீ - ஷர்ட்டைச் சரிசெய்தாள்.

“யார் நீ? உனக்கு இங்கே என்ன வேலை? எப்படி இங்கே வந்தே?” பதற்றத்தோடு கேள்விமேல் கேள்வி கேட்டாள், அவனிடம்!

“நான் ரூம் பாய். ஸார்தான்... குடிக்கறதுக்கு மினரல் வாட்டர் கேட்டிருந்தாங்க. அதை எடுத்துட்டு வந்தேன். கதவு திறந்து இருந்ததால... நான் வருவேன்னு தெரிஞ்சுதான் திறந்து வெச்சிருக்கீங்களோன்னு நெனைச்சு உள்ளே வந்துட்டேன். வேற எதுவும் இல்ல மேடம்...” என்ற அவன், தான் கொண்டு வந்த 2 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலை அமுதாவிடம் நீட்டினான்.

“இல்ல... அந்த ஷோபாவுல வெச்சிட்டுப் போ. இனி, உள்ளே வரும்போது ஹாலிங்பெல்லை அழுத்திட்டு வா. சட்டுன்னு உள்ளே வந்திடாத...” என்று, மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தாள்.

“சரி மேடம்...” என்று சொல்லிவிட்டு அகன்றான் அந்த ரூம் பாய்.



அமுதாவின் இதயம் பதற்றத்தில் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. “இவன் வந்ததுகூட தெரியாம நாம டிரெஸ் மாத்திட்டு இருந்திருக்கோமே. ஒருவேளை... டிரெஸ் மாத்திட்டு இருக்கும்போது எல்லாத்தையும் பார்த்து இருப்பானோ..?” என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்கினாள்.

பாத்ரூம் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க... குணசீலன் ப்ரெஸ் ஆக வெளியே வந்தான்.

“ரூம் பாய் வாட்டர் பாட்டில் கொண்டு வந்தானா?” என்று, வெளியே வந்ததும் வராததுமாகக் கேட்டான்.

“வந்தான்... இப்பத்தான் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான். ஆமாம்... அவன் இங்கே வருவான்னு என்கிட்ட நீங்க சொல்லி இருக்கலாம்ல..!”

“ஏன்... என்னாச்சு?”

“நான் டிரெஸ் மாத்திட்டு இருக்கும்போது உள்ளே வந்துட்டான்.”

“ஏன் பொய் சொல்ற? இன்னும் நீ டிரெஸ் மாத்தவே இல்லீயே..!”

“மாத்தலதான்... ஆனா, மாத்தும்போதுதான் அவன் வந்துட்டான்..!”

“நீ என்ன சொல்றன்னு எனக்கு ஒண்ணும் புரியல. அதை விடு, நான் கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வர்றேன். பாத்ரூம்ல வெந்நீர் வருது. குளிச்சி முடி ச்சு ப்ரெஸ்ஸா இரு. என்னோட பேக்ல சென்ட் பாட்டல் எல்லாம் இருக்கு. எல்லாம் ஃபாரீன் அயிட்டம். உடம்பு முழுக்க நல்லா அடிச்சிக்கோ. முக்கியமா, ரோஸ் கலர்ல நைட்டி எடுத்து வெச்சிருக்கேன். குளிச்சி முடிச்சதும் நீ அதைத்தான் போட்டுக்கணும்...” என்ற குணசீலன், டீ - ஷர்ட், லுங்கியோடு வெளியே புறப்பட்டான். கதவைப் பூட்டிவிட்டு குளிக்கத் தயாரானாள் அமுதா.

ஜீன்ஸ் பேன்ட்டையும், டீ - ஷர்ட்டையும் கஷ்டப்பட்டு உடலில் இருந்து உருவி எடுத்தவள், பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அங்கேயும் ஆளுயரக் கண்ணாடியைப் பொருத்தி வைத்திருந்தார்கள்.

“ஏன்... இங்கெல்லாம் கண்ணாடி பொருத்தி வைத்திருக்கிறார்கள்?” என்று அப்பாவியாய் யோசித்தபடியே கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தைப் பார்த்தவள். வெறும் உள்ளாடைகளுடன் மாத்திரம் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தைப் பார்த்து... நீண்ட நாட்களுக்குப் பிறகு கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள். அதுவும், கண்களை பொத்திக் கொண்டே ஓரக்கண்ணால் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைப் பார்த்தாள்.

“ஏய்... அமுதா! நீ ரொம்ப அழகாத்தாண்டி இருக்குற. பட்டிக்காடான சொந்த ஊர்ல இருந்த அழகைவிட, இந்த ஊட்டியில நீ ரொம்பவும் அழகாத் தெரியறே. அதுவும், இன்னிக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்க...” என்று தனக்குள்ளேயே சொல்லி வெட்கப்பட்டுக் கொண்டாள்.

இன்னும் கொஞ்ச நேரம் அந்தக் கண்ணாடியில் முன்பு அப்படியே நிற்க வேண்டும் போல் இருந்தது அமுதாவுக்கு! அப்போதுதான், “ஓ... இதுக்குத்தான் இங்கேயும் ஆளுயுரக் கண்ணாடியை மாட்டி வெச்சிருக்காங்களா?” என்று, சற்று நேரத்துக்கு முன்பு தோன்றிய சந்தேகக் கேள்விக்கு சரியான விடையை கண்டுபிடித்துக் கொண்டாள்.



