Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

தேவை ஒரு வேலை!

முனைவர் சி.சேதுராமன்


‘ஒரு நாய்க்கோ நரிக்கோ என்னோட பொண்ணைக் கட்டிக் கொடுத்தாலும் கொடுப்பனே தவிர, ஓம் மவனுக்கு மட்டும் அவளைக் கொடுப்பேன்னு கனவுலகூட நினைக்காதே அக்கா’ பழைய சோற்றினை அம்மா அவனுக்குப் போட்டுக் கொண்டிருந்தபோது வெளித்திண்ணையில் உட்கார்ந்திருந்த மாமா கோபத்துடன் சத்தம்போட்டுக் கத்திச் சொன்னார்.

மாமா கூறியதை அம்மா ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. எனக்குச் சோற்றினைப் போட்டுவிட்டு, மாமாவின் பக்கம் திரும்பாமல் அப்படியே மூலையில் போய் ஒரு பலகைக் கட்டையில் அமர்ந்து கொண்டாள். சேலை முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். அவளுக்குக் கோபமா, ஆற்றாமையா, அழுகையா என்று தெரியவில்லை. எதுவோ ஒன்று.

மாமா அவனைப் பற்றிக் கீழ்த்தரமாகவும் மிகவும் மோசமாகவும் பேசுகிறார். இதனைக் கேட்டு அவனுக்குக் கோபம் வரவில்லை. வருத்தமும் அவனுக்கு ஏற்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக, அவர்கள் முன்னாலேயே சோற்றினை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவனுக்கு இருபத்தைந்து வயதாகியும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு வேலையுமில்லை. அவன் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் அவனுக்கு எங்கிருந்து கோபம் வரும்?ரோஷம் வரும்? கோபப் பட்டால் முடியுமா? ‘‘இதில் எல்லாம் எந்தக் கௌரவத்தையும் பார்க்கக் கூடாது. கிடைக்கிற சோற்றினைக் கொட்டிக் கொண்டு, கிடைக்கிற மூலையில் பேசாம கட்டையைக் கிடத்தணும்… எதையும் பேசாதே… அப்பறம் இந்தச் சோறுகூட கிடைக்காமல் போய்விடும்…..’’என்று அவனது உள்மனது அவனை எச்சரித்தது.என்னோட தலையெழுத்து. இதுக்கெல்லாம் என் அம்மாவைச் சொல்ல வேண்டும். அவள்தான் இப்போது இந்தப் பிரச்சனையைக் கிளப்பி விட்டாள். என் மாமா நல்ல வசதி படைத்தவர். எங்கள் வீட்டிற்கு மூன்று வீடு தள்ளி அவரது வீடு. இது அவர் பிறந்த வீடு. அவரது அம்மாவின் வீடு என்பதால் எனது மாமா தினமும் அடிக்கடி இங்கு அவர் வந்துபோவார். அவனும், அம்மாவும் மட்டும் புழங்கும் இந்த வீட்டின் மூன்று அறைகளிலொன்றை இன்னும் அவர்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது புத்தகங்களெல்லாம் அதில்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. எனது மாமாவிற்கு அரசு நிறுவனம் ஒன்றில் வேலை. சனி, ஞாயிறுகளில் அவருக்கு விடுமுறை என்பதால் அவர் இங்கு வந்து, அவரது அறைக்குள் போய்க் கதவை மூடிக் கொண்டு படிப்பார். மணிக்கணக்காகப் படித்துக் கொண்டே இருப்பார். சமானியத்தில் வெளியில் வரமாட்டார். புத்தகத்தில் அப்படியே மூழ்கிப் போய்விடுவார்.

இதனால் அவரைச் சாப்பிடக் கூப்பிடுவதற்கு அவரது மகள் மீனாட்சி தான் அவரைத் தேடி வருவாள். அவளைப் பார்த்தால் பூசணிக்காய்க்குக் கால்கை முளைத்தாற்போன்று இருக்கும். மூன்று வீடுகள் தாண்டி அவள் நடந்து வந்ததில் அவளுக்குக் களைப்பு ஏற்பட்டு விடவே அவள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குவாள். அவளது பெரிய நாசி விடைத்து விடைத்து அடங்கும். அவனை விடவும் நான்கு வருடங்கள் இளையவள், குள்ளமாகவும் கறுப்பாகவும் இருப்பாள். அவனுக்கு மட்டும் வேலையென்ற ஒன்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எதற்கு இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்.

