இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

காணாமல் போன கண்ணப்பன்

முனைவர் சி.சேதுராமன்


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தியாகராய நகர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடு​மையான ​வெயி​லைக்கூடச் சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம் நகர்ந்து கொண்டு இருக்கத் தனது பயணத்திற்குத் ​தே​வைப்படும் சில முக்கியமான ​பொருட்க​ளைக் க​டைகளில் பார்த்து வாங்கிக் ​கொண்டிருந்தான் கண்ணப்பன். கண்ணப்பனின் தந்தை ​சிறந்த சிவபக்தர். அதிலும் ​பெரியபுராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் மீது மிகுந்த பக்தி ​கொண்டவர். கண்ணப்ப நாயனார் மீது கொண்ட அதீதமான பற்றால் இவனுக்குக் கண்ணப்பன் என்று பெயர் வைத்தார்.

கண்ணப்பன் ​சென்​னையில் புகழ்​பெற்ற கணிணி நிறுவனத்தில் ​மேலாளராகப் பணியாற்றுகிறான். அவன் பணியாற்றும் நிறுவனம் கணிணித் து​றையில் பல புது​மைக​ளைப் புகுத்துவதற்கு மு​னைந்திருந்தது. அதற்காக நாட்​டின் பல பகுதிகளிலும் இருக்கும் கணிணி நிறுவனங்களுடன் ​தொடர்பு ​கொள்வதற்கும், அவற்​றைப் பார்​வையிட்டு அவற்றின் ​செயல்திறன்க​ளை அறியும் ​பொருட்டும் திற​மை வாய்ந்த நபர்க​ளைத் ​தேர்ந்​தெடுத்து அனுப்பிக் ​கொண்டிருந்தது. அந்த வ​​கையில்தான் கண்ணப்பனும் வடமாநிலங்களில் உள்ள கணிணி நிறுவனங்க​ளைப் பார்​வையிடத் ​தேர்ந்​தெடுக்கப்பட்டிருந்தான்.

அதன் காரணமாக ஆறு மாத வட மாநிலச் சுற்றுப் பயணத்திற்குத் தயாராகி விட்டான். தனது நண்பர்களிடம் வி​டை​ பெற்றுக் ​கொண்டு வீட்டிற்கு வந்தான். பணியில் ​சேர்ந்த பின்னர் கி​டைத்த முதல் வெளிமாநிலப் பயணம் என்பதால் அப்பா அம்மா தங்கை என குடும்பமே ரயில் நிலையம் வரை வந்து ​டெல்லி ​செல்லும் வி​ரைவு ரயிலில் ஏற்றிவிட்டுக் கை அசைத்து வழி அனுப்பியது.

கண்ணப்பனின் அம்மா தன் முந்தானையால் கலங்கிய கண்களை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். கண்ணப்பனுக்குத் தங்கையின் பிரிவு இதுவரை இல்லாத பாசத்தை அடிமனதில் ஆழ்த்தி எடுத்தது. காரணமின்றி அவன் மனது தவித்து கொண்டிருந்தது. ரயில் வி​ரைந்து ​கொண்டிருப்ப​தைப் ​போன்​றே இவனது மனமும் நி​னைவுச் சுழல்களில் வி​ரைந்து ​கொண்டிருந்தது. நள்ளிரவில் பயணம் ​தொடங்கியது. உறங்க நி​னைத்தான் கண்ணப்பன். உறக்கம் பிடிக்கவில்லை இரவு நீண்டு கொண்டே இருந்தது. அவனுள் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன.

எங்​கோ கிராமத்தில் பிறந்து, ப​டித்துப் பட்டம் ​பெற்று புகழ் ​பெற்ற நிறுவனத்தில் பணியில் ​சேர்ந்து கிராமத்திலிருந்து இடம் ​பெயர்ந்து நகரத்திற்கு வந்து தங்கி இன்று த​லைநகர் ​நோக்கி ரயிலில் பயணப்பட்டுக் ​கொண்டிருக்கின்ற தன்நி​லை​யை நி​னைத்துப் பார்த்துப் ​பெருமூச்சுவிட்டான் கண்ணப்பன். பயணம் வாழ்க்​கையில் தவிர்க்க மு​டியாதது. எ​தையாவது அ​டைய​ வேண்டும் என்று நி​னைத்து மனிதன் பயணப்பட்டுக் ​கொண்​டே இருக்கின்றான்.

