இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வினோதன் என்கிற மெண்டல்

அண்டனூர் சுரா


எழுதப்பட்டிருப்பது கில்லியா?, தில்லியா? என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம்.

கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு தில்லி என்று எழுதியிருந்தால் போனாப்போகுதென்று ஒரு மதிப்பெண் கொடுக்கலாம். இவன் கில்லி என்றல்லவா எழுதியிருக்கிறான். கில்லிக்கும் தில்லிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எழுத்துப் பிழைக்காக ஒரு மதிப்பெண் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று கில்லியில் ஒரு சுழி சுழித்தார்.

சண்முகம் சுந்தம்பட்டி உயர்நிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர். சராசரி உயரத்தை விடச் சற்று உயரமான உருவம். நிரம்பித் ததும்பும் ஊருணி போல படர்ந்த முகம். மாணவர்களிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவர் பாடம் நடத்தத் தொடங்கி விட்டால் மாணவர்கள் கண் கொத்திப் பாம்பாகப் பாடத்தைக் கவனிக்கத் தொடங்குவார்கள். கற்பித்தலும் தேர்வு நடத்துதலும் அவருடைய இரு கண்கள் . கற்பித்தலை விட அலாதியான சுகம் விடைத்தாள் திருத்துவதில்தான் இருக்கு என்பதை ரம்யமாக அறிந்து கொண்டவர் . பதில்களை, என்பது என தொடங்கி எனப்படும் என முடிப்பது மாணவர்களுக்கே உரித்தான அசூசை குணம். ஆனால் அவர் மாணவர்களிடம் எதிர்ப்பார்ப்பது அதுவல்ல . அவனது பேச்சு வழக்கில் அதுவும் அவனுக்கே புரியும் படி எழுத வைத்து விடுவதில்தான் அவரது மொத்த உழைப்பும் இருந்து கொண்டிருக்கிறது. எதாவது ஒரு பேப்பரில் எதார்த்தமான பதில்கள் எழுதப்பட்டிருக்காதா? என பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு அதில் மூழ்குவார். அப்படி மூழ்கையில் தான் ஒரு கேள்விக்கான பதில் புது தில்லி என்பது தில்லியாகச் சுருங்கி கில்லியாக கைக்கால் ஒடிந்து முத்து முத்தாக எழுதப்பட்டிருக்கிறது.

“ யாருடைய பேப்பராக இருக்கும்?“ என தேர்வு எண்ணை ஒருகணம் புரட்டிப் பார்த்துவிட்டு ஊர்ஜித்தார். “ ஆம் .....இது வினோதனுடையது“.



வினோதன் அரும்பு மீசை முளைத்து வயது மீறியவன். என்ஸைம்களின் அதீத சுரப்பால் வேகமாக வளர்ந்து முதுகு வளைந்து போன பத்தாம் வகுப்பு மாணவன். மரக்கன்று வளர்ப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, புதிய ரகக் கன்றுகளை உருவாக்குவது என்பதில்தான் அவனுடைய மொத்தக் கவனமும் இருக்கும். பள்ளிக்கு வருவது என்னவோ பெற்றோர்களின் வார்த்தைக் கொப்பளிப்புக்குப் பயந்துதான். கடைசிப் பெஞ்சில் அசௌகரியமாகவே அமர்ந்திருப்பான். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்தில் எதாவது ஒரு படத்தின் கதையை அளந்து கொண்டிருப்பான். எந்த நடிகனுக்கென்றும் அவன் தனிப்பட்ட ரசிகன் இல்லையென்றாலும் ஒரு படம் பத்து நாளைக்குப் பேசப்பட்டால் அந்த நடிகரின் முடி , உடை அலங்காரம் அவனிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். கறுப்புக் கயிற்றில் ஏதேனும் ஒரு வகை விதைகளை வரிசையாக கோர்த்திருப்பான். அதில் அந்த நேர பிரபலமான நடிகரின் டாலரை தொங்க விட்டுக் கொள்வான். கண்டிப்பான ஆசிரியர்கள் வந்தால் ஒழிய ஒரு போதும் அந்த டாலரை மறைத்துக் கொள்ள மாட்டான்.

பூச்சி பிடித்த கீரையைப் போல கண்டு கொள்ளாமலிருந்த வினோதன் சண்முகத்திற்கு பரிச்சயமானது இப்படித்தான். வேறொரு பள்ளியிலிருந்து மாறுதலாகி அந்தப் பள்ளியில் பணி அமர்த்தப்பட்ட அன்று ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்தார் சண்முகம். திரையரங்குகளில் நிகழும் விளம்பர நேரத்திற்கு பிறகான நிசப்தம் அந்த வகுப்பறையில் நிழவியது. புது ஆசிரியரின் வருகையால் வகுப்பறையில் குதூகலம் . ஆசிரியரின் அறிமுகம் முடிந்த உடன் ஒவ்வொரு மாணவனும் எழுந்து ஒப்புக்கு ஒரு லட்சியத்தை சொல்லிவிட்டு உடைத்த தேங்காயைப் போல வெணீரென சிரித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில் வினோதன் சொன்னது “ நான் மெண்டலாக விரும்புறேன் சார்“ .



