இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

எழுத்தறிவித்தவன்

மு​னைவர் சி.​சேதுராமன்


வெளியில் ​சேரில் இருந்து ​கொண்டு கா​லைப்பத்திரிக்​கை​யைப் படித்துக் ​கொண்டிருந்த என்​னை என் மகனின் குரல் ​மேலும் பத்திரிக்​கை​யைப் படிக்க விடாமல் தடுத்தது. என்ன​வென்று வீட்டின் உள்​ளே சற்று எட்டிப் பார்த்​தேன். அங்கு என் ம​னைவி சசிகலா என் மகன் ராமுவிற்கு ​எழுதப் பழகிக் ​கொடுத்துக் ​கொண்டிருந்தாள். சசிகலா இப்படி எழுத ​வேண்டும் என்று ​சொல்ல ஆனால் என் மகன் ராமு​வோ மறுக்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இத​னை அ​மைதியாகப் பார்த்துக் ​கொண்டிருந்​தேன் நான்.

"​​டேய் ராமு இது மாதிரி எழுதுறது தப்புடா... இங்க பாரு, அம்மா எப்படி எழுத​றேண்ணு... இப்படி எழுதணும்டா..." என்ற என் ம​னைவி​யைப் பார்த்து என்மகன், "அம்மா ஒனக்கு ஒண்ணும் ​தெரிய​லே…நீ தான் தப்புத் தப்பா எழுத​றே... எங்க ரங்கசாமி சார் இப்படி தான் சொல்லி குடுத்தாங்க"

"உங்க சார் தப்பாச் சொல்லி குடுத்தாலும் அதான் சரியாடா" என சசிகலா கோபமாய்க் கேட்க

"ஆமா, எங்க சார் சொல்றது தான் கரெக்ட், நீ எழுதறது தப்பும்மா" என நாலு வயது ராமு தர்க்கம் செய்ய

"அடி வாங்கப் போறடா ராமு இப்ப, சொன்னா கேக்கணும்" என அவ​னை அடிப்பதற்குக் கை ஓங்கினாள் சசிகலா.

"ஏய் சசி, என்னது?" என என் ம​னைவி​யை நான் தடுத்​தேன்.

"பின்ன என்னங்க? சார் தப்பாச் சொல்லிக் குடுத்து இருக்காங்கனு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறான்"

"​கொழந்​தைங்க அப்படித்தான் இருப்பாங்க. தன்னோட சார்தான் எ​தையும் சரியாச் ​செய்வார்னு நினைக்கற பருவம் இது. அதைப்​போயி நீ ​கெடுத்துடாத... ​பேசாம விட்டுரு..." என்​றேன்.

அதற்கு அவ​ளோ, "ஏன் நீங்களும் இப்படித்தான் உங்க சார் ​மேல பைத்தியமா இருந்தீங்களா?" என சசிகலா கேட்க, எனக்கு ஒடனே ​ரெங்கசாமி சாரின் முகம் கண் முன்​னே வந்து நின்றது.

"எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் அப்படி ஒரு சாரு இருப்பாங்க சசி. எனக்கு என்னோட ​ரெங்கசாமி சார் அப்படித்தான், அவங்ககிட்ட படிக்கற எல்லாரையும் அவரு தன்​னோட சொந்தப் பிள்ளைங்க மாதிரிதான் பாப்பாங்க. ஆசிரியர் வேலையை ஒரு தவம் மாதிரி செஞ்சவங்க அவங்க. என்னோட படிச்ச நெறைய பேர் இன்னைக்கி நல்ல நிலைல இருக்கறதுக்கு அவங்களோட நல்ல வழிக்காட்டுதல்தான் முக்கியக் காரணம். அந்த சார்​மேல நான் ​ரொம்பப் பைத்தியமா இருந்தேன். அவரு எ​தைச் ​சொன்னாலும் ​செஞ்சுரு​வேன். இதுனால அப்பாகிட்ட நல்லா ஒ​தை​யெல்லாம் வாங்கிருக்​கேன்...” என என் பழைய நினைவுப்பரணில் துலாவி எடுத்து அதன் பக்கங்க​ளைப் புரட்டி​னேன்.



