இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

என்னடா இந்த வாழ்க்கை!

மு​னைவர் சி.​சேதுராமன்


கா​லைப் ​பொழுது விடிந்து பக்கத்து வீடுகளில் உள்​ளோர் எழுந்து அவரவர் ​வே​லைக​ளைப் பார்க்கத் ​தொடங்கியிருந்தனர். ஆனால் காலையில் எழுந்தது​மே வெகுதூரத்தில் அண்ணாம​லை​யை யாரோ திட்டிக் கொண்டிருந்தார்கள். அவள் குரலில் சூ​டேறி இருந்தது. குரலுக்குச் சொந்தக்காரி அவனது மனைவிதான் என்பது தூக்கம் கலைந்த பிறகுதான் அவனுக்குப் புரிந்தது.

“​கொஞ்சங் கூட ​பொறுப்பில்லாம தூங்கிக்கிட்டிருக்கிறதப் பாரு... இந்தா​ளெல்லாம் மனுசனா...? குடும்பம் இருக்​கே, ​பொண்டாட்டி புள்ள இருக்​கேன்னு ​கொஞ்சநாச்சும் கவ​லை இருக்கா... ஒண்ணுமில்​லை... ​சொகமாப் ​போர்​வையப் ​போத்திக்கிட்டுத் தூங்குற மூஞ்சியப் பாரு...” என்று அவள் திட்டியது அவனைத்தான். கவ​லையின்றித் தூங்குகிறானாம்.

வா​டைக்காலம் என்பதால் இன்னும் கொஞ்சநேரம் போர்த்திக் கொண்டு கிடக்கலாம் என்று அண்ணாம​லை ஆசைப்பட்டதற்கு தன் மனைவியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான். அவள் கோபத்துக்குப் பயந்து அவன் எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குத் தன் மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவேப் பயமாக இருந்தது. அன்பாக இருந்த ம​னைவி எப்படி மாறிவிட்டாள்? ​பொருள் மனிதனின் பண்​பை மாற்றிவிடு​மோ? இந்தப் பணம் தன்னு​டைய வாழ்க்​கை​யை​யே ​புரட்டிப் ​போட்டிருச்​சே? முன்​பெல்லாம் அவள் அன்பாக எப்படி​யெல்லாம் நடந்து ​கொண்டிருப்பாள்? இந்த வறு​மை அவ​ளையும் அவ​னையும் படாதபாடுபடுத்தி ப​கை​ கொண்டவர்களாக அல்லவா மாற்றிவிட்டது.

அவளின் அருகாமை அண்ணாம​லையின் மனதினுள் பதற்றத்​தையும் பயத்​தையும் ஏற்படுத்தியது. ம​னைவியிடம் அவன் வீட்டுச்செலவிற்குப் பணம் கொடுத்து ஆறுமாசமாகிறது. அந்தக் கடுப்பில்தான் அவ​னை அவள் கரித்துக் கொட்டுகிறாள்.

பாவம் அவளும்தான் என்ன செய்வாள். என்​னென்ன​மோ ​செய்து பார்க்கிறாள். அவளால் முடியாத பட்சத்தில் தன்னு​டைய ஆத்திரத்​தை வார்த்​தை ​நெருப்புகளால் கணவன் ​மேல் ​கொட்டித் தீர்த்துவிடுகிறாள். கணவனுக்கு வருமானமில்லையென்றால் குடும்ப வண்டி எப்படிச் சீராக ஓடும்? வீட்டில் ஒரு கறவை மாடு இருப்பதால் அவளால் பிள்ளைகளுக்குக் ​கொஞ்சம் கஞ்சியாவது ஊற்ற முடிகிறது. அந்த மாடும் இல்லையென்றால் அதுவும் இல்லாமல் ​போயிருக்கும்... அவளால் அதற்கு​மேல் அந்தக் ​கொடூரத்​தை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தன் அடங்காத கோபத்தை குழந்தைகளிடம் திருப்பினாள். சுருண்டு படுத்திருந்த பெரியவன் முதுகில் பளீரென வைத்தாள். கர்ண கடூரமான குரலெடுத்து அழுதான் பையன். அண்ணாம​லை எரிச்சலடைந்தான். அவனுக்குக் கோபம் சுரீரென்று உச்சி மண்​டைக்கு ஏறியது. அவளை இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்த ​வேண்டும் போல் தோன்றியது.

