Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

உறுத்தல்!

முனைவர் சி.சேதுராமன்


அறைக்கதவை பவ்யமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த போர்மென் சக்திவேலை நிமிர்ந்து பார்த்து “என்ன?” பார்வையால் கேட்டார் ராஜவேலு. ‘ராஜாளி குரூப் ஆஃப் கம்பெனி”களின் செல்வாக்கு மிக்க ஜெனரல் மேனேஜர்.

“சார்… பதினஞ்சு நாளா வேலைக்கு வராம இருந்த கோபி... இன்னிக்கு வந்திருக்கான் சார்… நீங்க சொன்ன மாதிரியே உங்களைப் பார்த்துட்டு வந்து வேலை செய்யச் சொன்னேன்…'மாட்டேன்”னு அடம் பிடிக்கறான் சார்”

“அப்படியா?…சரி... நீங்க போங்க சக்திவேல்… நான் ஆபீஸ் பையனை விட்டு அவனை வரச் சொல்லி கண்டிக்கறேன்”

போர்மென் சக்திவேல் சென்றதும் ஆபீஸ் பையனை அழைத்து, அந்த கோபியைக் கூட்டி வரும்படி சொன்னார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து நின்ற கோபிக்கு சுமார் இருபத்தியெட்டு வயதிருக்கும். வயதுக்கு மீறிய அனுபவப் பக்குவம் முகத்தில் தெளிவாய்த் தெரிந்தது.

“என்னப்பா… இதென்ன கம்பெனியா?… இல்ல சத்திரமா?… நீ பாட்டுக்கு நெனச்சா வர்றே… நெனச்சா போறே…. கொஞ்சமாவது டிசிப்ளின் இருக்கா உனக்கு?… போர்மென் கிட்டக்கூட அடங்காம எதிர்த்துப் பேசறியாமே… என்ன… வேலைல தொடர்ந்து இருக்கறதா உத்தேசமா?... இல்ல வெளியில் போற மாதிரி உத்தேசமா?” எடுத்த எடுப்பிலேயெ ராஜவேலு சத்தம் போட ஆரம்பிக்க,“சார்… வீட்டுல அம்மா… அப்பா ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு… ரெண்டு பேரும் படுத்த படுக்கையா இருக்காங்க… நான் ஒருத்தன்தான் பையன்… என்னைய விட்டா அவங்களைப் பார்த்துக்க வேற யாருமே கிடையாது… அதான் நானே லீவு போட்டுட்டு... கூடவே இருந்து நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்துக் கவனிச்சிட்டிருந்தேன்…” சொல்லும் போதே குரல் கமறியது அவனுக்கு.

“சரி... அப்படியே நிரந்தரமா வீட்டிலேயே இருந்துக்க வேண்டியதுதானே?… இன்னிக்கு எதுக்கு வந்தே… எந்த தைரியத்துல வந்தே… யாரும்... எதுவும் கேட்க மாட்டாங்கன்னு நெனச்சிட்டியா?”

“இல்ல சார்! ஏதோ இப்பக் கொஞ்சம் பரவாயில்லை... அவங்க வேலைய அவங்களே செஞ்சுக்கற அளவுக்குத் தேறிட்டாங்க… அதான் வந்துட்டேன்” அப்பாவியாய்ச் சொன்னான்.

“அப்ப… மறுபடியும் அவங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போனா மறுபடியும் லீவு போடுவே… அப்படித்தானே?”

“வேற என்ன சார் பண்ண முடியும், பெத்தவங்க முக்கியமில்லையா?”

