Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அவசர உதவி!

முனைவர் சி.சேதுராமன்


என்ன செய்வது? யாரிடம் கேட்பது? குழப்பமாக இருந்தது சேகருக்கு. அனைத்துப் பாதைகளும் அடைபட்டது போல் காணப்பட்டது அவனுக்கு. நடைபாதையில் என்ன செய்வதென்றே தெரியாமல் அவனையறியாமல் அவன் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கூடத் துடைக்காமல் வழியவிட்டபடி நின்றிருந்தான் சேகர்.

எப்படி செல்வாக்கா அப்பா வாழ்ந்தார்? எத்தனை பேருக்கு உதவி செஞ்சிருப்பார்? ஆனா இன்னைக்கு அவரோட குடும்பத்துக்கு, அவரோட மனைவிக்கு உதவுவதற்கு ஆளில்லாமல் போச்சே! உதவி செய்யறவங்களோட வாழ்க்கையே இப்படித்தான் போயிடுமோ? எப்படியெல்லாம் அப்பா வாழ்ந்தார். சிதம்பரம் என்று சொன்னாலேயே கையெடுத்துக் கும்பிடுவார்களே! அவருடைய உதவியாலே எத்தனை குடும்பங்கள் பொழைக்குது? அவரோட மகனான நான்… நினைக்கும்போதே சேகருக்கு கண்ணீர் பெருகியது.

சேகருடன் பிறந்தவன் அவனது அண்ணன் மூர்த்தி. அப்பா உயிருடன் இருந்தவரை இருவரையும்தான் நன்கு படிக்க வைத்தார். திடீரென்று அவர் இறந்தவுடன் குடும்பத்தின் செல்வமும் செல்வாக்கும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்தது.

சேகர் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தபாடில்லை. ஆனால் அவன் அண்ணன் பெரிய கம்பெனியில் மேலாளர். கார் பங்களா… இத்தியாதிகளுடன் வசதியாக இருந்தான். சேகரோ ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தான். அப்பா இறந்த கையுடன் தனியாகச் சென்று விட்டான் அண்ணன்.

அம்மா இவனுடன் இருந்தாள். அண்ணன் வீட்டிற்கு எப்போதாவது குடும்பத்துடன் வருவான். பின்னர் அதுவும் சில நாளில் நின்று விட்டது. அம்மாவின் நினைவு வந்தால் வருவான். சேகரும் அதுபற்றி அண்ணனிடம் எதுவும் கேட்பதில்லை. தனக்கு வரும் குறைந்த சம்பளத்தில் தொட்டுக்கோ…. தொடைச்சிக்கோ…. என்று குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருந்தான் சேகர்.இந்தச் சூழலில்தான் சேகரின் அம்மா கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டு வலியில் துடிதுடித்தாள். ‘வாங்கற சம்பளத்திலே காலத்தை ஓட்டறதே கஷ்டம். இப்போ என்ன செய்யறது? எப்படி இப்படி ஒரு நிலை தனக்கு வந்தது?’ யதேச்சையாகக் கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டு, வலி தாங்காமல் முனகிய அம்மாவின் நிலையைக் கண்டு பதறிப் போய் அம்மாவைக் கைத்தாங்கலாகத் தூக்கி எழுப்பி, நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு மோட்டுவலையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எத்தனை நேரம்தான் உட்கார்ந்திருந்தானோ அவனுக்கே தெரியாது. அம்மாவின் முனகல் ஒலி அவனை நனவுலகிற்கு அழைத்து வந்தது. பின்னர்தான் அம்மாவை டாக்டரிடம் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற நினைவு அவனுக்கு வந்தது. எப்படி ஆனாலும் சரி. தன் அண்ணனிடம் செய்தியைச் சொல்லி உதவி கேட்கலாம் என்று கருதி அவருக்குப் போன்செய்து அவரின் பதிலுக்காகக் காத்திருந்தான் சேகர். ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் ரிஸிவரை எடுக்கவில்லை. வெகுநேரம் சென்ற பின்னர் ரிஸிவர் எடுக்கப்பட்டது. ‘ஹலோ’ என்றனர் எதிர்முனையில். அண்ணாதான் பேசுகிறார் என்று உறுதி செய்துகொண்டு, ‘‘தழுதழுத்த குரலில், ‘‘அண்ணா நான் தம்பி சேகர் பேசறேன். அம்மா கீழே விழுந்துட்டாங்கண்ணா… அவங்கள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்… எனக்கிட்ட இப்ப பணமில்லை. என்ன செய்யறதுன்னும் தெரியல… அதனால நீங்கதான்..இப்ப ஒதவணும்…’’ என்று சொல்லி முடித்தான்.