அவளைப் பார்த்து, "ஏன்டி... ஒனக்கு அறிவிருக்கா...? ​கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாம நடந்துக்கிற... காலங்காத்தால பிள்​ளையப் போட்டு அடிக்கிறி​யே... நீ​யெல்லாம் ஒரு தாயா...?" என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.

அதற்கு அவ​னைப் பார்த்து, "ஆமாய்யா... நா​னெல்லாம் தா​யேயில்​லை... இந்தத் தடிப்பய... படுக்கையில் மூத்திரம் பெய்யுறான்... சூடு சொரணை இல்லாதவனை அடிச்சுத்தான்யா திருத்தணும்..." என்றாள்.

அவன் மீதிருந்த கோபத்தைத்தான் அவள் வேறுவிதத்தில் காட்டுகிறாள். இடத்தை விட்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்தால் அடுத்தடுத்து என்னென்ன பேசுவாளோ? ​தெரியாது என்று பயந்து​போய் அண்ணாம​லை எழுந்து வெளியேறினான்.

வீட்டின் முன்புறம் இருந்த ​வேப்பமரத்தில் ஏறி வேப்பங்குச்சியை ஒடித்துப் பல் விளக்கினான். தலைக்குப் பச்சைத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. அவன் மனைவி அவனுக்காக வெந்நீர் போட்டு வைத்திருந்ததும், தொணதொணவென பேசிக் கொண்டு முதுகு தேய்த்துவிட்ட காலமும் ஒன்று உண்டு. அப்போது அவனுக்கு வருமானம் இருந்தது. எல்லாம் அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நின்றது. ஒரு வருஷமா சரியாப் பிசினஸ் இல்லை. எல்லாம் தலைகீழாக மாறிடுச்சு. பணத்தை வச்சுத்தான் எல்லாமே...இந்த ரியல் எஸ்​டேட் ​தொழில் ஏறுனா ஏறும்... படுத்துக்கிட்டா ​பெரிசாப் படுத்துக்கும்... பெரியதாக ஒரு பிசினஸ் முடிந்தால் எல்லாவற்றையும் சரியாக்கிவிடலாம். இவனும் நாலுபேரைப் பார்ப்பதும் அலைவதுமாகத்தான் இருக்கின்றான். ஆனா ஒண்ணுஞ் ​சொல்றாப்புல இல்​லை. மேலும் இடங்களும் குறைந்து கொண்டே வந்தன.

பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிய அளவில் ஐநூறு, ஆயிரம் ஏக்கரில் வளைத்துப் போடுவதால் சாதாரண சிறிய ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இடம் கிடைப்ப​தென்பது குதி​ரைக் ​கொம்பாகப் ​போய்விட்டது. வேறு வழியில்லை. இதுபோன்ற நெருக்கடியில் போராடித்தான் கரை சேர வேண்டியிருக்கின்றது.

இந்திரா அவனது வேட்டி சட்டை​யை வெளுத்து வைத்திருந்தாள். தொழிலுக்கான சீருடை அது. கையில் டைரி, பாலித்தின் பையில் லே அவுட்களின் படங்கள் சகிதமாக அண்ணாம​லை புறப்பட்டான். அவன் போவதைக் கவலையோடு பார்த்துக் ​கொண்​டே நின்றாள் இந்திரா. அவளுக்குள் மிகுந்த வருத்தம். “பாவம் மனுஷன ரொம்பவும் ​பேசிப்புட்ட​மோ” என்று வருந்தினாள்.

அவளும்தான் என்ன செய்வாள்? அவன் விடிந்ததும் புறப்பட்டானென்றால் வீட்டுக்குத் திரும்பும் நேரம் எதுவும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திப்பது அவள்தான். வாங்கின கடனுக்குப் பதில் சொல்வதும், அரிசி பருப்புக்கு அல்லல்படுவதும் அவள்தானே? ஒரு கறவை மாட்டில் என்ன பெரிதாக கிடைத்துவிடப்​போகிறது?

பொட்டிக் கடை, விறகுக்க​டை, பேக்கரிகளுக்கு ஜாம், எஸன்ஸ் தயாரித்து விற்றது, ஓம வாட்டர் தயாரித்து விற்றது என்று அவனும் நிறையத் தொழில்கள் செய்து பார்த்துவிட்டான். அவற்​றை​யெல்லாம் ​செய்து அலுத்தபின்தான் க​டைசியாக ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறினான். எல்லாம் கொஞ்சநாள் ஓடும். பிறகு படுத்துவிடும். காரணம் புரியாது. எல்லாம் தோல்வியில் முடியக் க​டைசியில் கடன்கள்தான் மிஞ்சின.