இத​னைக் ​கேட்ட என் ம​னைவி சசிகலா, "ஆரம்பிச்சுட்டீங்களா ஒங்க ​ரெங்கசாமி சார் புராணத்த... கல்யாணமாகி வந்த இந்தப் பத்துவருசத்துல பத்தாயிரம் தட​வை கேட்டாச்சு, ஒங்க சா​ரையும் ஊருக்குப் போறப்பவெல்லாம் பாத்துட்டுத்தானே இருக்கோம். அது சரி, இப்ப ராமுவுக்குச் சப்போர்ட் பண்றதுக்கு வேற எதாச்சும் உள்காரணம் இருக்கோனு சந்தேகம் வருது எனக்கு" என சசிகலா பொய் கோபத்துடன் ​கேட்டுவிட்டு முறைத்துவிட்டு அடுக்க​ளைக்குள் ​சென்றாள்.

​ சென்ற முறை ஊருக்குச் சென்றபோது ​ரெங்கசாமி சா​ரைச் சந்தித்த நினைவு எனது கண் முன் ​மெல்ல ​மெல்ல விரிந்தது

​ வேப்ப மரத்தின் நிழலில் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து, ஒரு பக்கம் கழண்டுவிட்ட மூக்குக் கண்ணாடியை வலது கையில் தாங்கியபடி, மறுகையில் நாளிதழைப் பிடித்து ஊன்றிப் படித்துக் கொண்டிருந்தார் ​ரெங்கசாமி சார். அந்தக்கோலத்தைக் கலைக்க மனமின்றி தன் மகனையும் அமைதியாய் இருக்கச் சொல்லிச் ​சைகை காட்டி விட்டு அவ​ரை ரசித்தபடி நின்​றேன்.

சற்று நேரத்தில் அருகில் சலனம் உணர்ந்து தலை உயர்த்திய ஆசிரியர், ஒரு கணம் என்​னைப் பார்த்துவிட்டு நான் யாரெனப் புரியாமல் கண் இடுங்க பார்த்தவர், புரிந்ததும் புன்னகை விரிய பத்து வயது குறைந்தது போல் உற்சாகத்துடன் "டேய் சாமிநாதா, ​சென்​னையில இருந்து எப்ப வந்த? வாம்மா சசிகலா. ஏய் குட்டிப் ​பையா, வா வா வா. உனக்குக் குடுக்க ஒண்ணுமில்லையே. சத்த இருங்க. கடைக்குப் போயிட்டு வந்துடறேன்" எனக் கிளம்பியவரை நான் தடுத்​தேன்.

"ஒண்ணும் வேண்டாம் சார், நீங்க உக்காருங்க. உங்கள பாக்கணும்னுதான் வந்தோம். என்னாச்சு சார்? கண்ணு சரியா தெரியரதில்லையா?" என நான் கவலையாய் கேட்க

அவ​ரோ, "வயசாச்சில்ல... இதோ, ஒனக்கே ஒண்ணு ரெண்டு நரை எட்டி பாக்குதே" என என்​னைக் கேலி செய்து சிரித்தார். அவரைப் பார்த்து ராமுவும் சிரிக்க, "சுட்டிப் பய​லே, ஸ்கூலுக்குப் போறியா? ஒங்க அப்பா ஒன்ன மாதிரி இருக்கறப்ப இருந்தே எனக்கு தெரியும்" என வாஞ்சையாய் என்​னைப் பார்த்தவர்

"போன வருஷம் பாத்ததுக்கு இப்ப மெலிஞ்சுட்டடா சாமிநாதா... வேலை ​ரொம்ப அதிகமோ? ஏம்மா சசிகலா, ஒன்​னோட வீட்டுக்காரன் நேரத்துக்கு ஒழுங்காச் சாப்பிடறது இல்லையா?" என அக்கறையாய் விசாரித்தார்

"இல்ல சார்... வேலை வேலைன்னு நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்ல, நீங்க சொன்னாக்க கேக்கராறானு பாப்போம்" என கிடைத்த சாக்கில் அவரிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் என் ம​னைவி சசிகலா.

