இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அயல்நாட்டுப் புராணம்

முனைவர் சி.சேதுராமன்


‘ட்டிரிங்……ட்டிரிங்….. ங்ங்ங்………’என்று ​தொ​லை​பேசி மணி ஒலித்தது.

கா​லையில் ​தொ​லை​பேசி அ​ழைப்பு வந்தா​லே க​லையரசிக்கு ஒருவித படபடப்பு வந்துவிடும். கடவு​ளே நல்ல ​செய்தியா இருக்கணும் என்று கூறிக்​கொண்​டே ​தொ​லை​பேசியின் ரீசிவ​ரை எடுத்து, ‘ஹ​லோ. யாரு ​பேசறது…’ என்றாள்.

தொ​லை​பேசியின் மறுமு​னையில் இருந்து பழக்கமான குரல் வரவும், க​லையரசியின் முகம் தாம​ரையாய் மலர்ந்தது.

'அப்பாவா? என்னப்பா, சௌக்கியமா? எப்படி இருக்கீங்க? இந்தியா வரப் போறீங்களா? டிக்கெட் புக் பண்ணியாச்சா? வெரி நைஸ்... ரெண்டு வருஷமாச்சு உங்களையும் அம்மாவையும் பார்த்து...' என்று பல விசயங்க​ளைப் பற்றிப் ​பேசிவிட்டு ரிசீவ​ரை ​வைத்தாள்.

அவளது மனத்தி​ரையில் அ​மெரிக்காவில் தனது தங்​கை வீடட்டில் இருக்கும் தாய் தந்​தையர் வந்தனர். அவளது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்தியாவில் இருப்பது என்பது பிடிக்காத ஒன்று. இவளது வீட்டிற்கு வந்தாலும் அவர்களது நி​னைப்​பெல்லாம் அ​மெரிக்கா​வைச் சுற்றி​யே வந்து ​கொண்டிருக்கும். வாய்க்கு வாய் ஓயாது அ​மெரிக்க புராணம் ஓடிக்​கொண்டிருக்கும். இத​னைக் ​கேட்கும் க​லையரசியின் கணவனுக்கு எரிச்சலாக இருக்கும். இருப்பினும் அத​னை ​வெளிக்காட்டிக் ​கொள்ளாது பல்​லைக் கடித்துக் ​கொண்டிருப்பான். இவளிடம்தான் அவர்கள் அ​மெரிக்காவிற்குச் ​சென்ற பின்னர் புலம்பித் தீர்ப்பான். இவ்வாறு க​லையரசி நி​னைத்துக் ​கொண்டிருந்த​போ​தே அடுப்பில் இருந்து தீய்ந்த வாச​னை வந்து அவளது நி​னை​வைக் க​லைத்தது.



ஐயையோ! காஸ் அடுப்பில பீன்ஸ் பொரியல் தீய்ந்து போயிட்டுதே. அடுப்பை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

மனதுக்குள் அப்பா அம்மா வரப்போகிற மகிழ்ச்சி. கூடவே 'கடவுளே இந்தத் தடவை அப்பா வந்தால் இவருடைய மனத்தைக் காயப்படுத்தாமல் இருக்கணுமே' என்று மனதுக்குள் ​வேண்டிக் ​கொண்டாள்.

பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை என்றாலும்... ஸ்கூட்டர் சப்தம், க​லையரசியின் கணவன் கண்ணன வந்துவிட்டதை அறிவித்தது.

காபி டம்ளருடன் அவனை கலையரசி நெருங்கினாள். “ஏங்க எங்க அம்மா, அப்பா யு.எஸ். லேர்ந்து வர்றதா இப்பதான் போன் வந்தது’’ என்று மெதுவாகக் கூறினாள்.

'ஓ அப்படியா. வரட்டுமே. இனிமே ஒன்னக் கையில பிடிக்க முடியாது. ஒனக்கு ஒரே கொண்டாட்டம்தான்' என்று கூறினான்.

பின்னர் சிறிது யோசித்து விட்டு, 'என்ன ஒரு விஷயம்... நம்ப கஜானா காலி. ·பாரின் பார்ட்டியாச்சே' சிறிது குத்தலாகக் கூறினான் கண்ணன்.