மூச்சுத் திணறி ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஏறக்கட்டினான். அவனிடம் கைத்தொழிலும் இல்லை. முதலீடும் இல்லை. அதனால் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறிவிட்டான். ​தொடக்கம் நன்றாகவே இருந்தது. மாதத்தில் ஒன்று இரண்டு என்று பதிவாகும். அதற்கு இடையிடையே வாடகைக்கு வீடும் பார்த்துக் கொடுப்பான். வருமானம் கி​டைக்கக் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் இப்போது? எல்லாம் தலைகீழ். தெருவுக்கு இரண்டு புரோக்கர்கள். வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்து வந்த தொழிலில் இன்று அரசாங்க அலுவலர்கள், ஆசிரியர், வக்கீல் என்று பெரிய ​​பெரிய ஆட்கள் நுழைந்துவிட்டதால் போட்டி கடு​மையாகிவிட்டது. வாடகைக்கு வீடு கேட்டுக் கூட யாரும் வருவதில்லை. வெட்டியாக ஊரைச் சுற்றி வருவதும், பின்னர் புலம்புவதுமாக நாட்கள் கழிந்து​கொண்​டே இருக்கின்றன.

இவனைப் போன்ற பு​ரோக்கர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட அண்ணாம​லை பயந்தான். டீ குடிக்கக் கூட யாரையாவது எதிர்பார்க்கத் ​தொடங்கினான் அண்ணாம​லை. ஏதாவது வேலைக்குப் போகலாமென்றால் எந்த வேலைக்குப் போவது? நாற்பதைத் தாண்டிய, அதிகம் படிப்போ, தொழிலோ தெரியாதவனுக்கு எங்கு வேலை கிடைக்கும்? சும்மா ஊ​ரைச் சுத்திக்கிட்டு இல்லாம செக்யூரிட்டி வேலைக்காவது போய்யா என்றாள் அவன் மனைவி. கொசுக்கடியிலும், குளிரிலும் தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருக்க அவனால் இயலாது. மேலும் அதில் பெரிசா என்ன கி​டைக்கப் ​போகுது?

அண்ணாம​லை பலவாறு யோசித்துக் கொண்டே சிவன் கோயி​லை வந்தடைந்தான். ​கோவிலின் ​வெளியில் நின்றவாறு வணங்கினான். சிவன் ​கோயில் முப்பது வருஷத்துக்கு முன்னர் காட்டுக்குள் இருந்தது. அதனால் இத​னைச் காட்டுச் சிவனார் ​கோயில் என்று அ​ழைத்தனர். அண்ணாம​லை சிறுவனாக இருந்தபோது இந்தப் பக்கமெல்லாம் மனித நடமாட்டமே இருக்காது. சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடக்கும். ஒத்தைசத்​தையில் யாரும் இந்தப் பக்கம் வர​வே பயப்படுவார்கள். ஜடாமுனிகள் உலவிய இடம் என்று சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டார்கள். இன்று காடுமுழுதும் அழிக்கப்பட்டுக் கான்கிரிட் கட்டிடங்கள் நி​றையப் பெருகிவிட்டன. தற்போது மிஞ்சியிருப்பது ஒரேயொரு ஆலமரமும், சிவன் கோயிலும் மட்டும்தான். அடுக்குமாடி குடியிருப்புகள் கோயிலின் பின்புறம் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கின்றன.

