Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மரணம் வெல்லும்

வித்யாசாகர்


“முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது”

கிரிக்கெட் இடையே வந்த செய்தியைக் கேட்டுவிட்டு சற்றுக் கொதிப்போடு சத்யா அங்கிருந்து எழுந்து வீடுநோக்கிப் புறப்பட்டான்.

“பாகிஸ்தான் தில்லு தில்லு தாண்டா"

"பத்தியா, வீட்டுக்குள் வரும்போதே இவன் இப்படி எதனா ஒரு கதையோடு தான் தம்பி வருவான்"

"ஹேய்... சத்யா.., வா வா உனக்காகத் தான் காத்திருக்கிறேன்”

“நீ எப்போ மச்சி வந்த?”

“அம்மாக் கூட பேசினதுல நேரம் போனதே தெரியலை சத்யா, நான் வந்து ஒருமணிநேரம் ஆகப் போகுது"

"அப்படியா அதை விடு, விஷயம் தெரியுமா?" சற்று ஆச்சர்யம் கலந்து அதிர்சியடைவதுபோல் கேட்டான் சத்யா

"என்ன, என்ன விஷயம்? "

"வெச்சான்டா பாகிஸ்தான் காரன், இந்தியாவிற்கு ஆப்பு” வெளியிருந்து வந்த சத்யா ஏதோ ஒரு இன்றைய வாதத்தோடு ஆசாத்தின்முன் வந்து நிற்க அதுவரை ஆசாத்திடம் பேசிக் கொண்டிருந்த சத்யாவின் தாய் எழுந்து சமையலறைக்குள் போனாள். சத்யா அவளுக்குப் பின்னாலேயேச் சென்று தட்டில் கொஞ்சம் சிற்றுண்டி வைத்துச் சாப்பிட்டுக் கொண்டே வந்து ஆசாத்தின் பக்கத்தில் அமர்ந்தான்.

"ஆசாத் தம்பி நீயும் எதனா சாப்பிடேம்பா..???!"

"இல்லமா, நீங்க கேட்டதே மகிழ்ச்சி, வேண்டாம்"



"என்னப்பா நீ, நான் தான் இவ்வளவு நேரமா குடிக்க தண்ணிக் கூட கொடுக்காம பேசியிருந்திருக்கேன் நீயாவது சொல்லக் கூடாதா, சரி கொஞ்சம் தேனிர் மட்டுமாவது குடியேன்.."

"பால் சேர்க்காம கருந்தேநீர் வேணும்னா கொஞ்சம் கொடுங்க.. சர்க்கரைக் கூடுதல் வேண்டாம்..”

"சத்யா உனக்குடா?"

"குடுமா......... சர்க்கரை நிறையப் போடு, பால் திக்கா ஊத்து..”

"என்ன வேணும் காப்பியா டீயா?

"எதனாஒன்னு, நோ.. நோ.. பெட்டர் வித் காஃபி"

சத்யா சொல்லி நிறுத்துவதற்குள் ஆசாத் சத்யாவினுடைய அம்மாவை நோக்கி "என்னம்மா என்கிட்ட மட்டும் சுத்த தமிழ்ல, தேநீர் வேணுமான்னு கேட்டீங்க, அவன் கிட்ட டீயா காப்பியான்னு.... கேட்குறீங்களே ???"

"உன்னை பார்த்தாதாம்பா தமிழ் தன்னால வருது, இவன் மூச்சுக்கு முன்னூறுதடவை ஆங்கிலம் கலந்து தான் பேசுவான், அவுங்கப்பாவுக்கு பெருசா மகன் ஆங்கிலத்துல பீத்தனும்னு ஆசை, எப்படியோப் போகட்டும் கழுதை, தமிழ் இனிதுன்னு பேசினா தானே தெரியும், பேசாத ஜடங்களுக்கு எப்படிப் புரியும்"

"ம்மா... போதும் விடும்மா...' போ.. போயி டீ போடு.., நீ சொல்லுடா மச்சி"

"செய்தி பார்த்தியா சத்யா"

"நானா, நான் நியூஸ் பாக்குறதா???!! நெவர்.. அந்தப் பழக்கமேக் கிடையாது, ஒரே அரசியல் கிருமீஸ்”

"ஏன் ஆசாத் தம்பி அவனைப் போய் செய்தி பத்தியெல்லாம் கேக்குறியே' உனக்குத் தெரியாதா அவனைப்பத்தி.."

"ஆமா, இந்தம்மாவுக்கு உலக செய்தி என்னன்னு ஒத்த விரலு விடமாத் தெரியும்னு நினைப்போ, பேசாம டீ’யப் போட்டுக் கொண்டு வா’ இல்லைனா அப்பாவுக்குப் போன் பொட்டு வரச் சொல்வேன்..”



“டேய் சத்யா என்னடா இது அம்மாகிட்டப் போய் இப்படி?”

“நீ சொல்லுடா மச்சி பாகிஸ்தான் பத்தித் தானேக் கேட்ட"

"ஆமா(ம்)...."

"அவன்தாண்டா கொம்பன். நம்மாளுங்க சுத்த வேஷ்ட மச்சி, காரித் துப்புறானுங்க வெளிய, எல்லாம் செல்ஃபீஸ் கம்முனாட்டிங்க”

"ஏன்டா எல்லாரையும் இப்படி மொத்தமா சேர்த்துப் பேசுற?"

"பேசாம, அவன் எப்படி அடிச்சான் பத்தியா, என்ன துணிச்சலா நம்ம பார்டர்ல வந்து நிக்கிறான் பார்த்தியா?"

"நின்னா, அவன் பெரிய ஆளா? மன்னிக்கிற நாம தான் பெரியாலு சத்யா"

"கிழுச்சீங்க. பார்டர் ல நின்னு உபதேசம் செய்யவாடாப் போனீங்க? அவனை ஒருத்தனை அடிச்சா அவன் நம்மை நூறு பேரை அடிப்பான், பார்க்குரியா???"

"சத்யா, என்ன பேசுற நீ, நம்ம பலம் என்ன தெரியுமா ?"

"என்ன பலம் இருந்து என்ன செய்ய, வேற யாரையாவது அப்பாவிய அடிச்சா கூட நின்னு கைதட்டத் தெரியும்”

“இல்ல..”

“என்ன இல்ல, அதலாம்விட நமக்குச் சேர் தான் முக்கியம் ஆசாது, எங்க போயிடுமோன்னு பயம் இவனுங்களுக்கு, முஸ்லிம் ஓட்டு கிடைக்காமப் போயிடுமோன்னு குருட்டுபுத்தி, இவனுங்க அல்ப பசங்க மச்சி"

"என்னடா பேசுற சத்யா, இஸ்லாமியருக்கும் இந்தியக் கனவு இருக்கு, இந்தியா நமது லட்சிய தேசம்டா”

“நாமதான் நினைக்கிறோம், இந்தியா தமிழரை அப்படி நினைப்பதாத் தெரியலை ஆசாத். என்னதான் நாம இப்படி ஒற்றுமையா இருந்தாலும், அதையும் பிரித்துவைத்து லாபம் சம்பாதிக்கதான் பாக்குறாங்க நம்மைச் சுற்றி இருப்பவர்கள்....”