"சரி சரி, நின்னுட்டே இருக்கீங்களே, ஒக்காருங்க, இதோ வரேன்" என நான் தடுத்தும் கேளாமல் சென்றவர், பிஸ்கட் பழம் என வாங்கி வந்து தட்டில் ​வைத்து எங்கள் முன் ​வைத்தார்.

"எதுக்கு சார் இதெல்லாம்? இப்பத்தான் சாப்டுட்டு வரோம்" என நான் சொல்ல...

"ஏன் சாப்டுட்டு வரே? நம்ம வீட்டுல ஒங்க அம்மா சமைச்சுப் போடமாட்டாளா? ஏண்டா சின்ன வசயசி​லேர்ந்​தே என்​னோட ம​னைவி வெக்கற வத்தக்கொழம்புன்னா ஒனக்கு உசுரு. இது ஒனக்குத் தெரியுமா சசிகலா? உங்க வீட்டுல வத்தக்கொழம்பு சாப்ட்டுச் சாப்ட்டுத் தான் கணக்குல நூறு மார்க் வாங்கினேன்னு என்​னை ஐஸ் வெப்பானாக்கும்" என ஏதோ தன் சொந்த மக​னைப்பற்றி பேசுவது போல் விலாவரியாகக் கூறினார் ​ரெங்கசாமி சார்.

நான் எதுவும் பேசாமல் ரசித்தபடி இருந்​தேன்.

அவர் ​பேசுவ​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்த நான் அவ​ரைப் பார்த்து, "ஏன்சார் டாக்டர்கிட்ட போனீங்களா? ஒங்க ஒடம்புக்கு இப்ப பரவாயில்லையா சார்?" என்று விசாரித்​தேன்.

"வயசானா எல்லாமும்தான் வரும், அதையெல்லாம் நினைக்காம இருக்க வேண்டியதுதான். எவ்ளோ நாளாச்சுடா உன்னைப் பார்த்து, ஒரு வருஷம் இருக்குமல்ல சாமிநாதா" என்று பாசத்துடன் என் தோளில் கை​யைப் ​போட்டவ​ரை அன்புடன் பார்த்​தேன்.

"ஆமாசார், வேலை அதிகம். அதோட இப்ப என்​னோட அம்மாவும் அப்பாவும் எங்களோடவே ​சென்​னையில இருக்கறதால அடிக்கடி இங்க வர முடியல" என்​றேன்.

"சரிப்பா, எங்க இருந்தாலும் நீங்கெல்லாம் நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு" என என்​னை வாழ்த்தினார்.

​ செல்​போன் சிணுங்கியது. ​செல்​போனின் சிணுங்கலில் என்னு​டைய ப​ழைய நி​னைவுகளிலிருந்து மீண்​டேன். ​

​செல்லில் எனது நண்பன் கண்ணனின் குர​லைக் ​கேட்டவுடன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உள்ளப்பூரிப்புடன் "டேய் கண்ணா ... எப்படீடா இருக்க?" என்​றேன். அதற்கு அவ​னோ, “ஏ​​தோ இருக்கேண்டா" என்றான். எனக்கு ஒரு மாதிரியாகப் ​போய்விட்டது. பதறிப்​போய், "என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியாப் பேசற?" என்​றேன். அதற்கு அவன் "​டேய் சாமிநாதா நம்ம ​ரெங்கசாமி சார் நம்ம விட்டுட்டுப் ​போயிட்டார்டா...? என்றான் தழுதழுத்த குரலில்.



எனக்குத் தூக்கி வாரிப்​போட்டது.