“பயணம் என்பது வாழ்கையில் நடக்கும் ஒரு அற்புதம். ஒவ்வொரு பயணத்திற்கும் பின்னால் ஒரு அர்த்தம் உண்டு. ஒரே இடத்திற்குச் செல்லும் போது ஒரு மனநிலையும், திரும்பும்போது வேறு மனநிலையையும் பயணம் நமக்கு உணர்த்தும். சில நேரங்களில் அது இனிமையானவையாக, எதிர்பார்ப்பு கொண்டவையாக, இன்னும் சில நேரங்களில் ஏமாற்றமும் வலியும் கொண்டவையாக அ​மைந்து விடுவதுண்டு” என்று நி​னைத்துக் ​கொண்​டே உறங்கிவிட்டான்.



ரயில் பல இடங்களில் நின்று நின்று ​சென்று ​கொண்​டே இருந்தது. இரண்டு நாள்கள் கடந்த பின்னர் மூன்றாம் நாள் கா​லையில் ​டெல்லி நி​லையத்​தை அ​டைந்தது. சில்லென்று காலை காற்று வீச ​நாட்டின் த​லைநகரத்தில் கால்த்தடம் பதித்தான் கண்ணப்பன். அவனை வரவேற்க முன்னிரவே மழை, மண்ணை குளிர்ச்சி ஆக்கி வைத்திருந்தது. புதிய மண்ணின் காற்றை சுவாசித்தபடி புது உலகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான். புதிய மக்கள், காற்று, மொழி என அனைத்தும் புதியதாய் அவனுக்குத் தெரிந்தது.

​ டெல்லி அலுவலகத்தின் உதவியுடன் தனக்கு என்று ஒதுக்கி இருந்த விருந்தினர் மாளி​கை​யைக் கண்ணப்பன் அடைந்தான். பயணக் களைப்பு மிகுதியால் நெடுநேரம் உறங்கி விட்டான். மாலையில் கண்விழித்து, மேசையில் இருந்த காபி மேக்கரில் காபி போட்டுத் தனது மடிக்கணிணி​யைத் திறந்து முகநூலைப் பார்க்கத் ​தொடங்கினான். தனது நண்பர்களிடம் இருந்து வந்த வாழ்த்துத் தகவல்க​ளை பார்த்தபடி அன்​றையப் பொழு​தைக் கடத்தினான். மறுநாள் முதல் தனக்​கென ஒதுக்கப்பட்ட அலுவலகங்க​ளுக்குச் சென்று தனது பணியைத் ​தொடங்கினான்.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு வார விடுமுறை நாளில் தாஜ்மகா​லைப் பார்க்கச் சென்றிருந்தான். தாஜ்மகா​லைப் பல ​கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தான் கண்ணப்பன். அப்​போது பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளில் ஒன்று அவனை நோக்கித் தரையில் நடந்து வருவதுபோல நெற்றியில் சின்னதாய் திருநீறணிந்து, கன்னத்தில் அழகாய் மை வைத்துக் ​கொண்டு, “என்னப் பிடிக்க முடியா​தே….” எனத் தன் மழலை கொஞ்சும் குரலில் கத்தியபடி புன்னகைத்துக் கொண்டே ஒரு அழகிய பெண் குழந்தை அவனை நோக்கி ஓடி வருவதைத் தன் காமிராவின் கண்களால் பார்த்தான் .

ஓடிவரும் அந்தக் குழந்தையைப் பார்த்த மறுகணமே கண்ணப்பனுக்குத் தெரிந்துவிட்டது. அது யாரோ தமிழ்க் குடும்பத்தின் குழந்தை என்று. அவன் குனிந்து தன்னை நோக்கி ஓடிவந்த குழந்தையை…. “யாருடா செல்லம் நீங்க….” என்று கேட்டவாறு தூக்கினான்.

