Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

யார் ஆசிரியர்...?

முகில் தினகரன்


காலை 6.10-க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை நோக்கி தன் சக்கரங்களை அசுர வேகத்தில் உருட்டிக் கொண்டிருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நான் சிறிது நேரத்திலேயெ அதுவும் சலித்துப் போய் விட அந்தப் பெட்டியில் என்னோடு பயணம் செய்யும் சக பயணிகளை ஆராய ஆரம்பித்தேன்.

எதிர் இருக்கைக்காரர் என்னை நேருக்கு நேர் பார்க்க ஒரு நேசப் புன்னகையை வீசினேன். பதிலுக்கு அவரும் புன்னகைக்க,

'சார்... எங்க… கோயமுத்தூருக்கா?” கேட்டேன்.

'ஆமாங்க”

'சார் என்ன வேலை பார்க்கிறாப்பல?”

'பள்ளிக் கூட ஆசிரியர்”

'நெனச்சேன்… உங்களைப் பார்த்தப்பவே நெனச்சேன்… நீங்க நிச்சயம் டீச்சராத்தான் இருப்பீங்கன்னு…” சொல்லிவிட்டு நான் சிரிக்க,அந்த ஆசிரியருக்கு இடப்புறம் அமர்ந்திருந்த ஒரு காட்டான்,

'நீங்க…கோயமுத்தூரா சார்?” என்று தன் தகர டப்பா குரலில் என்னைப் பார்த்துக் கேட்டான்.

முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு 'ஆமாம்…” என்றேன். ஏனோ எனக்கு அந்த ஆளைப் பிடிக்கவேயில்லை. அவன் தோற்றமும் மீசையும் 'கர..கர” குரலும் எனக்குள் ஒரு எரிச்சலைத்தான் மூட்டினவே தவிர ஒரு தோழமை உணர்வைத் தோற்றுவிக்கவே இல்லை.

நான் அந்த நபரைத் தவிர்த்து விட்டு எதிர் இருக்கை ஆசிரியரிடம் 'கோயமுத்தூரில எந்த ஸகூல்ல சார் வொர்க் பண்ணறீங்க?” கேட்டேன்.

'கே.பி.எஸ். மெட்ரிகுலேஷன் ஸ்கூல்….”

'ஓ…நல்லாத் தெரியும்… நல்ல பேர் வாங்கின ஸ்கூலாச்சே”

அந்தக் 'கர…கர” குரல் மறுபடியும் இடையில் புகுந்து 'சார; கோயமுத்தூர்ல என்ன தொழில் பண்ணறாப்ல?” என்று என்னிடமே கேட்க,

பற்களைக் கடித்தபடி 'ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன்” என்றேன்.

'எந்தக் கம்பெனி?”

'நான் எந்தக் கம்பெனில வேலை பார்த்தா உனக்கென்னடா?' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு 'எமரால்டு என்ஜினியர்ஸ்”

'எமரால்டு என்ஜினியர்ஸா?… கேள்விப்பட்ட மாதிரிதான் இருக்குது… ஆனா எந்த ஏரியான்னுதான் தெரியல…”'அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே?”…நினைத்துக் கொண்டவன் 'சிட்கோ இண்டஸ்ட்ரியல்ஸ் எஸ்டேட்” என்று வேகமாய்ச் சொல்லி விட்டு மீண்டும் அந்த ஆசிரியர் பக்கம் திரும்பி 'உங்க ஸ்கூல்ல ரிசல்ட்டெல்லாம் எப்படி சார்?”

'ம்ம்ம்… கடந்த மூணு வருஷமாவே….டென்த்ல நூத்துக்கு நூறு சதவீதம் பாஸ்”

அந்தக் 'கர…கர” குரல் வேறு ஏதோ கேட்க வாயெடுக்கும் போது,

'சார் புக்…புக்..”என்று சன்னமாய்க் கூவிக் கொண்டே தட்டுத் தடுமாறி வந்தான் ஒரு இளைஞன். வயது… இருபது… இருபத்திரெண்டு இருக்கும்… வலது கையில் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்திருந்தான். இடது பாதியாய்ச் சூம்பிப் போயிருக்க பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் அதன் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தன.