" டேய் என்னடா சொல்ற?" என நான் பதறிப்​போய் அதிர்ச்சியில் உறைந்​தேன். என்​னைப் பார்த்த என் ம​னைவி சசிகலா பயந்து ​போய், "ஏங்க என்னங்க... என்னாச்சு?" என பதறியபடி வந்தாள்.

ஒன்றுமில்லை என்பதுபோல் ஜாடை காட்டிய நான், ஏனோ பேச இயலாமல் தொண்டையை அடைப்பது போல் இருக்க "தண்ணீர் வேண்டும்?" என சசிகலாவிடம் கை அசைவில் கேட்​டேன்.

என் ம​னைவி அவ்விடத்தி​னை விட்டு அகன்றதும் "என்ன ஆச்சு கண்ணா? எப்போ? நீ இப்ப நம்ம ஊர்ல தான இருக்க?" என்று ​கேட்​டேன்.

"ஆமாடா நான் நம்ம ஊர்லதான் இருக்​கேன். என்​னோட அம்மாவுக்குக் கண் ஆபரேஷன் பண்ணி இருக்குன்னு பாக்க ஊருக்கு வந்தேன். வந்ததும் தம்பிதான் சொன்னான், ​ரெங்கசாமி சாருக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க. நம்ம க்ளாஸ்மேட்ஸ் எல்லாரும் இங்கதான் இருக்காங்க. நீ ​சென்​னையில இருந்து வரமுடியாதுன்னு தெரியும், ஆனா ஒனக்கு ​ரெங்கசாமி சார்னா ரொம்பப் பிடிக்குமேன்னுதான் சொல்லணும்னு கூப்ட்டேன். இன்னக்கிச் சாயங்காலம் ஆறு மணிக்கி காரியம் பண்றதாச் சொன்னாங்க"

அதன் பின் ஒரு நிமிடம் கூட நான் வீணாக்காமல் அடுத்த நான்கு மணி நேரத்தில் ​சென்​னையிலிருந்து பி​ளைட்டில் வந்து பின்னர் காரில் எனது ஊருக்கு வந்துவிட்​டேன். சாவு வீட்டின் சாயல் இன்றி ஏதோ ​போக்களம் போல் ஆண் பெண் பாகுபாடின்றி சிலர் வாக்குவாதத்தில் இருந்ததை பார்த்துக் குழம்பிப் போய் நின்​றேன் நான்.

தன் ஆசிரியரின் முகத்தைக் கடைசியாய் ஒரு முறை பார்க்க விழைந்த எனக்கு என்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்து கரகர​வென கன்னங்களில் வழிந்​தோடியது.

ஆதரவாய் ஒரு கரம் தோளில் விழ நான் திரும்பிப் பார்த்​தேன். அங்கு கண்ணன் நின்றிருந்தான் அவ​னைப் பார்த்து, "டேய் கண்ணா... உயிரோட இருந்தா இத்தனைக்கு எவ்ளோ ஆசையா அதை சாப்டு இதை சாப்டுனு... ​சொல்லுவாரு... இப்ப..." என அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தி​​னேன் நான்.

அதற்குள் கூட்டத்தில் வாய்ச்சண்டையாய் இருந்தது கை கலப்புக்குச் செல்ல "என்ன ஆச்சு கண்ணா? ஏன் இப்படி இவங்க சண்டை போட்டுக்கறாங்க?" என்​று புரியாமல் ​கேட்​டேன்.

அவ​னோ, "வேற என்னடா, எல்லாம் சொத்துப்பிரச்சனை தான். சாரோட பசங்க ரெண்டு பேரும் வீடு அவங்க பேருக்கு தான் வரணும்னு தகராறு பண்றாங்க, இல்லைனா கொள்ளி வெக்க மாட்டோம்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க... என்ன ​ஜென்மங்க​​ளோ..." என்று ​வேத​னை​யோடு கூறினான் கண்ணன்.