“அது அரசியல்”

“அரசியல்னா?”

“நம் தவறான அரசியல், நமக்குக் கிடைத்த அரசியல்வாதிங்க அப்படி”

“அவர்கள் ஏன் அப்படி? யார் அவர்களை உருவாக்கியது?”

“நீயும் நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும்”



“நீயும் நானும் என்பது வேற, அவர்கள் செய்யும் அரசியல் வேற, மதராசின்னு சொன்னாலே ஒரு இளக்காரமா பார்க்குற பார்வை பளார் பளார்னு அடிக்கிற மாதிரி இருக்கு எனக்கு, தோ இன்னைக்கு வந்த சேட்டுக் கூட இங்க உட்கார்ந்து நம்மலை அதிகாரம் பண்றான், எப்படி இதலாம்? அவனுக்கு ஒண்ணுன்னா எல்லாம் நடக்குது’ தமிழனுக்கு ஒண்ணுன்னா நாம தான் போய் கொடி புடிக்கனும்’ அப்பவும் வன்முறையை தூன்றோம்னு உள்ளத் தூக்கிப் போட்டு நம்ம ஆளே நம்மை முட்டிக்கு முட்டி தட்டுவான், இதலாம் ஒட்டுமொத்த தேசத்தின் ஒரு இனத்தின் மீதான காழ்ப்புணர்வில்ல? அப்புறம் எனக்கு மட்டும் எங்கருந்து வரும் தேச அக்கறை?”

“இதெல்லாம் நாம சரிசெய்ய வேண்டிய தவறுகள் சத்யா, அதலாம் கடந்துதான் நாம இந்தியரா இருக்கோம்”

“நீ இரு. நான் அதற்கும் முன் ஒரு தமிழன்”

“ம்ம்ம்... கண்டிப்பா.., நான் அதை மறுக்கவேல்ல. நானொரு தமிழன் என்பதை என் உயிருக்கு நிகரா நினைக்கிறேன் சத்யா, ஒரு தமிழனோட பிரச்சனைதான் மிக முக்கியம்னு முதலா நானும் நம்புறேன், அதேவேளை இந்தியாவும் நான் வாழும் தேசமில்லையா?”

“அதை நம்பி நம்பி வெருத்துப் போச்சுடா மச்சி..”

“எனக்கும் கோபம் இருக்கு சத்யா, ஆனா இந்தியாவா பாகிஸ்தானான்னு வந்தா நானொரு இந்தியன். இந்தியமக்களுக்கு ஒரு ஆபத்து வருதுன்னா அதைத் தடுப்பதும் தடுக்க நினைப்பதும் என்னில் யதார்த்தமா நிகழும்.., ஒரு நல்ல குடிமகனுக்கு தேசம் தான் முக்கியம். தேசம் தான் கனவு. தேசம்தான் லட்சியம் எல்லாம்.., எனக்கு மதம் கூட பெருசாத் தெரியலை சத்யா, ஆனா ஒரு இனம், எம் மக்கள்ன்றது மிகப் பெருசாப் படுது..”

"எஸ்... எஸ்.. அயாம் நாட் டாக்கிங் அபௌட் யூ மேன், அபௌட் த இன்டியன்!!"

"தயவுசெய்து இனி அப்படிப் பேசாதே சத்யா, நம் நாட்டை பற்றி இழிவாப் பேசுவது தவறு, நீ வேறெதனா பேசு"

"ஏண்டா உனக்கு இவ்வளவு கோபம் வருது?

"வேற, நீ வேற்று நாட்டான் போலப் பேசுறியே..."

"ஒய் நாட், என் இனம்னு சொன்னியே யாரைச் சொன்ன, இவன் எம் மக்களை அழிக்க துணைப் போவான் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவா?”

“இல்லை, பார்க்காதே எட்டி சட்டைப் பிடி, ஏனென்றுக் கேள், அது வேறு”



“இங்க மட்டும் என்ன வாழுது, அவன் வந்து அவ்வளவு தைரியமா நின்னு அடிக்கக் கூப்பிடுறான், இவனுங்க திரும்பி வேண்டாம்னு நின்னா அசிங்கம்ல, நான் ஒன்னும் கோழையில்லை ஆசாத். ரெண்டுமுறை அவனுங்க இப்படி பார்டர்ல மிலிட்டிரிய நிறுத்திட்டு போவானுங்க, நின்னு மாரைத் தட்டிக் காட்டுவானுங்க, நாம இன்னும் வாயில கை வெச்சி யோசிக்கிறோம். பிலாசப்பி பேசுறோம், கேட்டா மேலிடம் இதுபத்தி ஆலோசிக்கிதாம், விளங்குமா இதலாம்? அ’யாம் ஷேம்.... மச்சி"

"அதுதாண்டா நம்ம மண்ணோட கண்ணியமற்றது, எளியவனை அடிப்பது வீரமில்லை சத்யா"

"வேற யாருகிட்டயும் போயி இப்படி சொல்லிடப் போற.. அசிங்கமா கேட்பானுங்க உன்னையும் சேர்த்து, நாறுது வெளிய இவனுங்க பொழைப்பு"

"இல்லை சத்யா இங்க தான் நீ யோசிக்கணும்.."

"என்னடா யோசிக்கணும், அமேரிக்கா காரென்லாம் அவனை அடின்றான் டா, இவன் பார்டர்ல வந்துநின்னு என் மேல கையை வச்சிப் பாருன்றான், இவன எண்ணப் பண்ணனும் நாம’ சும்மாத் தூக்க வேணாம்"

"அமெரிக்கா ஒன்னும் பாரம்பரிய பக்குவ நாடில்லை சத்யா. அது நமக்குக் கால் தூசுக்கு வராது. எத்தனை நாடுகள், எத்தனை நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம்னு, மனிதர்களின் வலி புரியாம தன் வெற்றியை மட்டுமே பெருசா கொண்டாடும்’ மக்களை உடல் கூசாம அழிக்கும்’ அசிங்கம் பிடித்த நாடு அது. தனிமனித விருப்பு வெறுப்பிற்காக ஒரு நாட்டையே அழித்த மட்டமான துணிச்சல் அமெரிக்காவோட துணிச்சல்"

"நான் இந்தியாப் பற்றி பேசுறேன், அமெரிக்காவைப் பற்றியில்ல, உனக்கு நேரா பேச முடியலைனா விடு நான் போறேன்...”

