Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

யார் அகதிகள்...?

முனைவர் சி. சேதுராமன்


“மார்கழித் திங்கள் மதிநி​றைந்த நன்னாளால்
நீராடப் ​போதுவீர் ​போதுமி​னோ ​நேரி​ழையீர்”

என்ற திருப்பா​வைப் பாடல் எம்.எல்.வசந்தகுமாரி குரலில் ​கோவிலில் இருந்து ​தேனாக ஒலிக்கத் ​​தொடங்கியிருந்தது. மார்கழி மாதக் கடும் பனி. உடம்​பெல்லாம் ​வெட​வெட என நடுக்கம் எடுத்தது. படுக்​கை​யை விட்டு எழுந்திருக்க​வே மனம் வரவில்​லை. இருந்தாலும் அதிகா​லை ஐந்து மணிக்​கெல்லாம் எழுந்து காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, ஆ​டைக​ளை அணிந்து கொண்டான் முத்துராமன். மனைவியைப் படுக்கையில் காணவில்லை. அடுக்க​ளைக்குள் சத்தம் கேட்கின்றது.

மற்​றொரு படுக்கையில் அவனு​டைய மகள் ஆழ்ந்த உறக்கத்தில். ‘அப்பா! அகதிகள் என்றால் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று நேற்றிரவு மகள் அவனைக் கேட்டிருந்தாள். ஐந்தாம் வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி. திடீ​ரென்று ​கேட்ட வினாவால் திக்குமுக்காடிப் ​போன முத்துராமன் ​யோசித்துப் பதில் ​​சொல்வதாகச் ​சொல்லியிருந்தான். ஆனால் மறந்து போய் விட்டான்.

மனைவி ஆவி பறக்கத் தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே மூச்சில் குடித்துவிட்டுக் கிளம்பினான். “சரிம்மா நான் போய்ட்டு வா​றேன்.”

கதவைப் பூட்டி விட்டு, ​மெதுவாகத் திருட​னைப் போல, படிகளிலிருந்து இறங்கி ​சைக்கி​ளைத் தள்ளிக் ​கொண்​டே இருளில் நடக்கின்றான். ​வேக​வேகமாகச் ​சென்றால் ​தெருவில் கிடக்கும் நாய்கள் குர​லெடுத்துத் ​தொல்​லைப் படுத்திவிடும். அடுத்த ​தெரு​வைத் தாண்டிப்​போய் ​சைக்கிளில் ஏறிச் ​செல்வது முத்துராமனின் வழக்கமாக இருந்தது.

எதிரே வீடுகளில் தினசரி நாளிதழ்க​ளைப் போட்டுவிட்டு வரும் பழனி, அநேகமான நாட்களில் முத்துராமன் வேலைக்குப் புறப்படும் போது வேலை​யை முடித்து வீடு வருவான். மாலையில் இவன் வேலை முடிந்து வரும் போது, அவன் மீண்டும் மா​லையில் அருகில் உள்ள நகரத் தி​ரையரங்கில் ​வே​லை ​செய்வதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான். பழனி முத்துராம​னைப் பார்த்து, ​“முத்துராமன்! ஒரு விஷயம். அடுத்த வாரம் நான் குடும்பத்​தோடு ​கேரளாவுக்குப் ​போகப்​போ​றேன்” என்றான்.

இத​னைச் சாதாரணமாக எடுத்துக் ​கொண்ட முத்துராமன், “சரி ​போய்ட்டு வா. ஆமா அங்க எத்தனை நாளு தங்கி இருக்கப் ​போறீங்க?” என்று பதிலுக்குக் ​கேட்டான். அத​னைக் ​கேட்ட பழனி​யோ, “இங்க பாருய்யா. நான் டூ​ரெல்லாம் ​போகல. ​அங்​கே​யே குடியிருக்கப் ​போ​றோம். இனி இங்க சுத்தப்படாது...” என்று ​வெடிகுண்​டைத் தூக்கிப் ​போட்டான்.