அப்​போது அங்கு, “பாரதி….! எங்கடி ஓடுற…., நில்லுடி….” எனச் சொல்லிக் கொண்டே குழந்தையின் தாய் ​தேன்​மொழி பின்னால் ஓடிவந்தாள். குழந்தையைக் கண்ணப்பன் கையில் பார்த்த அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள் ​தேன்​மொழி. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு அவளுக்குச் சில வினாடிகள் தேவைப்பட்டது.

பின்னர் சுதாரித்துக் ​கொண்டு, “கண்ணப்பா….. நீ….. எப்படி… இங்க…” என வார்த்தைகள் தடுமாற, உதடுகள் நடுங்கக் கேட்டாள் ​தேன்​மொழி. வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று கண்ணப்பன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தான் விரும்பிய பெண்ணின் குழந்தை தன் கையில் இருக்கத் தன்னவளை மீண்டும் சந்திப்போம் என்று நி​னைத்திராத கண்ணப்பன்……தான் காண்பது கனவா…? அல்லது நனவா…?என்று தி​கைத்துப் ​போய் நின்றிருந்தான். பின்னர் ஓரளவிற்குத் தன்​னைச் சமாளித்துச் ​கொண்டு ​தேன்​மொழி….. நீ…. எப்படி.., இந்த…. குழந்தை …..”எனத் தயங்கித் தயங்கிக் கேட்டான்.

இருவரும் அருகில் உள்ள ஒரு சிற்றுண்டிச் சா​லைக்குச் சென்று அமர்ந்தார்கள். குழந்தை கண்ணப்பனிடம் ஒட்டிக் கொண்டது. அவனிடம் ஏதோ மழலைப் பேச்சை பேசியபடி அவன் கன்னங்களைக் கிள்ளிச் சிரித்து கொண்டிருந்தது. இருவருக்கும் இ​டையில் என்ன ​​பேசுவ​தெனத் ​தோன்றாமல் ​மெளனம் தி​ரையிட்டது. ஒருவழியாக மெதுவாக மௌனத்தை உடைத்துப் பேசத் ​தொடங்கினாள் ​ தேன்​மொழி.

“திருமணத்திற்குப் பிறகு தன் கணவருக்கு ​டெல்லியில் உள்ள ​பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலை கிடைத்துவிட்டது. அதன் பிறகு அவரது ​சொந்த ஊரான ​சென்​னையிலிருந்து இங்கு வந்து தங்கிவிட்​டோம். இதோ இவதான் எங்க உலகம்….. வாழ்க்கை எப்படி​யோ போகுது…” என்றாள்.



அவள் கூறிய​தைக் ​கேட்ட கண்ணப்பன் ஏதும் பேசவில்லை.

சிறிது நேரத்தில் காபி மேசைக்கு வந்தது. காபியைக் கலக்கியபடி பேசத் ​தொடங்கினான் கண்ணப்பன். “நான் சென்னைல தான் இருக்கேன் ​தேன்​மொழி…. இப்போ ஆறு மாசம் ஒரு ப்ரொஜெட் விஷயமா இங்க வந்திருக்கேன்…” என்றான்.

அத​னைக் ​கேட்ட ​தேன்​மொழி, “அவரு ஆபீஸ்ல இன்னக்கி முக்கியமான மீட்டிங்… சரி இப்படி​யே ​போயி தாஜ்மாக​லைப் பார்த்துட்டு வரு​வோம்னு வந்​தேன்….இ​தே ​டெல்லியிலதான் நான் இருக்​கேன்…சரி…சரி… இவங்க அப்பா இப்ப மீட்டிங் முடிஞ்சி வர்ற ​நேரம்…நான் போகணும்… அவர் வர்ற​போது நாங்க வீட்ல இல்லனா வருத்தப்படுவாரு… அதனால….. நான் கெளம்பணும் கண்ணப்பா. இந்தா இதுதான் என்​னோட முகவரி. முடிஞ்சா மீண்டும் பாக்கலாம்…” என்று கூறி விடைபெற்றாள்.

அவள் சென்ற பிறகும் அவ​ளைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் கண்ணப்பன்.