"கோபம் படாதே சத்யா, யோசித்து பாரு, நம்ம தேசம்' பாரம்பரியம் மிக்க தேசம்டா, தியாகம் நிறைந்த மண்"

“என்னடா பெரிய பாரம்பரியம் தியாகம்ற, உனக்கு உன் மண்ணு பெருசுன்னா, அடுத்தவனுக்கு அதே அடி படயில நீ கூட நிக்கனும் அதை விட்டுட்டு கண்டவனுக்கெல்லாம் ஒத்து ஊதின நாடு தானே இது? த்தூ.., நன்றி கெட்டவனுங்கடா இவனுங்க. இந்தியாவுக்கு ஒண்ணுன்னா முதல்ல நிக்கிறவன் இன்னைக்கும் தமிழன்தான் தெரியுமில்ல? அதே தமிழனுக்கு ஒன்னுன்னா மட்டும் இவனுங்களுக்கு தொட்டுக்குற ஊருகான்னு நினைப்பு அதான் அடிக்கிறான் அவன் ஆப்பு”

“அது வேற மச்சி, அதலாம் அரசியல் சூழ்ச்சி. நம்மப் பக்கத்துலே இருந்து நம்ம ஊரிலேயே பிழைத்து நம்மையே அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் பக்கத்து மாநிலங்களின் சதி அது”

“நீ சொன்னா ஆச்சா??? தமிழன் வாழ்ந்தா இவனுங்களுக்கு மொளகா வெச்சமாதிரி. அதான் பக்கத்து நாட்டுக்கு வெளக்குப் பிடிக்கிறானுங்க நாய்ங்க”

“யார சத்யா சொல்ற நீ?”

“எல்லோரையும் தான். என் தமிழன் அழிய எவனெல்லாம் உடந்தையா இருந்தானோ அவனை எல்லாந் தான் சொல்றேன். செய்யாதவனுக்கு உரைக்காது. செய்றவனுக்கு சுள்ளுன்னு ஏறும்’ ஏறட்டும்..”

“சத்யா நீ சொல்றதெல்லாம் சரிதாண்டா உன் கோபம் எனக்கும் உண்டு. அது வேறு. இது நம்ம மொத்த தேசத்தைப் பற்றியது. போர்னா என்னன்னே யோசிக்காம நீ வேறேதேதோ பேசுறியே!!”

உள்ளிருந்து வந்த அம்மா இடைப்புகுந்தாள் "சரியா சொன்னீங்க தம்பி, போர் மூண்டா பெருசா மூளும், பெரிய அழிவுகள் நடக்கும், அதலாம் எங்கே இவனுக்குப் புரிய.."

அவன் நின்று அம்மாவையும் ஆசாத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"அதுமட்டுமில்லை சத்யா, நாம எத்தனை பலசாளின்னு காட்டிய நிறைய இடம் நம் வரலாற்றில் இருக்கு. கார்கில் சண்டையில நிரூபிச்சோமே, மறந்துட்டியா? அவனுங்களுக்கு மறந்துப் போயிருக்கும், அதான் அடிப்பட்ட பூனை தெளிவில்லாம வந்திப்போ பார்டர்ல நிக்குது"

"வந்து நிக்கிறான்..ல, நம்மை அடிக்கிறேன்னு அறிவிப்பு விடுறான்ல, அப்போ என்ன பண்ணனும்? ஒரு தூக்கா தூக்க வேணாம்.."



"இல்லைடா சத்யா, உனக்கு அந்த வலி புரியலை.., போர் மிகக் கொடியதுடா முடிந்தவரை அதை நடக்கவிடாமத் தான் பார்த்துக்கனும், ஒருத்தர் ரெண்டு பேரோட போற விசயமல்ல ஒரு போரென்பது. பல உயிர்களின் அழிவு. அதும் இன்றைய நிலவரப்படி, அதை நடக்கவிடாமல் தடுப்பதுதான் உலகத்துக்கே நல்லது. ஏன்னா இனி இதுபோன்ற வளர்ந்த நாடுகளுக்கிடையே ஒரு போர் வந்தால் போதும் அது மூன்றாவது உலகப் போர்ல தான் போயி முடியும். அதுக்குத் தயாரா காத்து நிக்குது அத்தனை நாடுகளும். சும்மா வெறுங்கையை வீசிக்குனு நிக்கலை.. அணு உலைகளை தலைல தூக்கிவைத்துக் கொண்டு சோதனைக்கு ஆள் தேடிட்டு இருக்கு சத்யா.

உனக்கு நான் எனக்கு நீன்னு மொத்த நாடுகளும் ஒவ்வொரு பிரிவா நின்னு உன்னை நான் என்னை நீன்னு மொத்த நாடுகளையும் அழித்துக் கொல்லும் மிகப்பெரிய விபரீதம் இந்த இரு நாடுகளின் போருக்குள்ள இருக்கு. அப்படி ஒன்னு மட்டும் நடக்கும்னா அதுக்கப்புறம் மக்கள் இதுபோன்ற சகஜ வாழ்வுநிலைக்கு வரவே குறைஞ்சது பல்லாயிரம் வருடங்கள் பிடிக்கும், ஒரு புல்லு பூண்டுக் கூட பிறகு முளைக்காமப் போகலாம்.. காணுமிடமெல்லாம் ஹிரோசிமா நாகசாகியைப்போல ஒரு பேரழிவே உலக நெடுங்கிலும் நிகழ்ந்துப் போகலாம்.. அப்படி ஒரு நிலை வந்துடக் கூடாதுன்னு தான் இத்தனை வருடம் கழித்து கிடைத்திருக்கிற நம் தமிழர் ஒற்றுமையைப் பயன்படுத்தி அப்படி ஒரு தொழிற்சாலையே நமக்கு வேண்டாம்னு அணு உற்பத்தியை எதிர்த்து தடுத்துன்ருக்காங்க கூடங்குலத்துல”

“அதலாம் அரசியல் ப்ளே மச்சி”

“இருக்கலாம். அன்னைக்கு, வறுமை வெடிப்புற்ற இடம்தானே’ கேட்க யாரிருக்கான்னு நினைத்து இத்தனைப் பெரிய சதியை நம் தமிழ்மண் மீது திணிக்க திட்டமிட்டதும் அதே அரசியல் விளையாட்டு தானே?

தமிழன் மாடா உழைப்பான், அவனுக்குள்ளே அவனே தலைமையேற்று அவனை அவனே அடக்கியும் விடுவான்னு’ தப்பாவே கணக்குப் போட்டு, நம் ஒற்றுமையில்லாமை யெனும் ஒற்றைக் குறையை பயன்படுத்தி’ உலகமே மறுக்கும் அணு உற்பத்தியை இங்கு ஆரம்பிக்க எண்ணியதும் அதே அரசியல் விளையாட்டு தானே?”

“ஆமாம் எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டைங்கதான், எவனும் அவ்வளவு யோக்கியன் இல்ல. எல்லாருக்கும் ஒரு சுயநலம் இருக்கு. ஏன் இத்தனை வருடம் இந்த போராட்டமெல்லாம் எங்கே போச்சி? இருபத்துமூனு வருடம் இவர்கள் எந்த கொடியைத் தூக்கி பிடித்திருந்தார்கள்?”