அம்மாவுக்கும் இவளை மருமகளாக்கிப் பார்க்கும் ஆசை இருந்திருக்காது. இன்னும் வேலை கிடைக்கவில்லையா என்ற மாமாவின் கேள்விக்கு, சீக்கிரம் ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்தால் வேலை கிடைக்குமென்று ஒரு ஜோஸியக்காரன் சொன்னதை அப்படியே மாமாவிடம் கூறினாள். எந்த ஒரு வேலையுமில்லாதவனுக்கு எவன் பெண் கொடுப்பான்? என்ற வினாவோடு ஆரம்பித்த மாமாவின் கோபம், கன்னாபின்னாவென்று வார்த்தையை வளர வைத்தது.

அவன் என்ன வேலைக்கு முயற்சிக்காமலா இருந்தான். முயற்சித்தான். ஆனால் அவனுக்குக் கிடைத்த வேலைகள் எல்லாமே சின்னச் சின்ன வேலைகள் தான்… சாப்பாட்டுக் கடைகளில் கணக்கெழுதுவதும், புடைவைக் கடைகளில் துணி மடிப்பதுவும், வீடு வீடாகச் சாமான்கள் எடுத்துப் போய் விற்பது போன்றவைதான். அவனால் அவற்றையெல்லாம் செய்ய முடியவில்லை.

தான் டிகிரி வரை படித்திருக்கிறேனென்ற கர்வம் சிறிது அவனது தலையில் எட்டிப் பார்க்கும். ஆனால் இக்காலத்தில் இந்த வேலைகளுக்கு டிகிரியை விடவும் அதிகமான தகுதியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மாமாவின் சிபாரிசில் அவனுக்குக் கிடைத்த வேலைகளில் ஒழுங்காக அவனால் நிலைத்து நிற்க முடியவில்லை என்ற கோபம் அவன் மேல் மாமாவுக்கு உள்ளூர உண்டு.

மாமா எழுந்து தன்னுடைய படிக்கும் அறைக்குப் போனார். அம்மாவிடம் இன்னுமொரு சின்ன வெங்காயம் கேட்டு வாங்கிக் கொண்டான். அம்மா வெங்காயத்தைத் தட்டில் வைத்துவிட்டு வாஞ்சையோடு அவனது தலையைத் தடவி விட்டுப் போனாள். காக்கைக்கும் தன் குஞ்சு… அல்லவா?... அவனது அப்பா இருந்தவரைக்கும் கூட இப்படித்தான். ஒரே பிள்ளையென்ற காரணத்தால் தனது முழுமையான அன்பையும் அவன் மேல் கொட்டித் தீர்ப்பார். அவனை எந்த ஒரு வார்த்தையும் கூறாது உருவிஉருவி வளர்த்தார்.தன் மகனை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல தொழில் கிடைத்து, அந்தப் பழைய வீட்டை உடைத்துக் கட்டிப் பெரிதாக்கி, மகனோடு சேர்ந்து கடைசி வரை வாழும் எண்ணம் அவருக்கிருந்ததாக அவனது அம்மா அவனிடம் சொல்லியிருக்கிறாள். அந்த ஆசையெல்லாம் அவர் குளிக்கச் சென்று மூழ்கிச் செத்த தாமரைக் குளத்தோடு மூழ்கிப் போயிற்று. இறுதியில் தண்ணீரில் ஊறிப் பருத்த அப்பாவின் உடலைத்தான் வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். வீடு முழுதும் ஊர் மக்களின் கூட்டம். ஊராட்கள் அனைவரும் அப்பாவைப் பற்றியும், என்னை, அம்மாவைப் பற்றியும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அப்பாவின் இழப்பைத் தாங்க முடியாத அம்மா ஒப்பாரி வைத்துக் கொண்டும் நெஞ்சில் அறைந்து கொண்டும் அழுதாள்.