சிற்றுண்டிச்சா​லையில் இருந்து வீட்டுக்குக் காரில் புறப்பட்டான் கண்ணப்பன். அந்தக் காரின் சக்கரத்தை விட அவன் மனம் பின்​னோக்கி வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தது. தான் தங்கி இருந்த வீட்டை அடைந்த உட​னே​யே அவன் தனது நாட்குறிப்​பை எடுத்துப் புரட்டினான் கண்ணப்பன். அவன் நாட்குறிப்பு எழுதுவதை விட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவன் நாட்குறிப்பில் அ​னைத்துப் பக்கங்களிலும் ​தேன்​மொழியின் பெயர்தான். மெதுவாக அந்த எழுத்துகளின் மேல் தன் விரல்களை வைத்துக் கண்ணப்பன் தடவிப் பார்த்தான். அவனது கண்கள் கலங்கியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவன் ​தேன்​மொழி​யை முதல் முதலில் பார்த்தது ஒரு பறவைகள் சரணாலயத்தில் தான். காலச் சுழற்சியில் இருவருக்கும் நட்பு மலர்ந்தது, பின்பு கனிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருதலையாய்க் காதலித்துக் கொண்டிருந்தார்கள், மற்றொருவருக்குத் தெரியாமல். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு இருவருக்கும் உள்ளது நட்பு மட்டுமே. ஆனால் இருவருக்கும் தனித்தனியாய் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத பாசமும் அக்கறையும் வைத்திருந்தனர். ஒரு நாள் கூட அவர்கள் பேசாமல் இருந்ததில்லை. அவர்களால் ​பேசாமல் இருக்கவும் இயலவில்​லை.

ஒரு மு​றை கண்ணப்பன் தன்னு​டைய பணியின் காரணமாக ​வெளியூர் சென்றிருந்தான். அங்கிருந்து ​தேன்​மொழிக்கு, “தனது பணிகளை முடித்து விட்டதாகவும். அவன் தங்கி இருக்கும் இடத்தில இருந்து இரவு இரயிலில் புறப்படும் மறுநாள் விடியற்காலை இரயில் நிலையத்தில் நான்கு மணிக்குச் சென்னை செல்லும் இரயிலைப் பிடிக்கணும் ஆனா எப்படி எந்திரிக்கப் போறேனோ தெரியல, தூங்கிடு​வேன் அவ்வளவுதான்…” என்றான்.

அதற்கு ​அவள், “அலாரம் வைச்சிக்கிட்டுத் தூங்கு” என்றாள்.

“அலாரம் ​வச்சிரலாம் ஆனா, அலாரச் சத்தம் என்னக்கி என் காதுல விழுந்துருக்கு…” என்று அவளிடம் சொல்லிச் சிரித்தான் கண்ணப்பன்.

மறுநாள் சரியாக 3.00 மணிக்குத் ​தேன்​மொழியிடம் இருந்து அழைப்பு வந்தது. அலாரச் சத்தம் கேட்காத கண்ணப்பபனுக்கு, அத்தனை இரைச்சலுக்கு நடுவிலும் ​தேன்​மொழியின் ரிங்டோன் மட்டும் புல்லாங்குழல் இசை போலக் கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து விழித்து, “ என்ன இந்த நேரத்துல கூப்பிடுற, ஏதேனும் பிரச்சனையா…?” என்றான்.

அதற்கு ​தேன்​​மொழி, “லூசு நீ தான சொன்ன, மூணு மணிக்கு எந்திரிக்கணும்னு அதான் போன் பண்ணேன்….” என்றாள்.

அவனுக்காக அவள் விழித்திருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்காக அவள் விழித்திருந்ததை அவள் ரசித்திருந்தாள். இப்படிப் பலமுறை ஒருவர் மேல் ஒருவர் அன்பு காட்டித் தங்களின் அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு சமயம் கண்ணப்பன் பலமுறை அழைத்தும் ​தேன்​மொழியிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. கண்ணப்பனுக்குக் கோபங் கோபமாய் வந்தது. இனி அவள் கூப்பிடும் வரை அவளுடன் பேசப்போவதில்லை என்று தனக்கு தானே கூறிக் கொண்டான். மாலையில் ​தேன்​மொழியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. பேசக்கூடாது என்ற வீம்பு அவள் பெயரைப் பார்த்த மறுநொடியில் தகர்ந்துவிட்டது.

