இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அம்மா...!

மு​னைவர் சி.​சேதுராமன்


எனக்கு எதுவும் ​தோன்றவில்​லை... அந்த இளங்கா​லைப் ​பொழுதில் வெகு நேரமாய் எதுவும் தோன்றாதவனாய்ச் சூரிய​னைப் பார்த்த​வா​றே அமர்ந்திருந்​தேன்... அந்தக் காலைப் பொழுதில் காக்கைகள் கரையும் சப்தமும் வீசி அடித்துக் கொண்டிருந்த காற்றின் ​மென்​மையான வருடலும், ஒருவிதப் பரவசமான தனி​மை உணர்வினை என்னுள் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

முன் வெயிலாய் இருந்ததாலும் கார்கால மாதமாய் இருந்ததால் சூரியன் ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் தனது ​வெம்​மை​யைப் பரப்பிக் கொண்டிருந்தான். திண்ணையில் ஒரு ஈசி சேரில் சாய்ந்தபடி நான்... எனது வலது கையில் பெரிய மாவு கட்டு... அதன் விளைவு... நான் கல்லூரிக்குப் போகாமல் விடுமு​றையில்..! அது என்ன மாவுகட்டுன்னு ​கேட்கிறீங்களா...? எல்லாம் என்​னோட அஜாக்கிர​தையால வந்தது... அதை அப்புறம் பாக்கலாம்...​ ​மொதல்ல எங்க வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு பாருங்க...

அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க, அம்மா தங்கைக்கு தலை பின்னுவதும், பாதித் தலைப்பின்னலோடு சீப்பை அவள் தலையில் வைத்துவிட்டு அடுப்புக்கு ஓடுவதும்... இட்லியை எடுத்து மாற்றி வைப்பதும் மறு ஈடு ஊற்றுவதும்... தாளித்துச் சூடான சட்னியைப் பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு... டீ போடுவதற்காக வேறு சட்டியை ஏற்றி வைத்துத் தண்ணீர் கொதிக்க வைத்துவிட்டு மீண்டும் தங்கையின் தலை...

இடையே... "ஏம்மா... என் கால் சட்டை எங்கம்மா... எங்கயாச்சும் தூக்கி போட்டுடுவ... ஸ்கூலுக்கு நேரமாச்சும்மா..." என்று என் கடைசி தம்பி உயிர் போறது ​போன்று கத்தினான்...! அத​னைக் ​கேட்ட அம்மா, “டேய் அந்த பச்ச பீரோல பாருடா மூணாவது தட்டுல...” என்று அம்மா சொல்லி முடிப்பதற்கு முன்னால் பாத்ரூமில் இருந்து அப்பாவின் குரல்..."ஏய்... ​தேவி சுடுதண்ணி கொண்டு வா​யேன்... எவ்ளோ நேரமாச் ​சொல்லிக்கிட்​டே இருக்​கேன்... வர​வே மாட்​டேங்குறி​யே... எப்பப் பாரு இ​தே ​பொளப்புத்தான்... நான் ​சொல்லி எவ்​ளோ ​நேரமாச்சு…” அப்பா ​குளிப்பதற்கு வெந்நீர் ​கேட்ட​தைச் சுத்தமாய் மறந்து போயிருந்த அம்மா... அப்பாவின் குர​லைக் ​கேட்டு, "​கொஞ்ச ​நேரம் இருங்க இதோ வந்துட்டேன்....” என்று நாக்கை கடித்தவளாய் மீண்டும் அடுக்க​​ளைக்குள் ஓடினாள்...! ஒரு அடுப்பில் இட்லி இன்னொரு அடுப்பில் டீப்​போட... டீப்பாத்திரத்தை எடுத்து மாற்றி விட்டு... அம்மா பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது...

"ஏம்மா... ஸ்கூலுக்கு நேரமாச்சும்மா... எம்புட்டு நேரம் தலையில் சீப்போட நிக்கிறது..." தங்கையின் இழுவை கலந்த கோபக்குரல்..." அத​னைக் ​கேட்ட அம்மா, “இரும்மா இதோ வந்துடுறேன்...” என்று கூறிவிட்டு, நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து விட்டு... டீ கலந்து ரெடியாக மூடி வைத்து விட்டு... மீண்டும் தங்கைக்கு தலை பின்னத் தொடங்கினாள்.