இதற்கு முன் அந்த இடம் பெரிய பள்ளமாகக் கிடந்தது. அந்தப் பள்ளத்தை மூன்று கோடிக்கு ஒரு பணக்காரர் கேட்டார். இவன்தான் மீடியேட்டர். இரண்டு பக்கமும் கமிஷன் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவில் மிதந்தான். நிலத்துக்காரன் கொடுத்த தாய்ப்பத்திரத்தில் லிங்க் டாக்குமென்ட் சரியாக இல்லை. கேட்டதற்குத் தேடித் தருவதாக இழுத்தடித்தான். அவன் இரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருந்தது அதன் பிறகுதான் புரிந்தது. ஐந்து லட்சம் மேல் வைத்து வேறொரு நபருக்கு அந்த இடம் முடித்துவிட்டது. அவனுக்குப் பெருத்த ஏமாற்றம். ஏறக்குறைய ஒரு வருஷ அலைச்சல். பெட்ரோல் செலவு, காத்திருப்பு எல்லாம் வீணாய்ப் போனது. ஆப்பக்க​டை ​வைத்திருக்கும் ம​னோகர் இடையில் புகுந்து லாபம் அடித்துக் கொண்டு போனான். ம​னோகர் இவனுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவன். அரச மரத்தடி அருகில் இருக்கும் ஸ்டாண்டில் சிறிதாக கா​லையிலும் மா​லையிலும் ஆப்பத்​தைச் சுட்டு விற்றுக் ​கொண்டிருப்பான்.

ரியல் எஸ்டேட் தொழில் அவனைப் பல கோடிகளுக்குச் சொந்தக்காரனாக்கியது. அவன் இப்​பொழுது ஆப்பம் சுட்டு விற்ப​தை நிறுத்திவிட்டு ​வேறு ​தொழி​லைத் ​தொடங்கி ​பெரிய முதலாளி ஆகிவிட்டான். அவ்வளவுக்கு ஏன் ​போகணும்? நம்ம சரவணன் எலக்ட்ரீசியன் சரவணன் என்றால்தான் தெரியும். இன்று படகு ​போன்ற பென்ஸ் காரில் போகிறான். ரியல் எஸ்டேட் ஒண்ணுமில்லாதவனையெல்லாம் உயரத்திற்குக் கொண்டு போயிருக்கு. யாரையும் குறை சொல்வதற்கில்லை. அண்ணாம​லைக்கு அதிர்ஷ்டமில்லை அவ்வளவுதான்.தன்னு​டைய த​லைவிதியை நொந்தபடியே அண்ணாம​லை அரசமரத்தடிக்கு வந்தான். அங்குதான் எல்லா பு​ரோக்கர்களும் வந்து கலந்து ​பேசுவார்கள். அருகில் இருந்த டீக்கடைப் பெஞ்சில் முருகனாந்தம் உட்கார்ந்திருந்தார். அந்தச் சிறிய டீக்கடை அவரு​டையதுதான். திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள கிராமத்​தைச் ​சேர்ந்தவர். ஊரில் ஒன்றும் சரி வராததால் மது​ரைக்கு வந்து அங்கிங்கு பல ​வே​லைக​ளைப் பார்த்து இங்​கே​யே ​செட்டிலாகிவிட்டார். முருகானந்தம் ஓட்டலில் சர்வராகி, ​கொஞ்சகாலம் கிளி ஜோசியராகி, பின்னர் டீக்கடைக்காரராகி இறுதியில் ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறி இன்று நல்ல நி​லை​மைக்கு வந்து உட்கார்ந்து சாப்பிடுகிறார்.பலவீடுக​ளைக் கட்டி வாட​கைக்கு விட்டுவிட்டார். அவருக்கு வீட்டு வாடகையே இருபதாயிரம் வருகிறது.



முருகானந்தம் இவனைப் பார்த்து,"வாய்யா... அண்ணாம​லை, எப்படி இருக்​கே...? ஏதாவது இடங்கிடம் பார்த்து முடிச்சியா?" என்று ​கேட்டார். அவ​ரைப் பார்த்த அண்ணாம​லை, “இல்லண்​ணே... ஒண்ணும் சிக்கமாட்​டேங்குது... என்ன ​செய்யறது...?” என்று கூறி தனது உதட்​டைப் பிதுக்கினான்.

