Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சிறுகதை

இப்படியும் சில மனிதர்கள்

பாண்டித்துரை


நேற்றுத்தான் முன்னாவை பார்த்தேன். ரொம்பவும் சந்தோசமாக இருந்தான். (ஊரில் முனுசாமி சிங்கப்பூர் வந்த பின்னாடி முன்னாவாகிட்டான்).

சிவாஜி படத்தை மூனு தடவைப் பார்த்துவிட்டு அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான். நீ என்னதான் சொல்லு சங்கரை அடிச்சுக்கவே முடியாதுப்பா! முதல் காட்சியிலேயே தலைவரு என்னம்மா வர்றாரு தெரியுமா? சிவாஜி சிவாஜி ..ன்னு வந்து படம் முடியற வரைக்கும் சும்மா கலக்கிட்டாரு ... சிவாஜி சிவாஜி...

சாலையில் போயிட்டு இருக்கிற எல்லாரும் எங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அமைதியாக நடையைத் தொடர்ந்தோம்.

எப்படா மாப்ஸ் நீ சிவாஜியைப் பார்க்கப் போறேன்னு என்னைக் கேட்டான்.

பதினைஞ்சு வெள்ளியைக் கொடுத்துப் பார்க்க வசதியில்லை தேக்காவில் ஐந்து வெள்ளி குடுத்து டிவிடி யில தான் பார்க்கலாம் என்று இருக்கேன், என்றேன் நான்.

நீ திருந்தவே மாட்டியாடா. ஓவர் டைம் பணத்தை எல்லாம் என்னடா மாப்ஸ் பண்ற கொஞ்சமாவது செலவு பன்னுங்கடா என்றான்.

ஒரு விசயம், நான் இன்னைக்கு மறுபடியும் பிளாசா போறேன் சிவாஜி படம் பார்க்க. கேத்ரீனா, வந்தனா, சுப்புலெட்சுமி எல்லாம் வர்றாங்க நீயும் வர்றியா? என்றான்.

இவங்களை எல்லாம் மாதத்தில் இரண்டு, மூனு நாள் முன்னா கூட பார்க்கலாம். எனக்கும் அவங்க நண்பர்கள் தான். ஆனால் அவங்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையே நான் திரும்பிப் பார்த்துக்க வேண்டியிருக்கும். வேற ஒன்னும் இல்லை பர்சு இருக்கான்னு தான்.

சீனத் தோழி கேத்ரீனா என்னை “சிட்டி” என்றுதான் அழைப்பாள் .ஏன்னா சிதம்பரம் என்கிற பேரு அவளுக்கு கூப்பிட வரலையாம். கேத்ரீனா “சிட்டி, எங்களையெல்லாம் கலட்டிவிட்டுட்டு, நீ எப்பவும் தனியா போறியே லவ் ஏதாவது இருக்கிறதா?" என்றாள்.கேத்ரீனாவுக்கு நம்ம ஊருக் கதையெல்லாம் தெரியும். எங்க கூட சேர்ந்து தமிழ்ப்படம் பார்த்து நல்லாவே புரிஞ்சுக்கிறா! நானும் நிறைய சொல்வேன்.

முன்னா தோழிகளில் கேத்ரீனா மட்டும் தான் என்கிட்ட நல்லா பேசுவா. அவளே போன் பண்ணி பல சமயம் மணிக்கணக்கா பேசுவா. அப்பவெல்லாம் முன்னா கேப்பான், “என்ன மாப்ஸ் லவ்வா? அப்புறம் எங்க அத்தைக்கு யாரு பதில் சொல்றதுன்னு” கிண்டல் பண்ணுவான்

என்னத்தச் சொல்ல, ஒரு பொண்ணோட மணிக்கணக்கா பேசுனா காதல் தான்னு நம்ம ஊரில் எழுதப்படாத சொல்லா இன்னைக்கும் நடைமுறையில் இருக்கில்ல.

நாங்க போனில் பேசிக்கிட்டு இருக்கும் போது, முன்னா சத்தமாக கத்துவான் கேத்ரீனா கேட்பா, யாரு அது முன்னா தானே ? நாட்டி பாய்னு சிரிச்சுகிட்டே சொல்லுவா. இப்படியாய் நகர்ந்தன நாட்கள்.

ஒருநாள் வந்தனா, தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதற்கு செந்ததோசா தீவில் பார்ட்டி கொடுத்தாள்.