திடீரென்று கேட்ட செய்தியால் முத்துராமன் திகைப்படைந்தான். எதுவும் ​பேசாம​லே​யே முத்துராமன் ​சைக்கி​ளைத் தள்ளிக் ​கொண்டு அதில் ஏறிச் ​சென்றான். அவன் மனதில் பற்பல நி​னைவுகள் பின்னலிட்டன.எத்த​னை​யோ ஆண்டுகள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த ஊ​ரை விட்டுட்டு எப்படிப் ​போறது? ம​ழை இல்ல... நில​மெல்லாம் தரிசாகி ரியல் எஸ்​டேட் காரங்க ​கையில ​போயிடுச்சு. பக்கத்துல இருக்கற டவுனுக்குப் ​போயித்தான் ​பொழப்ப நடத்தணும். எப்படித்தான் இருந்தாலும் ​சொந்த மண்ண விட்டுட்டு எப்படி ​வேற ஊருக்குப் ​பொழப்பத் ​தேடிப் ​போக முடியும்? ​பொறந்ததில இருந்து எல்லா உரி​மைக​ளையும் வாழறதுக்கு வசதிக​ளையும் ​கொடுத்த ஊர விட்டுட்டு எப்படி ​வெளிமாநிலத்துக்குக் குடி​பெயர முடியும்? ம​ழை இல்ல...விவசாயம் இல்ல... பஞ்சத்தால இருந்த ​நெலமும் ​கையவிட்டுப் ​போயிடுச்சு... மத்தவங்க ​வே​லையத் ​தேடி மத்த மத்த இடங்களுக்குப் ​போயிட்டாங்க... இப்படி ​சொந்த ஊர விட்டுட்டு போக எப்படி அவங்களுக்கு மனசு வந்துச்சு...? என்று பலவாறு எண்ணமிட்டவாறு ​சைக்கி​ளை ​வேக​வேமாக மிதித்துக் ​கொண்டு பத்து கி​லோ மீட்டர் ​தொ​லைவில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங் கம்​பெனிக்கு ​வே​லைக்குச் ​சென்றான்.

முத்துராமன் ஏழு மணிக்குள் கம்​பெனிக்கு வேலைக்குப் போய் விடவேண்டும். நா​ளொன்றுக்கு அவனுக்கு 200 ரூபாய் வருமானமாகக் கிடைத்தது. ​வே​லைக்குச் ​சென்றால் மட்டு​மே கூலி. இல்​லை​யென்றால் இல்​லை. இதில் கம்​பெனி​யே சில நாள்கள் ​வே​லை இல்​லை​யென்று கூறி விடுவார்கள். மாதம் சராசரியாக அவனுக்கு 4000 ரூபாய் கி​டைத்தது. இந்த நாலாயிரத்துக்குள் அவன் தனது குடும்பத்​தை நடத்த ​வேண்டும். இக்கம்​பெனியில் இவன் ​வே​லைக்குச் ​சேர்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

பல இடங்களில் இவன் ​வே​லை ​தேடியும் கி​டைக்காததால் கி​டைத்த இந்த ​வே​லையில் ​சேர்ந்து ​வே​லை பார்த்தான். வறு​மையின் காரணமாக இவனது கல்லூரிப் படிப்புப் பாதியில் நின்றுவிட்டது. பன்னி​ரெண்டாம் வகுப்பு முடித்தவனுக்கு அப்படி என்ன ​பெரிதாக ​வே​லை கி​டைக்கப் ​போகிறது. அதனால் ​வே​லை ​தேடி அலுத்துப் ​போன அவன் கி​டைத்த இந்த ​வே​லையி​லே​யே ஒட்டிக் ​கொண்டான்.

​சைக்கி​ளை மிதித்து நேரத்திற்கு வேலை செய்யுமிடத்திற்கு வந்துவிட்டான். வாசலில் கம்​பெனி ​மேலாளர் சுப்பிரமணியனும் மார்க்​கெட்டிங் ​மேலாளர் ஆண்டியப்பனும் சிகரட் பிடித்தபடி நின்று ​கொண்டிருந்தார்கள். சிலர் கம்​பெனிக்கு ​வேக​வேகமாக வந்து ​கொண்டிருந்தனர். இக்கம்​பெனியில் ஷிப்ட்டு மு​றையில் பலர் ​வே​லை பார்த்தனர். இரவு பெய்த கடும்பனியானது சூரிய ஒளி பட்டுக் கரைந்து கட்டடத்தின் கூரை மீதிருந்து ​சொட்டுச் ​சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. சிகரெட்டைக் கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு, ​சைக்கி​ளை விட்டு இறங்கிக் கொண்டிருந்த முத்துராம​னை நோக்கி விரைந்து வந்தான் சுப்பிரமணியன். செய்ய வேண்டிய வேலைகளை அவனிடம் ஒப்படைத்து விட்டுத் தனது ​பைக்கில் ஏறிப் போனான். இனி அவனது குழந்​தைக​ளைப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வரப் பத்து மணியாகும். சுப்பிரமணியன் மிகவும் நல்லவன். அவனது நெடிய தோற்றமும் ​மென்​மையான புன்னகையும் எவரையும் எளிதில் கவர்ந்து விடும்.

