காலை நேரத்தில் பரபரப்பாக ஸ்ரீராம் ஆபிஸ் போக கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய செல் போன் அடித்தது. போனை எடுத்து...
”ஹலோ யாரு?”
” நான் சீனுவோட டீச்சர் பேசறேன்”
” சொல்லுங்க டீச்சர். என் பையன் தான் என்ன விஷயம்?”
”உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். உடனே ஸ்கூல்க்கு வாங்க”.
”ஓகே டீச்சர்.”என்று போனை வைத்தான்.
” ஏய் கீதா ஸ்கூல்லிருந்து போன். சீனுடைய டீச்சர் பேசினாங்க என்னவோ தப்பு செஞ்சுட்டான்”.
”என்னங்க சொல்லறிங்க”. என்று பதற்றதோடு கேட்டாள்.
ஆபிஸ்க்கு பர்மிசன் போட்டுவிட்டு இருவரும் கிளம்பினார்கள். ஸ்கூல் வாசலில் வந்ததும். என்ன சொல்லப் போறங்களோ பயத்தோடு சென்றனர். ஸ்ரீராம் டீச்சரைச் சந்தித்தான்.
”குட்மானிங் டீச்சர்” என்றான்.
”வெரி குட்மானிங்” என்று சொல்லிவிட்டு ஒரு சிறுவனை அழைத்து தேர்டு க்ளாஸ் சீனுவை அழைத்து வா என்றார். உடனே கூப்பிட்டு வந்தான்.
”என்ன மிஸ் ”என்று பக்கம் வந்தான் சீனு.
”உங்க பையனுக்கு கண்ணுல பிரச்சனை இருக்கு. தம்பி இங்கவா.”
டீச்சர் முன்பு ஒரு போர்டு இருந்தது. எழுதிய எழுத்தை பார்த்து, “தம்பி இதைக் கொஞ்சம் படி” என்றார்.
“மிஸ் சரியா தெரியமாட்டிங்குது” என்றான் சீனு.
”இப்ப என்னங்க பண்ணறது.” என்று கூறிக் கொண்டு ரிப்போர்ட் நோட்டில் ஐ பிராப்ளம் என்று எழுதி கொடுத்தார்.
ஸ்ரீராமும் மனைவியும் என்ன செய்வது என யோசித்தனர்.
சீனுவை அழைத்து கொண்டு வெளியே வந்தனர்.
அருகில் உள்ள கண் டாக்டர் சுரேஷ் கிளினிக் போய்ப் பார்த்தனர்.
”ஹலோ டாக்டர் ”
”வாங்க உக்காருங்க என்ன விஷயம்”
இவர்கள் நடந்ததைக் கூறினார்கள்.
உடனே சீனுவை அழைத்து உள்ளே சென்று பல டெஸ்ட் செய்தார். டெஸ்ட் முடிந்தது.
டாக்டர் வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தார்.
ஸ்ரீராம், ”என்ன டாக்டர் ஆச்சு” என்றான்.
“ஒன்னும் இல்லை சிக்கிரம் சரியாகி விடும்” என்று. ஐ டிராப் ஒன்றை ஊற்றினார். சீனுவிற்கு கண் எரிச்சல் ஆனது. சிறிது நேரம் கழித்து சரியானது. சில கேள்வி கேட்டார் டாக்டர்.
“ டான் டான்” என்று பதில் கூறினான் சீனு.
மீண்டும் போர்டைப் பார்த்து, ”டாக்டர் ஒரே மஞ்சள் மஞ்சளாக தெரிகிறது” என்றான்.
”அப்படியா சரி கண்ணுலா இரண்டு ஊசி போட்ட போதும்.” என்றார்.
உடனே ”அய்யோ ஊசியா.” என்று அலறினான்.
இதைக் கண்ட கீதா “என்ன டாக்டர் சொல்லறீங்க”
”இவன் பொய் சொல்றான். தட்ஸ் ஆல்” என சிரித்தார்.
கீதா மிரட்டியதும் சீனு உண்மையை கக்கினான்.
” மம்மி எங்க மிஸ் நான் குறும்பு பண்றேன்னு என்னை சேக்கண்டு ரோவில் உக்கார வைச்சுட்டாங்க” என்று அழுதான்.
இப்படி ஒரு குறும்பு பண்ணினா என்ன தான் செய்வது. அவனது பெற்றோர்கள் யோசித்தனர்.