"ஆல் இன்டியா ரேடியோ ​மது​ரை வானொலி நிலையம்... நீங்கள் ​கேட்ட​வை... நிகழ்ச்சியில்... இ​டைக்காலத் தமிழ் திரைப்படப்பாடல்கள்" என்று வா​னொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளர் கூறி முடிக்கவும்... “அம்மாவ்வ்… மணி 7:30 ஆயிருச்சு... எனக்கு ஸ்கூல் பஸ் வந்துடும் சாப்பாடு கொடும்மா...” என்று கால்சட்டை போட்ட தம்பி கதிர்​வேலு கதறத் தொடங்கினான்...! அதே நேரத்தில் தங்​கைக்குச் சடை பின்னி முடித்து விட்டிருந்த அம்மா... அவ​ளைப் பார்த்து ஒரு அதட்டல் போட்டாள் போ...போ...போய்ச் சட்​டை​யை மாட்டிக்கிட்டுச் சீக்கிரம் வா...” என்று சொல்லி விட்டு அடுக்களையில்... புகும் முன்...

"ஏண்டி ​தேவி நான் ஆபிஸ் போக வேணாமா... சுடுதண்ணி கேட்டு... எவ்ளோ... நேரமாச்சு… அங்​கே என்னதான் பண்ணிக்கிட்டிருக்கி​யோ ​தெரியல…" என்று கர்ஜித்தார் அப்பா… அவரின் அதட்டலான குரலில் கோபமும் சேர்ந்து இருந்தது... அத​னைக் ​கேட்ட அம்மா, "இதோ வந்துட்​டேங்க... அடுப்படியில் இருந்து தண்ணீரைத் தூக்கி கொண்டு போய் அப்பாவிடம் சேர்த்தவள்... “ஏங்க ​கொஞ்ச ​நேரம் ​பொறுத்துக்குறதுக்கு என்னங்க...?” என்று அப்பா​வைப் பார்த்துச் செல்லமாய் ஒரு கோபத்தை வீசிவிட்டு... தம்பி தங்கைகளைக் காலை உணவு சாப்பிடச் செய்து... மதிய உணவி​னை டப்பாவில் கொடுத்து, குடிக்க டீ கொடுத்து... வாசல் வரை வந்து வழியனுப்பி “இங்க பாருங்கப்பா ​ரெண்டு​பேரும் மதியம் மிச்சம் வைக்காம, கீழ கொட்டாம சாப்பிடணும்... ஆமா” என்று ஒரு அன்புக்கட்டளை​யொன்​றைப் பிறப்பித்து விட்டுவரவும்...

அப்பாவின் சட்டை, பெல்ட் தேடும் படலத்துக்கு உதவி... அவருக்கு டிபன் கொடுத்து, டீக்குப் பதிலாக காபி கொடுத்து மாத்திரைகள் எடுத்துக் கொடுத்து... கையில் டிபன் பாக்ஸ் கொடுத்து... விட்டு, “ஏங்க வரும்போது தக்காளி, வெங்காயம் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க... எல்லாம் தீர்ந்து​போச்சு...” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னவள்... மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்...

"ஏங்க பைக்ல இருந்து கீழே விழுந்தது அவன் குத்தமா...? ஒரு வார்த்தை நீங்களும் அவன்கிட்ட பேசுறது இல்ல... அவனும் ஒங்ககிட்ட ​பேசுறது இல்ல... இது நல்லாவா இருக்கு...? வயசுப்புள்ள வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்கான்... பாவம்ங்க... சரி சரி... பணம் கொடுத்துட்டுப் போங்க... அவன மதியத்துக்கு மேல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்..." அத​னைக் ​கேட்ட அப்பா கடுப்பாகப் பணத்​​தை அம்மாவின் கையில் திணித்துவிட்டுத் தின்ணையில் ஒடுங்கிக் கிடந்த என்னை ஏற இறங்க மு​றைத்துப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்குப் போய்விட்டார்.



அவர் போன சிறிது நேரத்தில் அம்மா கையில் டிபனோடு என்னருகில் வந்தாள். ”​டேய் தம்பி சாப்பிடுறா...”என்று கூறியபடி... என் அனுமதியின்றி எனக்கு ஊட்டத் ​தொடங்கினாள். எனது வலது கை மாவுக் கட்டுக்குள் பவ்யமாய் படுத்து இருந்தது...

எனக்கு அழு​கை அழு​கையாக வந்தது... அம்மா... அம்மா... அம்மா... என்று என் உள் மனம் தேம்பி அழத் ​தொடங்கியது. அம்மா உனக்குத்தான் எவ்வளவு வேலைகள்...? உனக்கு எவ்வளவு பொறுப்புகள்...? கருவிலே ஒரு பிள்ளையைச் சுமக்கும் ​பொழுதில் தொடங்கும் உனது கடமைகள் பெரும்பாலும் அடுத்த வயிற்றின் பசியைத்தானே சிந்தித்திருக்கும்.