எவ்வளவு நேரத்துக்குத்தான் கண்ணாடி முன்னாடியே நிக்கறது..? என்று நினைத்தவள், தலை நனையாமல் குளிக்க ஆரம்பித்தாள். ஊரில் இருக்கும்போது, மாராப்பு வரை பாவாடையை இறுகக் கட்டிக்கொண்டு குளித்துப் பழக்கப்பட்டவள், நகரத்து சூழ்நிலை தனது குளியல் ஸ்டைலையே மாற்றியிருப்பதை உணர்ந்தாள். இதுவும்கூட நல்லாத்தான் இருக்கு என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொண்டவள், ஷவரை திறந்துவிட்டுக் குளித்தாள்.

நேரம் போனதே தெரியவில்லை. அவள் குளியல் அறையில் இருந்து வெளியே வந்தபோது அரை மணி நேரம் வேகமாக ஓடியிருந்தது. குணசீலன் வைத்துவிட்டுப் போன ரோஸ் கலர் நைட்டியை எடுத்துப் பார்த்தாள். சினிமாக்களில் நடிகைகள் இரவு நேரக் காட்சிகளில் அணியும் நைட்டி அது. போட்டுப் பார்த்தாள். மிகவும் கவர்ச்சியாக இருந்தது. முன்புறம் வெறும் நாடா மட்டும்தான். கொஞ்சம் பிடித்து இழுத்தால், நைட்டி முழுமையாய் அவிழ்ந்துவிடும் அளவுக்கு அதை வடிவமைத்து இருந்தார்கள்.

இதுபோன்ற ஆடையெல்லாம் அமுதாவுக்குப் போட்டுப் பழக்கம் இல்லைதான். ஆனாலும், இப்போது அவளுக்கு அந்த ஆடை பிடித்திருந்தது. அந்த ஆடை அவளை பேரழகியாகவே காட்டியது. அந்த நைட்டியைப் போட்டுக்கொண்டு ஆளுயரக் கண்ணாடி முன்பு வந்து நின்றவள், திரும்பவும் தனது அழகை ரசிக்கத் தொடங்கினாள். சினிமா நடிகைகள் “போஸ்” கொடுப்பது போன்று, ஆங்காங்கே திரும்பி நின்று பார்த்து, தான் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாள்.

திடீரென்று ஹாலிங்பெல் அலறியது. வெளியே சென்ற குணசீலன்தான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்த அமுதா, பூட்டிய கதவைத் திறந்தாள். அவள் எதிர்பார்க்காதவிதமாக சற்றுநேரத்துக்கு முன்பு வந்த அதே ரூம் பாய்.

“மறுபடியும் இங்கே எதுக்கு வந்திருக்க?”

“என்ன மேடம்... என்னோட வேலையே உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறதுதான். ஸார்தான்... இதை வாங்கி வந்து கொடுன்னு சொல்லி, பணமும் தந்துட்டுப் போனாங்க. அதைக் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்...” என்றான் அவன்.

“சரி, கொடுத்துவிட்டுப் போ...” என்று கை நீட்டி அதை வாங்கினாள் அமுதா. கொஞ்சம் சிரித்துவிட்டுப் போனான் அவன்.

“ஏன் இவன் சிரிச்சுட்டுப் போறான்...” என்று நினைத்தபடியே, அவன் தந்துவிட்டுப் போன பொருளைப் பார்த்தாள். அது, அவளை இன்னும் அதிர்ச்சியாக்கியது. அந்தப் பொருள்... பாலியல் உறவின்போது ஆண்கள் பயன்படுத்தும் காண்டம்!

அமுதாவுக்கு கோபம் கோபமாக வந்தது. குணசீலன் வந்ததும், “உங்களுக்கு அறிவு இருக்கா?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

அவள் கோபமாக இருக்கும்போதே ஹாலிங்பெல் அலறியது. குணசீலன்தான் வந்திருக்க வேண்டும். வந்ததும், இதுபற்றிதான் முதல்ல கேட்கணும்... என்று மனதுக்குள் புலம்பியபடியே கதவைத் திறந்தாள்.

இப்போதும் அவளுக்கு அதிர்ச்சி தந்தவன் அதே ரூம் பாய்தான்.

“ஸாரி மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்ககிட்ட நான் குடுத்தது, பக்கத்து ரூமுக்குக் கொடுக்க வேண்டியது. உங்க ஸார் வாங்கி வரச் சொன்னது டிபன். நான் இங்கே கொடுக்க வேண்டியதை அங்கேயும், அங்கே கொடுக்க வேண்டியதை இங்கேயுமா மாத்திக் குடுத்துட்டேன். இதோ... உங்க ஸார் வாங்கி வரச் சொன்ன டிபன். நீங்க... நான் தந்த பொருளைத் தந்தா வாங்கிட்டு போயிட்டே இருப்பேன்...” என்றான்.

அமுதாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. டிபன் பார்சலை வாங்கிக் கொண்டு, அதுவரை கையிலேயே வைத்திருந்த காண்டம் பாக்கெட்டை, ஏதோ தொடக்கூடாத பொருளை தொட்ட மாதிரி அவனிடம் கொடுத்துவிட்டு கதவை வேகமாக பூட்டிக் கொண்டாள். ஆனால், அவளது மனமோ எப்போதும் இல்லாத பதற்றத்தில் அடித்துக் கொண்டது.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5x.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License