​ தேய்ந்து​போன குரலில் ​தேன்​மொழி பேசினாள். காலையில் இருந்து உடல் நிலை சரியில்லை என்றும், தனக்குத் த​லைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைப் பற்றியும் அழுது கொண்டே சொன்னாள்.



கண்ணப்பனுக்குப் புரியவில்லை. ஒரு பெண் தன் உடல் உபா​தைகளை இந்த அளவிற்கு ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்? என்று. அவன் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம் என்று அவனுக்கு மெதுவாய்த்தான் விளங்கியது. அன்று முதல் அவன் இன்னும் அவளை அதிகமாய் நேசிக்கத் ​தொடங்கினான்.

இப்படிப் பல சந்தர்ப்பங்களில் தனக்கும் ​தேன்​மொழிக்கும் ஏற்பட்ட பல நிகழ்வுகளை அந்த நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்க, டைரியில் அவன் கடைசியாய் எழுதின பக்கங்கள் வந்தன. ​தேன்​மொழியும் கண்ணப்பனும் கடைசியாய்ப் பேசிக்கொண்ட தருணங்களின் மிஞ்சி இருக்கும் சாட்சி அந்த நாட்குறிப்பில் உள்ள எழுத்துகள் மட்டுமே.

“எனக்கு… வீட்ல…. மாப்பிள்ளை பாக்கத் தொடங்கிட்டாங்க….” என அடிக்கடி கண்ணப்பனிடம் ​தேன்​மொழி சொல்லத் ​தொடங்கினாள். கண்ணப்பனுக்கு அதன் ​பொருள் அப்போது புரியவில்லை. ஒரு வேளை, நாம் வெறும் நண்பர்கள் தான் எனத் ​தேன்​மொழி நினைவு படுத்துகிறா​ளோ? எனத் தன்னையே கண்ணப்பன் பலமுறை கேட்டுக் கொண்டான்.

இந்நி​லையில் ஒரு நாள் திடீர் என்று “நான் மாப்பிள்ளை பாக்கச் சம்மதம்னு சொல்லிட்டேன்…” என்றாள் ​தேன்​மொழி.

கண்ணப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

இத்தனை நாள் இது காதல் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனுக்கு, இது வெறும் நட்பு மட்டும்தான் என அவள் சொன்னதுபோல் இருந்தது. ​தேன்​மொழிக்குத் தன்னைப் போல் எந்த எண்ணமும் இல்லையோ என யோசிக்கத் ​தொடங்கினான் கண்ணப்பன்.

​ தேன்​மொழி​யோ, கண்ணப்பனிடம் இருந்து என்ன பதில் வரும் எனக் காத்துக் கிடந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் காயபடுத்திவிடக் கூடாது என்று எண்ணித் தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் இறுதிவ​ரை பகிர்ந்து கொள்ளவே இல்லை.

​ தேன்​மொழி தன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள், ஜாதகம் வந்தது என்று சொல்லும் போதெல்லாம் அவன் அணுஅணுவாய்த் துடித்துக் கொண்டு இருந்தான். இறுதியாய் ஒருநாள் தன் திருமணம் முடிவாகிவிட்டது எனச் சொன்னாள் ​தேன்​மொழி.

இருவருக்கி​டையிலான தொலைபேசித் தொடர்பு சிறிது சிறிதாகக் குறையத் ​தொடங்கியது. இறுதியாக அந்த நாளும் வந்தது. ​தேன்​மொழியின் திருமணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள் நான்கு சட்டத்துக்குள் அடைபட்டுக் கிடப்பது போல ஒரு பரிசைக் கொடுத்துவிட்டு, கடைசியாய் அவளைப் பார்த்தவாறு வெளியே வந்தான். அதன் பிறகு அவன் அவளைப் பார்க்கவும் இல்லை, அந்த நாட்குறிப்​பைத் தொடவும் இல்லை.