'பாவம்…சின்ன வயசு… த்சொ… த்சொ..” நான் அங்கலாய்த்தபடி அவனைக் கூர்ந்து பார்த்து அதிர்ச்சி வாங்கினேன். ஆம்…அவன் கால்களிலும் ஒன்று சூம்பிப் போய் முக்கால் வாசிதானிருந்தது.

அவன் யாரிடமும் எதுவம் பேசாது கையில் அணைத்துப் பிடித்திருந்த புத்தகங்களை காலியாயிருந்த ஒரு இருக்கையின் மீது வைத்து விட்டு நகர பயணிகள் ஆளுக்கொன்றாய் எடுத்துப் பிரித்துப் பார்த்தனர்.தன் இருக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்தும் அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை அந்தக் 'கர…கர” குரல்.

'எடுத்துப் பார்த்தா என்ன காசா கெட்டிடுவாங்க?... பாரு… எப்படி எருமை மாடாட்டம் உட்கார்ந்திட்டிருக்கான்னு”

அதே நேரம் அந்த ஆசிரியரானவர் அதில் நாலைந்து புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்க,

'இதான்… இதான் படிச்ச வாத்தியாருக்கும், படிக்காத காட்டானுக்கும் உள்ள வித்தியாசம்”

கால் மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த அந்த மாற்றுத் திறனாளிக்கு எல்லாப் புத்தகங்களும் சரியானபடி திருப்பித் தரப்பட்டனவே தவிர ஒன்று கூட விற்பனையாகவில்லை.

அவன் முகம் வாடிப்போனது அப்பட்டமாய்த் தெரிந்தது.

அப்போது…

'தம்பி… இங்க வாப்பா” அந்தக் 'கர…கர” குரல் ஆசாமி அவனை அழைக்க எனக்கு எரிச்சல் வந்தது. 'க்கும்…எல்லா புத்தகமும் இத்தனை நேரம் அவன் பக்கத்திலேதான் கெடந்தது... அப்ப அதுகளைச் சீண்டவேயில்லை… பெரிய இவனாட்டம் இப்பக் கூப்பிட்டுக் கேக்கறான் பாரு…”

'இதுல மொத்தம் எத்தனை புத்தகம் இருக்கு தம்பி?”

'ம்ம்ம்… ஒரு இருபத்தியஞ்சு... இருக்கும்”

'தோள்ல தொங்க விட்டிருக்கியே அந்த பேக்குல?”

'ஒரு அறுபது இருக்கும்”

'மொத்தமாச் சேர்த்து எல்லாத்துக்கும் என்ன வேலை ஆகுது?”அவர் நிஜமாகவே கேட்கிறாரா?… இல்லை தமாஷ் செய்கிறாரா?… என்பது புரியாமல் அந்த இளைஞன் மலங்க மலங்க விழிக்க,

'அடச் சும்மா சொல்லுப்பா… நானே வாங்கிக்கறேன் எல்லாத்தையும்” என்றார் அந்தக் 'கர…கர” குரல்.

'ம்ம்ம்… ரெண்டாயிரத்து நூறு ஆவும் சார்… நீங்க ரெண்டாயிரம் குடுங்க சார் போதும்”

தன் பனியனுக்குள் கையை விட்டு, காக்கி நிறக் கவரை எடுத்து அதிலிருந்து இருபது நூறு ரூபாய்த் தாள்களை உருவி புத்தகக்காரனிடம் நீட்டினார் 'கர..கர” குரல்.

முகம் முழுவதும் சந்தோசம் கொப்பளிக்க வாங்கிக் கொண்டு நடந்தான் அந்த மாற்றுத் திறனாளி.

அவன் சென்ற சிறிது நேரத்தில் ஜீன்ஸ், பேண்ட் மற்றும் டீ- சர்ட் அணிந்து கண்களில் ஸ்டைலான கறுப்புக் கண்ணாடியுடன் ஒரு இளைஞன் பெட்டிக்குள் பிரவேசித்தான். அவன் கையில் அழகிய சிறிய சூட்கேஸ்!.

