Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அகிலாவுக்கு வந்த கோபம்

முனைவர் சி.சேதுராமன்


அ​மைதியான வீடு அன்று ரணகளமாகிக் ​கொண்டிருந்தது. கண்களிரண்டும் சிவக்கக் கடு​மையான கோபத்துடன் சிவ​நேசன் தன் மக​னைப் பார்த்துச் சத்தம்​போட்டுக் கொண்டிருந்தான். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அவனின் ம​னைவி அகிலா. அடுப்படியில் அவளுக்கு வேலை இன்னும் முடியவில்லை. பாவம் கண்ணன்… பத்து வயதுச் சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்று கொண்டிருந்தான்.

இவ்வளவு க​ளேபரத்திற்கு இ​டையிலும் இதற்கும், தனக்கும் ​தொடர்​பே இல்​லை என்பது போல், ​பூ​ஜை அறையில் உட்கார்ந்து கந்தசஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள் அகிலாவின் மாமியார் ​தேனம்​மை.

“இங்க பாருட கண்ணா … உன்னோட நடவடிக்கை வரவர சரியில்லை. ஓங்கிட்ட கொஞ்சமும் மனசுல பயமில்லாமப் ​போச்சு. எப்பப் பார்த்தாலும் கூட படிக்கிற பயலுகளோடு தகராறு, சண்டை. டீச்சர் சொல்றதை கேட்கறது கிடையாது. இதெல்லாம் நல்ல பழக்கம் இல்லை ​தெரிஞ்சுக்​கோ… டீச்சர் சொல்றதை கேட்டு நடந்துக்கணும். என்னடா நான் சொல்றது விளங்குதா” என்று கூறிக் ​கொண்​டே கையில் இருந்த ஸ்கேலால், கண்ணனின் முழங்காலுக்கு கீழ் கால்களில் படீர்படீரென அடித்தான்.

அடி ​பொறுக்க முடியாத கண்ணன், “அப்பா ப்ளீஸ்பா…. அடிக்காதீங்கப்பா… வலிக்குது. இனி​மே ஒழுங்கா நடந்துக்க​றேன்… யாருக்கிட்​டேயும் இனி சண்​டை ​போட மாட்​டேன்…டீச்சர் ​சொல்லறபடி நடந்துக்க​றேன்பா…” என்று வலியால் துடித்தான்.

அத​னைக் ​கேட்ட சிவ​நேசன், “வலிக்குதா…நல்லா வலிக்கட்டும்… அப்பத்தான்டா ஞாபகம் இருக்கும். இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டே. நேத்து வாசலில் பஞ்சுமிட்டாய் வாங்க அம்மாகிட்டே காசு கேட்டு, அம்மா கொடுக்கலைன்ன ஒட​னே அம்மாகிட்ட சண்ட​போட்டு அழுது ஆர்ப்பாட்டம் ​​செஞ்சியா​மே… அப்பறம் அப்பத்தா கிட்டே​போய்க் கேட்டியாமே… உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அம்மாகிட்ட எதுத்துச் சண்ட ​போடக் கூடாது, அப்பத்தா கிட்டே காசு கேட்க கூடாதுன்னு…” என்று ​கேட்டான்.

“இல்லேப்பா… அம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குப் பஞ்சுமிட்டாய் திங்கனும்​போல இருந்துச்சு… அதனால அம்மாகிட்ட சண்ட​போட்டுக் காசு​கேட்​டேன்… அவங்க ​கொடுக்கலன்ன ஒட​னே அப்பத்தா கிட்டே கேட்டேன். சாரிப்பா… இனி​மே அப்படி செய்ய மாட்டேன் மன்னிச்சிடுங்கப்பா”

என்று கெஞ்சுதலுடனும், அழுத கண்களுடனும் கண்ணன் மன்னிப்புக் ​கேட்க, சிவ​நேசன் சற்று ​கோபம் தணிந்தவனாக “சரிடா இனி​மே ஒழுங்கா நடந்துக்​கோ என்ன புரியுதா… சரி… சரி… உள்ளே போய் முகங் கழுவிக்கிட்டு, ஸ்கூலுக்குக் ​கெளம்பற வழியப்பாரு…”

அடித்த கணவனை விட, உள்ளே அமைதியாக உட்கார்ந்திருக்கும் மாமியார் மீதுதான் அகிலாவுக்குக் கோபங் ​கோபமாக வந்தது. குழந்தையைத் திட்டி, அடிக்கிறாரே… போய் தடுப்போம்னு இல்லாம, தனக்கும், இதுக்கும் சம்பந்தமில்லைங்கறது மாதிரி, குத்துக் கல்லுப் போல அமர்ந்திருக்கும் தனது மாமியாரை நினைக்க நி​னைக்க அவளுக்கு எரிச்சல் வந்தது.