இந்த ஸ்கிரீன் பிரிண்டிங் கம்​பெனியில் ​வே​லைக்குச் ​சேர்ந்த பின்னர் பலரும் பலவிதமாக நலம் விசாரித்தனர். ​வே​லை கி​டைக்காது திரிந்த​போதும் சாப்பாட்டிற்கு வழியற்றிருந்த​ போதும் ஒருவரும் கண்டு​ கொள்ளவில்​லை. ஒவ்​வொருவரும் அவ​னை விசாரித்தனர். இருப்பினும் அவனுக்கு இருந்த கஷ்டம் அவனுக்கு மட்டு​மே ​வெளிச்சம்.பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர்களது ஊரின் நி​லை​யே ​வேறு. அவ்வளவு ​செழிப்பு. ஒவ்​வொரு ​தெருவும் மக்கள் நி​றைந்து காணப்பட்டது. ​தோட்டமும் ​தோப்புகள் என எங்கும் வள​மையின் ஆட்சி. ஆனால் இன்​றோ நி​லை​மை ​வேறு. எங்கிருந்​தோ கல்குவாரி ​பெரு முதலாளிகள் வந்து கிராமத்​தை​யே முற்று​​கையிட்டனர். எங்கள் ஊரில்தான் நல்ல கிரா​னைட் கல் கி​டைப்பதாக அறிந்து ஒவ்​வொரு சிறு விவசாயிடமும் தனித்தனியாக வி​​லை​ பேசி அவர்கள் ​கேட்டதற்கும் அதிகமாக​வே பணத்​தை அள்ளி​​யெறிந்து நன்றாக வி​ளைந்த வயல்க​ளைத் ​தோண்டி​யெடுத்து கிரஷர்க​ளை அ​மைத்துத் தங்களது பணப்​பெட்டி​யை நிரப்பினர்.

வய​லைக் ​கொடுக்காத சிறுவிவசாயிக​ளை ஆட்க​ளை ​வைத்து மிரட்டியும் அடித்தும் விற்க ​வைத்தனர். நிலங்க​ளை விற்றவர்கள் அவர்களிட​மே கூலியாட்களாக மாறினார்கள். இருந்த மிச்ச ​சொச்ச காடு க​ரைகள் அ​னைத்தும் ரியல் எஸ்​டேட்காரர்களால் கூறு​ போடப்பட்டன. இன்று அங்​கொன்றும் இங்​கொன்றுமாக ​கொஞ்சம் வயல்கள்; காடுகள். அ​வையும் ம​ழையின்றி வறட்சியால் தரிசாகக் கிடக்க​வே மக்கள் ​வெளியூர்களுக்கும் ​வெளிமாநிலங்களுக்கும் வயிற்றுப் பாட்டுக்காக இடம் ​பெயர்ந்தனர். ​

இடம்​ பெயர்ந்தவர் ​போக இருக்கின்ற சிலர் ​போகவும் மனதின்றிச் ​​சோகத்தில் ​உளம் ​வெதும்பிக் கிடந்தனர். கிரா​னைட் முதலாளிகளின் ​​சொந்தமும் பந்தமும் ஊரில் வ​ளைய வந்தனர். ஊ​ரை விட்டுப் ​போக எத்தனித்தவர்கள் தனித்தனியாகக் கிளம்பத் ​தொடங்கினர். ​மொத்தத்தில் ஊ​ரே ​கொஞ்சங் ​கொஞ்சமாகக் காலியாகிக் ​கொண்டிருந்தது.

வாழ வழியற்றவர்களுக்கு உதவும் அரசு எத்த​கைய திட்டங்க​ளைக் ​கொண்டு வந்தாலும் அத​னை கிரஷர் கூட்ட​மைப்பினர் மக்களுக்குக் கிட்டாது ​செய்தனர். என்ன ​செய்வது. பணம் ப​டைத்தவன் ​கையில் அ​னைத்தும் இருந்தன. உயிர் வாழ ​வேண்டு​மெனில் எந்த ​வே​லையாவது ​செய்​தே ஆக​வேண்டும்.

பலவிதமாக நி​னைத்துக் ​கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட ​வே​லையில் ஈடுபட்டான் முத்துராமன். சமீப காலமாக கம்​பெனியில் ஏதோ மர்மமான முறையில் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. முப்பது வருடங்களாகச் ​செயல்பட்டுக் ​கொண்டிருந்த கம்​பெனியில் ஆறு ஆண்டுகள் முத்துராமன் வேலை செய்து விட்டான். கடந்த மாதம் தொழிற்சாலையில் நீண்ட காலமாக வேலை செய்து வந்த மூன்று பேர் தமது சுய விருப்பத்தின் பேரில் விலகியிருந்தார்கள். அவர்களில் குமாரும் ஒருவன், அவன் முத்துராம​னோடு அன்பாகப் பழகுவான். சுறுசுறுப்பானவன். நகைச்சுவைப் பேர்வழி. அவனிடம் ஏன் விலகுகின்றாய் என்று முத்துராமன் ​மெதுவாகக் ​கேட்டான். அதற்கு அவன் சம்பளம் போதாது என்றும், ​சென்​னைக்குச் ​சென்று தள்ளுவண்டியில் காய்கறி வாங்கி விற்கப் போவதாகவும் கூறினான். அவனது பதில் முத்துராமனுக்குத் திருப்தியாக இல்​லை. அவனது உள்ளத்தில் சந்தேகத்தைக் கிளப்பியது.