“பெத்தவங்கதான் முக்கியமன்னா... அவங்களையே பார்த்துட்டு வீட்டோடவே கெட... இன்னிக்கே உன்னோட கணக்கை முடிக்கச் சொல்லிடறேன்… வாங்கிட்டு கௌம்பிட்டே இரு... நான் வேற ஆளை வெச்சு வேலை பார்த்துக்கறேன்”

“அய்யய்யோ… சார், அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க…” அவன் கெஞ்ச,

“இதப் பாருப்பா… இது கம்பெனி… இங்க ஆயிரம் பேர் வேலை பார்க்கறாங்க... அந்த ஆயிரம் பேருக்கும் ஆயிரம் சொந்தக் கவலைகள்… பிரச்சினைகள் இருக்கும்… அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது… எங்களுக்கு வேலை முக்கியம்… அவ்வளவுதான்” திடீரென்று குரலை உயர்த்திக் கத்தினார் ராஜவேலு.பதில் பேச இயலாது மௌனமாய்த் தலை குனிந்து நின்றான் கோபி.

அவனின் அந்த அமைதி ராஜவேலுவை சற்று சாந்தப் படுத்த,

“தம்பி… வயசாயிட்டாலே பெரியவங்களுக்கு அப்பப்ப ஏதாவதொரு கேடு வந்திட்டேதானிருக்கும்… அதுக்கெல்லாம் நாம முக்கியத்துவம் குடுத்திட்டிருந்தா நம்ம வாழ்க்கை வண்டி ஒழுங்கா ஓடாது... அதனால நான் ஒண்ணு சொல்றேன் அது மாதிரி செய்”

ஜி.எம்.மிடமிருந்து வந்த அந்த கனிவான வார்த்தைகளில் நெகிழ்ந்து போன கோபி “சொல்லுங்க சார்” என்றான் ஆவலாய்.

“பேசாம ஒரு நல்ல முதியோர் இல்லமா பார்த்து அவங்களை சேர்த்து விட்டுட்டு… நீ ஒழுங்கா வந்து வேலையப் பாரு”

சட்டென முகம் மாறி அவரை எரித்து விடுவது போல் பார்த்த கோபி “இங்க பாருங்க சார்… வயசான காலத்துல பெத்தவங்களை கூட இருந்து அனுசரணையா கவனிச்சுக்காம அவங்களை முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுட்டு… பொண்டாட்டி பின்னாடியும்… சொத்துக்குப் பின்னாடியும் ஓடறவனெல்லாம் உண்மைல மனுசங்களே இல்ல சார்… பெத்து..வளர்த்து ஆளாக்கிய அம்மா… அப்பாவ அனாதைகளாக்கி ஏதோவொரு இல்லத்துல தள்ளி விட்டுட்டுத் திரியறவனுக எல்லாரும் அவங்களோட முதுமைக் காலத்துல அதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டுத்தான் சார் சாவானுக..” என்று ஆத்திரமாய்ச் சொல்ல

“முடிவா... என்னதான் சொல்றே?… வேலைக்கு ஒழுங்கா வர மாட்டே… அப்படித்தானே?”

“எனக்கு என்னைப் பெத்தவங்கதான் சார் முக்கியம்… அதுக்கப்புறம்தான்... இந்த வேலை… சம்பளம்… எல்லாம்… இந்த வேலைல இருந்துட்டு அவங்களை கவனிக்க முடியாதுங்கற ஒரு நெலைமை வரும் போது… இந்த வேலையே தூசுதான் சார்…வேண்டாம் சார்… இன்னிக்கே என்னோட ராஜினாமாவக் குடுத்துட்டு இப்படியே போயிடறேன்...” சொல்லிவிட்டு வேக வேகமாக வெளியேறினான் கோபி.பிரம்மை பிடித்தவன் போல நின்றிருந்த அவனைப் பார்த்து முதலாளி, ‘‘டேய் அனாதைப் பயலே! அனாதையாத் திரிந்த உன்னை அன்பா எடுத்து வளர்த்து இவ்வளவு தூரம் ஆளாக்குனதுக்கு நீ காட்ற நன்றியாடா இது. இந்த லாட்ஜின் பெயரையே கெடுத்திட்டியடா? இங்க வந்து தங்குவரோட மூணுபவுனு தங்கச் செயினைக் களவாங்கலாமாடா? திருட்டு அயோக்கியப் பயலே! சொல்லுடா! சொல்லுடா!’’

அவன் எதற்கும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. அமைதியாக கற்சிலை போன்று நின்று கொண்டே இருந்தான்.