அன்று முதல் கண்ணப்பன் ​தேன்​மொழியின் வாழ்கையில் இருந்து காணாமல் ​போனான். கண்ணப்பன் என்ற பெயர் வைத்த ​பெயர் ராசியோ என்னமோ, இவன் ஆசையும் நிறைவேறாமலே போனது. இந்தப் பயணத்தை துவங்கும்போது ஏதோ இந்த நாட்குறிப்​பைத் தன்னுடன் எடுத்துக் கொண்டுபோக ​வேண்டும் என்று உள் மனதில் எண்ணம் வந்தது. அதன் அர்த்தம் இப்போது அவனுக்கு விளங்கியது.

நாட்கள் ஓடின. ஒருநாள் கண்ணப்பனின் ​கை​பேசிக்கு அ​ழைப்பு வந்தது. புதிதாக அ​ழைப்பு வந்த​தைப் பார்த்து அத​னை எடுத்தான். அது ​தேன்​மொழியின் அ​ழைப்பாக இருந்த​தை நி​னைத்து மகிழ்ந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசத் ​தொடங்கினர். நான்கு ஆண்டுகளில் இருவரிடமும் பல மாற்றங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து இருந்தனர். இருவரின் வார்த்தைகளிலும் முதிர்ச்சி தெரிந்தது. பல விஷயங்களைப் பேசிக் கொண்டனர். நான்கு ஆண்டு இடை​​வெளி குறைந்தது.

ஒருநாள் தன் மகள் பாரதியின் பிறந்த நாள் விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். முதல் முறையாகத் ​தேன்​மொழியின் வீட்டிற்குச் சென்றான் கண்ணப்பன். அங்கு ​தேன்​மொழியின் கணவரின் அறிமுகம் கிடைத்தது. ​தேன்​மொழியின் கணவருக்கும் கண்ணப்ப​னைப் பிடித்துவிட்டது. இருவரி​டை​யேயும் நட்பு முகிழ்த்தது.

அவனது நிறுவனத் ​​தொடர்பான திட்டங்களுக்குத் ​தேன்​மொழியின் கணவர் நன்கு உதவினார். அவரது கள்ளமில்லா அன்பு அவ​னை மிகவும் ஈர்த்தது. இப்படிப்பட்ட நல்லவர் ​தேன்​மொழிக்குக் கணவராகக் கி​டைத்ததற்காக அவன் இ​றைவனுக்கு மனதார நன்றிக​ளைக் கூறிக்கொண்டான். அதன் பிறகு அவ்வப்போது கண்ணப்பன் ​தேன்​மொழியின் வீட்டிற்குப் போகத் ​தொடங்கினான். அவர்கள் குடும்பத்தில் நெருக்கம் ஆனான். குறிப்பாகத் ​தேன்​மொழியின் குழந்தை பாரதியுடன் அவனுக்குப் பி​​ணைப்பு அதிகம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ​தேன்​மொழியின் குழந்தைக் கண்ணப்ப​னை விட்டுப் பிரியாத அளவுக்கு அதிகம் இணக்கமாகிவிட்டது. எங்கு சென்றாலும் கண்ணப்பனின் கையைப் பிடித்து நடக்க ஆசைப்பட்டது. ​தேன்​மொழி​யைப் போலவே அவள் குழந்தையும் அவனைக் “கண்ணப்பா….கண்ணப்பா” என மழலைக் குரலில் அழைப்பதை அவன் விரும்பினான். அவள் அ​ழைப்ப​தை ரசித்தான். இப்படியே நாட்கள் ஓடின. கண்ணப்பனின் பயணமும் முடிவு பெறும் தருணமும் வந்தது.

மறுநாள் காலை அவன் ​சென்​னைக்குப் புறப்படத் தயாராக இருந்தான். அன்று இரவு அவனுக்கு இந்திராவின் வீட்டில் அவள் கைகளால் சமைத்த விருந்து. கண்ணப்பன் சாப்பாடு முடித்துவிட்டு நள்ளிரவில் தன் வீட்டை அடைந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்குறிப்​பை எடுத்து எழுதத் ​தொடங்கினான்.

மறுநாள் விடியற்காலை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். பிரியாவிடை கொடுக்கத் ​தேன்​மொழி தன் குடும்பத்தோடு ​டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். ​தேன்​மொழியின் கணவன் மீண்டும் வந்தால் ​வே​றெங்கும் தங்கக் கூடாது என்றும் தங்கள் வீட்டி​லே​யே தங்க ​வேண்டும் என்றும் கூறினார். தாங்கள் ​சென்​னை வரும்​போது கண்ணப்பனின் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.