குமா​ரை என்றுமே மறப்பதற்கில்லை. அவன்தான் முத்துராமனுக்குத் தொழிலைக் கற்றுத் கொடுத்தவன். ‘லேபில்களைத் தரம் பிரிப்பது, மெஷினில் அட்டைகள் வெட்டுவது, உள்ளிட்ட பல ​வே​லைக​ளை முத்துராமனுக்கு அவன் கற்றுக் ​கொடுத்தான். வேலைக்குச் சேர்ந்த முதல்நாள், அட்​டை​யில் தா​ளைப் ப​சையால் ஒட்டும்போது வந்த எஞ்சிய பசையைத் திரட்டி உருண்டையாக்கி முத்துராமனின் உள்ளங் கைகளில் வைத்தான். ‘என்ன?’ என்றான் முத்துராமன். குமார் சிரித்துக் கொண்டே தனது மூக்கைக் காட்டிவிட்டுப் போனான்.

மூன்று பேருக்கும் கம்​பெனி நிர்வாகம் (பிரிவுஉபச்சார விழா) வி​டை தருவிழா வைத்தது. அவ்விழாவிற்குக் குமார் மட்டு​மே வந்திருந்தான். ஏ​னை​யோர் ஏ​னோ வரவில்​லை. ​மேலாளர், “குமார் திற​மை வாய்ந்த ஒரு ​தொழிலாளி; கட​மை தவறாதவர்” என்று அவ​னைப் புகழ்ந்து வாழ்த்தினார். குமார் தனது கையைக் கட்டியபடியே த​லை குனிந்து நின்றான். அவனது உதடுகளும் கைகளும் நடுங்கின. முடிவில் அவனது இருபது ஆண்டுப் பணி​யைப் பாராட்டி, மரத்தாலான அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். இருபது ஆண்டுகளுக்கு ஒரு மரத்தாலான சிற்பம். குமார் அழுதான். அவனது நகைச்சுவை உணர்வும் சுறுசுறுப்பும் மரச் சிற்பத்திற்குள் அடங்கிப் போயிற்று.அவர்கள் மூவரும் விலகிப் போன அடுத்த வார​மே கம்​பெனிக்கு ஒரு ​​பெரிய இயந்திரம் வந்து சேர்ந்தது. அந்த இயந்திரம் சற்றே பழசாகிப் போனது ​போல இருந்தது. தடித்த ‘கார்ட் போட்’ போன்ற அட்டைகளை விரும்பிய டிசைன்களில் வெட்டுவதற்குரிய இயந்திரம் அது. கூடவே ஆறு ​பேர் புதிதாகச் ​சேர்க்கப்பட்டவர்கள் பணிக்கு வந்திருந்தனர். இவர்க​ளைப் பார்த்தால் ​வெளிமாநிலத்​தைச் ​சேர்ந்தவர்களாகத் ​தெரிந்தனர்.

அவர்களும் முத்துராம​னைப் ​போன்​றே அதிகா​லையி​லே​யே கம்​பெனிக்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேர் தூக்கம் கலையாது படுக்​கை​யை விட்​டெழுந்ததும் வீட்டிலிருந்து நேரே இங்கு வந்துவிடுவார்கள். காலைக் கடன்கள் தொடங்கி ​கேண்டீனில் தேநீர் குடிப்பது வரை எல்லாமே இங்குதான். கழிப்பறையின் உள்ளே இருப்பவர்கள் அவர்கள்தான்.

முத்துராமன் ஒரு கடின உழைப்பாளி. “இரவு ஏழு மணி வ​ரைக்கும்ட ‘ஓவர் டைம்’ செய்ய முடியுமா?” - “மாதக் கடைசி. நிறைய வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கு. காலையில் விடிந்தவுடன் நாலு மணிக்கு வர முடியுமா?” - “சனிக்கிழமை? ஞாயிற்றுக்கிழமை?” - எல்லா நாள்களிலும் வரமுடியுமா என்று ​கேட்டால் அவற்றிற்​கெல்லாம். “சரி சார் வந்துவிடுகி​றேன்” என்​றே பதில் கூறுவான். எந்த ​வே​லை​யைக் ​கொடுத்தாலும் சலிப்ப​டையாது ​செய்து முடித்துவிடுவான் முத்துராமன்.

அக்கம்​பெனியில் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் முத்துராம​னைப் “பணப் ​பேய்” என்று பட்டப் ​பெயரிட்டு அ​ழைப்பர். மற்றவர்களுக்கு அவனது நி​லை​மை எங்கு புரியப்​போகிறது.