இதையெல்லாம் பார்த்த அவனுக்கோ அழுகை வரவில்லை. இழவுக்கு வந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இவனது தோளில் தட்டி அழுடா அழுடா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். யார் சொல்லியும் அவனுக்கு அழுகை வரவில்லை. அவன் அனைத்தையும் புரிந்தும் புரியாதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லாச் சடங்குகளும் முடிந்தது. உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். சில நாட்களில் அப்பா கடன் வாங்கியிருந்தாரெனச் சொல்லிக் கொண்டு வெளியூர்களிலிருந்து ஆட்கள் வீட்டிற்கு வரத் தொடங்கி விட்டார்கள். அம்மாவின் நகைகளெல்லாம் விற்கப்பட்டன. அந்த நகைகளையெல்லாம் மாமாவே வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். ஏனெனில் அத்தனையும் சொக்கத்தங்கம். நகைகளை விற்றுக் கிடைத்த பணத்தினை வைத்துக் கடன்களைச் சமாளித்தாயிற்று.

அப்பாவின் பென்ஷன் பணத்தோடு மாதாமாதம் உணவுக்குக் கஷ்டமின்றி எப்படியோ வாழ்க்கை உருளத் தொடங்கியது. எப்போதாவது ஏதாவது விஷேசங்களுக்குப் போகும்போது மட்டும் அம்மா, என் அத்தையிடம் போய்க் கழுத்துச் சங்கிலி, தோடு போன்றவற்றை இரவலாக வாங்கி அணிந்து கொண்டு போவாள். விஷேச வீடுகளின் மகிழ்ச்சியையும் மீறி, தனது சொந்த நகைகளையே இரவலாகக் கேட்டு வாங்கி அணிய நேர்ந்த அவலம் தந்த துயரம் அம்மாவின் முகத்தில் இழையோடும்.ம்….ம்..ம்……இப்பொழுது அம்மாவிற்கு இதுவெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. அவள் முன் இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எனக்கொரு வேலை. அடுத்தது எனது திருமணம். தெரிந்தோ தெரியாமலோ இரண்டுக்கும் ஜோஸியக்காரன் ஒரு முடிச்சினைப் போட்டு விட்டான். இனி நான் மட்டும் தனியாக வெட்டித்தனமாக இருந்தது போதும். சோடி சேர்த்துக் கொண்டு வெட்டியாக இரு என்று ஜோஸியக்காரன் சொல்லி விட்டான். அம்மாவுக்கு அந்தச் ஜோஸியக்காரன் சொன்னது வேத வாக்கியமாகி விட்டது.

‘அந்த கறுப்பி மீனாட்சி இல்லையென்றால் என்ன? அவளுக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். நான் பார்க்கிறேண்டா ராஜா. ஒனக்கு ஒரு அழகான ராசகுமாரியை’ என்றாள் அம்மா என் காதுகளில் ரகசியமாக. அவன் மௌனமாக இருந்தான். அவனுக்குச் சிரிப்பதா? அழுவதா என்று தெரியவில்லை. வேலையற்ற வெட்டிப் பயலுக்கு எவன் தன் பொண்ணைக் கட்டிக் கொடுப்பான். அம்மாவின் பேச்சு அவனுக்கு வியப்பாக இருந்தது. அவன் அதனை வெளிக்காட்டாது மௌனமாக இருந்தான்.

அவனது மௌனத்தை, வருத்தமாக எடுத்துக் கொண்டாளோ என்னமோ…’ நீ கவலப்படாதே ராசா.. அவளொண்ணும் அடக்கமானவள் இல்லை… ராங்கிக்காரி… அடங்காப் பிடாரி… நான் உனக்கு சொக்கத்தங்கம் போல ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைக்கிறேன்’ என்றாள் மீண்டும்.