“வறுமைக் கொடி சத்யா. ஆம், அது பசிக்கு தவித்துக்கொண்டும் தண்ணீர் தேடித் திரிந்துக்கொண்டும் இருக்கும்’ ஏழைகளின் பசிக்கு’ ஒரு பிடி சோறு கிடைக்காதா என்று அலைந்த காலம். அன்னைக்கு ஏதோ தொழிற்சாலை வருது வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை ஒழியும், வறண்ட மண் செழுமையுறும்னு நம்பி இருந்தாங்க. நாட்பட நாட்பட அதன் விபரீதம் முழுமையா தெரியத் தெரிய அதை எதிர்த்தும், அணு உற்பத்தியே வேண்டாம்னு மறுப்பதற்கான போராட்டங்களை நிகழ்த்திக்கொண்டும்தான் வராங்க. அங்க அப்போதுல இருந்தே ஒரு எதிர்ப்பு இருந்துக் கொண்டுதான் சத்யா இருக்கு. இன்னைக்கு தமிழர் எல்லாம் ஒண்ணாக் கூடி நின்றிருப்பதால உடனே வெளிய தெரிந்திருக்கு அவ்வளவுதான்

இதைப் போலத் தான் ஒரு அமைப்புச் சார்ந்து பெங்களூர்ல இருந்து வந்திருந்த என் சகோதரிங்கக்கிட்ட கேட்டதுக்கு அவுங்க சொன்னாங்க 'தன்னோட பொண்ணுக்கு திருமண ஏற்பாடு பண்றீங்கன்னு வையுங்க.., அப்படிப் பண்ற திருமண நெருக்கத்துல பொண்ணக் கட்டப்போற பையனுக்கு உடம்புக்கு சுகக் கேடு இந்த இடம் வேண்டாம்னு எல்லோரும் சொல்றாங்க, நீங்களும் அதையிதை நம்பாம திருமண நாள்வரை வந்துட்டீங்க, நாளைக்குத் திருமணம்னா இன்று இரவு தெரியவருது அந்த பையனுக்கு பெரிய நோய் ஏதோ இருக்குன்னு அப்போ என்ன செய்வீங்க? அதும் விடியும்பொழுது அவனுக்கு மருத்துவம் பார்க்குற மருத்துவரே வந்து இவனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கு, இன்னும் கொஞ்சநாள்ல செத்துடுவான், அதோட இவனை கட்டி வைத்திங்கன்னா அது உன் பொண்ணுக்கு வந்து பிறகு ஊர் மொத்தமும் பரவும்னு சொல்றாங்க. அப்போ எண்ணப் பண்ணுவீங்க? சரி இவ்வளவு ஏற்பாடு பண்ணிட்டோமேன்னு செய்து வைத்துவிடுவீர்களா? அதுபோலத் தான் இதுவும்,. என்ன ஏற்பாடு செய்தாலும் அழிவு என்று தெரிந்ததும் நிறுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் நல்லது என்றார்களாம்"

“அப்போ அங்க நடப்பது எல்லாமே சரின்றியா?

“நெல்லு விதைத்தா நாலு புல்லும் முளைக்குந்தானே, அங்கும் சில சுயநலவாதிகளின் கபட நாடகமும், ஏழைகளை முன்னிறுத்தி பணம்பார்க்கும் கொடுமையும் நடக்காம இல்ல, அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட இப்போதைக்கு நமக்கு நேரமில்லை, அதைவிடப் பெரிது இந்த அணு உலை உற்பத்தி. அதை இத்தனை வருடம் விட்டுட்டோமே என்பதே வருத்தம்தான், ஆனாலும், அதற்காக இனியும் விட்டுவிடுவது பெரிய முட்டாள்தனம்.

வீரம் காட்டுற இடமில்லை இது. நாம சவால் விட எவ்வளவோ விசயங்க இருக்கு. இன்னைக்கு மாடிக்கு மாடி சின்டெக்ஸ் இருக்கே இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் எத்தனை வீட்டில் சின்டெக்ஸ் இருந்தது? பத்து பதினைந்து வருடத்திற்கு முன் மழைநீர் சேமிப்பு பற்றி இத்தனை நாம் யோசித்திருந்தோமா? அப்படி இந்த இருபத்தி மூன்று வருடத் திட்டமா அரசு ஏன் மின்சாரம் சேமிக்கத் தக்க, அல்லது இலகுவாக மின்னுற்பத்தி செய்யத் தக்க வேறு ஏதேனும் நீண்ட நெடும் விளைவில்லாத திட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கக் கூடாது?

மின்விளக்குகளாலேயே மின்னும் வல்லரசு தேசங்கள் வேறு எங்குமே இல்லையா? அப்படி வேறு வழியே இல்லைன்னு வந்தா பொதுமக்களை பாதிக்காத அளவில் ஒதுக்குப்புறமாக அமைத்து இத்தனை மைல் தூரத்திற்கு யாரையுமே அனுமதிக்காதவாறு ஏதேனும் பாதுகாப்பாகச் செய்யத்தக்க கடல்புறப் பகுதிகள் வேறு எங்குமே இல்லையா?

மனிதர்கள் வாழும் இடத்திற்கு மத்தியில் ஒரு மதில்சுவரை மட்டும் அமைத்துவிட்டு இத்தனைப்பெரிய பாதகச்செயலை செய்வோர் நாமாக மட்டுந் தானிருக்கும். இதென்னவோ ஒரு சட்டை வாங்கி மானம் மறைப்பதற்கு பதிலாக பார்ப்பவர் கண்களை எல்லாம் நோண்டிவிட்டால் நாம நிர்வாணமாகவே திரியலாமே என்பதுபோல’ இயற்கையை ஒட்டுமொத்தமாக அழிக்குமொரு திட்டத்தை மெத்தப் படித்தவருக்குக் கூட எப்படி ஒப்புக்கொள்ளமுடிகிறதோ தெரியவில்லை. உற்றுநோக்கிப் பார்த்தல் அவர்களின் நோக்கம் மின்சாரம் மட்டுமில்லை சத்யா, அணு உற்பத்தியும்.

அணு உற்பத்திதான் மனிதனின் நாளைய அழிவிற்கான முதல் மூலதனம். இன்னைக்கு ஆயிரம் காரணம் காட்டி ஏதும் நடக்காதுன்னு சொல்லலாம், ஆனா நடந்துட்டா? அதற்கு பிறகு ஒரு புள்ளி கூட பதிலாகக் கிடைக்காது. இன்றைய சாப்பாடு பெருசுன்றதைவிட நாளைய மரணம் அதைவிடப் பெருசு. அழிவைப் பத்தி யோசிக்கையில பட்டுன்னு ஒரு எச்சரிக்கை உள்ளே வந்துடனும். ஒரு அணு உலை நம்ம ஊர்ல இருக்குன்னா அது நம்ம தமிழ்மண்ணின் தலையில ஒரு அணுகுண்டைத் தூக்கிவைத்துக்கொண்டு நிக்கிறதுக்குச் சமம்.



எந்த நேரம் யார் திரி கொளுத்தி அதுமேலப் போடுவாங்கன்னு யாருக்கும் தெரியாது, அதற்கான ஒரு பயம் இருந்துக் கொண்டேயிருப்பது பெரிய அவஸ்த்தை சத்யா. இன்னைக்கு இல்ல, இன்னையில இருந்து பத்து வருடமா ஒருத்தன் வேலை செய்துக்கொண்டிருந்துவிட்டு அதன்பிறகு ஏதேனும் ஒரு அணு உலையை வெடிக்கச் செய்துவிட்டுப் போனால் அவனை என்னசெய்துவிட முடியும் நம்மால்?