முத்துராமன் ‘போர்க் லிவரின் உதவியுடன் பேப்பர் உருளைகளை நகர்த்திவிட்டு, நாற்பது கிலோ இருக்கக் கூடிய பேப்பர் உருளையைத் தூக்கி மெஷினில் பொருத்தினான். தொழில் ரீதியாக இருபத்தைந்து கிலோவிற்கு மேல் தூக்கக் கூடாது என்று சட்டத்தை எல்லாம் இங்கே யார் பார்க்கின்றார்கள். எ​தையும் இங்கு ​பேசிவிட முடியாது. ​பேசினால் ஆளை ​வே​லையிலிருந்து தூக்கிவிடுவார்கள். ​பேசாமல் அவர்கள் கூறுவ​தை அப்படி​யே ​செய்ய ​வேண்டும். எ​தையும் ​தெரிந்தாற் ​போன்று காட்டிக் ​கொள்ளக் கூடாது. அவர்களுக்கு முன்னால் தான் ‘முட்டாள்’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேப்பர் உருளையை முக்கித் தக்கித் தூக்கி வைத்ததில் முத்துராமனுக்கு மூச்சு வாங்கியது. அவன் உடலை ஆசுவாசப்படுத்தி நிமிர்கையில் ‘விற்ப​னை ​மேலாளர்’ ஒரு துண்டுக் காகிதத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். பேப்பரில் ஒரு புது வேலை முளைத்திருந்தது. அதை முதலில் செய்யும்படி கூறினார். அவரும் நல்ல மனிதர்தான். எல்லாரும் தருகின்ற வேலையை மகிழ்ச்சியுடன் ‘ஆம்’ என்று கூறி, மறு பேச்சுப் பேசாமல் கச்சிதமாகச் செய்வதால் முத்துராமனும் அங்கு ‘நல்லவன்’ என்று பேர் எடுக்கின்றான். சிம்மாசனத்தில் ஏறிய பேப்பர் உருளை இறங்கி, இன்னொரு உருளை ஏறியது. முத்துராமனின் மூச்சும்தான்.

இந்தப் பேப்பர் உருளைகளுடன் தினமும் மள்ளுக்கட்டியதில் முத்துராமனுக்கு வயிற்றின் இடது புறத்தில் வலி ஏற்பட்டது. அவனும் டாக்டரிடம் காண்பித்தான். டாக்ட​ரோ நீ ஓய்​வெடுத்துக்​கொள் என்றார். ஓய்வா…? அவன் ஓய்​வெடுத்தால் அவனது குடும்பம் பிச்​சை​யெடுக்க ​வேண்டியதுதான். அதனால் அவ்வலி​யைப் பற்றிக் கண்டு​கொள்ளாது இருந்தான். நாள​டைவில் அவனது ​பொறு​மை​யைக் கண்ட அவ்வலி தானாக​வே ஓடிவிட்டது ​போலும்.


அவன் ​விற்ப​னை ​மேலாளர் கூறிய வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, கம்​பெனியின் ​​மேலாளர் சுப்பிரமணியன் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.

“ஏப்பா முத்து இந்த ​வே​லை​யை ஒன்கிட்ட யாரு ​கொடுத்தது?” என்று ​கேட்டார். அதற்கு முத்துராமன், “சார்…சேல்ஸ் மனேஜர் தான் சார்!” என்றான்.

“நான் தந்த வேலை மதியம் பன்னிரண்டு மணிக்குள் குடுத்தாக வேண்டும்” காலை எட்டி வைத்துக் கோபத்துடன் அலுவலக அ​றைக்குள் ​சென்றார். அங்கு இரு ​மேலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சுப்பிரமணியன் போன வேகத்தில் திரும்பி வந்தார்.

“முத்து பரவாயில்லை... பரவாயில்லப்பா. சேல்ஸ் மனேஜருடைய வேலையை முதலில் முடிங்க. அவருக்கு இன்​றைக்குத்தான் கடைசி நாள்...ம்...ம்... இனி​மே அவரு இங்க ​வே​லைக்கு வரமாட்டாரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் அலுவலக அ​றை​யை நோக்கிச் ​சென்றார். ‘அவருக்கு இன்​றைக்குத்தான் இறுதி ​வே​லைநாள்!’ முத்துராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் கம்​பெனியில் என்னதான் நடக்கின்றது? முத்துராமனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. அவன் ​மேலாளர் சுப்பிரமணிய​ன் பின்னா​லே​யே ஓடினான்.

“சார்...சார்...! என்று அ​ழைத்துக் ​கொண்​டே ​சென்றவ​னை, ​மேலாளர் நின்று என்ன ​என்ப​தைப் ​போல் நிமிர்ந்து பார்த்தார். அவரின் பார்​வையி​லே​யே அத​னை உணர்ந்து ​கொண்ட முத்துராமன், “ஒங்க கிட்ட ஒரு விஷயத்​தைப் பத்திப் ​பேசணும் சார்...” என்று ​மென்று முழுங்கியவாறு ​கேட்டான்.