அம்மாவின் பேச்சில் எப்பொழுதுமே ராசாக்களும், ராசகுமாரிகளும், பேய்களும் வருவார்கள். சிறு வயதில் அவனுக்குச் சொன்ன கதைகளிலும்தான். சின்ன வயதிலெல்லாம் முன்னிரவுகளில் அப்பா வரும் வரையில், வாசல் திண்ணையில் அம்மா கால் நீட்டி அமர்ந்திருக்க, அவன் அம்மா மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டிருப்பான். அந்தக் கதைகளில் இப்படித்தான். ஒரு ராசகுமாரன் காட்டுக்குப் போனானாம்... அங்கொரு ராசகுமாரி சிலையாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தானாம்... என்று கதைகள் தொடரும். இவன் பாதியில் தூங்கி விடுவான். மறுநாள் வேறொரு கதை. முந்தைய நாள் கதையை எதிலிருந்து கேட்க மறந்தோமென அவனுக்கு நினைவிருக்காது.அவனுக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஞாபகமறதி வந்து விடுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படித்தான். யாரோ ஒரு மந்திரி, நகராட்சிக் கட்டிடத்துக்கு வந்திருப்பதாகவும், அவரைப் போய் சந்திக்கும்படியும் மாமா கூறியிருந்ததை மறந்து விட்டான். அன்று இரவு மாமா வீட்டுக்கு வந்து அவனைச் சத்தம் போட்டார். இவன் ‘ போயிருந்தேனே !’ என்றான். ‘பொய் சொல்ல வேற ஆரம்பிச்சிட்டியா? நான் இன்னைக்கு முழுக்க முழுக்க அங்கதான இருந்தேன்’ என்று இன்னும் கோபமாகக் கத்தத் தொடங்கினார்.

அவனுக்குப் பொய் கூறிப் பழக்கமில்லை. இப்படித்தான் எப்பொழுதாவது ஒன்றிரண்டைக் கூறி மாட்டிக் கொள்வான். இப்படி பொய் கூறத் தெரியாததால்தான் வீட்டுக்கு வீடு பொருட்கள் விற்கப் போய் பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அப்பா இருந்தவரைக்கும் இப்படியில்லை. அப்பாவுக்கும் பொய் கூறத் தெரியாது. அவர் மாமாவைப் போல இப்படி கோபப்படுபவரல்ல. மிக அமைதியானவர். எப்பொழுதாவது அரிதாக வீட்டிலிருப்பார். அப்பொழுதெல்லாம் அவனோடு விளையாடுவதில்தான் அப்பாவின் பொழுது கழியும். அம்மாவும் சிரித்தபடியே விளையாட்டில் சேர்ந்து கொள்வாள். அம்மாவின் அந்தச் சிரிப்பெல்லாம் அப்பாவின் இறப்போடு போயிற்று. அப்பா செத்ததும் அப்பாவின் சைக்கிளை அவன் எடுத்துக் கொண்டான். அந்தச் சைக்கிளுக்கு ஆயுள் அதிகம். பல வருடங்களாக அப்பாவுக்காக உழைத்தது. இப்பொழுது மகனுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறது. அதில்தான் அவன் வேலை தேடிப் போவான். வெயிலில் அலைவான். முன்பு அவனது சிறுவயதில் அப்பா அவனை சைக்கிளின் முன்னுள்ள பார் கம்பியில் அமர்த்தி, ஊர் சுற்றிக் காட்டியதெல்லாம் அவனுக்கு நினைவிருக்கிறது. அவனது ஊருக்கு ரயில் வரவில்லை. எப்பொழுதோ தான் ரயிலில் பயணித்த கதையொன்றை அம்மா சொல்ல, அவன் அதைப் பிடித்துக் கொண்டான். ரயில் பற்றி அப்பாவிடம் தோண்டித் துருவிக் கேட்கத் தொடங்கினான். இவனுக்குச் சொல்லி மாளாது என்று, அப்பா அவனை சைக்கிள் பார் கம்பியில் தலையணை வைத்து, உட்கார வைத்து எத்தனையோ கிலோ மீட்டர் தூரம் சைக்கிளை மிதித்துக் கூட்டிப் போய் ஏதோ ஒரு ஊரில் ஒரு முறை ரயிலைக் காட்டினார். ரயிலைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடமும், அம்மாச்சியிடமும் கதை கதையாக ரயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அம்மாச்சிக்கும் அவன் மேல் அன்பு அதிகம். தலைமுடியெல்லாம் நரைத்துப் போய் பஞ்சுப் பொதியை தலையில் ஒட்ட வைத்ததுபோல் வெள்ளை வெள்ளையாக இருக்கும். அம்மாச்சிக்கு அவனைப் போலவே நல்ல சிவப்பு நிறம். நன்றாக வயதாகிப் போனபிறகு தலை தன்னிச்சையாக இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே இருக்கும். எப்போதாவது அம்மா அவனை அடிக்கத் துரத்தினால் அவன் ஓடி வந்து அம்மாச்சியின் கழுத்தினைக் கட்டிக் கொள்வான். அம்மா வைதுகொண்டே விலகிப் போவாள். இத்தனைக்கும் அம்மாச்சிக்குக் கண் பார்வை குறைவு. அந்த வீட்டில் முதல் இறப்பாக அம்மாச்சியைத்தான் அவன் பார்த்தான். அப்பாவின் இறப்பிற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அம்மாச்சி காலமானாள். அதுவும் அம்மாச்சி படுக்கையிலேயே இறந்து போயிருந்தாள். அவனுக்கு அப்போது ஏழு வயது. என்ன நடக்கிறதெனத் தெரியாமல் அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடியும், அப்பாவின் பின்னால் ஓடியபடியும் இருந்தான். அந்த ஓட்டம் இன்று வரை ஓயவில்லை.