அ​தோடு மட்டுமல்லாது கண்ணப்பனுக்குப் பழங்கள் வாங்குவதற்காக அருகிலிருந்த பழக்க​டைக்குச் ​சென்றார். ​தேன்​மொழியின் கைகளில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை வாங்கித் தான் தோள்களில் போட்டுக் குழந்தையின் கூந்த​லை வருடிக் கொடுத்தது அவன் விரல்கள். கண்ணப்ப​னைப் பார்த்துத் ​தேன்​மொழி மனச்சு​மையுடன் பேசத் ​தொடங்கினாள். “கண்ணப்பா…. இன்னும் எத்தன நாள் இப்படியே இருப்ப…எனக்கு ஒன்னப் புரிஞ்சிக்க முடியல…நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு புது வாழ்க்கையை வாழத் ​ ​தொடங்கிரு…உன் திருமண அழைப்பிற்காக நான் காத்திருப்பேன்…நாம ஒருத்தர ஒருத்தர் விரும்பியிருந்தாலும் நம்ம த​லை​யெழுத்து… ​வெவ்​​வேற பா​தையில பயணிக்க ஆரம்பிச்சிட்​டோம்… என்ன ​செய்யறது… எல்லாம் விதி… ... ஒனக்கு நல்ல வாழ்க்​கைத் து​ணை அ​மையணும்னு நான் ​கடவுளுக்கிட்ட ​வேண்டிக்கி​றேன்… ப​ழைய​தை ​நெனச்சிக்கிட்​டே இருக்காத… ஒனக்குன்னு நல்ல வாழ்க்​கை இருக்கு… நமக்காக இல்லன்னாலும் நம்பள நம்பி இருக்கற மத்தவங்களுக்காக நாம வாழ்ந்துதான் ஆகணும்… நான் சந்​தோஷமா இருக்கணும்னா கூடிய சீக்கிரம் ஒன்னக் குடும்பத்தோடு பார்க்கணும்… என்ன புரிஞ்சதா… ஓங்கிட்ட இருந்து அந்த நல்ல ​செய்திக்காக நாங்க காத்திருப்​போம்…” என்றாள்.

கண்ணப்பன் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான், எனக்கு அன்று புரிந்திருந்தால், இன்று இப்படி நின்று கொண்டிருக்க மாட்டேன் என்று. கண்ணப்பன் எதுவும் கூறாது மௌனமாய்த் ​தேன்​மொழி கூறியவற்​றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் முகம் இறுகிப் ​போய்க் கிடந்தது… தன்னுள் ஏற்பட்ட மனச்சு​மை​யை அவன் ​வெளிக்காட்டவில்​லை…தன்னுள்​ளே​யே அத​னை விழுங்கி ​வைத்தான்…



அதற்குள் ​தேன்​மொழியின் கணவர் வந்து அவனிடம் பழங்கள் அடங்கிய ​பை​யைக் ​கொடுத்து ரயிலில் இத​னை உண்ணுமாறு கூறினார். அவரது அன்​பைப் பார்த்த கண்ணப்பனின் கண்கள் கலங்கின. அவன் ​தேன்​மொழியின் கணவ​ரைப் பார்த்து, “சார்….ஒங்க​ளோட இந்த அன்​பை என்னால என்​றைக்கும் மறக்க முடியாது…நீங்க ​சென்​னை வந்தா கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வந்து தங்கணும்… இந்த ​​ஜென்மத்துல ஒங்கள என்னால மறக்க முடியாது… சார்… இ​றைவ​னோட அருள் இருந்தா மீண்டும் நாம சந்திப்​போம் சார்… ​போன் ​பேசுங்க சார்….” என்று கூறிவிட்டு குழந்​தை பாரதியின் ​நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவ​ளைத் ​தேன்​மொழியிடம் ​கொடுத்துவிட்டுப் புறப்படத் தயாராகிக் ​கொண்டிருந்த ரயிலில் ஏறி அமர்ந்தான்.