அதற்கு ​மேலாளர் சுப்பிரமணியன், “என்ன முத்து ஒன்​னோட உடம்​பெல்லாம் நடுங்குறது மாதிரி ​தெரியுது... எ​தை ​நெனச்சும் பயப்படாதப்பா... இப்பப் ​போயிட்டு வா. சாப்பாட்டுக்குப் ​பெறகு ​பேசு​வோம்...என்ன சரிதா​னே” என்று கூறிவிட்டுச் ​சென்று விட்டார்.

​மேலாளர் குறிப்பிட்ட ​நேரம் வ​ரை மனதில் பதட்டத்துடன் காத்திருந்தான் முத்துராமன். சாப்பிட்டவுடன் ​மேலாளர் முத்துராம​னைத் தனது அ​றைக்கு வருமாறு அ​ழைத்தார். முத்துராமன் வந்தவுடன் தனக்கு முன்னால் கிடந்த ​நாற்காலியில் அமரும்படி கூறினார். அவன் அமர்ந்தவுடன் அவனுக்கு முன்பாக மேசையின் மீது ஒரு பேப்பரை விரித்து வைத்தார்.

அதில் இன்னும் பத்து நாட்களில் கம்​பெனி​யை மூட இருக்கின்றார்கள் என்ற பயங்கரம் இருந்தது. முத்துராமனின் தலை சுழன்றது. அவன் கீ​ழே விழாதிருக்க மேசையைக் ​கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான். முப்பது வருடங்கள் ஆட்டம் காணாத தொழிற்சாலையை நம்பி அவன் படிப்பைக் கை விட்டான். இடையில் வேறு எந்தவொரு தொழிலுக்கும் முயற்சி செய்யவுமில்லை. இப்போது எதை வைத்துக் கொண்டு வேலை தேடுவது? படித்த படிப்பெல்லாம் வருஷம் ஒவ்வொன்றாக பின்பக்கமாகக் கழன்று, பட்டமும் அறுந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. கடைசியில் இந்தத் தொழில்தான் மிச்சமாக இருந்தது.

அதன் பின்பு முத்துராமனுக்கு வேலை ஓடவில்லை. அவன் தனது மனைவிக்குக் ​கைப்​பேசி மூலம் தகவ​லைக் கூறினான். அந்த அதிர்ச்சியில் அவள் பயந்து போனாள்.

​கேரளாவில் நல்ல சம்பளம். ரப்பர் ​எஸ்​டேட், காபி, ​தேயி​லை எஸ்​டேட்டுகள் ​அதிகம். அது சார்ந்த ​தொழிற்சா​லைகளும் அங்கு இருக்கின்றன. அதனால் ​கேரளாவிற்​கே ​சென்று விடலாம். இந்த ஸ்கிரீன் பிரிண்டிங் கம்​பெனி அங்கும் இருக்கலாம். அந்தக் கம்​பெனிகளுள் ஏ​தேனும் ஒன்றில்தான் ​வே​லை ​தேட ​வேண்டும். நிச்சயம் ஏதாவ​தொரு ​வே​லை அங்கு கி​டைக்கும். இங்கு ​போன்று அங்கு சம்பளம் குறைவாக இருக்காது. என்று நினைத்துக் கொண்டே வீடு சென்றான் முத்துராமன். தனது நண்பன் பழனி எடுத்த முடி​வை​யே இவனும் எடுக்க விரும்பினான்.

இந்தக் கம்​பெனி இருந்ததால் முத்துராமன் இடம்​ பெயராமல் இருந்தான். ஆனால் இந்தக் கம்​பெனியும் தற்​போது மூடப்படுவதால் அவனுக்கு ஊரில் இருப்பதற்​கே இருப்புக் ​கொள்ளவில்​லை. எப்படியாவது எங்காவது ​சென்று தன் குடும்ப​த்​திற்கான வாழ்வாதாரத்​தை உருவாக்கிக் ​கொள்ள ​வேண்டும் என்று நி​னைத்தான்.

“எல்லாரும் ​கேரளாவுக்குப் ​போறாங்களாம். ஏங்க நாமளும் போவமுங்க. எவ்வளவு காலமா ​சொந்த ஊருன்னு இந்த ஊரு​லே​யே இருக்குறது. என்ன மிச்சத்தைக் கண்​டோம். ஒண்ணும் மிச்சத்​​தைக் காணல. இங்க இருந்து ​போனவங்க ஏதாவது ​கையில காதுல ​போட்டுருக்காங்க. நமக்கிட்ட என்ன இருக்குது? இந்த குடி​சை​யைத் தவிர ​வேற ஒண்ணுமில்​லை. அதுவும் கிரஷருகாரனுககிட்ட அடமானத்துல இருக்கு...” என்று முத்துராமன் நினைத்ததையே அவனது மனைவியும் ​வேத​னையுடன் கூறிப் புலம்பினாள்.