எதிர்முனையில் சில வினாடிகள் மௌனம், பின்னர், “ஓ இது வேறயா? சரி சரி அம்மாவை ராமகிருஷ்ணன் டாக்டரிடம் அழைச்சிக்கிட்டுப் போ. அவரிடம் நான் சொன்னதாகச் சொல். அவர் வைத்தியம் செய்வார். அவருக்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன். எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இப்போதைக்கு என்னால வரமுடியாது. பெறகு வாரேன்” என்று பதில் வந்தது.அண்ணனின் பதிலைக் கேட்டவுடன் சேகருக்கு மனதில் சொல்லொணாத சுமை ஏறியது. அண்ணன் எப்படி கொஞ்சம் கூடப் பதறாமல் இருக்க முடிகிறது? என்னைப் பெற்றதைப் போன்றுதானே அவனையும் பெற்று வளர்த்தாள் அம்மா? அம்மாங்கற பாசம் கூடவா இல்லாமல் போச்சு அண்ணனுக்கு? ச்சே…பணமும் பதவியும் வந்துட்டா சொந்தத் தாயிகூடக் கேவலமாப் போயிருவாளா? என்ன மனிதர் இவர்? என்று யோசித்துக்கொண்டே அதனை வெளிக்காட்டாது,

“சரி அண்ணா, நான் கூட்டிப் போகிறேன்” என்று போனை வைத்துவிட்டு, மிகப் பழையதான தன்னுடைய ஸ்கூட்டரில் அம்மாவை உட்கார வைத்து டாக்டரிடம் அழைத்து வந்து காட்டியதும் அவர் அம்மாவைப் பார்த்துவிட்டு, ‘‘தம்பி இதுக்கு ஆப்ரேசன் செய்யணும். கொஞ்சம் செலவாகுமே’’ என்றார். டாக்டர் கூறியதைக் கேட்டபோது பகீர் என்றிருந்தது சேகருக்கு.

சற்று யோசித்த சேகரைப் பார்த்த டாக்டர், “சரி..சரி.. யோசிக்காதிங்க..தம்பி ஒங்க அண்ணா மூர்த்தி எல்லாம் போன்ல சொல்லி இருக்கார். இன்னிக்கே அட்மிட் பண்ணிடுங்க. ஆப்ரேசஸன் செஞ்சிடலாம்” என்றார் டாக்டர். கண்கலங்கிய சேகரைப் பார்த்து, ‘தம்பி இது பெரிய அளவுல இல்ல. சின்ன ஆப்ரசேன்தான். இதுக்குப் போயிக் கலங்காதீங்க. ரெண்டு மூணுநாளு இருந்தா போதும். அப்பறம் வீட்டுக்குப் போயிடலாம்’ என்று தைரியம் கொடுத்தார் டாக்டர்.

சேகர் சரியென்று ஒப்புக்கொண்டு ஆஸ்பத்திரியில் அம்மாவை அட்மிட் செய்தான். ஆயிற்று… ஆப்ரேசன் முடிந்தது. ஆனால் அண்ணன் மட்டும் வரவேயில்லை. அம்மா அடிக்கொருதரம் கேட்டுக்கொண்டே இருந்தாள். ‘‘ஏப்பா சேகரு ஒங்க அண்ண வர்ரம்மிண்ணு சொன்னாதாச் சொன்னியே இன்னும் வரலையா?’’ என்று நெகிழ்ச்சியுடன் கேட்டாள்.