பயணிகள் மத்தியில் நின்று அவன் அதைத் திறந்து காட்ட உள்ளே ஏராளமாய் சி. டி. க்கள்.

'ஒண்ணு இருவது ரூபாதான் சார்… என்ன படம் வேணுமானாலும் எடுத்துக்கலாம்… புதுப்படம்… பழையபடம்… இங்கிலீஸ் படம்... எல்லாம் இருக்கு..”

ஸ்டைலாக அவன் சொல்ல பாய்ந்தது கூட்டம். சில நிமிடங்களில் அது மொத்தமாய் தீர்ந்து விட பணத்தை எண்ணியபடியே நகர்ந்தான் அவன்.

என் எதிரில் அமர்ந்திருந்த ஆசிரியரின் கை நிறைய சி. டி. க்கள். சுமார் பதினைந்திலிருந்து இருபது இருக்கும்.

'வாத்தியாருக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம் போல…” அந்தக் கர…கர…குரல் ஆசிரியரைக் காட்டி என்னிடம் சொல்ல,

'ஹி…ஹி..” என்று அசடு வழிந்த ஆசிரியர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு 'ஆமாம்..நீங்க எப்படி புத்தகப் பைத்தியமோ… அப்படித்தான் நான் சினிமா பைத்தியம்” சமாளித்தார்.

'அட நீங்க வேற ஏன் சார்….எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது… மழைக்குக் கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத ஆளு நான்” சற்றும் லஜ்ஜையில்லாமல் அந்தக் கர…கர…குரல் சொன்ன பொது குழம்பிப் போனேன் நான்.

'என்னது... எழுதப் படிக்கத் தெரியாதவரா நீங்க?… அப்புறம் எதுக்கு அத்தனை புத்தகங்களை…”

'ஓ… அதுவா…சார்…. இந்தக் காலத்துல கையும் காலும் நல்லா இருக்கறவங்களே பல பேர் உழைச்சுச் சம்பாதிக்க சோம்பேறித்தனப் பட்டுக்கிட்டு… பிச்சையெடுக்கறாங்க… திருடறாங்க… தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விக்கறாங்க… ஆனா தனக்கு ஊனம் இருந்தும் அதையே சாக்கா வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம… ஏதோ தன்னால் முடிஞ்ச புத்தக வியாபாரத்தைப் பண்ணறானே அந்த இளைஞன்… அவனோட அந்தத் தன்னம்பிக்கைக் குணத்துக்கு நான் குடுத்த பரிசுதான் சார், அந்தப் பணம்... அதையே நான் 'சும்மா…வெச்சுக்கப்பா”ன்னு குடுத்திருந்தா நிச்சயம் அந்த இளைஞன் அதை வாங்கிக்க மாட்டான்னு எனக்குத் தெரியும். அதனாலதான் அந்தப் பணத்துக்கு மொத்த புத்தகங்களையும் வாங்கினேன்”'சரி… படிக்காத நீங்க இதுகளை வெச்சுக்கிட்டு என்ன பணணுவீங்க?” அந்த ஆசிரியர் தான் பெரிய படிப்பாளி என்கிற தெனாவெட்டில் கேட்டு விட்டு என்னைப் பார்த்து இளித்தார்.

'நம்ம ஏரியாவுல இளைஞர்களெல்லாம் சேர்ந்து ஒரு சின்ன நூலகம் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்காங்க… யார் வேணாலும் போய் இலவசமாப் படிக்கலாம்… அந்த நூலகத்துக்கு இதுகளையெல்லாம் குடுத்திடுவேன்”

படு யதார்த்தமாய்ச் சொல்லி விட்டு அந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்த அந்த மனிதரை ஏனோ எனக்கு இப்ப பிடிக்க ஆரம்பித்தது. அவருடைய அந்தத் தோற்றத்தையும்… மீசையையும்…. கர…கர… குரலையும் என்னையே அறியாமல் நான் ரசிக்கத் துவங்கிய போது,

என் எதிரே அமர்ந்திருந்த சினிமாப் பைத்திய ஆசிரியர் அந்த சி. டி. கவர் மீதிருந்த நடிகையின் படத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

யார் ஆசிரியர்...? எனக்கு வந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p137.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License