அவனுடன் வேலை பார்ப்பவர்களும் அந்த லாட்ஜில் தங்கி இருந்த பிறரும் அவனைக் குற்றவாளியாகக் கருதி ஒரு கொலைகாரனைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தனர்.

ஆனால் அவன் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. பழைய நினைவுகள் அவன் உள்ளத்துள் எழுந்தன. நினைவுகளை மனதிற்குள்ளேயே அவன் அசை போட்டான்.

‘அது ஒரு காலை நேரம் சுமார் பத்து மணி இருக்கும். அனாதையாகப் பத்துவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அழுது கொண்டே கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியிடம், ‘‘ ஐயா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு எனக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுத்து சாப்பாடு போடுங்க’’ என்று கேட்டபோது அவன் கேட்ட முறையைப் பார்த்து வியந்து போன முதலாளி, அவனைப் பார்த்து,

‘‘ஏன்டா எனக்கு யாருமே இல்லையா?’’ என்று கேட்க அவனோ,

‘‘இல்லைங்க . . .நான் ஒரு அனாதை’’ என்றான்.

‘‘சரி ஒம்பேரு என்னடா?’’

‘‘தெரியாதுங்க. . . . என்ன ஒரு பிச்சைக்காரர் எடுத்து வளத்தாரு. அவரும் பேரு வக்கல. அவரு இறந்த பிறகு எனக்கு யாருமில்லாமல் போச்சு. இந்த மாதிரி அலையிறேன்’’ என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டே கூறினான்.முதலாளி அவன் மீது இரக்கப்பட்டு சாப்பாடு போட்டு தன்னுடனேயே லாட்ஜில் தங்க வைத்துக் கொண்டார். இன்றுடன் இவன் வந்து இருபது வருஷமாகிறது. அவனுக்கு முதலாளியே தெய்வம் . . . எல்லாம். . . அவரும் அவனை வேலைக்காரனாகப் பார்க்காது தன் குடும்பத்தில் ஒருவனாகக் கருதியே நடத்தினார்.

ஆனால் அதில் தான் திடீரென்று மண் விழுந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு தங்குவதற்கு ரூம் வேண்டும் என்று வந்து கேட்ட பருத்த சரீரம் உடைய நபர் ஒரு நாள் வாடகை முன்னூறு ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டு 107-ஆம் எண்ணுள்ள அறையில் தங்கினார்.

அவர் தங்கிய அறையின் ரூம் பாயாக அவன் இருந்தான். முதலாளி அவனைப் பார்த்து, ‘டேய் தம்பி சாரு சொல்லறதைக் கேட்டுஅவருக்கு நல்லா உதவியா இருடா. நம்ம லாட்ஜ்ஜோட பெருமையை அவரு தெரிஞ்சுக்கனும்டா’’என்று கூறினார்.

அவனும் ‘‘சரிங்க’’ என்று கூறிவிட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு, ‘‘சார் வாங்க ரூமுக்குப் போகலாம்’’ என்று அப்பணக்காரரை அழைத்துச் சென்றான்.

அறையில் தங்க வந்த ஆசாமியைப் பார்த அவனுக்குச் சற்று மனதில் உறுத்தலாகவே இருந்தது. ‘‘ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பானோ...’’ என்று நினைத்தான்.

‘‘..சேச்சே . .அப்படி எல்லாம் இருக்காது . . .’’ என்று மனதிற்குள்ளாகக் கூறிக் கொண்டான்.

அறையில் தங்கியிருந்த மனிதர், ‘‘ஏம்பா இங்க தண்ணி ஒழுங்கா வருமா? சாப்பாடு எல்லாம் நல்ல இருக்குமா?’ என்றெல்லாம் விசாரித்தார்.