எச்சிலைக் கூட்டி விழுங்கிய க​லையரசிக்குக் கண்களில் நீர் நிரம்பியது. 'சே! இப்படியா சொல்வது' என உள்மனது கூறினாலும் கண்ணன் கூறுவதிலும் நியாயம் இருக்கிறதே. சென்ற தடவை அப்பா அம்மா வந்தபோது... அப்பப்பா...

க​லையரசியின் பெற்றோருக்கு அவள்தான் மூத்த மகள். அடுத்து ராகவன் ஒரு பிள்ளை. அவனுக்கு அடுத்து ​ஹேமா. க​லையரசி​யை எஞ்சினியர் கண்ணனுக்குக் கட்டிக் கொடுத்தனர். காலணா வரதட்சணை சீர், எதுவும் வேண்டாம் என்று கண்ணன் வீட்டார் கூறிவிட​வே இனிதாகக் கல்யாணம் நடந்தது. அவளும் மும்பை வந்துவிட்டாள்.

தம்பி ராகவன் ஐஐடி கான்பூரில் கம்ப்யூட்டர் முடித்து நல்ல இடத்தில் திருமணமாகி அ​மெரக்கா போய்விட்டான். க​ரையரசியின் தங்கை ​ஹேமாவுக் கும் ராகவனின் நண்பனுடனே திருமணம் முடிந்து யு.எஸ். போயிருந்தாள். அப்பா அம்மாவையும் அவர்கள் அடிக்கடி அமெரிக்காவிற்கு வரவழைத்துக் கொண்டிருந்தனர். இப்போது இரண்டு வருடங்களாக பெண், பிள்ளை இருவரிடமும் மாறிமாறி இருந்து விட்டு இந்தியா வருகின்றனர்.

சென்ற தடவை அமெரிக்காவிலிருந்து அப்பா அம்மா வந்தபோது நடந்தவைகளை நினைத்துதான் க​லையரசி உள்ளுரப் பயந்தாள்... அப்பாவின் வாயும் சும்மா இருக்காது. ஏர்போர்ட்டில் இறங்கினவுடனேயே அமெரிக்கா பெருமைதான். சின்னப் பெண் ​ஹேமா, மகன் ராகவன் இருவரின் மகத்துவத்தைப் பற்றி வாய் ஓயாமல் பேசித் தீர்த்து விடுவார். ஒரே அறுவைதான்.

'ஐய! என்ன ஊர் இது மாப்பிள்ளை. அழுக்கும், குப்பையும். என்ன சொன்னாலும் அமெரிக்காவுக்கு ஈடே கிடையாது. இந்த டாக்சியில் மனுஷன் உட்காரவே முடியலை. கஷ்டம். கார்னா சும்மா ஜம்முனு அமெரிக்கா கார்தான். ரோடுலே வழுக்கிட்டு போற அழகே அழகுதான்’’ என்பார்.

பாவம் கண்ணனும் நல்ல டாக்சிதான் எடுத்துப் போயிருந்தான். கஷ்டப்பட்டு நல்ல காய்கறிகள், பழங்கள் எல்லாம் வாங்கி வருவான்.

'ஹும்…. எதுக்கு இதெல்லாம்? வேண்டியது நிறைய அங்கே சாப்பிட்டாச்சு. இதுகளைப் பார்த்தாலே சிரிப்புதான் வருது. எவ்வளவு தினுசு ஆப்பிள், ஆரஞ்சு, ·பிரஷ் ஆரஞ்சு ஜூஸ்கள், ஐஸ்கிரீம்... அடேயப்பா!' என்று அலட்சியமாகக் கூறுவார். கண்ணனின் முகம் தொங்கிப் போகும். க​லையரசிக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வரும்.

வந்து ஒரு வாரத்திலேயே அப்பாவின் அட்டகாசப் பேச்சும், அலட்சியமும் தாங்க முடியாமல் க​லையரசி உள்ளுர நொந்து போனாள்.

'சே.. ஏசி இல்லாம எவ்வளவு கஷ்ட மாயிருக்கு. ஒருநாள்கூட நம்மளால இருக்க முடியலைம்மா.'

'என்னப்பா இத்தனை வருஷமா இந்தியா வில இல்லையா? என்னமோ பேசறீங்க' என்றாள் க​லையரசி.



இதற்கிடையில் அம்மாவின் பிறந்தநாள் வரவும் கண்ணன் நல்லியில் விலையுயர்ந்த பட்டுப்புடவை வாங்கி வந்தான். க​லையரசியும் ஸ்வீட், பாதாம்கீர் என்று தடபுடலாகச் சமைத்தாள்.