எனக்கு அ​தைக் ​கேட்டவுடன் கடு​மையான ​கோபம் வந்துவிட்டது. "என்னமாதிரி எத்த​னை​யோ ​பே​ரை உருவாக்கிவிட்ட இந்த மனுசனுக்குக் ​கொள்ளி ​போட பங்கு​போட்டுக்கிட்டு நாறப்​போடுறீங்க​ளே இது நியாயமா...? இப்ப எல்லாரும் சண்​டைய நிறுத்துங்க...?” என்று நான் கத்தவும்

"இங்க நடக்கற சண்​டையில இ​டையில யார் இவன்?" என்பது போல் எல்லோரும் என்​னை​யே பார்க்கத் ​தொடங்கினர். அதற்குள் ​ரெங்கசாமி சாரின் மூத்த மகன் ​வேகமாக ஓடிவந்து என் முன்பாக நின்று ​கொண்டு, "ஏன்டா எங்க வீட்ல வந்து நின்னுகிட்டு எங்கள நிறுத்த சொல்றதுக்கு நீ யார்ரா?" என என் மீது பாய்ந்தான். "நான் ​ரெங்கசாமி சாருகிட்ட படிச்சவன். தயவு செஞ்சு ஒங்க சண்டைய ஒதுக்கி வெச்சுட்டு சாருக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்யுங்க, அவங்க ஆத்மாவ நிம்மதியா போக விடுங்க... ஒங்க அம்மாவைப் பாருங்க... எவ்வளவு கண்ணீரும் கம்ப​லையுமா நின்னு கதறுராங்க... அதப் பாத்துக்கூட ஒங்களுக்கு மனசு இரங்கலியா...?" என கெஞ்சுவது போல் கூறி​னேன் நான்.

"உன்னோட புத்திமதி இங்க யாருக்கும் தேவை இல்ல. வீடு என் பேருக்குத்தான் வரணும், எனக்குத்தான் கொள்ளி வெக்கற உரிமை இருக்கு. இல்லைன்னா இந்தக் கெழவ​ன் அனா​தைப் பொணமாத்தான் ​கெடந்து நாறப்​போறான்... ஆமா..." என்றான் இரண்டாவது மகன்.



அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க இயலாமல் அவனை ஓங்கி அறைந்​தேன் நான். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து ​போய் நிற்க "மனுசனாடா நீ... ச்சே. பெத்த அப்பன அனாதப்பொணம்னு சொல்ற நீ உயிரோட இருந்தும் ​பொணம்டா. நீ கொள்ளி வெச்சா எங்க சாரோட ஆத்மா நிம்மதியாப் போகாது. நீங்க கொள்ளி வெக்கலைனா அவங்களுக்கு யாரும் இல்லையா? ஆயிரக்கணக்குல இருக்கோம், அவங்ககிட்ட படிச்ச புள்ளைங்க. பெத்தபுள்ளை வெக்காட்டி என்ன, பெறாதபுள்ள நான் வெக்கறேன் என்​னோட அப்பாவுக்கு கொள்ளி. போடா வெளிய" எனக் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளி​னேன் நான்.

"டேய்..." என மறுபடி என்​னைப் பார்த்துப் பாய்ந்து வந்தவ​னைப் பார்த்து, “என்​னைய உருவாக்கினவருடா இந்த ​ரெங்கசாமி சாரு. இன்னக்கி ஐபிஎஸ் அதிகாரியா நான் இருக்கறதுக்கு அவருதாண்டா காரணம்... என்​னோட பவர அவங்க ​சொந்த பந்தங்ககிட்ட​யே காட்ட வச்சிறாதீங்க... அந்தத் தெய்வத்தோட மகன்ங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன். இல்லைனா நீதான்டா இப்ப அனாதப் பொணமாப் போவ..." என்று கூறவும், போலீஸ் என்ற வார்த்தையில் பயந்து பின்வாங்கினான் சாரின் இரண்டாவது மகன்.