நடக்காதுன்னு சொல்றோம். ஒருவேளை அப்படி ஏதேனும் ஒன்னு நம்ம மண்ணுல நடந்துதுன்னா, அவ்வளவுதான், நம்ம தமிழினம்னு சொல்லிக்க ஒருத்தர்கூட தமிழகத்துல உருப்படியா இருக்கமாட்டோம்’ இதை இத்தனை ஆழம் தெரிந்தும் சம்மதிப்பது போன்று ஒரு புத்திசாலித்தனம் எப்படி நம் வளர்ச்சியாகும்”

“ரிஸ்க்னு பார்த்தா எல்லாமே ரிஸ்க் தான் மச்சி, வீட்டை சுத்தி ரிபைனரி வைத்துக் கொண்டிருக்கிறோம் அது வெடிச்சா சாக மாட்டோமா?”

“ரிபைனரி வெடித்தால் ஒரு ஊரே அழியும், பல ஊர் சேதமாகும், ஆனால் சேதத்தை சரிசெய்து சரிநிலைப்படுத்திவிடலாம். அணு உலை வெடித்தால் செய்வியா? நம்ம தமிழ்மண் பாதி அழியும். ஒரு பில்லு கூட முளைக்காதாம்? கேட்க கொடுமையா இல்லை? அதலாம் விட, ஏதோ முன்ன தெரியாம, சுடுகாடு கட்டினாக் கூட சுவர் எழுப்ப வேலைக் கிடைக்குமேன்னு பார்த்தோம், இப்போ அதுல கட்டுற சமாதி நமக்குன்னு புரிந்தப் பிறகும்’ போய் படுத்துக்கலாம் பணம் தருவாங்கன்னு பார்ப்பது அறிவீனமாயில்லை?”

“அதற்காக, இத்தனை வருடம் கழித்து நாம காட்டுற இந்த எதிர்ப்பால, இதை தமிழ்நாட்டுல கட்ட திட்டமிட்டிருக்கு அரசு என்கிற ஒரே காரணத்தை சாதகமா வைத்து மொத்த இந்தியாவோட வளர்ச்சியையே நாம முடக்குறதா இது ஆகாதா தம்பி?” சத்யாவின் அம்மா வந்து குறுக்கிட்டுக் கேட்டாள்.

“ஆகட்டும். உன் வீட்டை தாண்டி வந்து நீ என் வீட்டுல நெருப்பு வைப்பதால்தானே எனக்கு கோபம் வருது? நீ உன்வீட்டுல வெச்சிட்டுப் போ, விளைவு என்னன்னு உனக்குப் புரியும். தவிர இது எப்படிம்மா வளர்ச்சியாகும்? இது பசிக்கு விசத்தை தின்பதற்குச் சமம், இன்னைக்கு தப்பினாலும் நாளைக்குச் சாவு.

பெருசா பத்து வருஷம் உழைத்து ஒரு மாடிவீடு வானளவிற்கு கட்ட கடகால் தொண்டுறோம்னா தோண்டும்போதே அதன் எதிர்காலம் பற்றி யோசிக்கவேன்டாமா? பதினோறாவது வருடம் அந்த கட்டிடமே சரிந்துப் போகலாம் எனும் ஒரு உண்மை தெரிந்தும் கட்டுவது எப்படி நமக்கான வளர்ச்சியாக இருக்கும்? நான் ஒருத்தன் செத்தா அது ஒரு தமிழனோட மரணம். என் தமிழர் மொத்தப் பேரும் சாகும் நிலை வரும்னா அது இந்தியாவின் மரணமுமில்லையா? எதிர்கால இழப்புன்றது என் தேசத்தின் வீழ்ச்சி தானேம்மா வளர்ச்சி எப்படியாகும்?

“எதிர்மறையாவே யோசித்தா எப்படிடா? நேர்மறையா சிந்திக்கனும்னு எல்லாத்துலையும் சொல்ற நீ இதுல சிந்திக்க மாட்டியா?”

“இது நேர்வினைத் தூண்டும் சிந்தனைதான் சத்யா. இயற்கைக்கு எதிராப் போகப் போக அழிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோம்னு தான் அர்த்தம். அதுலயும் இது இயற்கைக்கு எதிரா ஒருத்தர் ஆயிரம் கைகளை தூக்கி அதில் பல்லாயிரம் ஆயுதங்களை ஏந்தி எதிர்நிற்பதற்குச் சமம்.

நம்பிக்கைதான் வாழ்க்கைன்றது வேறு, எச்சரிக்கை உணர்வென்பது வேறு சத்யா. அந்த நம்பிக்கைல தான் எல்.பீ.ஜி. வாயுவைக் கூட வீட்டில் அடைத்து பயன்படுத்த பழகிட்டோம். ஆனா இது வெடித்துவிட்டு தீர்ந்துவிடுவது இல்லையே, காலத்தையே தின்றுவிட்டு சுடுகாட்டின் வெறுமையை கைக்கெட்டிய தூரம்வரை இரைத்துப் போகும் கொடுமையாயிற்றேம்மா’ அதனாலதானே உலகமே இதன் விசயத்தில் இத்தனைப் பயப்படுது..” ஆசாத் திரும்பி அம்மாவைப் பார்த்துச் சொன்னான். இடையே சத்யா குறுக்கிட்டு -

“என்னைய சொல்லிட்டு நீ எங்கெங்கயோ போறியே மச்சி, பாகிஸ்தான்காரன் நம்மையடிக்க பார்டர்ல நிக்கிறானாம், வா.. போய் ஆல் த பெஸ்ட் சொல்லிட்டு வருவோம்” என்று நக்கலாகச் சொல்ல -

“தம்பி சொல்றதை காது கொடுத்து கேளு” என்றுச் சொல்லி பின்னால் வந்து சத்யாவின் தலையில் தட்டினாள் அம்மா. அவன் சிலிர்த்து திரும்ப..

“அதை விடுறா., பாகிஸ்தான்லாம் நம்ம சக்திக்கு ஒன்னுமேக் கிடையாது. நின்ன இடத்துல இருந்தடிச்சாலே அந்த நாட்டோட பாதி காணாம போற அளவுக்கு நாம என்னைக்கோ பலமாயிட்டோம்.. அந்தளவுக்கு நம்மலுடைய பலம் நமக்கே தெரியாதளவுக்கு நம்ம இந்திய ராணுவம் அணு ஆராய்ச்சி மையமெல்லாம் ரகசியமா செயல்பட்டுதான் வருது. இதுக்கு மத்தியில அவனை அடிக்கிறதுன்றது நமக்குச் சாதாரணம் சத்யா?”