'இது என்ன பர்த்டே க​லையரசி. போன தடவை பிறந்தநாளுக்கு எங்களுக்குத் தெரியாமலே ஹோட்டல்ல சர்ப்ரைஸ் பார்ட்டி உன் தங்கையும் தம்பியும் ஏற்பாடு செய்துட்டு, எங்களை சும்மா பிரண்ட் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போறதாகக் காரில் அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே போனால் ஏகப்பட்ட அலங்காரம், பலூன் எல்லாம் கட்டி. ஒரே அமர்க்களம் போ. கேக் எல்லாம் வெட்டி ஒரே கி·ப்ட் மயம்தான். ஆச்சரியமா இருந்தது' பெருமை கொப்பளிக்கக் கூறினார்.

கண்ணனுக்குச் சீ என்று ஆகிவிட்டது. 'இதோ பார் க​லையரசி. ஏதோ நம்மளால ஆனது செய்யறோம். ஒங்க அப்பா அம்மா எப்பப் பார்த்தாலும் சும்மா சும்மா யு.எஸ். பெருமை பேசறது ​கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கலை. என்ன பீத்தல். இனிமே நான் அவங்களுக்கு ஒண்ணுமே செய்ய மாட்டேன்' என்று கோபத்துடன் வெடித்துக் கூறினான்.

க​லையரசி எதுவும் சொல்ல முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு ​போன்று தவியாய்த் தவித்துப் போனாள். 'ப்ளீஸ், அவங்க எதிரில் இயல்பா இருந்துக்கங்க. ஏதோ பாவம் வயசானவங்க, என்னைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க. இவ்வளவு செலவு செஞ்சிட்டு வந்திருக்கிற அவங்களை நோகச் செய்யாதீங்க' என்று அழமாட்டாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

அவளது பெற்றோர் வந்து சேர்ந்தனர். விமான நி​லையத்துக்கு க​லையரசி, கண்ணன் இருவரும் சென்றனர்.

'அப்பாடி! இந்தியா வந்து சேருவமான்னு ஆயிடிச்சு. சீச்சீ, என்ன அமெரிக்காவோ போ. ஏதோ சௌகரியம் இருக்கே தவிர, குளிரும், ஸ்நோவும் வாட்டி எடுக்கறது. வெளியில காலாற நடக்க முடியுதா. வின்டர்ல திண்டாட்டம்பா. சம்மர்னா ஒரே எக்ஸ்ட்ரீம். கொளுத்தி எடுக்குது. ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வாழ்க்கை’’ சரமாரியாகக் குறை கூறிக்கொண்டே வந்தார் க​லையரசியின் அப்பா.

'என்ன மாமா, நீங்களா இப்படிச் சொல்றீங்க. உங்களுக்கே யு.எஸ். வாழ்க்கை போராடிச்சுடுச்சா! அங்கதான் சாமா​​னெல்லாம் கொள்ளை மலிவுன்னு சொல்லுவீங்க. இப்ப இப்படிச் ​சொல்லீங்க… கண்ணன் ஆச்சரியம் மேலிடத் மாமனாரிடம் கேட்டான்.



'அப்பாவா இப்படிப் பேசுறது?’’ க​லையரசி ஒன்றும் புரியாது விழித்தாள். 'கண்ணன், டூ​தௌசன் ​டென்னுக்குப் பிறகு எல்லாமே வீழ்ச்சிதான். விலைவாசிகூட ஏறித்தான் போச்சு. எத்தனை கம்பெனி மூடிட்டாங்க தெரியுமா? பாதிப்பேர் வேலையில்லாம ரொம்ப கஷ்டப்படறாங்க. அதிலும் இராக் வார் வந்தப்புறம் கேட்கவே வேண்டாம். படுமோசம். நம்ம இந்தியா தேவலாம். கொலை, கொள்ளை ஒரு அக்கிரமம் பாக்கியில்லைம்மா. தலையெழுத்து, எங்கேயோ தஞ்சாவூர்ல பொறந்துட்டு எங்கேயோ போய் இருந்து கஷ்டப்படணும்னு இருக்கு. இங்கே நேத்திக்குப் படிச்சுட்டு வந்தவன்லாம் மாசம் 35,000 ரூபாய் சம்பளம் வாங்கறாங்களாம். இந்தியா இப்போ பிரமாதமா முன்னேறிக்கிட்டு இருக்கு. க​லை, உன் தம்பியோட எக்ஸ்பீரியன்சுக்கு இங்கே வந்தா லட்ச ரூபாய் கூட வருமாமே. 'நீங்க என்னப்பா, எதையாவது சொல்லிகிட்டு' க​லையரசி கண்ண​னை ஏதோ சந்தேகமாய் ஏறிட்டுப் பார்த்தாள். 'வெரிகுட் க​லை. காயும் பொரியலும் அபார ருசி... இந்த டேஸ்ட் அங்கே இல்லையே. என்னமோ எப்பவோ பறித்து பிரிட்ஜ்ல வச்சு விக்கற காய்கறி, பழங்கள். எல்லாமே கிடைச்சாலும் நம்ப ஊர் டேஸ்ட் இல்லைம்மா. உம்... இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்து' என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார்.