சாரு, நிவேதன், முன்னா, கேத்ரீனா, சுகாங், மக்காய், சுப்புனு எண்ணிப்பார்த்தா பதினைஞ்சு பேர். எப்படியும் அன்றைக்கு ஆயிரம் வெள்ளி செலவாகியிருக்கும். முன்னா 250 வெள்ளி குடுத்திருப்பான்.

நான் பரிசுப் பொருளாய் “பார்த்திபனின் கிறுக்கல்கள்” புத்தகம் குடுத்தேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஏன் அப்படியே ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு வந்து குடுக்குறது தானே? கிறுக்கா, யாரு வேண்டாம்னா அத இங்கதான் குடுக்கனும்மா? என்று சிரித்தாள்.

இங்கேயும் அந்த சிவாஜி தாக்கம், மிதமான இருட்டில் பியர் கோப்பைகளின் சப்தங்களின் இடையே மெல்லியதாய் பாடல் கசிந்து வந்து கொண்டிருந்தது.

மக்காய் கூட ச்சீ ச்சீனு முனுமுனுத்துக் கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.எங்க ஊருல ஜாக்கிசான் படத்தை பார்த்துவிட்டு ஆ ஊனு கத்துனதை நினைச்சுகிட்டேன், முன்னா சிரிச்சான்.

வந்தனா முகத்தில் கொஞ்சமாய் சோகம் இருந்ததைக் காண முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த அளவிற்கு சுதந்திரம் இருக்குமா என்பது தெரியலைதான். என்னதான் சிங்கப்பூர் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் திருமணத்திற்கு பின் பெண்களின் மகிழ்வுகளில் பல பறிபோய் விடத்தான் செய்கிறது.

நான் ஒரு டைகர் பியர் மட்டும் எடுத்துக்கிட்டேன். கேத்ரீனா ஒய்ன் எடுத்துக்கிட்டா.

வந்தனா சாருவைத்தான் கல்யாணம் பண்ணுவா என்று நினைத்திருந்தேன் என்றாள் கேத்ரீனா.

"ஏய், முதல்ல நீ தமிழ்படம் அதிகமாகப் பார்ப்பதை நிறுத்து" என்றேன்.

"அப்படிப் பண்ணியிருந்தா வந்தனா சாருவைக் கல்யாணம் பண்ணியிருப்பாளா?" என்றாள். ஒய்ன் நிறைந்திருந்த கண்களுடன் கேத்ரினா.

லவ்வா லவ்வானு... யாரோ வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது. வழக்கம்போல சுகாங் தான். எப்பவுமே அவன் இப்படித்தான். அதிகமாயிடுச்சுனு தெரியும் ஆனாலும் அடம் பிடிச்சுக் குடிப்பான் கடைசியில வாந்தியெடுப்பான். நானும் ஒவ்வொரு முறையும் பசங்களை திட்டுவேன் நீங்கதான்டா அவன கெடுக்குறிங்கனு.

முன்னா சொன்னான் “மாப்ஸ் இப்ப ஏன் டென்சன் ஆகுற. தினமுமா அவன் குடிக்கிறான் இந்த மாதிரி நம்ம கூட சேரும்போது மட்டும்தான். அவனுக்கு இதுதான்டா புடிச்சிருக்கு” என்றபோதும் என் மனம் ஒப்பவில்லை..

பேரருக்கு வேலை வைக்காமல் எல்லாம் முன்னாவே சுத்தம் செய்தான்.

அவன் சட்டையை முதலில் மாற்று என்று சுப்பு அவளோட கோட்டை கழட்டிக் குடுத்தா. முகத்தில் கொஞ்சமும் சுருக்கம் இல்லை.

நான் போற வழிதான் கௌ-காங்கில் நான் விட்டு விடுகிறேன் என்று கேத்ரீனா சொன்னாள்.முன்னா கேட்கவில்லை. பிறகு நானும் கூட போனேன். காரில் சென்ற போது முன்னா கேட்டான் “என்ன மாப்ஸ் தமிழ் முரசுவிற்கு போனவாரம் கவிதை அனுப்பினியே வந்திருச்சா என்றான்” வழக்கம் போல் உதட்டை பிதுக்கினேன்.

முயற்சி பண்ணு இல்லைனா நாமளே அச்சடிச்சு தேக்காவில் குடுத்திரலாம் என்று கூறிச் சிரித்த போது, ஏதோ ஒன்று மனதை அழுத்திச் சென்றதாய் உணர்ந்தேன்.

சுகாங் இன்னமும் ச்சீ என்று குழந்தை போல கேத்ரீனாவின் மடியில் முனகிக் கொண்டிருந்தான். அவளின் கை அவனின் முடியை கோதிக் கொண்டிருந்தது.