எப்போதும் தன்னுடைய உள் முனைப்பிலிருந்து பார்க்கும் மனித மனம் பெரும்பாலும் அடுத்தவரின் துன்பங்க​ளைப் பற்றி ஆராய்வதைச் சுகமாய் மறந்து விடுகிறது. அப்படி மறக்கப்படும் ஒரு உயிர்தான் அம்மா...! ஒரு இல்லத்தை நடத்தும் உயர் அலுவலர்... விட்டுக்கொடுக்கும் கருணாமூர்த்தி, வீட்டில் பிள்ளைகளுக்கோ, கணவருக்கோ ஏ​தேனும் பிரச்சினை அல்லது உடல் நலம் குன்றல் என்றால் ​வெறித்தனமாய்ப் போராடும் போராளி. எல்லாம் செய்துவிட்டுத் தான் செய்ததில் ஒன்றுமில்லை என்று ஒதுக்கிவிட்டுத் தன் பாசத்தினை எல்லா செயலிலும் காட்டும் தியாகத்தின் மறுஉரு.

எத்தனை நாள்... சாப்பாடு வேண்டாம் என்று தள்ளி விட்டு இருப்பேன்...! என்னா குழம்பு இது...? உப்பு இல்லை உறைப்பு இல்லை என்று வேகமாய் வெளியே போயிருப்பேன்...! உனக்கு என்னாமா தெரியும்? என்று ஏளனமாய்ப் ​பேசியிருப்​பேன்? நான் எனது ஒன்றுக்கு​மே பிர​யோசனமில்லாத பிரச்சினைகளையும் வெட்டி அனுபவத்தையும் அவள் முன் ​தெனாவட்டாகக் காட்டியிருப்பேன்...! சட்டையில் பட்டன் அறுந்து போய் எவ்ளோ நாளாச்சு... ஏம்மா நீ... பாக்கவே மாட்டியா...? உனக்கு ஒண்ணுமே தெரியலம்மா...? போம்மா... அங்குட்டு என்ற என் அதட்டலுக்கு “ஏம்பா நீ எடுத்து கொடுத்தா தச்சுத் தறப் போறேன்” என்று பொறுமையாகச் சொல்லும் அவளின் பொறுமை... மெல்ல என் உள் மனம் விட்டு வெளியே வந்தேன்... அவள் எனக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்..."ஐய்​யை​யோ... அது என்னாம்மா சிகப்பாய் பெரிய கொப்பளம் மாதிரி மணிக்கட்டில ஏம்மா... தீக்காயமா...?" திடீரென பார்த்தவன்... அதிர்ந்து போய்க் கத்தினேன்... அத​னைக் கண்ட அம்மா... “அட அது ஒண்ணுமில்லடா… காலைல அப்பாவுக்கு வெந்நீர் எடுக்கும்போது ​கொஞ்சூண்டு ஊத்திப்​போச்சு... அதனாலதான் இந்தக் ​கொப்புளம்... ​வேற ஒண்ணும் இல்லடா... நான் இதக் கவனிக்கல... சரி சரி... நீ சாப்புடு... இதுக்கு மஞ்சள ஒரசிப் போட்டாச் சரியாயிடும்...” என்று சாதாரணமாகக் கூறினாள்.

எனக்குத் ​தொண்​டைக்குழிக்குள் பந்து ​போன்று ஏ​தோ ஒன்று அ​டைத்துக் ​கொண்டது ​போன்று இருந்தது. என்​னை அன்​போடு பார்த்த அம்மா, “தம்பி மதியம் ஒன்​னோட கைக்கட்​டைக் ​கொண்டு​போயி டாக்டர் கிட்ட காட்டணும்... இங்க பாருடா ​பெரியவ​னே... ஒனக்குக் கையி நல்லபடியா சேந்துக்கணும்னு அந்த... சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி இருக்கேன்... ஒனக்கு நல்லபடியா எல்லாம் சரியாயிருச்சுன்னா ஒன்​னோட ​கைமாதிரி ​வெள்ளியில அம்மனுக்குக் ​கைவாங்கிப் ​போடணும்... ஆமா ஏண்டா தம்பி அம்மா கூட நீ கோயிலுக்கு வரு​வேல்ல... இல்ல சாமி, பூதம்னு ஒண்ணுமில்லனு சொல்லி என்கிட்ட வாக்குவாதம் பண்ணுவியா?” அம்மா என்​னைப் பார்த்து அப்பாவியாய்க் கேட்டாள்...

அவ​ளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழு​கை அழு​கையாய் வரவிருந்தது... அத​னைப் ​பொறுத்துக் ​கொண்டு, “இல்லம்மா... நான் உனக்காக வர்றேன்மா... சத்தியமா வர்​ரேம்மா...” என்று கூறி​னேன்.