தேங்க் காட், இப்படியே நல்லபடியா குறையொன்றும் கூறாமல் நாள் ஓடிட்டா தேவலை. க​லையரசிக்கு மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள்.

ஆனாலும் அப்பாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஏன் இப்படி திடீ​​ரென்று ஒரு மாற்றம்? க​லையரசி புரியாமல் குழம்பினாள்.



இரவு படுக்கைக்குப் போகுமுன் அம்மாவுடன் தனியே பேசச் சந்தர்ப்பம் கிடைக்கவே க​லையரசி மெல்ல என்ன​வென்று விசாரித்தாள்.

'அதையேன் கேக்கறே போ. எல்லாம் காலக்​கொடுவி​னை…. ஒன்​னோட தங்கை புருஷனுக்கு நாலு மாசமாய் வேலையில்லை. கம்பெனியை மூடிட்டாங்க. அவ கிளம்பி சென்னையில் மாம்பலம் போய் மாமியாருடன் இருக்கறதாக ஏற்பாடு. ராகவன் கம்பெனியிலேயும் எல்லாரையும் போகச் சொல்றாங்களாம். பிள்ளைக்கு பெங்களுர் ஸ்கூல்ல அவனோட மச்சான் மூலமா அட்மிஷன் வாங்கிட்டான். வீடெல்லாம் பாத்தாச்சு. அமெரிக்கா வீட்டைக் காலி பண்ணிட்டு வந்துடப் போறான். என்னமோ உப்புச் சப்பில்லாத வாழ்க்கை. வெளியில சொல்லிக்கலே. மனசுக்குக் கஷ்டம்' கூறி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள் அம்மா.

உடன் பிறந்தவர்களின் நிலைமை பற்றிக் கேட்க கேட்க க​லையரசியின் மனம் வருத்தத்தால்​ நெக்குருகிப் போயிற்று. 'அம்மா கவ​லைப்படா​தேம்மா…. என்ன இங்கே இருக்கிறவங்க எல்லாம் நல்லா இல்லையா? என்னவோ வெளிநாட்டு மோகம் எல்லாரையும் ​​பேய் மாதிரிப் புடுச்சு ஆட்டுது. பாவம் அப்பா. அதான் ஒரேடியா மாறிப் போயிருக்கார். கவலைப்படாதேம்மா….. …. எல்லாம் நல்லபடியா நடக்கும்' என்று அம்மா​வைத் தேற்றினாள்.

க​​லையரசியின் கவலை ஒருவாறு நீங்கியது. இருந்தாலும் கண்ணனிடம் எத​னைச் ​சொல்லிச் சமாளிப்பது என்ற புதிய கவலை அவளுக்கு வந்துவிட்டது. எல்லா ஆட்டமும் ​கொஞ்ச காலத்துக்குத்தான். எத்த​னைதான் இருந்தாலும் நம்ம ​சொந்த மண்ணுமாதிரி ஆகுமா? நம்ம நாடு நம்ம நாடுதான்… என்று அவளது எண்ணங்கள் பலவாறாக ஓடியது… இரவில் எங்​கோ ஒரு வீட்டிலிருந்து … “​சொர்க்க​மே என்றாலும்….அது நம் நாட்டப் ​போல வருமா… “என்ற இ​ளையராஜாவின் குரல் காற்றில் மிதந்து வந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p184.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License