“நம்ம நினைக்கிற மாதிரி இல்லை மச்சி பாகிஸ்தான்காரைங்க. அவனுங்களுக்கு அடிச்சாதான் புத்தி வரும்..” என்று சொல்ல அதற்கு ஆசாத் ஒன்று சொல்ல, அம்மாவோடு வெளியிலிருந்து வந்த அப்பாவும் சேர்ந்துக் கொண்டு நிறைய நேரம் பேசுகிறார்கள். முடிவில் ஆசாத் அங்கேயே உணவும் உண்டுவிட்டு வெளியே வந்துப் பார்க்க காற்றுச் சில்லென வந்து முகத்தில் வீசியது. அனைவருக்கும் கைகாட்டிவிட்டு விடைபெறுவதற்கு வணக்கம் கூறிவிட்டு அவன் புறப்பட, சத்யா அவனுடைய அம்மா தம்பி அப்பா எல்லோரும் மீண்டுமமர்ந்து ஏதேதோ பேசி நேரம் வெகுவாய் கடந்துப் போனது. பிற்பகல் மெல்ல நகர்ந்து மாலையாகி, மாலையும் முடிய இரவுப்போர்வை மூடி நிலவு வானக் கதவை வந்து தட்டியது.

சூரியன் நகர்ந்து போய் இரவின் இருட்டு வெளிச்சத்தின் வெண்மையைத் திருடிக் கொள்ள அங்கே இருள் சூழ்ந்து, தீரா இருட்டின் கருமைக்குள்ளிருந்து துவங்கித் தொலைக்கிறது அந்த உயிர்கொள்ளும் மூன்றாம் உலகப் போர்......
*****

“டமால்....”

“டுமீல்.....”

“டமால்.....”

“புஸ்ஸ்.........................”

“ஓடு.. ஓடு... உயிர்... பயம்.. சண்டை.. போர்!!! போர்!!!!! ஓடு ஓடு என மக்கள் விரட்டிக் கொண்டு ஓடுகிறது. எங்கே ஓடுவது.. எத்தனை தூரம் ஓடுவது..? எங்கே ஓடினாலும்தான் உயிரை ஒரு நொடியில் மென்றுத் துப்பிவிடுகிறது மனிதன் கண்டுபிடித்த அந்த அணுகுண்டுகள்..

வாய்ப்பேச்சி பேசிய காலம் முடிந்தது. இதோ இந்தியா முதன் முதலாய் ஏவுகிறது பாகிஸ்தான் மீதான அந்த ஏவுகணையை. அடித்த ஒரு அடியில் பாகிஸ்தானின் ஒரு பெரிய பகுதியே ஒரு நொடியில் சிதறிப் போகிறது.. ரத்தக் காட்டாறு சிலமணித் துளிகளில் கடல் போலப் பாய்கிறது.., அவன் மட்டுமென்ன சளைத்தவனா தில்லியின் தலையில் தூக்கி வீசுவது போல் அங்கிருந்தே பாகிஸ்தான் காரன் ஏவினான் அடுத்த ஏவுகணையை. அது மிக சாதாரணமாக வந்து தில்லியின் ஒரு பெரும்பகுதியை மென்று துப்பியது. அடுத்து பாம்பே அடுத்துக் கல்கத்தா அடுத்து அஸ்ஸாம் அடுத்து வைசாக்....., அடுத்த அடி எங்கு இருக்கலாம் என்று யோசிப்பதற்குள் வந்து விழுகிறது கூடங்குளத்தின் மீது ஒரு குண்டு..

நல்லவேளை அணு உலை உற்பத்தியெல்லாம் இன்னும் துவங்கியிருக்கவில்லை என்று ஒரு பெருமூச்சு விடுவதற்குள் சென்னையின் மேல் வந்து விழுகிறது அடுத்த குண்டு...

“டமால்.........................”



சிதறியது சென்னை ஒரே அடியில். மக்கள்வெள்ளம் கருகியும் உயிர் சிதைந்தும், உடல் சிதைந்தும் எஞ்சியதுமாய் ஓடுகிறது மரணபயத்தில் இங்குமங்குமாய்..

“ஐயோ பயம் பயம் பாம்.. பாம்... வருது மேல விழப்போகுது ஓடு ஓடு.. டமால்.....“ சுக்குநூறாய் போகிறது மக்கள் வெள்ளம். குண்டு விழும் இடமெல்லாம் குழிதோண்டிப் புதைத்துக் கொள்கிறது மனிதர்களை. பரிதவித்துப் போகின்றனர் மக்கள். ஆடு மாடு கோழி கொசு எறும்பு மனிதன் யாரிலும் பாரபட்சமில்லை. யார் வந்து யாரைக் காப்பது? யாரைக் காக்கவும் யாருக்கும் அவகாசமில்லை. அவரவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவரவர் கண்ணுக்கெட்டிய தூரம் சந்து பொந்துகளிலெல்லாம் பதறியடித்துக் கொண்டு ஓடினர. ஓட ஓட ஒவ்வொரு குண்டாய் வந்து வந்து தலையில் விழ அதிலொன்று வந்து சத்யா வீட்டின் அருகேயும் விழுகிறது..

“ஓடு ஓடு எனக் கத்திக்கொண்டே ஓடுகிறான் சத்யா..., தலைத் தெறிக்க ஓடுகிறான்... மேலே பறக்கும் விமானங்கள் தன் தலையை சீவுவது போல தரையிறங்கி மீண்டும் மேலேறின.. ஒடுபவரின் தலையில் எளிகாப்டர்கள் நேராக குண்டுகளைத் தூக்கி வீசின.. எத்தனைவரை ஓட இயலுமோ அத்தனைவரை ஓடுவோமென்று ஓடுகிறான் சத்யா..

திடீரென எல்லோரும் நினைவிற்கு வருகிறார்கள்.. “ஐயோ....... அம்மா எங்கே? அப்பா? தம்பி????? யாரையும் எங்குமே காண இயலாதே.., என்ன ஆனார்களோ அவர்கள். மனம்’ ஓட ஓட அவர்களை எண்ணித் தவிக்கிறது. யார் யார் எங்கு போனார்களோ என்ன ஆனார்களோ?? கடவுளே... கடவுளே... காப்பாற்று, அம்மாவைக் காப்பாற்று’ மனசு கெஞ்சியது..

என்ன ஆயிருப்பார்களோ அவர்கலெல்லாம் நாம் மட்டும் இப்படி ஓடி ஒளியப் பார்க்கிறோமே, நின்று விடலாமா இங்கேயே? ஐயோ... அம்மா எங்கிருக்கிறாய், அம்மா என்ன ஆனாயோ.., என்ன செய்வேனம்மா.., ஒன்றுமேப் புரியலையே.. அவன்கதறிக் கொண்டே ஓட இன்னொரு குண்டு அவனருகிலேயே விழ, மக்கள் சிதறி சிதறி சிதைந்துப் போவதைப் பார்த்து திரும்பி வேறு வழி புகுந்து மரணத்தை கண் முழுதும் நிரப்பிக் கொண்டு தலைதெறித்தாற்போல் ஓடுகிறான் சத்யா.