தாயாரின் மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவன் சிவ​நேசன். அவன் அம்மா சொல்லைத் தட்ட மாட்டான். எந்த விஷயத்தில் சிவ​நேசன் கோபப்பட்டு கத்தினாலும், உடனே தலையிட்டு, அவனை சாந்தப்படுத்துவாள். அப்படிபட்டவள், குழந்தையை சிவ​நேசன் அடிக்கும்போது, தடுக்க வராமல் அமைதியாக இருப்பது… மாமியாரின் மேல் அவளைக் கோபம் கொள்ள செய்தது.

முகம் சோர்ந்து கண்ணன், மவுனமாக ஸ்கூலுக்குக் கிளம்ப, “அகிலா… கண்ணனுக்குத் தட்டில் டிபன் வைத்து கொடு; நான் ஊட்டி விட்டு அனுப்பறேன்.” என்றாள் ​தேனம்​மை.

இத​னைக் ​கேட்ட அகிலாவிற்கு எரிச்சல் வந்தது. “ஆமா….இதில, ஒண்ணும் குறைச்சலில்லை. பேரன் மேல் அக்கறை இருப்பது போல் காட்டி கொள்கிறாள்” என, மனதில் முணுமுணுத்தபடி, டிபன் தட்டை மாமியாரிடம் கொடுத்தாள்.

சிவ​நேசன் ஆபிசுக்குச் செல்ல, கண்ணன் ஸ்கூலுக்குச் சென்றுவிட, பாத்திரங்களை ஒழித்துத் தேய்ப்பதற்குப் போட்ட அகிலா, வேலைக்காரி ​செல்லம் உள்ளே நுழைவதைப் பார்த்தாள்.

​தேனம்​மை குளித்துக் கொண்டிருக்க, “செல்லம், முதலில் வீட்டை கூட்டிட்டுத் துடைச்சுடு; அப்புறம் பாத்திரம் தேய்க்கலாம்.”என்று அகிலா கூறினாள்.

“சரிம்மா. பெரியம்மா எங்கே… குளிக்கிறாங்களா?” என்று கேட்டபடி, விளக்குமாற்​றை எடுத்து, வீட்டைக் கூட்டத் ​தொடங்கினாள்.குளித்துவிட்டு வந்த ​தேனம்​மை, அகிலா​வைப் பார்த்து, ”ஏம்மா அகிலா… நீ சாப்பிடும்மா... நான் சாமி கும்பிட்டுட்டு, அப்பறமா சாப்பிடறேன். டேபிள் மேலே நாலு இட்லி மட்டும் எடுத்து வச்சுட்டு, ஒன்​னோட வேலையை பாரு.”என்றாள்.

இத​னைக் ​கேட்ட அகிலா, “நேரத்துக்கு சாப்பிட்டு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கணும்… முதலில் சாப்பிடுங்க…’’ என்று இயல்பாக இருந்திருந்தால் சொல்லியிருப்பாள். ஆனால் இன்று மாமியார் மீது கோபமாக இருப்பதால், ஒன்றும் பதில் சொல்லாமல், அடுப்படிக்குள் நுழைந்தாள்.

“என்னம்மா முகம் வாடியிருக்கு… குளிச்சுட்டு வந்திருக்கீங்க… சாப்பிட வேண்டியது தானே. மணியாகலையா?” என்று வீட்டைக் கூட்டியபடி​யே ​வே​லைக்காரி ​செல்லம் கேட்க, “மனசு சரியில்லைத்தா. கண்ண​னை​யே ​நெனச்சிக்கிட்டு இருக்கேன்.”

கண்ணனின் பெயர், அவர்களிருவரின் பேச்சில் அடிபட​வே, என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதைக் கூர்ந்து கவனித்துக் ​கேட்கத் ​தொடங்கினாள் அகிலா.

“ஏம்மா… கண்ணனுக்கு என்ன ஆச்சு… ஒடம்புக்கு ஏதும் சரியில்லையா… நல்லாத் தானே ஸ்கூலுக்கு போயிருக்கு… அப்பறம் என்ன” என்று ​கேட்டாள் ​செல்லம்.

“அதில்லை ​செல்லம்… காலையில எம்மவன் சிவ​நேசன், கண்ண​னைச் சப்தம் போட்டு நல்லா அடிச்சுட்டான். அவன் முகம் சோர்ந்து, ஸ்கூலுக்கு போனதை நினைச்சுக்கிட்டேன்; என்னால சாப்பிடக்கூடப் பிடிக்கலை.”