மாணவர்கள் கடலலையைப் போல எழுந்து கெலிப்பதும் குதிப்பதுமாக இருந்தனர். அவர்களை அமைதிப்படுத்த குச்சி எடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. குச்சியால் மேஜையில் ரெண்டு தட்டுத் தட்ட குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவிற்கு வகுப்பறையில் அமைதி நிலவியது. அதற்குப்பிறகு அவனை எல்லாரும் அழைப்பது மென்டல் என்றுதான்.

பின்னொரு நாள் அவர் “ ஒவ்வொரு ஆளாக எழுந்து ஒரு விஞ்ஞானி பெயரையும் அவர் கண்டுப்பிடித்த ஒரு கண்டுப்பிடிப்பையும் சொல்லுங்கள் பார்க்கலாம்“ என்றவுடன் மொத்தத் தலையும் ஒடிந்து தொங்கி விட்டன. பிறகு வேறு வழியில்லாமல் அவரே சொன்னார் “ நான் ஒரு விஞ்ஞானி பெயரை சொல்கிறேன். அவரது கண்டுப்பிடிப்பை நீங்கள் சொல்லுங்கள்“ என்றவுடன் ஒடிந்த தலைகள் நிமிர்ந்தன.

“ அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்“

அவர் சொன்னவுடன் பாதிக்கு மேல் மாணவர்கள் சட்டென்று கையை உயர்த்தினார்கள். சில மாணவர்கள் கையை உயர்த்துவதைப் போல தலையை சொறிந்து கொண்டிருந்தனர். அதில் உயர்ந்த கை வினோதனுடையது.

“ வினோதன் நீ சொல்லு. அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் என்ன கண்டுப்பிடிச்சார் ?“

மெல்ல எழுந்தவன் “ பெல்“ என்றான்.

வகுப்பறையில் உக்கிரமான சிரிப்பொலி. நையாண்டி , மேளதாளம் என சகலமுமாக நிறைந்திருந்தது. சண்முகம் வினோதனை ஒரு கேலிப்பொருளாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ வினோதன் நீ சொல்லுவதைப் பார்த்தால், நியுலாண்ட் கண்டு பிடிச்சது புதிய நிலம். மார்க்கோணி கண்டுப்பிடிச்சது கோணிப்பை அப்படித்தானே?“

என்ன பதில் சொல்லணுமென்று அவனுக்கு அப்போதைக்கு தெரியவில்லை. எதற்கும் “இல்லை“ யென்று பொத்தம் பொதுவாக தலையை ஆட்டி வைத்தான்.



இதற்கு முன்பு அவர் காலாண்டு அறிவியல் பேப்பரை திருத்திக் கொண்டிருக்கும் போது சிவப்பு மை பேனா எதேச்சையாக ஒரு இடத்தில் வந்து நின்றது. முப்பதாவது கேள்விக்கு சூர்யா மின்கலம் என்று எழுதியிருந்தான். வேறு வழியில்லாமல் “யா“ வை ஒட்டியுள்ள துணையெழுத்தை சுழித்துவிட்டு ஒரு மதிப்பெண் கொடுத்துவிட்டார்.

முயலின் காதுகளை தூக்கிப் பிடித்து அதன் எடையை கணித்து விடுவதைப்போல பரீட்சை பேப்பரின் நூலைத் தூக்கி முப்பது மதிப்பெண்களே தேறும் என ஊர்ஜித்தார். கூட்டிப் பார்க்கையில் முப்பத்து ஐந்து மதிப்பெண்கள் வந்திருந்தன. பேப்பரை வினோதன் வாங்கும் போது அவனது கழுத்தில் சூர்யா டாலர் தொங்கிக்கொண்டிருந்தது.

தில்லி கில்லியாக மாறியிருப்பது எதேச்சையானதா? இல்லை சின்னப்பிள்ளைத்தனமா? என்பதை அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டாலரை வைத்து திடமான முடிவுக்கு வந்திட முடியும் என்ற தன்னிலை விளக்கத்திற்கு பிறகு மற்ற பேப்பரை திருத்தத் தொடங்கினார்.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும் அவர் முதல் வேலையாக வினோதனை சைகையால் அழைத்தார். அவன் எங்கிருந்தோ வேருடன் பிடிங்கி வந்திருந்த பட்டாணி செடியில் தன்னை கரைத்துக் கொண்டிருந்தான்.