எப்படியும் இன்னும் ஓரிரு வினாடிகளில் தன்மீதும் ஒரு குண்டு விழுந்துவிடும், நானும் சுக்குநூறாய்ப் போவேன்.. அதற்கு முன் எப்படியாவது தப்பிக்கனும் ஓடனும், காற்றுப் போல ஓடனும், ஓடு ஓடு மரணம் மரணம், இதோ மரணம் வந்துவிடும் ஓடு, உடல் சிதைந்துப் போகும், ரத்தசகிதமாய்ப் போவோம் சீக்கிரம் சீக்கிரம் என அவனும் அவனின் முன்னாலும் பின்னாலும் எல்லோருமாய் சேர்ந்து எஞ்சிய மக்களெல்லாம் ஓடினார்கள்.

திடீரென காப்பாற்று காப்பாற்று என்று தனியாக ஒரு குரலின் அலறல் சப்தம் வந்து காதில் விழ, கவனித்துப் பார்த்தால் அவனுடைய அம்மா அலறும் சப்தம் கேட்டது.., ஒரு வினாடி தனையறியாமல் சத்யா ஸ்தம்பித்து நின்றுப் போனான்.. உயிரைக் கையில் பிடுங்கிக் கொண்டுள்ளதுபோல் தவிக்கிறான்... கத்தி அலறுகிறான்... உயிரைப் பிய்த்து கையில் எடுத்து எங்கேனும் கிடாசிவிட்டு எங்கோ கண்ணுக்கெட்டிய தூரம் போய் விழுந்துவிடலாம் போல் ஒரு கோபமும் அழையும் ஒருசேர வர, அதை விடவும் கொடியதாக இருந்தது அவன்மேல் எங்கு அந்த குண்டு வந்து விழுந்துவிடுமோ எனும் உயிர்பயம்.

எதையுமே பொருட்படுத்தாமல் இருக்கமுடியவில்லை என்றாலும் தனைமீறிய ஒரு உணர்வாக நடுத் தெருவில் நின்று தன் தலையில் கைவைத்துக் கொண்டு அம்மா அம்மா என்றுக் கத்துகிறான்.

அடுத்த “அம்மா..............” என்று வாய்திறந்து மூடுவதற்குள் சரமாரியாக நான்கைந்து குண்டுகள் வந்து விழுகிறது. எங்கு தானும் செத்துப் போவோமோ எனும் பயம் அந்த குண்டு விழுவதற்குள் வந்து விரட்ட, அங்கிருந்து நகர்ந்து சீறிக் கொண்டு ஓடுகிறான் மீண்டும்.

ஆங்காங்கே காணுமிடமெல்லாம் ஓடு ஓடு மரணம் மரணம் என்ற கூச்சல் ஐயோ ஐயோவெனும் அலறல்.. பயத்தில் காதடைக்கிறது சத்யாவிற்கு. உயிர் மனதை இறுக்கி அழுத்த, விழுந்தடித்துக் கொண்டு மீண்டும் பித்துபிடித்தாற்போல் ஓடுகிறான்.

ஆனால் அவனின் போதாத காலம், ஒரு குண்டு அவன் மேலேயும் வந்துவிழ, விழப்போகும் இடைவெளிக்குள் தலைநிமிர்ந்து அதை மேலேப் பார்க்கிறான், அந்த குண்டு உஸ்ஸ்ஷெனும் சப்தத்தில் மேலிருந்து கீழ் வந்துக் கொண்டுள்ளது. நிமிர்ந்து மேலே பார்த்து மேலிருந்து அந்த குண்டு சொய்ய்ய்யென்று அவன் தலையில் விழுமந்த வினாடிக்குள் மூச்சுத் தெறிக்க கையை தட்டிக்கொண்டே முன்னோக்கி மாறி மாறி நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறான்.., என்னதான் மூச்சுக்கு எட்டிய தூரம் அவன் ஓடினாலும் ஆள்தராதரமெல்லாம் பார்க்காமல் குண்டு அவன் தலைநோக்கி அருகில் வந்துவிட, தட்டிவிடுவதாய் நினைத்து தட்ட எத்தனிப்பதற்குள் பொதீரென அவன் தலையில் விழுந்து கணீரென்று வெடிக்கிறது..., டமால்.. எனும் சப்தத்தோடு அவன் தலைச் சிதறிப் போக

“அம்மா....”

“அம்மா.....”

“ஐயோ....”

“என்னடா சத்யா...”

“அம்மா அப்பா நான் செத்தேன்.. செத்தேன் குண்டு... ஐயோ...நான் செத்துட்டேனே...”

“என்னாச்சிடா சத்யா?”

“அம்மா அம்மா .... எம்மேல குண்டுமா“

“சொல்லுப்பா என்னாச்சி?”

“குண்டுமா குண்டு வெடிகுண்டு என் தலை வெடிச்சி... நான் சிதறிப் போயிட்டேன்மா”

“டேய்.. பெனாத்தாத..டா இங்க பார், பாரிங்க”



அவன் கண்ணைத் திறக்காமலே “இல்லமா இல்லமா நீ கூட செத்துட்டியேம்மா..., அந்த குண்டு அப்பா தம்பி எல்லார்மேலையும் விழுந்து நாமெல்லாம் செத்தேப் போயிட்டோமேம்மா, நானும் கூட”

அவன் பேசி முடிப்பதற்குள், அவள் எழுந்து உள்ளேப் போய் ஒரு சின்னக் குவலையில் தண்ணீர் குளுமையாக கொண்டுவந்து சலக்கென சத்யாவின் முகத்தில் ஊற்ற.., அவன் திகைத்துத் திணறி கண்திறக்க, அம்மா அவனருகில் இருப்பதைப் பார்த்ததும் அம்மா அம்மா என்று கத்துகிறான். வேகவேகமாகக் அவளைக் கட்டிக் கொண்டு அழுகிறான். “நீ செத்தெல்லாம் போல இல்லையாம்மா” என்று பாவமாகக் கேட்டான்.

“இல்லடா சத்யா.. என்னாச்சிடா கனவு ஏதேனும் கண்டியா?”

“சண்டைம்மா சண்டை பெரிய சண்டை, பாகிஸ்தான் நம்ம மேல குண்டுகளாப் போட்டான்மா நான் என் கண்ணாலப் பார்த்தேன்.. நீ போயிடாதம்மா, எங்கயும் நீ போவாதம்மா, என் கூடவே இரும்மா...”

“போலப்பா, இங்க பார். அம்மா தோ உன் பக்கத்துலேயே இருக்கேன் பார். இங்க பார்.. என்னைத் தொட்டுப் பார்..”

தொட்டுப் பார்க்கிறான்.. உயிர்பயத்தில் அம்மாவைத் தொட்டு கை காலெல்லாம் தடவுகிறான்... “பாம் விழுந்துச்சிம்மா அதும் என் தலையிலேயே....” சொல்லிக் கொண்டே அழுதான் சத்யா.

“இல்லைப்பா சத்யா உனக்கு அதலாம் ஒன்னும் ஆகாது நீ நல்லா இருக்க”

“நீ கூட கத்துனியே, ஐயோ ஐயோன்னு கத்துனியே, பாகிஸ்தான்காரன் உன்னை அடிச்சானே..”