“என்னம்மா இது, சிவ​நேசன் ஐயா ஒங்க பிள்ளை. நீங்க எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் கேட்கற தங்கமான புள்ளை. நீங்க போயி, “அடிக்காதே’ன்னு சொல்லி தடுத்து இருக்கலாமே… அதை விட்டுட்டு… இப்ப போயி அடிவாங்கிட்டுப் போன பேரனை நினைச்சு… வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்க…”

அகிலா மனதில் எழுந்த கேள்வியை, ​செல்லம் கேட்க, மாமியார் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதைக் கேட்கத் தயாரானாள்…

“இங்க பாருத்தா… புள்ளங்க தப்பு ​செய்யற​பேது ​பெத்தவங்க கண்டிக்கத்தான் ​செய்வாங்க… அப்படி செய்யக் கூடாதுன்னு பெத்தவங்க கண்டிக்கும் போது, நான் தலையிட்டால் அது நல்லால்ல… அந்தப் பிள்ளைய நா​னே கெடுக்கிற மாதிரி ஆயிடும். தனக்கு ஆதரவாக அப்பத்தா இருக்காங்க… நாளைக்கு எந்தத் தப்பு செஞ்சாலும் அப்பத்தா தனக்கு ஆதரவாக இருந்து காப்பாத்திடுவாங்கங்கற எண்ணம், அந்தப் பிஞ்சு மனதில் வந்துரும். அது, அவன் போக்கையே மாத்திப்புடும்… அது தப்புள்ள ​செல்லம்…

“வயசான நாங்க, பேர பிள்ளைங்க மேல காட்டற பரிவும், பாசமும் அவங்க நல்லா வாழ்றதுக்குத்தானம்மா… நாங்க காட்டற பாசம் அந்தப் பிள்​ளைங்க​ளோட வாழ்க்​கைக்​கே பாதகமா அமைஞ்சுடக் கூடாதில்லியா..?. நேத்து, வாசலில் பஞ்சுமிட்டாய் வாங்கிச் சாப்பிடக் கூடாதுன்னு அகிலா, காசு கொடுக்க மாட்​டேனுட்டா. அப்பத்தாகிட்​டே வாங்கிடலாம்ன்னு ஏங்கிட்டே ஓடி வந்தான். “நான் காசு கொடுத்தா… அது, அவனைக் கெடுக்கற மாதிரி தானே. நல்லதைப் பெத்தவங்க எடுத்துச் சொல்லும் போது, நாம் குறுக்கிடாம, அமைதியாக இருக்கிறது தான் நல்லது. உண்மையான அக்கறையோடு கண்டிக்கிற உரிமை, பெத்தவங்களுக்கு மட்டும் தான் இருக்கு.

“அதிலே மூணாவது மனுஷங்க, தலையீடு இருக்கக் கூடாது. அன்பையும், பாசத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில தான் காட்டணும். என் பேரனை நல்வழிபடுத்தணும்ன்னு தானே எம்மவன் கண்டிக்கிறான்னு, என்​னோட மனசைக் கல்லாக்கிக்கிட்டு அப்படி​யே ஒக்காந்திருந்தேன்… என்னத்தச் ​செய்யச் ​சொல்ற….நிச்சயம் இனி​மே அந்த மாதிரி தப்ப எம் பேரன் செய்ய மாட்டான். அவன் நல்லவனா, வல்லவனா வளரணும் ​செல்லம். அதுதான் இந்தக் ​கெளவி​யோட ஆ​சை….” என்று கண்கலங்கினாள் ​தேனம்​மை.

“என்னவோ போங்கம்மா… நீங்க சொல்றது எனக்கு ​வெளங்கலை. ஆனா நீங்க ஒங்க பேரன் மேலே அளவு கடந்த பாசம் வச்சிருக்கிறது மட்டுந்தான் எனக்குப் புரியுது…சரிம்மா நான் வா​ரேன்.” என்று கூறிவிட்டுச் ​சென்றாள் ​செல்லம்.​ இத​னைக் ​கேட்டுக் ​கொண்டிருந்த அகிலாவிற்கு கண்களிலிருந்து ​​பொல​பொல​வென்று கண்ணீர் ​கொட்டியது.. ச்​சே அத்​தையப் ​போயி நாம தப்பா ​நெனச்சுட்ட​மே… எவ்வளவு நல்லதச் ​செஞ்சுருக்காங்க… ​கொஞ்ச ​நேரக் ​கொளப்பத்துல எப்படி​யெல்லா​மோ அத்​தையப் பத்தி தப்பா ​நெனச்சிட்​டே​னே… என்று மனதில் பலவாறான எண்ணங்க​ளோடு, செல்லம் வீட்​டைவிட்டு வெளியேறியவுடன், ​தெளிந்த மனதுடன் வந்த அகிலா…..”அத்தை… எழுந்திருங்க. வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்… மணியாச்சு. சாயந்திரம் ஒங்க பேரன் வந்ததும் கூட்டிட்டு, கோவிலுக்குப் போய்ட்டு வாங்க, ஒங்க மனசு சரியாயிடும்.” என்று உண்மையான பாசத்துடன் மாமியா​ரை அ​ழைத்தாள்.

பக்கத்து வீட்டிலிருந்து, “இருள் மூடிக்கிடந்த மனமும் ​வெளுத்தது ​சேரிக்கும் இன்பம் திரும்புமடி….” என்ற பட்டுக்​கோட்​டையாரின் பாடல் வரிகள் காற்றில் மிதந்து வந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p197.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License