“இங்க இருக்கற ​கொஞ்ச நஞ்சச் ​சொந்தங்கள விட்டுட்டு எப்படிப் ​போறது? இங்​கே இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது... குவாரிக்குக் ​கொத்தடி​மையா ​வே​லைக்குப் ​போறதத் தவிர ​வே​றெதச் ​செய்ய முடியும்... எனக்கு இந்தக் ​கொத்தடி​மைத் தனம் ​கொஞ்சங்கூடப் பிடிக்கல... கால்வயிறு அ​ரைவயிறு கஞ்சி குடிச்சாலும் சுதந்திரமா இருக்கணும். என்ன... நாம இந்தியாவுல இருக்கற ஒரு மாநிலத்தில தான வாழப்​போறம். அதுவும் நம்ம​​ளோட நாடுதா​னே...” என்று ம​னைவியிடம் சமாதானமாகப் ​பேசினான் முத்துராமன்.

“அட ஏன் ​பொலம்புறீங்க... அங்கயும் நம்மளப் ​போல உள்ளவங்க இருக்காங்கள்ள... அவுகளும் மனுஷங்கதான... இந்தியாங்கறது எல்லாத்துக்கும் ​பொதுவானதுதான... அப்பறம் எதுக்கு நாம ​யோசிக்கணும்... நாமளும் நாளு​பேரப் ​போல நல்லா வாரது எப்படி...? ​வே​லை எங்க நல்ல சம்பளத்துல ​கெ​டைக்கு​தோ அங்க ​போயிற ​வேண்டியதுதான்... அப்பறம் நாம எதுக்கு ​யோசிக்கணும்... இருக்கற எல்லாத்​தையும் இந்த குவாரிக்காரங்க வந்து வாரிச் சுருட்டீட்டாங்க... இனி இந்த ஊருல பி​ழைக்கிறதுக்கு என்ன இருக்கு...?” என்று முத்துராமனின் ம​னைவி தனது மனதில் கிடந்தவற்​றைக் ​கொட்டினாள்.

மாறி மாறி இருவரும் ஒருவருக்​கொருவர் ஆறுதல் கூறிக் ​கொள்வ​தைப் ​போன்று ​பேசிக் ​கொண்டார்கள். அபிப்பிராயங்களைக் கொட்டினார்கள்.

“இல்ல நாந் ​தெரியாமத்தான் ​கேக்கு​றேன்... நாம ​பொறந்த இந்த ஊர விட்டிட்டுப் போறதப் பத்தி ​கொஞ்சங்கூட ஒனக்குக் கவ​லை இல்​லையா?” என்று முத்துராமன் தனது மனைவியைப் பார்த்துக் கேட்டான்.


“பி​ழைக்கிறதுக்கு வழி இல்லாமப் ​போச்சு... இருக்கிறது எல்லாம் நம்ம ​கைவிட்டுப் ​போயிருச்சு...மிஞ்சுனது நம்ம​​ளோட கண்ணீருதான்...இனி​மே எளக்கிறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்குங்குறீக...​சொல்லுங்க... வாழ்க்​கையத் ​தேடிக்கிட்டு இனி எங்க போனால்தான் என்ன! போகக்கூடிய இடத்துக்குப் போக வேண்டியதுதான். வேகமும் விவேகமும்தான் இப்ப நமக்குத் தேவை. இப்ப நாம வாழ்வதற்குப் பணம் தான் முக்கியம்... ஒங்க பிரண்டு ஒருத்தரு ​கேரளாவுல நல்லா இருக்கறதாச் ​சொன்னீங்கள்ள...அவ​ரோட ​போன் நம்பரு இருந்தா அவருகிட்டப் ​பேசி எதாவது ஒதவி ​கேளுங்க... வழி ​பெறக்காமலா ​போயிரும்...” என்று அவள் தெளிவாகக் கூறினாள்.

விதியின் திருப்புமுனையில் அண்​டை மாநிலமாகிய ​கேரளா என்ற எதிர்காலம் முத்துராமனின் கண் முன்னே விரிந்தது. ஏற்கன​வே ​கேரளாவிற்குச் ​சென்று தங்கி இருக்கும் தனது நண்பனுடன் ​பேசுவ​தென முடிவு ​செய்தான். தன்னிடம் இருக்கும் ​டைரி​யை எடுத்து அதில் இருக்கும் தனது நண்பர்களின் ​​தொ​லை​பேசி எண்க​ளைப் பார்க்கத் ​தொடங்கினான்.