உன்னோட பிளாக் எப்டியிருக்கு என்று கேட்டாள் கேத்ரீனா .

ம். நிறைய பேர் வருகிறார்கள் சிலர் கருத்தை சொல்கின்றனர் என்றேன்.

அவளின் பல்வேறு வேலைகளுக்கிடையிலும் வலைதளத்தை அறிமுகப்படுத்தி வடிவமைப்பில் எனக்கு உதவுகிறாள் என்பதை எண்ணியபோது பெருமையாய் இருந்தது.

சுக்காங் வீடு வந்தடைந்தோம். ஆனால்,காரை விட்டு இரண்டு பேரால் அவனை தூக்க முடியவில்லை. ஒரு பியருக்கே நான் மிதக்க ஆரம்பித்திருந்தேன். முன்னா இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தான். நாங்க படும் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு டிரைவர், “விடுங்க தம்பி நான் தூக்கிவந்து விடுறேன்”, என்றார்.

ஐம்பது வயது இருக்க வேண்டும் அனாசையாக தூக்கி வந்து லிப்டில் கொண்டு வந்து விட்டார். நன்றி கூறினோம் .

முதலில் முன்னாவிற்கு பறக்கும் முத்தம், பின் என்னிடம் கண்களால் பேசிவிட்டு , அதே காரில் விடைபெற்றாள் கேத்ரீனா.சுக்காய் வீட்டில் அவரோட தாத்தா மட்டுமிருந்தார். அம்மா வேலைக்குப் போய்விட்டார். அப்பா இப்ப இல்லை. ஏன்னா வேற ஒரு வாழ்க்கைத் துணையுடன் வாழ்கிறார்.

எனக்கு சற்று அங்கே இருக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. என்னைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும், முன்னா விசில் அடித்து கொண்டே விஜய் டிவியில் மூழ்க ஆரம்பித்துவிட்டான்.

தாத்தா சுக்காங்கை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். தாத்தா சுக்காயின் சட்டை பேன்ட் எல்லாம் கழற்றி விட்டு வெந்நீர் வைத்து குளிக்க வைத்துப் பின் கொஞ்சமாக சாப்பிட வைத்தார் .அவனுக்கு இது எல்லாம் ஞாபகத்தில் இருக்குமா என என்ணியது என் மனம்.

தாத்தாவைக் கவனித்தபோது ,அவர் கொஞ்சமும் வருத்தபட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் புன்னகையே இருந்தது. இதைப் பார்க்கும் போது சுக்கா இதுக்காகவே தினமும் குடிக்கலாம் என்று நினைத்தேன்.

சரி தாத்தா, நாங்க கிளம்புறோம் ஆன்டியை கேட்டதா சொல்லுங்க, என்றான். முன்னா. அருகே ஆமோக்கியாவில் தான் எங்கள் வீடு என்பதால் நானும் முன்னாவும் நடக்க ஆரம்பித்தோம்.

ஓளிக்கற்றையை விரட்டிப் பிடிப்பதாய் பேருந்து எங்களை கடந்து சென்றது. என் மனதும் கூடத்தான். எப்பப்பார்த்தாலும் குடிச்சிகிட்டு இருக்கிற மாமா, எப்பப்பார்த்தாலும் அவரை திட்டிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணா, முக்குகடை சொக்கன், எங்க ஊரு ராவுத்தர், அம்மன் கோவில் பூசாரி, வழுக்கத் தலையை மறைக்க பின்னாடி முடியை முன்னாடி கொண்டுவந்து சீவும் தலைமையாசிரியர், அப்புறம் பூங்கொடி டீச்சர், எதிர்த்த வீட்டு பாட்டிம்மா, என்கிட்ட மட்டும் டிக்கட் வாங்காத கண்டக்டர், எப்பத்தா கிழவி, குண்டு பாப்பா, மிட்டாய் மாது, நல்லா சாப்புடு சிதம்பரம்னு முகத்தாலே அதட்டும் சியாமளா, சின்ன வயசு சீனு, அம்மா, புல்புல்னு…

நினைவுகளுடனேயே படுக்கையில் வீழ்ந்த போது.

என்ன மாப்ஸ் ரொம்ப களைப்பா இருக்கா..? காலையில எந்திரிக்க அலாரம் வைக்கட்டுமா..?

ஏதோ குரல் ஒன்று தொலைவில் எங்கேயோ இருந்து கசிந்து வருவதாகப் பட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p10.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License