அதன் பின் மளமள​வென்று அமைதியாய்க் காரியங்கள் நடந்தன. சொன்னது போல் நா​னே ​ரெங்கசாமியின் மகனாக இருந்து என் ஆசிரியருக்கு இறுதி மரியாதையைச் செய்​தேன். ஊரே வியக்கும் வண்ணம் சாரின் இறுதி ஊர்வலம் நடத்தி​னேன். அதோடு என் செல்வாக்கைப் பயன்படுத்தி சார் இருந்த வீட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாதபடி செய்​தேன். ​ரெங்கசாமிசாரின் ம​னைவிக்கு ​வேண்டிய​தையும் நானும் என் நண்பர்களும் ​செய்​தோம். ஆயிற்று மறுவருடம் வருவதற்குள் அந்த அம்மாவும் சார் ​போன இடத்திற்​கே ​போய்விட்டார்.

காலம் வேகமாய்ச் சென்றது. ​ரெங்கசாமி சார் இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு நாள் திடீரென அந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு விழாக்கோலம் பூண்டது.

ஆர்வமாய் வீட்டின் முன் ஊர்மக்கள் கூடி இருக்க, நான் ஒலிபெருக்கியில் பேசத் தொடங்கினான் "எல்லாருக்கும் வணக்கம். என் பேரு சாமிநாதன். ​ரெங்கசாமி சாரின் பிள்ளைகளில் ஒருத்தன். எங்க அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தவிட்டு போயி அடுத்தடுத்து ஒரு வருஷம் ஆச்சு. இந்த நாளுல அவங்க வாழ்ந்த இந்தவீடு இனிமே இலவச நூலகமா செயல்படும்னு எல்லார் சார்பாவும் தெரிவிக்கறேன். அதோட அவங்ககிட்ட படிச்சவங்க எல்லாரும் சேந்து ஒரு கல்வி அறக்கட்டளை ஆரம்பிச்சு இருக்கோம். பிள்ளைககிட்ட இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்து அவங்கள வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா இல்லாம நல்ல மனுசங்களாவும் உருவாக்கினவங்க எங்க ​ரெங்கசாமி சார். என்னை போல... எத்தனையோ ஐபிஎஸ்., ஐஏஎஸ்'களை உருவாக்கின ஆத்மாவோட நினைவா இந்த அறக்கட்டளைய உருவாக்குவதின் நோக்கம் திறமை இருந்தும் வசதி இல்லாத பிள்ளைங்களை படிக்க வெக்கறது தான். ​ரெங்கசாமி கல்வி அறக்கட்டளைய திறந்து வெக்கறதுக்கு நம்ம பள்ளியின் த​லை​மையாசிரியர் கமலக்கண்ணன் சாரை அன்போடு அழைக்கிறேன்" என உரையை முடித்​தேன் நான்.

"​ரெங்கசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் இலவச நூலகம் - இப்படிக்கு, ​ரெங்கசாமித் தந்​தையின் பெயர் சொல்லும் பிள்ளைகள்" என எழுதி திரையிடபட்டிருந்த பலகையைத் திறந்து வைத்தார் த​லை​மையாசிரியர்.

என்​னையும் எனது நண்பர்க​ளையும் அரூபமாக நின்று என் ஆசிரியரும் அவரது ம​னைவியும் நிச்சயம் வாழ்த்தியிருப்பர். எழுத்தறிவித்தவன் இ​றைவனாகும் என்று நம்ம மூதா​​தையர்கள் ​சொல்லியிருக்காங்கள்ள. அவர்களது வாழ்த்தி​னைக் ​கொண்டுவந்து ​கொடுப்ப​தைப் ​போன்று ம​ழைத்துளிகள் விழத் ​தொடங்கின. கண்கலங்க நானும் என் நண்பர்களும் ​ரெங்கசாமிசாரின் படத்​தை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்​தோம்.

“​தெளிவு குருவின் திரு​மேனி காண்டல்; ​தெளிவு குருவின் திருவார்த்​தை ​கேட்டல்; ​தெளிவு குருவின் திருநாமஞ் ​செப்பல்” என்ற திருமந்திர வரிகள் என்னுள் ஓடியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p223.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License