Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மாப்பிள்ளையின் முடிவு...?

அகரம் அமுதன்


தொழிலில் ஏற்பட்ட பெரும் நட்டத்தால் மிகவும் சோர்ந்து போயிருந்தார் பொன்வண்ணன். இதற்கு முன்பும் சில தடவைகள் நட்டம் ஏற்பட்டிருந்த போதிலும் கலங்கியவரில்லை பொன்வண்ணன். இம்முறை மீளமுடியாத அளவிற்குப் பெரும் நட்டம்தான் என்றாலும் அதற்காகக் கலங்கவில்லை அவர். தன் ஒரே அன்பு மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்து தேதியும் முடிவாகிவிட்ட இந்நிலையில் தொழிலில் பெரும் நட்டம். மகளின் திருமணம் நின்றுபோய் விடுமோ? என்கிற அச்சமே அவர் இடிந்துபோனமைக்கு முழுமுதற் காரணம்.

நண்பர்களிடம் திருமணச் செலவிற்கு உதவி கேட்கவும் முடியாது. தொழில் முதலீட்டுக்காக நிறையவே அவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் சமூகத்தில் முக்கியப் புள்ளிகளுள் ஒருவரான அவரின் சரிவு காட்டுத் தீப்போல் பரவி விட்டிருக்கிறது. மீளமுடியாத சரிவைச் சந்தித்திருக்கும் பொன்வண்ணனுக்கு உதவி செய்ய யாரும் முன்வருவார்கள் என்றும் சொல்லமுடியாது.

மிகவும் நொடிந்து போயிருக்கும் பொன்வண்ணனிடம், ‘என்னங்க! பொண்ணுக்கு ஏற்பாடு செய்திருக்கிற திருமணத்த எப்படிங்க நடத்தப் போறோம்? பொண்ணுக்குச் செய்றதாச் சொல்லியிருந்த சீர்வரிசை செய்யாமப் போனா கல்யாணமே நின்னுடுமே’ என்றாள் மீனாட்சி பரிதாபமாக.

கையைப் பிசைந்தபடி செய்வதறியாது மௌனித்திருந்தார் பொன்வண்ணன். அந்தச் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப்போல் பேசினாள் மகள் மணிமேகலை, ‘அப்பா! மாப்பிள்ளை வீட்டாரிடம் நான் பேசணும். என்னை அங்கு கூட்டிட்டுப் போங்க’ என்றாள் தீர்க்கமாக.பொன்வண்ணனுக்குத் தன் மகளின் பேச்சைத் தட்டமுடியவில்லை. அவர் வசதியாக வாழ்ந்த நாட்களில் தன் ஒரே மகளின் தேவையறிந்து பார்த்துப் பார்த்துச் செய்தவர். குறிப்பறிந்து மகளின் தேவைகளை நிறைவேற்றியவர். குறிப்பாக மகளின் பேச்சைத் தட்டாதவர். அப்படிப் பட்டவர், ‘மாப்பிள்ளை வீட்டாரைச் சந்தித்தே ஆகவேண்டும்’ என்ற மகளின் முடிவை எப்படி நிராகரிக்க முடியும்?

மாப்பிள்ளை வீட்டார் எல்லோரும் அங்கு இருந்தார்கள். வரவேற்பு உபசரிப்பு மிகக் குறைந்த வார்த்தைகளோடு முடிந்து போக அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலையே நிலவியது. காரணம் பொன்வண்ணனின் சரிவுச் செய்தி அவர்களின் காதுகளையும் எட்டியிருந்தது.

மணிமேகலை மௌனம் களைத்தாள், ‘என் தந்தை ஒரு தொழிலதிபர் என்பதும், நான் படித்து முடித்து உயர்ந்த பதவியில் இருப்பவள் என்பதும், நீங்கள் என்னைப் பெண் பார்க்க வந்ததும், திருமணத்திற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றதோடு பெரிய அளவில் சீர்வரிசை வழங்க என் தந்தை சம்மதித்ததும் நீங்கள் அறிந்ததே. இந்நிலையில் எதிர்பாராத விதமாகத் தொழிலில் எற்பட்ட நட்டத்தால் சொல்லியபடி சீர் வழங்கவோ, செலவுசெய்து திருமணத்தை நடத்தவோ முடிதாத நிலையில் உள்ளார் என் தந்தை. அதனால்…’

அதனால என்ன? சொன்னபடி சீர்வரிசைய ரெண்டு மூணு வருசத்துக்குள்ள செஞ்சுடுறேன். கல்யாணத்த மொதல்ல முடிச்சிடலாம்னு எங்கள ஏமாத்தி உன்ன எம்மவன் தலையில கட்டிடப் பாக்குறாரா உங்கப்பன்?’ என்றாள் அகிலாண்டீசுவரி.

பத்துப் பேத்துக்கு முன்னாடி கௌரவத்துக்காக ஒப்புக்கிட்டு இப்ப தொழிலில் நட்டம் அது இதுனு காரணங்காட்டி சீர்வரிசையக் குறைக்கப் பாக்குறாரோ? என்றாள் மாப்பிள்ளை வேந்தனின் அக்காள் புவனேசுவரி.

பொன்வண்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டதாகவும் எண்ணிக்கொண்டு முகத்தில் ஒருவித கடுகடுப்போடு அமர்ந்திருந்தார் சம்பந்தி தணிகாசலம். அவரும் சமுதாயத்தில் பெரும் புள்ளிகளில் ஒருவரே. தன் மகனுக்கு பொன்வண்ணனின் ஒரே மகளைக் கட்டி வைத்துவிட்டால் பொன்வண்ணனின் சொத்துக்கள் அனைத்தும் பின்னாளில் தன் குடும்பத்துக்கே வந்து சேரும் என்று கணக்குப் போட்டதும் ஒரு காரணம்.