ஊரில் ‘‘திருப்பதி நாய்க்கு இருப்பிடமில்லை’’ என்று கூறுவார்கள். அதுபோலத்தான் அவன் ஓட்டமும். எங்காவது வேலையொன்று கிடைக்காதா என்றுதான் அவனும் ஓடிக் கொண்டிருந்தான். கூடப் படித்தவர்கள், அப்பாவுக்குத் தெரிந்தவர்களெனப் பலரைத் தேடிப் போய் சலிக்காது வேலை தேடிக் கொண்டிருந்தான்.

அவனுடன் ஒன்றாகப் படித்தவனொருவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் பற்றி ஒரு நாள் அவன் கேள்விப்பட்டான். பொது நூலகத்திலிருந்து அந்த நண்பன் எடுத்துவந்த ஒரு பழைய புத்தகமொன்றுக்குள் ஒரு பழங்கால வெளிநாட்டுப் பணத்தாளொன்று இருந்ததாம். அதனை எடுத்துக் கொண்டு போய் யாருக்கோ விற்றதில் நிறையப் பணம் கிடைத்ததாம். அந்த நண்பன் கூறியது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால், அதைக் கேள்விப்பட்டதிலிருந்து அவனுக்கு அதனைப் பற்றியே நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து மாமாவின் அறைக்குள் நுழைந்து பழைய புத்தகங்களையெல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்த்துத் தேடத் தொடங்கினான். தேடிக் கொண்டிருந்தபோது ஒரு தடிமனான புத்தகமொன்றுக்குள்ளிருந்து மாமாவுடன் ஒரு பெண்மணி நெருங்கி இருக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படமொன்று கீழே விழுந்தது. அந்தப் பெண், நிச்சயமாக அவனது அத்தையல்ல. தலையை அழகாக வகிடெடுத்து, இரு புறமும் வழிக்கச் சீவி, பூவும், பொட்டும் வைத்து, மாமாவின் அருகிலிருந்து அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