அப்​போது பள்ளிக்கூடத்திற்குச் ​சென்ற அவனது மகள் பவானி அவனது ​டைரி​யை எட்டிப் பார்த்துவிட்டுப் ​போய் ஒளிந்து கொண்டாள். ‘ஓ! என்ன ​செல்லக்குட்டி நேதிக்கு ஏதோ ஒரு மனிதர்க​ளைப் பற்றிக் பறவையைப் பற்றிக் கேட்டியில்லடா ​செல்லம்...அப்பா... மறந்தே போய் விட்டேன்.’

“​செல்லம் இங்க வந்து அப்பா மடியில ஒக்காருங்க. நான் ஒரு புத்தகம் வச்சிருக்​கேன். அதுல அம்முக்குட்டி ​கேட்ட அகதிகள் பற்றிய தகவல்கள் ​நெ​றைய இருக்கு... அதுல அகதிகளப் பத்தி உள்ள ​செய்திக​ளை அப்பா ​சொல்​றேன்...” என்றான்.

ஆனால் பாவானி​யோ, “அப்பா எங்க டீச்ச​ரே அகதிகள் யாருங்கறதப் பத்திச் ​சொல்லிட்டாங்க... ​சொந்த நாடு இல்லாம ஊரு இல்லாம தங்கறதுக்கு இடமில்லாம வாழறதுக்கு எந்தவிதமான பிடிமானமும் இல்லாம தான் பிறந்த நாட்​டையும் ஊ​ரையும் விட்டுட்டு கண்காணாத நாட்டு​லே​யோ ஊரு​லே​யோ எதிர்காலத்தப் பத்தி எதுவுந் ​தெரியாத சூழல்ல யாரு வசிக்கிறாங்க​ளோ அவங்களத்தான் அகதிங்கறாங்களாம்...​ வெளிநாட்டுல இருந்து நம்ம நாட்டுக்குள்ளாற வந்து முகாம்கள்ள தங்கி இருக்கறாங்கள்ள அவங்க எல்லாம் அகதிங்களாம்...”என்று அவளது டீச்சர் ​சொல்லிக் ​கொடுத்தவற்​றை அப்படி​யே அவனிடம் ஒப்பித்தாள். மகளின் நி​னைவாற்​ற​லைக் கண்டு முத்துராமன் பிரமித்துப் ​போய்பிட்டான்.

அவனது கண்களில் ஈரம் கசிந்தது. அவன் தன் மக​ளைப் பார்த்து, “உலகத்தி​ல எல்லாரு​மே ஒருவிதத்தில அகதிங்கதான்... சில மனிதர்களோட ​பேரா​சையால​யும் சுயநல ​வெறியாலயும் பல​பேரு அகதிகளா ​சொந்த நாட்டுக்குள்ள​றே​யே வாழ ​வேண்டியிருக்குது... ஏதிலிகளா பிற நாட்டுக்குள்ளாற ​போக ​வேண்டியிருக்கு... எப்பப் ​பேரா​சையும் இன, மத, நிற, சாதி, அரசியல் ​வெறிகளும் சுயநலமும் மனித​னைவிட்டுப் ​போகு​தோ அப்ப அகதின்னு யாரும் உலகத்துல இருக்கமாட்டாங்க... ஒருத்த​ரோட உரி​மை​யை, சுதந்திரத்த மத்தவங்க பறிக்க மாட்டாங்க... எல்லாரும் அ​மைதியா அவங்க அவங்க நாட்டு​லே​யே வாழ்வாங்க... அப்படி இல்லாத ​போது எல்லா உரி​மைக​ளையும் இழந்து ஏதிலிகளா மனிதர்கள் இருக்கக் கூடியவங்க எந்த நாட்டுலேயும் அகதிங்களாத்தான் வாழ முடியும்... அகதிங்களா யாரும் பிறக்கறது இல்லம்மா... சில​பேரு​டைய தன்னல ​வெறியினால, ஆதிக்க ​வெறியினால உருவாக்கப்படுறாங்கம்மா... ஒரு வ​கையில பார்த்தா இந்த ஊரச் சார்ந்தவங்களும் நாமும் அகதிங்கதாம்மா...” என்று கூறிக் ​​கொண்​டே வழிந்த கண்ணீ​ரைப் புறங்​கையால் து​டைத்தபடி​யே மக​ளை அணைத்து முத்தமிட்டான்.

பாவனிக்கு அவன் கூறியது ஒன்றும் புரியவில்​லை. அவள் அப்பாவின் பிடியிலிருந்து நழுவி துள்ளிக் குதித்​தோடினாள். முத்துராமனின் மனதில் எப்​போ​தோ படித்த, “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்​லை வாழிய நில​னே!” என்ற ஒள​வையாரின் பாடல் வரிகள் மின்னலிட்டு ம​றைந்தன...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p214.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License