‘சீர்வரிசையைக் குறைக்கச் சொல்லியோ அல்லது கால அவகாசம் கேட்டோ நாங்க இங்க வரல. நாங்க இருக்கிற நிலையில சீர்வரிசை தரமுடியாதுன்னுதான் சொல்றோம். சீர்வரிசைய எதிர்பார்க்காத முற்போக்கான மனநிலையில நீங்க இருந்தீங்கன்னா மேற்கொண்டு திருமணத்தப் பத்திப் பேசலாம். இல்லேன்னா இத்தோட முடிச்சிக்கலாம்னு சொல்லத்தான் வந்தோம்’ என்றாள் மணிமேகலை.மாப்பிள்ளை வீட்டில் ஒரே சலசலப்பு. யாரும் இதற்கு ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இருப்பினும் மணமகள் கைநிறைய வாங்கும் மாதச் சம்பளத்தை எண்ணும் போது ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தோன்றியது.

'சரிசரி. நீங்க இருக்கிற நிலையில வரதட்சனை கேட்கும் அளவிற்குக் கல்நெஞ்சக்காரர்கள் இல்ல நாங்க. ஒங்க பொண்ணுக்கு ஒங்களால எப்ப செய்ய முடியுதோ அப்ப செய்யுங்க போதும். குறிச்ச தேதியிலயே கல்யாணத்த வச்சுக்கலாம்’ என்றார் அரைமனதோடு தணிகாசலம்.

‘மாமா! அவசரப் படாதீங்க. நான் இன்னும் பேசி முடிக்கல. ஒருவேள நீங்க திருமணத்துக்குச் சம்மதிச்சாலும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு என்னோட மாத வருமானத்த எதிர்பார்க்கக் கூடாது. இப்போ எங்கப்பா பட்டிருகிற கடன ஓரளவுக்காவது அடைக்க என் சம்பளம்தான் உறுதுணையா இருக்கும். நிச்சயமா மூன்று ஆண்டுகளுக்காவது எதிர்பார்க்க மாட்டீங்கன்னா மட்டும் சம்மதிங்க’ என்றாள் மணிமேகலை.

அவளது இப்பேச்சு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது. அங்கிருப்பவர்கள் யாரும் இதற்குச் சம்மதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட மணிமேகலை தன் இருக்கையிலிருந்து எழுந்து தந்தையை அழைத்துக் கொண்டு வாசலை நோக்கி நடக்கலானாள்.

‘ஒண்ணுமத்த குடும்பத்துல பொண்ணெடுக்க என் தம்பிக்குத் தலையெழுத்தா என்ன? கல்யாணத்துக்கு முன்பே இப்படியெல்லாம் பேசறவ கல்யாணத்துக்கப்புறம் எப்படியெல்லாம் பேசுவாளோ? இது சரிப்பட்டு வராது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்’ என்ற புவனேசுவரியின் பேச்சு முதுகிற்குப் பின்னால் தொடர்ந்து வர காலணிகளை அணிந்துகொண்டு கிளம்ப எத்தனிக்கையில்…

‘மாமா! மணிமேகலை! கொஞ்சம் நில்லுங்க’ என்ற வேந்தனின் குரல் அவர்களை நிறுத்தியது.

வேந்தன் முடிவெடுத்தவனாக உறுதியுடன் தன் தந்தையிடம் பேசலானான். ‘அப்பா! உங்களுக்குத் தொழில்ல நட்டம்னா அதனால ஏற்படுற கடனை அடைக்கிற பொறுப்பு எனக்கு இருக்கில்லையா? அதே பொறுப்பு தானே மணிமேகலைக்கும் இருக்கு. அப்பாவால் தானே இத்தனைக் கடனும் அதனால் நமக்கென்ன ஆச்சுன்னு பிரச்சினையில் இருந்து ஒதுங்க நினைக்காம அத எதிர்கொள்ளத் துணிந்த மணிமேகலையின் துணிச்சல் எனக்குப் பிடிச்சிருக்கு. அப்பாவோட கடனைத் தானே அடைக்கணுங்கிற அவளோட பொறுப்புணர்ச்சி பிடிச்சிருக்கு. இப்படிப்பட்ட உறுதியுள்ள பெண்தான் எனக்கு மனைவியா வரணும்னு நெனச்ச என்னோட கனவு வீண்போகல. நீங்க சம்மதிச்சாலும் சம்மதிக்கலன்னாலும் குறிச்ச தேதியில இந்தக் கல்யாணம் நடக்கும்’ என்று உறுதியாகவும் இறுதியாகவும் சொன்ன வேந்தன் மணிமேகலையை நோக்கி, ‘மணிமேகலை! மாமா பட்ட கடனை அடைக்க மூன்று ஆண்டு சம்பளத்தக் கொடுப்பேன்னு சொன்ன இல்லையா? நானும் என்னோட மூன்று ஆண்டு சம்பளத்தத் தர்றேன். மாமாவுக்கு ஒரு பிரச்சினைன்னா அதுல எனக்கும் பங்கிருக்கு இல்லையா?’ என்ற வேந்தனை நன்றியுணர்வோடு பார்த்தாள் மணிமேகலை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p189.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License