“ டேய் மென்டல் ....... உன்னை சார் அழைக்கிறாங்க “ என சக மாணவர்கள் சொல்ல அவன் திடுக்கிட்டு அவர் முன் வந்து நின்றான்.



அவனது கழுத்தில் விஜய் டாலர் தொங்கிக் கொண்டிருந்தது. கவனிப்பதை சட்டென கணித்த அவன் கயிற்றை வெடுக்கென அறுத்து சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நடந்து முடிந்திருந்தது. மறுநாள் வழியனுப்பும் விதமாக மாணவர்களை அழைத்திருந்தார் சண்முகம். ஒவ்வொருவராக எழுந்து, தான் எதிர் நோக்கியிருக்கும் மதிப்பெண்களையும் எதிர்கால கனவு படிப்புகளையும் வணக்கத்துடன் தொடங்கி நன்றிக்கு உரித்தாக்கிக் கொண்டிருந்தனர். கடைசி நபராக வினோதன் எழுந்தான். “ எனக்கு எப்படியும் நானூற்று ஐம்பது மார்க் வரும் சார் “ என்றதும் கொஞ்சப்பேர் கடனுக்கு சிரித்து வைத்தார்கள். “ சார் ... உங்கப் பாடத்தில் தொண்ணூறு வரும் “ என்றதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிரித்தார்கள். “ இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி வணக்கம்“ என்றதும் வகுப்பறையே குதூகலம் கண்டது.

சண்முகம் அவனை பரிதாபத்தோடுதான் பார்த்தார். உரையை முடித்துக் கொள்கிறேன் என்பதைத்தான் தவறுதலாக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என சொல்லிருக்கிறான் என்றாலும் அவன் அப்படி சொன்னதும் அவருக்கு கொஞ்சம் நெருடலை கொடுத்தது. கடைசியில் ஆசிரியரிடம் கை கொடுத்தப்படி மொத்த மாணவர்களும் விடைபெற வினோதனை மட்டும் அவர் மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தார்.

பள்ளி தேர்வு முடிவு எதிர்பார்த்தப்படி வந்திருந்தது. வினோதனும் எதிர்பாராத விதமாக தேர்ச்சிப்பெற்று பள்ளிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தான். பள்ளி அளவில் மிகக்குறைந்த மதிப்பெண் வரிசையில் முதலிடம் அவன்தான். டீசி வாங்குவதும் , ஆசிரியர்களுக்கு மிட்டாய் கொடுப்பதும் , வணக்கம் வைப்பதும் ,தோழிகளுக்கு டாட்டா சொல்வதுமாக இருந்த மாணவர்களிடம் சண்முகம்தான் கேட்டார். “ எங்கடா வினோதன்................?“

எதிரே வந்து நின்று கைக்கட்டியபடி சொன்னான் ஒருவன் “ அண்ணா பண்ணையில வேலை பார்க்கிறான் சார்“

“ என்ன வேலை பார்க்கிறான்?“

“ மரக்கன்னுக்கு பாக்கெட் போடுறான் சார்“

“ அவனை இங்கே அழைச்சிக்கிட்டு வாடா “ என அவர் சொன்னதும் கையில் வைத்திருந்த சான்றிதழ்களை அவரிடமே கொடுத்து விட்டு மூன்று மாணவர்கள் ஓட்டமெடுத்தனர்.

சுவற்றில் மோதி திரும்பும் பந்து போல போன வேகத்தில் திரும்பிவந்த அவர்கள் “ உங்கள் பாடத்தில் சொன்ன மதிப்பெண் அவனால எடுக்க முடியலையாம் சார். அதனாலே உங்க முன் நிற்க வெக்கப்பட்டுக்கிட்டு வர முடியாதுனு சொல்றான் சார்“



தேர்வு முடிவுக்குப் பிறகு வினோதன் இதுநாள் வரைக்கும் பள்ளிக்கு வராததால் கவலையில் அமிழ்ந்து போயிருந்தார் சண்முகம். என்ன செய்வதென்று ஒரு கணம் யோசித்த அவர் ஒரு மாணவனிடம் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொண்டு வேகு வேகுவென மிதித்து பண்ணை போய் சேர்ந்தவர் அவனிடம் பத்து நிமிடங்கள் பேசி கையோடு அழைத்து வந்து அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார். வினோதன் அங்கேயும் “ மென்டல் “ என்றே அழைக்கப்பட்டு வந்தான்.