அவர் கேட்டதற்கெல்லாம் பதிலளித்தான் அவன்.ஒரு வாரம் முடியப் போகும் தருணத்தில் அறையில் தங்கி இருந்த அந்தப் பெரிய மனிதருக்கு வாடகையைக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது. எவ்வாறேனும் அட்வான்ஸையும் திரும்ப வாங்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு அறையைக் காலி செய்யும் நேரத்தில்,

‘‘ஐயைய்யோ என் செயினைக் காணோம். யாரோ எடுத்துக்கிட்டாங்க’’ என்று அலறிக் கொண்டே அறையிலிருந்து ஓடி வந்தவர் முதலாளியைப் பார்த்து,

‘‘ஏய்யா நீ எல்லாம் என்னய்யா லாட்ஜ் வச்சு நடத்தறே? என்னோட மூணு பவுனு செயினக் காணோம்யா. ஒங்காளுங்கதான் எடுத்திருப்பாங்க மரியாதையா கொடுக்கச் சொல்லு’’என்று கத்தினார்.

அதன் பிறகுதான் அனைத்தும் நடந்தேறின. தன் லாட்ஜிற்குக் கெட்டபெயர் ஏற்பட்டுவிடக் கூடாதென்று கருதிய முதலாளி,

‘‘டேய் உண்மையச் சொல்ல மாட்டே. நீ தான்டா எடுத்திருப்பாய். சரி. நீ இப்படிக் கேட்டா சொல்ல மாட்டே. போலீசுக்குப் போன் செஞ்சிட வேண்டியதுதான்.’’ என்று கத்திய கத்தலில் சுய நினைவுக்கு வந்தான் அவன்.

முதலாளி போலீசுக்குப் போன் செய்தவுடன் போலீசும் வந்தது. அங்கு வந்த சப்இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்துப் பல கேள்விகளைக் கேட்டார். அவன் எதற்கும் பதில் சொல்லவில்லை. பேயறைந்ததைப் போன்று நின்று கொண்டிருந்தான்.

சப்இன்ஸ்பெக்டர் அவனை நாலு அறை அறைந்து கேட்டார். அவன் அழாமல் பேசாமல் இருந்தான். சப்இன்ஸ்பெக்டர் அங்குள்ள அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து விசாரித்தார். பின்னர் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு 107-ஆவது அறையைச் சோதனையிட்டார்.

எங்கு தேடியும் அந்தச் செயினைக் காணவில்லை. தங்கி இருந்த நபரின் பெட்டியைத் தவிர அறை முழுவதும் சிறுஇடம்கூட விடாது தேடிப் பார்த்துவிட்டனர். ‘‘சார் எங்கே தேடியும் செயினைக் காணலை சார்’’ என்று சப்இன்ஸ்பெக்டரிடம் போலீஸ்காரர் ஒருவர் கூறினார்.சப்இன்ஸ்பெக்டர், ‘‘யோவ் அந்தாளு பொட்டியத் தெறந்து பாருங்கய்யா’’ என்றார். அதைக் கேட்ட அறையில் தங்கியிருந்த பெரிய மனிதரின் கைகால்கள் உதறலெடுத்தன.

அவர், ‘‘சார், அது எதுக்கு சார். அதுல எனது துணிமணிகள் தான் சார் இருக்குது. செயினை அதுல வைக்கல. குளிக்கும் போது அலமாரியில கழற்றி வச்சுட்டுப் போனேன். திரும்பி வந்து பார்த்தாக் காணல சார். அப்ப இதோ இந்தா நிக்கிறானே இந்தப் பயதான் சார் அறையைச் சுத்தம் பண்ணிக்கிட்டு இருந்தான். அவன் தான் சார் எடுத்திருக்கணும். அவனை இன்னும் நாலு தட்டுத் தட்டிச் கேளுங்க சார். உண்மை தெரிஞ்சிடும்.’’ என்று கூறினார்.

அவரைக் கோபமாகப் பார்த்த சப்இன்ஸ்பெக்டர், ‘‘ஸார் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நாங்க எல்லாத்தையும் சோதனையிட்டுப் பார்க்கிறோம் நீங்க பேசாமல் இருங்க’’ என்று கூறிவிட்டு அவரது பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்து ஒவ்வொன்றாக அதில் உள்ள துணிமணிகளை உதறிப் போட்டுப் பார்த்தார். அப்போது பெட்டியின் அடிப்பகுதியில் செயின் கிடந்தது.