சேகர் அம்மாவை விரக்தியடையச் செய்ய மனமில்லாது, ‘அம்மா அண்ணனுக்கு ஏதோ அவசரமான வேலையாம். பணமெல்லாம் கட்டிட்டாராம் ஆஸ்பத்திரிக்கு. ஒன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகும்போது வர்ரேன்னு சொல்லிட்டாரு’’ என்று மழுப்பலான பதிலொன்றை உதிர்த்தான்.ஆஸ்பத்திரியிலேயே மூன்று நாட்கள் விரைந்து ஒடிப்போயின. அன்று அம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். பணம் கட்டும் இடத்தில், ‘‘சார் மொத்தம் பத்தாயிரம் ரூபாய் கட்டணும். ஒடனே பணத்தைக் கட்டுங்க. ஒங்க அம்மாவை வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போகலாம்” என்று கூறிவிட்டனர்.

இதனைக் கேட்ட சேகருக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்னது பணம் கட்டணுமா? இதென்ன வகைமோசமா இருக்கு? அண்ணன் தான் பணம் கட்டிட்டாரே? அப்பறம் நான்வேற பணம் கட்டணுமா? கோபத்துடன், கௌண்டரில் இருந்தவரைப் பார்த்து, ‘‘ஏன் சார் எங்க அண்ணன்தான் பணத்தைக் கட்றதா டாக்டரிடம் சொல்லிட்டாரே! பணமெல்லாம் கட்டிருப்பார் சார். சரியா கணக்கைப் பார்க்காம பணம் கட்டுங்கண்ணு சொல்றீங்க’’ என்று கேட்டான்.

இதைக் கேட்ட கேசியர், ‘‘சார் ஏதோ பழகினவருன்னு பார்க்கறேன். புரிஞ்சி பேசுங்க. ஒங்க அண்ணன் பணம் கட்டியிருந்தா நாங்க ஏன் ஒங்ககிட்ட பணத்தைக் கேக்கப் போறோம்? தேவையில்லாமப் பேசாதீங்க.’’ என்று கூறிவிட்டு, டாக்டரிடம் இண்டர்காமில் பேசினார். டாக்டர் என்ன சொன்னாரோ தெரியவில்லை, “இங்க பாருங்க சார். சும்மா நிக்கறதுலே ஒரு பிரயோசனமுமில்லே. ஒடனே பணத்தைக் கட்டுங்க. அப்போதான் ஒங்க அம்மாவை டிஜ்சார்ஜ் செஞ்சு அனுப்ப முடியும்” என்றார்.

அடிவயிற்றில் ஓங்கி யாரோ கத்தியால் குத்தியதைப் போன்று இருந்தது சேகருக்கு. அண்ணனா இப்படிச் செஞ்சார். …ச்சே நெனச்சுக்கூடப் பார்க்க முடியலியே! அடப்பாவி நம்ப வச்சுக் கழுத்தறுத்துட்டாரே! முடியலேன்னா மொதல்லேயே சொல்லியிருக்கலாமே! சேகருக்கு நெஞ்சடைப்பது போன்று இருந்தது.மீண்டும் அம்மாவின் அறைக்குள் வந்து அமர்ந்தான் சேகர். அவனைப் பார்த்த அவனது அம்மா பலகீனமாக, “எப்போப்பா வீட்டுக்கு போகணும்? ஆஸ்பத்திரிக்கு எவ்ளோடா பணம் கட்டணும்?” என்றாள் கவலையுடன்.

“அம்மா, நீ பேசாம சும்மா இரு. அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ எதுக்கும் கவலைப்படாதே” என்று கூறிவிட்டு, எதற்கும் அண்ணனுக்குப் போன்செய்து பார்ப்போம் என்று கருதி தன் அண்ணனுக்குப் போன் செய்தான். மணி அடித்தது. “ஹலோ யாரு” என்று அண்ணனின் குரல் கேட்டது. “அண்ணா” என்று ஆரம்பித்தான் சேகர்.

தொலைபேசித் தொடர்பு திடீரென்று அறுந்து போனது. அறுந்தது தொலைபேசி இணைப்பு மட்டுமல்ல….உறவு என்ற கயிறும்தான் என்று புரிந்து கொண்டான் சேகர். ஏன் இவ்வாறு அண்ணன் தொடர்பைத் துண்டித்தார். அதுவும் அண்ணன் தொலைபேசியின் ரிசீவரை வெறுப்பாகக் கன்னத்தில் அறைவதைப் போன்று வைத்தாரே?