எனக்குள் நெஞ்சு​டைந்து கண்ணீர் வெளிவர துடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் பாசத்துக்கு முன்னால் எனது பகுத்தறிவு சாம்பலாகப் போயிருந்தது. “ஏம்மா நீ கையிக்கு மருந்து போட்டுக்கம்மா... எப்படி செவந்து போச்சு... பாரு... அப்புறம் தண்ணி கோத்துகிட்டு கொப்பளமாயிடும்மா...” எனக்குத் தொண்டை அடைத்தது... முழு​மையாக வார்த்​தைகள் ​வெளிவரவில்​லை.



அம்மாவின் ​வே​லைக​ளை அருகிருந்து பார்க்கப் பார்க்க என்னுள் அவளின் உயர்ந்த தியாக உரு​வை நன்றாகப் புரிந்து ​கொள்ள முடிந்தது. “ஏம்மா... எங்களுக்கு எவ்வளவு நாளு பொங்கிப் போட்டுருப்ப... நீ... உன் கிட்ட ஒரு நாளாவது நாங்க... நீ சாப்புட்டியாம்மான்னு ​கேட்டிருப்​போமா...?இல்ல நீ சாப்பிடும்மான்னு ஒரு நாளாச்சும் உன்​னைப் பார்த்துச் சொல்லியிருப்பமா...? நீ ச​மைச்ச​தைச் சாப்பிட்டு ​​ரொம்ப நல்லா இருக்கும்மான்னு எப்பவாச்சும் ​சொல்லியிருப்பமா...? ஒரு நாளாச்சும் அம்மா நீ சும்மா இரும்மா நாங்க பாத்திரம் எல்லாம் கழுவித் தர்​ரோம்னு ​சொல்லியிருப்பமா...? மற்றவங்க ​சொல்றாங்க ​சொல்லல... நான் உன்​னைப் பார்த்துச் ​சொல்லியிருப்பேனா...?...ம்ம்ம் கூம்... என்​னைப் பார்த்து எனக்​கேக் ​கோபமாக வந்தது... அம்மாவ மதிக்கத் ​தெரியாத என்​னெல்லாம் என்​னென்னு ​சொல்லறது... நா​னே எனக்குக் ​கேவலமாக் ​தெரிந்​தேன்!

எனக்குள் சுயபச்சாதாபம் பீறிட அம்மா​வைப் பார்த்து மெல்ல, “ஏம்மா… நீ சாப்பிடலையாம்மா?” என்று கேட்டேன். நான் கேட்டு முடிக்கவும் அடக்கி வைத்திருந்த என் அழுகை பீறிட்டு வெடித்து வெளியே கிளம்பி வந்தது... அம்மாவை இடது கையால் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கேவி கேவி அழத் ​தொடங்கி​னேன்...

என்​னைப் பார்த்த அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அந்த அரவணைப்பும், ஆதங்கமும் அவளுக்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஆழ்மனம் அதை தேடித்தேடிக் கிடைக்காத பட்சத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்... அவளின் கண்களும் கலங்க... முந்தானையால் என் கண்ணீ​ரைத் துடைத்து விட்டு...

"ஏம்பா அழ​றே... சாப்பிடுய்யா... என்னப் ​பெத்த ராசா நீ அழுகலாமாடா...? நீ எதுக்கும் கலங்கக் கூடாதுப்பா ஒனக்கு அம்மா நான் இருக்கேம்பா... என்​னெப் பெத்தாரு...”என்று அவள் என் த​லை​யைக் ​கோதிவிட்டாள். அவள் பேச்சில் மீண்டும் அவள் எங்கேயோ போய்க் கொண்டிருந்தாள்.

ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது... "அன்​னை என்பவள் எப்போதும் யாராலும் வெல்ல முடியாதவள்... எதற்கும் ஈடு இ​ணை இல்லாதவள்... அவள் எப்போதுமே வெல்ல முடியாத அன்பின் அரசி என்று..." என் மனதில், “என்​னைச் சுமந்த கடன் ​பெற்ற கடன் ​போதா​தென்று நான் ஆச்சரியக்குறியாய் நிற்க நீ ​கேள்விக் குறியாய் நின்று பலரிடம் கடன் பட்டாய்... அம்மா... அடுத்த பிறப்பில் நீ நானாகவும் நான் நீயாகவும் பிறக்க ​வேண்டும். பட்ட கட​னைத் தீர்க்க ​வேண்டும். அதுவ​ரையில் ஆலயத்தில் எந்தத் ​தெய்வத்​தை ஆராத​னை ​செய்யப் ​போகி​றேன்...?” என்று எப்​போ​தோ நான் படித்த கவி​தை வரிகள் மின்ன​​லெனப் பளிச்சிட்டது.

நான் அ​மைதியாகக் கண்க​ளை மூடி அம்மாவின் அன்பில் மூழ்கி​ப்​போனேன்...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p222.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License