அதை எடுத்துக் கையில் வைத்துக் கொண்ட சப் இஸ்பெக்டர் அறையில் தங்கியிருந்த அந்தப் பெரிய மனிதரைப் பார்த்து, ‘‘இது என்னங்க. ஏன் பொய் சொல்றீங்க. எதையும் நல்லாத் தேடிப் பார்த்துட்ச் சொல்லுங்க சார். ஒரு அறியாப் பையன் மேல அபாண்டமாப் பழி போடாதீங்க மனசாட்சியோட நடந்துக்குங்கோ. ஆளுமட்டும் பகட்டா இருந்தாப் பத்தாது. நடத்தையில நேர்மை இருக்கணும். நடத்தை குறைஞ்சதுனா அவங்க மனசாட்சியே அவங்கள உறுத்தும். உங்க பேச்சைக் கேட்டிருந்தன்னா நிரபராதியான இந்தப் பையன் தண்டிக்கப்பட்டிருப்பான். இனியாவது நாணயமாக இருங்க’’ என்று கோபத்துடன் கூறினார்.

அறையில் தங்கி இருந்த உருவத்தால் பெரியவரான அந்த நபர், ‘‘மன்னிச்சுருங்க சார் . . . நான் மறந்துட்டுப் பெட்டியில வச்சுப்புட்டேன். சாரி. . . சார். . .’’ என்று மனசாட்சி உறுத்த மன்னிப்புக் கோரினார்.

சப் இன்ஸ்பெக்டர் நேராக அந்தப் பையனிடம் வந்து, ‘‘ஸாரிப்பா’’ என்று அவன் கையைப் பிடித்துக் கூறிவிட்டு முதலாளியிடம் செயினைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.

அறையில் தங்கியிருந்த அந்த பெரியமனிதரும் வேகவேகமாக வந்து வாடகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு அறையைக் காலி செய்து விட்டுச் சென்றார்.

அங்கு நின்றிருந்த லாட்ஜின் சக ஊழியர்கள் அனைவரும் மனஉறுத்தலுடன் தலையைக் குனிந்து கொண்டே அவனைக் கடந்து சென்றனர்.அங்கு அவனும் முதலாளியும் மட்டுமே நின்றனர். முதலாளி அவனை நெருங்கி வந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘‘டேய் . . . .ஒன்னப் போயி தப்பா நெனச்சுட்டேன்டா . . . ஒன்னப் புரிஞ்சுக்கலடா . . .ஏதாவது பேசுடா . . . ஏன்டா மௌனமா இருந்து என்னக் கொல்ற . . . தப்பு என்னுதுதான்டா . . . இனிமே நீ என்னோட மகன்டா . . . நான் ஒன்ன சரியாத் தான்டா வளத்துருக்கேன். . . . நீ பேசாதிருந்தா என்னோட மனசாட்சி உறுத்தும்டா . . . மன்னிச்சுக்கடா’’என்று நாத் தழுதழுக்க அழுதார்.

அதுவரை அழாமலிருந்த அவன் முதலாளியின் அணைப்பிலிருந்து விடுபடாமலேயே குலுங்கிக் குலுங்கி அழுதான். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. அங்குள்ள அத்தனை பேரும் ஓங்கி ஓங்கி அடித்தபோதும் அழாதவன் ஏன் இப்பொழுது விம்மி விம்மி அழுகின்றான்.? காரணம் புரியவில்லை. முதலாளிக்கு மனம் சமாதானம் அடையவில்லை. மனம் உறுத்தியது. வழிந்தோடிய கண்ணீரை வலக்கையால் துடைத்தபடி அவர் அவன் முகத்தைப் பார்த்தார் முதலாளி.

அவனும் அவர் முகத்தைப் பார்த்தான்.

இருவருள்ளும் ஏதோ இனம் புரியாத உறவு ஒன்று முகிழ்த்ததை எண்ணி இருவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p151.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License