உறவு என்பது இவ்வளவுதானா? பெற்ற தாயைப் பார்க்கக்கூட வரவில்லையே! பணம் தான் தரவில்லை. வந்து ஒரு எட்டுப் பார்க்கவாவது செய்யக் கூடாது? பெற்றவள் என்ன செய்தாள்? உடன்பிறந்தானாகிய தான் என்ன செய்தோம்? ஏனிந்த வெறுப்பு? இவ்வாறு பலவற்றை நினைத்த சேகரின் கண்கள் கண்ணீர்க் குளமாயின. அம்மாவிற்குத் தெரியாமல் கண்களைத் துடைத்து மறைத்துவிட்டு, டாக்டரைப் பார்த்து கேட்போம் என்று கருதி வேறு வழியின்றி தன்னைச் சமாளித்துக் கொண்டு டாக்டர் ராமகிருஷ்ணனைப் பார்க்கச் சென்றான் சேகர்.

தனது அறைக்குள் நுழைந்த சேகரைப் பார்த்த டாக்டர், அவனிடம் எப்போதும் போல் முகம் கொடுத்துப் பேசவில்லை. அற்பப் புழுவைப் பார்ப்பது போன்று அவனைப் பார்த்தார். டாக்டரிடம், ‘‘சார் இன்னிக்கு அம்மாவை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகணும்….” என்று மெதுவாக மென்று முழுங்கிக் கொண்டே தயக்கத்துடன் கேட்டான் சேகர். உடனே டாக்டர், எங்கோ வெறித்துப் பார்த்தவாறு, “இங்க என்ன நாங்க தர்ம சத்திரமா நடத்தறோம்… ஒங்க அண்ணன் சொன்னபடி செய்யலையே! ஒங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. ஒங்க அண்ணன் இதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்குக் கட்டவேண்டிய பணத்தைக் கட்டலை. நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. என்னபாடு பட்டாவது நீங்க பணத்தைக் கட்டிடுங்க. பணத்தைக் கட்டிட்டு ஒங்க அம்மாவை வீட்டுக்கு அழைச்சிகிட்டுப் போங்க’’ என்றார்.மௌனமாக கண்ணீர் வழிந்தோட டாக்டரிடம் எதுவும் பேசாது விடைபெற்றுக் கொண்டு ஆஸ்பத்திரியைவிட்டு வெளியே வந்தான். ம்…ம்…பெற்ற பிள்ளைக்கே அக்கறை இல்லை. யாரோ ஒரு டாக்டரிடம் அக்கறையையும், ஆதரவையும் எதிர்பார்த்தால் முடியுமா? அல்லது நடக்குமா? ‘வினைவிளை காலம்’ என்பார்களே அது இதுதானா? அவன் அண்ணனா அல்லது நம்பிக்கைத் துரோகியா? அவனது உள்ளம் குமுறியது. பகைவன்கூட சொல்லிவிட்டுத் துரோகம் செய்வான். ஆனால் உடன்பிறந்த இவன்…. மனம் பலவாறு அலைபாய்ந்தது.

நடைபாதையில் நின்று சிந்தித்துக் கலங்கிகொண்டிருந்த சேகருக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. பேசாம தன்னோட ஸ்கூட்டரை அடகு வைத்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு போகலாம் என்று தோன்றியது, அம்மா வண்டி எங்கடான்னு கேக்குமே? எங்க போச்சுன்னு என்ன பதில் சொல்றது? அவனுக்குப் பொய் சொல்லிப் பழக்கமும் இல்லே. அது மட்டுமில்லே. அவனுடன் சேர்ந்து அம்மாவும் வருத்தப்படுவாளே! என்று நினைத்தவனுக்கு அவனறியாமல் கண்ணீர் வழிந்தது.

வேற வழியே இல்லே. அடகுக் கடைக்குச் சென்று ஸ்கூட்டரை அடகு வைக்கும் எண்ணத்துடன் கடையின் முன்னால் வண்டியை நிறுத்தினான். அடகுக் கடைக்காரரை அழைத்து வந்து தன் வண்டியைக் காட்டினான் சேகர். வண்டியைப் பார்க்க வந்த அடகுக்கடைக்காரர் வண்டியைப் பார்க்காமல் சேகரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சேகரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, “சாப் நீங்கோ சிதம்பரம் சாரோட சின்னப்பையன்தானே?” என்றார்.

“ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்றான் சேகர். “அப்பிடியே உங்க அப்பாவை மாதிரியே இருக்கீங்கோ. மறுபடியும் உங்க அப்பாவைப் பாக்கறாப் போலே இருக்குது. நம்பல்க்கு மனசு சந்தோஷமா இருக்குது. உங்க அப்பா எப்படி வாழ்ந்தவரு… எத்தினி பேருக்கு உதவி பண்ணியிருக்காரு… அதெல்லாம் மறக்கலே. அவரு நல்ல மனுஷன். நான் இப்போ நல்ல நெலமையிலே இருக்கறதுக்கு உங்க அப்பாதான் காரணம். நான் கஷ்டப்பட்டபோது அவருதான் என்க்கு பணம் சாப்பாடு எல்லாம் கொடுத்து உதவி செஞ்சார்….ஹும்… அதெல்லாம் பழைய கதை. நிம்பிள்க்கு நானு பணம் தரேன் சாப். உங்க வண்டிய நீங்களே எடுத்துப் போங்கோ. எப்ப வேணுமின்னாலும் நிதானமா பணம் குடுங்கோ” என்றார் வட்டிக் கடைக்காரர்.

சேகருக்கு ஆச்சரியம். திக்குமுக்காடிப் போனான் அவன். எப்பவோ நம்ம அப்பா செஞ்ச உதவி இப்படி தக்க சமயத்தில வந்து நமக்குக் கிடைக்கின்றதே என்று நினைத்து நினைத்து வியப்படைந்து கொண்டிருந்தவனைப் பார்த்த வட்டிக்கடைக்கார சேட், ‘‘சாப் நீங்கோ எனக்கு ஒரு சத்தியம் செய்யணும்… செய்றீங்களா?’’ என்று கேட்டார்.

அதனைக் கேட்ட சேகருக்கு என்ன கேட்கப்போறாரோ என்றுதயங்கித் தயங்கி, ‘சரிங்க செய்யறேன்’ என்றான்.

அவனைப் பார்த்த சேட், ‘அரே சாப் இனிமே எந்தக் காரணத்துக்காகவும் நீங்க அடகுக் கடைக்கு வரக்கூடாது” என்றார். சேகருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது குடும்பம் அவ்வளவு செல்வாக்காக இருந்தது அனைவருக்கும் தெரியும். அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் சேட் அவனிடம் இவ்வாறு சத்தியம் செய்யும்படி கேட்கிறார்.

நெஞ்சம் நெகிழ்ந்துபோன சேகர் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, “இல்லே சேட்.. இல்லே இல்லே தப்புத்….தப்பு சேட் அண்ணா. ஆமா நீங்கதான் என்னோட உண்மையான அண்ணன். சத்தியமா இனிமே அடகுக் கடைக்கு வரவே மாட்டேன். இந்த ஒதவிய என்றைக்கும் மறக்க மாட்டேன்…சேட் அண்ணா… ” என்று கைகுவித்து வணங்கினான் சேகர். சேட் கடையிலிருந்து அவனுக்குத் தேவையான பணத்தை எடுத்துவந்து கொடுத்து, ‘சாப் நிம்பிள் சந்தோஷமாப் போகுது. எனக்கு இப்ப உதவி செய்யறதுக்கு கடவுள் வாய்ப்புக் கொடுத்துருக்கார். போய்ட்டு வாங்கசாப்’’ என்று விடை கொடுத்தார்.

சேகர் மறுபடியும் அவர் கடையின் வாசல்முன்னேயுள்ள நடைபாதையில் கண்களில் நீர்வழிய நின்றிருந்தான். இந்தக் கண்ணீர் சோகத்தால் வந்த கண்ணீரன்று. தனக்குப் புதிதாக ஒரு அண்ணன் கிடைத்ததை நினைத்து வந்த கண்ணீர். இறைவனுக்கு நன்றியை மனதிற்குள் கூறிக்கொண்டே ஆஸ்பத்திரியை நோக்கி ஸ்கூட்டரை ஓட்டினான் சேகர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p181.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License