மாமா அந்தப் பெண்ணின் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு சிரித்தபடி இளமையாகவும் அழகாகவும் இருந்தார். இந்தப் புகைப்படத்தை ஏதோ ஒரு ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து அதே புத்தகத்துக்குள் சில காதல் கடிதங்களும், ஒரு கல்யாணப் பத்திரிகையும் செருகப்பட்டிருந்ததைக் கண்டு அதனை எடுத்துப் பார்த்தான். பிறகு அவற்றை மீண்டும் புத்தகத்துக்குள் வைத்து, அப் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்தான். அவனுக்கு மாமாவை நினைக்க நினைக்க மிகவும் பாவமாக இருந்தது. மாமாவின் முறிந்து போன அந்தக் காதலையும் அவரின் இதய வலியையும் அவனால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனால் அன்றிலிருந்து மாமா திட்டும் போதெல்லாம் ஏனோ அவனுக்குக் கோபம் வருவதில்லை.வெளியே மழை தூறத் தொடங்கி விட்டிருந்தது. திண்ணையில் அமர்ந்து கொண்டு மழையை இரசித்துப் பார்க்கத் தொடங்கினான். பனித்தூவல் போன்ற மழை. கொஞ்சம் கொஞ்சமாக நிலம் ஈரம் கசிந்து மண் வாசம் கிளப்பத் தொடங்கியது. அம்மாவும் உள்ளிருந்து வந்து, வாசல் தூணில் சாய்ந்துகொண்டு மழையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் பிணத்தை எரிக்கக் கொண்டுபோன போதும் இப்படித்தான் மழை பெய்துகொண்டிருந்தது. அவன் முற்றத்தில் இறங்கி சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா அழுதழுது சடலம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தாளே ஒழிய, முன்பு போல ‘மழையில் நனையாதே’ எனக்கூறி அவனை அதட்டவில்லை. அவனும் அந் நாளுக்குப் பிறகு மழையில் விளையாட இறங்கவில்லை. ஏனோ தடுக்க யாருமற்ற விளையாட்டு அவனைச் சலிப்படையச் செய்திருக்க வேண்டும்.

அம்மா அவன் பக்கம் திரும்பிப் பார்த்து திடீரென்று, ‘மாஸ்டரைப் போய்ப் பார்த்தியா?’ என்றாள். அவர், அப்பாவின் நண்பர். நகரத்தில் நல்ல நிலையிலிருக்கிறார். போய்ப் பார்த்து விசாரித்தால் அவனுக்கு வேலை ஏதும் கிடைக்காதா என்ற ஏக்கம் அவளுக்கு. அவன் ‘பார்த்தேன்’ என்றான். பிறகு கொஞ்ச நேரம் அப்படியே மழையையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மாவிடம் எதுவும் முழுமையாக அவன் சொல்லவில்லை. அவனது அம்மா வீட்டினுள்ளே போகத் திரும்பிய கணத்தில், அப்பாவின் நண்பர் வேலை செய்யும் துறைமுகத்தில் ஒரு வேலை காலியாக இருப்பதாக அவர் கூறியதைக் கூறினான். அதனைக் கேட்ட அம்மா உள்ளூர மகிழ்ந்தாள். வீட்டினுள் போகாது மீண்டும் வந்து திண்ணையின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள்.

அவர் அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவதற்கு ஒரு தொகைப் பணம் கேட்டதையும் அவன் அம்மாவிடம் கூறினான். அம்மா சற்று யோசனையுடன் மழையைப் பார்த்துக் கொண்டே ‘தம்பியிடம்தான் கேட்டுப் பார்க்கணும்’ என்றாள். பிறகு அவனைத் திரும்பிப் பார்த்து ‘அவனிடம் இருக்கும். தருவானாங்கறது தெரியாது… ஆனா அவன் மகளுக்குச் சேர்த்து வருகிறான். அவளுக்கு இந்த வருஷத்துக்குள்ள கல்யாணத்தை முடித்துவிட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான்’ என்றாள். அவனுக்குள் ஏதோ ஒரு ஆசுவாசம், ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி உள்ளுக்குள் பரவத் தொடங்கியது. வெளியே மழை வலுக்கத்தொடங்கி விட்டிருந்தது. அவன் மனதில் எந்தவிதமான எண்ணங்களும் இன்றி மழையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் நம்பிக்கை விதைகள் முளைத்து எட்டிப் பார்த்தன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p155.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License