அந்த வருடம், ஒரு நாள் ஆண்டு விழா மிக விமர்ச்சையாக நடைபெற்றது. கடந்த வருடம் முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு பலத்த கைத்தட்டலுடன் பரிசு வழங்கப்பட்டதன் பிறகு “ இப்போது வினோதன் எனும் மெண்டலை மேடைக்கு அழைக்கிறோம் “ என ஆசிரியர் சண்முகம் அழைத்ததும் முன்னால் மாணவர்கள் மத்தியில் எகத்தாளம் , கும்மாளம். . இருக்காதா பின்னே ! இதுவரைக்கும் அவனை அவர் அப்படி அழைத்ததில்லையே.

மேடைக்கு வந்தான் வினோதன். அவன் கையில் ஒரு செடி இருந்தது. சண்முகம்தான் அவனை அறிமுகப்படுத்தி பேசினார் “ மாணவர்களே நம் பள்ளியில் படித்த முன்னால் மாணவன் வினோதன் தேசிய அறிவியல் தொழில் நுட்பத்தால் இளம் விஞ்ஞானி எனும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறான். இவன் கண்டுப்பிடித்த ஒரு ஒட்டு வேம்பு பாலைவனத்தில் கூட வளரக்கூடிய தகவமைப்பை பெற்றதாக உள்ளது. காற்றிலுள்ள மிகக் குறைந்த அளவு ஈரப்பதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு செழிப்பாக வளரக்கூடிய இந்த வேம்பு எதிர்கால பாரதத்தை பசுமையான பாரதமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. நான் இப்பள்ளிக்கு மாறுதலாகி வரும் போது என் ஆசை மெண்டலாவதுதான் என்றான். ஆனால் அவன் சொன்னதை மற்ற மாணவர்கள் மென்டலாகவும் கேலியாகவும் எடுத்துக்கொண்டனர். ஆனால் வினோதன் அதை கேலியாக சொல்லவில்லை. ”

வினோதன் தலை குனிந்து அடக்கமாக நின்று கொண்டிருந்தான். சண்முகம் மேலும் தொடர்ந்தார். “ வினோதன் கழுத்தில் எப்போதும் ஒரு டாலர் தொங்கிக் கொண்டிருக்கும். அது நடிகனாகவோ அல்லது ஒரு கிரிக்கெட் பிளேயராகவோ இருக்கக்கூடும். இனி அவனுடைய கழுத்தில் எப்போதும் ஒரே டாலர் தான் தொங்கும். அந்த டாலர் மெண்டல். பட்டாணியில் கலப்பினத்தை உண்டாக்கிய தாவரவியல் விஞ்ஞானி கிரிகோர் ஜோகன் மெண்டல்”

டாலரை விழாத் தலைவர்கள் கூடி நின்று அவனுக்கு அணிவித்தனர். பரட்டை தலையுடனும் கூனிப்போன முதுகுடனும் அவன் மேடையை விட்டு கீழே இறங்க மாணவப் பட்டாளம் அவனைச்சுற்றி மொய்க்க நாலாபுறமும் திரும்பி கை கொடுத்த படி நடையை கூட்டிக் கொண்டிருந்தான்.



இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வினோதன் ஒரு நாள் ஒட்டு ரக மரக்கன்றுடன் சண்முகம் வீட்டிற்கு வந்திருந்தான். அவனைக் கண்ட சண்முகம் “ வாப்பா மெண்டல் “ என அலங்கார புன்னகையுடன் அழைத்தார்.

பதிலுக்கு அவனும் பிளாஸ்டிக் ரக புன்னகையால் ஆமோதித்தான்.

“ சார்.......பள்ளி ஆண்டு விழாவில் நீங்க என்னை அந்தளவிற்கு கௌரவப்படுத்திருக்க வேண்டியதில்லை சார். அதுவும் விஞ்ஞானி மெண்டல் முகம் பதித்த இந்த டாலரை எனக்கு நீங்க மாட்டி விட்டிருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் சார் “

அவன் அப்படி சொன்னதும் ஒரு வித கிலி அவரை பற்றிக்கொண்டது.

“ ஏன் ! என்னாச்சுப்பா?“

துளிர்த்திருந்த கண்ணீரை லாவகமாக மறைந்துக் கொண்டு சொன்னான் “அதற்கு பிறகு யாரும் என்னிடம் பேசுவதுமில்லை, கேலியாக மென்டல்னு கூப்பிடுறதும் இல்ல சார்“

பெரிய கலவரம் நிகழ்ந்து ஓய்ந்ததைப் போல உணர்ந்தார் சண்முகம். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கேட்டார். “ வினோதன்...... நீ நான்கு வருடத்திற்கு முன்பு நீ என்னிடம் சொன்னது மென்டலா ? மெண்டலா?“

“ மெண்டல் சார்“ என சொல்லிவிட்டு எங்கேயோ ஓடிப் போய் ஒழிந்து போன சிரிப்பை மீட்டு வந்து முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

அவனது அந்த ரம்மியமான சிரிப்பு அவரைப் பொறுத்தவரை தேசிய விருது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p133.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License