சத்யாவிற்கு முகமெல்லாம் வெளிறிப் போயிருந்தது. மயிர்க்கால் குத்திட்டு நின்றிருந்தது. கண் பிதுங்கி பயத்தில் பாதி வெளியே வந்திருந்தது. முகம் வியர்க்க கண்கள் இரண்டிலும் மரணத்தின் பயம் என்பது இதுதான் பார்த்துக்கொளென்றுக் காட்டுவதாய் இருந்தது.

அவள் மார்பில் அவன் தலையை அணைத்து முதுகில் தடவிக் கொடுக்க, மெல்ல மெல்ல சுயநினைவு வந்தாலும், அவன் கண்டக் காட்சிகள் எல்லாம் உயிர்ப்போடு கண்களில் இருந்து மறையாததில் தன்னைத் தானே பார்த்து பார்த்து மீண்டும் அழத் துவங்கினான் சத்யா.

அவளுக்கு தன் பிள்ளையின் வலியும், இத்தனை வலிக்கத் தக்க கொடூரமாக கனவுக் கண்டுள்ளான் என்பதும் புரிந்தது. உள்ளே ஓடிப் போய் ஒரு கண்ணாடிக் குவளையில் நீர் ஊற்றிக் கொண்டுவந்து அவனை அரவணைத்து ‘ஒன்னுமில்ல சத்யா, பயப்புடாத, எல்லாம் கனவுதான்’ என்றுச் சொல்லி தன் மேல் சாய்த்தவாறு அவன் வாயில் கொஞ்சம் நீர் பருகச் சொல்லி ஊற்றினாள். அவன் ஓரிரு மினர் நீர்ப் பருகி முகத்தை திருப்பிக் கொள்ள.., வாவென்று அழைத்து தன் மடியில் தாய்மையின் தவிப்போடு சாய்த்து படுக்கவைத்துக் கொண்டாள்.



தாயின் மடியில் படுத்த சத்யாவிற்கு என்றோ அவன் குடித்த தாய்ப்பாலின் வாசம் அவள்மீது இன்றும் படர்ந்திருப்பதுபோல் ஒரு நிம்மதி பரவ இன்னும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அவள் அவனுடைய தலைக் கோதியவாறே... “பத்தியா? மரணம் எவ்வளவு கொடிதுப் பார்த்தியா? எப்படி உயிர்பிடுங்காமல் உன்னை நடுநடுங்க வைக்குது பார்த்தியா? உன் ஒருத்தனால முதல்ல சாகத் துணிய முடியுதா? பிறகு போர் போர் என்றாயே, போர் வந்தால் எத்தனை உயிர்கள் அழியும் எண்ணிப் பார்த்தாயா? அணு உலை வெடித்தால் நம் கதியென்ன யோசித்தாயா? மொத்தப் பேரும் ஐயோ என்று கத்தக் கூட அவகாசமற்று இறந்துப் போவது எத்தனைக் கொடுமை?

உயிர் என்பது எல்லோருக்கும் பொது சத்யா. ஒருத்தர் இரண்டு பேரோட அழிவு அல்ல நீ கேட்டது, இரண்டு நாட்டின் மீதான போர். இரண்டு தேசத்து மக்களின் அழிவு அது. அதோடு போகுமா..? எத்தனை நாட்டைத் துணைக்கு அழைத்து எத்தனைப் பேரைக் அது கொல்லுமோ என்று இப்போது யோசி. பிறகு ஒரு நாட்டின் அத்தனை உயிர்களின் விலைக்கும் அந்த நாடு பொறுப்பில்லையா?

அதைத் தான் இந்தியா இப்போ செய்யுது. என்னைக் கேட்டா இந்திய தேசம் பாகிஸ்தான் எனுமந்த சிறிய நாட்டைக் கண்டு ஒருதுளியும் அஞ்சவில்லை, தன் மக்களின் உயிரோட விலையில்லா மதிப்பிற்குத் தான் அது அஞ்சுகிறது..”

“அப்போ ஏம்மா இதையெல்லாம் கண்டுபிடித்தோம்? இப்படிப்பட்ட அணு உலைகளை எல்லாம் பிறகு ஏன் நாம உற்பத்தி பண்றோம்..?” உறங்கியதுபோன்றதொரு உணர்விலும் சத்யாவிற்கு இப்படி ஒரு கேள்வி எழுந்தது. ஆனால் அவனால் அதைக் கண்திறந்துக் கேட்க முடியவில்லை. கைகாலெல்லாம் தனையறியாமல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தது. ஆனாலும், அந்த உயிர்பயத்தின் உலுக்களுக்கு மத்தியிலும் போரைப் பற்றி அவள் சொல்வது சரியெனப் பட்டது. போர் மிகக் கொடிது, மிகக் கொடிது என்று எண்ணியவாறே.. அவள் மடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்... இரவு அவனைப் போரில்லா ஒரு தேசத்திற்கு உறங்கச் சொல்லி அழைத்துப் போனது.

மீண்டும் வந்த கனவில் ஆசாத் “அணு உலையை அடியோடு மூடுவோம்; போரில்லா ஒரு தேசம் சமைப்போம்..” என்று கத்தி கத்தி எல்லோரோடும் சேர்ந்து ஆர்பாட்டம் செய்துக் கொண்டிருக்கிறான். இவனும் உடன் சென்று “அணு உலைகளை அறவே ஒழிப்போம்; மின்சாரம் வேண்டுமெனில் புது உத்தியைக் கொடுப்போம்” என்று கத்தினான். ஆசாத் திரும்பிப் பார்த்து பெருமிதத்தோடு அவனைக் கட்டி அணைத்துக் கொள்ள...

அம்மா அவன் உறங்கிவிட்டான் என்றெண்ணி போர்வையை அவன்மீது இழுத்து மூடிவிட்டு நீரருந்திவிட்டுப் படுக்க அடுத்த அறைக்குள் சென்று மின் விளக்கினை இட, வெளிச்சம் அங்கிருந்து சிதறி அண்டவெளியிலும் பரவியது....

அண்டவெளியின் ஒவ்வொரு பரப்பும் அமைதியை எண்ணி இயங்கிக் கொண்டிருக்க’ அதை கடந்து நாம் தயாரித்த செயற்கைத் தனங்கள் ஒவ்வொன்றும் அந்த அமைதியை குலைப்பதாய் அண்டவெளியிடம் போராடிக் கொண்டிருந்தன.

என்றோ ஒரு தினம்’ இயற்கை மரணமாகவேனும் வந்து நமை வெல்லத் தான் போகிறது எனும் உண்மை மட்டும் என் எண்ணத்தின் உட்புக... எல்லாம் கடந்த ஒரு அமைதியை; மனிதர்களின்’ அனைத்துப் பிற உயிர்களின்’ நன்மையை மனதில் கொண்டு, என் தமிழர், என் மக்கள், என் இனம்... எந்தவொரு அபாயத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் ஆட்படாமல் நிம்மதியாய் வாழுமொரு நாளினைவேண்டி’ இக்கதையை இதோடு சுபமென்றுச் சொல்லி முடிக்கிறேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p100.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License