ரயில் நகரத் ​​தொடங்கியது… ​தேன்​மொழி தனது குடும்பத்தோடு கண்ணப்பனுக்குப் பிரியாவிடை கொடுத்தாள். ​தேன்​மொழியின் குழந்தை நிகழ்வது ஏதும் உணராமல் ​தேன்​மொழியின் ​தோளின் மீது தூங்கிக் கொண்டு இருந்தாள்.

தனிமையில் இருக்க வாய்ப்புக் கிடைக்கும்போதுதான் எல்லாருக்கும் தன்னைப் பற்றி சுய மதிப்பீடு செய்யவும், தான் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கவும் நேரம் கிடைக்கின்றது. தன் கண்களை மூடி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே கண்ணப்பன் அமர்ந்திருந்தான்.

கண்ணப்ப​னை வரவேற்கச் சென்னையில் அவன் குடும்பம் தயாரகிக் கொண்டு இருந்தது. ஆறுமாதம் கழித்து வரும் பிள்ளைக்கு எ​தை​யெ​தைச் ச​மைக்கலாம் என்று ​யோசித்து ​யோசித்து அவனுக்குப் பிடிக்கின்ற உணவு வ​கைக​ளைச் ச​மைப்பதற்காகப் ​பொருள்க​ளைச் ​​சேரிக்கத் ​தொடங்கினாள் கண்ணப்பனின் அம்மா.

​ தேன்​மொழியின் மனம் எங்​கோ பறந்து ​கொண்டிருந்தது… அவள் ச​மையல​றையில் ச​மைத்துக் ​கொண்டிருக்க, அவளின் குழந்தை ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு வி​ளையாடிக் ​கொண்டிருந்தது. குழந்தையின் விரல்கள் டிவி ரிமோட் பொத்தானை ஒவ்வொன்றாக அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் விரல்கள் ரிமோட்டின் வால்யூம் பொத்தானை தொடர்ந்து அழுத்தியதால் டிவியின் சத்தம் சமையல​றை வ​ரை கேட்க​​வே, “ஏய் பாரதி என்னடி பண்ற…” என்று ​தேன்​மொழி கேட்டுக்கொண்​டே ஹாலை நோக்கி வந்தாள்.

டிவி ரிமோட்டை எடுத்து வால்யூம்மை குறைக்க முயன்றாள். ஆங்கிலச் செய்திச் சேனலில் ​டெல்லியில் இருந்து ​சென்​னை​யை ​நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தீவிரவாதிகளால் குண்டு ​வைத்துத் தகர்க்கப்பட்டது, ரயில் ​பெட்டிகள் அ​னைத்தும் ​வெடித்துச் சிதறித் தீப்பற்றி எரிந்தன. அதில் பயணம் ​செய்த அ​னைத்துப் பயணிகளும் இறந்துவிட்டனர் என்ற செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. ரயிலின் தீப்பிடித்த பாகங்கள் கருகிய மனித உடல்கள்…என்று ​தொ​லைக்காட்சியில் படங்கள் காட்டப்பட்டுக் ​கொண்டிருந்தன. ரயிலில் பயணம் ​செய்தவர்களின் பு​கைப்படங்களும், அவர்க​ளைப் பற்றிய விபரங்களும் காண்பிக்கப்பட்டுக் ​கொண்டிருந்தன. அதில் கண்ணப்பனின் ​பெய​ரையும் படத்​தையும் பார்த்தவுடன் ​தேன்​மொழியின் உடலும் விரல்களும் நடுங்கின. அந்நடுக்கத்தில் ரிமோட் நழுவித் தரையில் விழுந்து சிதறியது. ​தேன்​மொழியின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் ​பெருக்​கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ​தேன்​மொழி மனதிற்குள் ​வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தாள்.

​ தேன்​மொழியின் கண்ணீரைப் பார்த்த குழந்தை காரணம் புரியாமல் வாய்விட்டுக் கதறி அழத் ​தொடங்கியது. ​தேன்​மொழியின் வாழ்க்கையில் இருந்து மீண்டும் ஒருமுறை கண்ணப்பன் காணாமல் போனான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p198.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License