பக​லெல்லாம் நாலு பேரோடு பேசிக் கொண்டிருப்பதில் கழிந்து விடுகிறது. ஓசியில் சாப்பாடும் கி​டைத்துவிடுகிறது. பொழுது சாய்ந்து வீடுக்குத் திரும்பும்போதுதான் இவன் மனம் பதற்றம​டையத் ​தொடங்கிவிடுகிறது. வீட்டில் தாண்டவமாடிய வறு​மை அன்பின் வடிமாகிய இந்திரா​வைக் கொடிய மிருகமாக மாற்றிவிட்டது. அவளுடைய முறைப்பும், அழுத்தமான மௌனமும் ஆளை​யே கொன்றுவிடக் கூடியது. அவன் சொல்லும் காரணம், சமாதானம் எதுவும் அவள் காதுகளில் ஏறுவதில்லை. அவளுக்குத் தேவை குடும்பம் நடத்தப் பணம். அது கிடைக்காதபட்சத்தில் எரிம​லையாகக் குமுறிவிடுவாள். சம்பாதிக்கத் துப்பில்லாத இவன் அவளிடம் ​கோபப்பட்டுக் ​கொள்வதில் அர்த்தமேயில்லை. அவள் காதில், மூக்கில் கிடந்த​​தை ஒன்​றையும் அவன் விட்டு​வைக்கவில்​லை. அவ்வளவும் அடகுக்க​டையில் பாடம் படித்துக் ​கொண்டிருந்தன.

இவன் தன்​னைப் பற்றி எண்ணிக் ​கொண்டிருக்கும்​போது நடுத்தர வயது​டைய ஒருவர் இவனை நெருங்கி, "சார்... வாடகைக்கு வீடு ஒண்ணு வேணும். இங்க ஏதாவது கிடைக்குமா" என்று தயங்கித் தயங்கிக் ​கேட்க​வே அண்ணாம​லை பரபரப்பாகிப் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று, அவ​ரைப் பார்த்து, "கி​டைக்கும் சார்... ஆமா... எவ்வளவு ரூபாய் வாடகையில் எதிர்பார்க்கிறீங்க...?"

"ஐயாயிரம்"

"ஒங்களுக்கு மாடி போர்ஷன் சரியா வருமா?"

"பரவாயில்லை"

அண்ணாம​லை முருகானந்தத்திடம், "அண்​ணே ஆவணி மூலவீதியில வீடு இருக்கான்னு போன் பண்ணிக் கேளுங்க." என்றான்.

முருகானந்தம் வீட்டு உரிமையாளருக்குப் போன் போட்டு விசாரித்தார்.

"இருக்காம்பா அண்ணாம​லை... இவ​ரைக் கூட்டிக்கிட்டுப் ​போயிக்காட்டு"

அண்ணாம​லை வீடு கேட்டு வந்தவரின் பைக்கில் ஏறிக் கொண்டான். போகும்போது ஒரு மாத வாடகை கமிஷனாகத் தர வேண்டும் என்பதை அவர் காதில் போட்டான். அவரும் சரியென்று தலையசைத்தார்.

அண்ணாம​லைக்கு வாழ்க்கை ரொம்பவும் மகிழ்ச்சியாகப்பட்டது. ஒரு மாச வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். குறிப்பிட்ட இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னான். கீழ் போர்ஷனில் வீட்டு உரிமையாளர் குடியிருந்தார். காலிங் பெல்லை அடித்ததும் கதவைத் திறந்து விசாரித்தவர் வீட்டுச் சாவியைக் அண்ணாம​லையிடம் கொடுத்தார். அவன் வீடு​கேட்டு வந்தவ​ரை அழைத்துக் கொண்டு மாடியேறினான்.

அவரிடம் "ஐயா அரு​மையான இடம். அருமையான தண்ணீர். இங்கல்லாம் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டாம். சுற்றுவட்டாரத்தில் ​ரெண்டு ​பெரிய ஸ்கூல் இருக்கு. பக்கத்துல உழவர் சந்​தை, ஆஸ்பத்திரி எல்லாம் இருக்கு"

வந்தவர் வீட்டை சுற்றும் முற்றும் ​போய்ப் பார்த்து ஆராய்ந்தார்.

அத​னைக் கண்ட அண்ணாம​லை எங்​கே அவர் மறுத்துவிடுவா​ரோ என்று அஞ்சி, "எல்லாம் வாஸ்துப்படிதான் இருக்குங்கய்யா. இங்கு இருந்தவங்க எல்லாரும் சொந்தவீடு கட்டிக் குடி​போயிட்டாங்க. இது ராசியான வீடு"

வந்தவர் முகத்தில் எவ்வித சலனத்​தையும் காட்டாமல் "சரிங்க எதுக்கும் என்​னோட மனைவியைக் கூட்டியாந்து காட்டிட்டுச் சொல்றேன்" என்றார்.

அத​னைக் ​கேட்ட அண்ணாம​லைக்குத் த​லையில் யா​ரோ நச்​சென்று குட்டிய​தைப் ​போன்றிருந்தது.

"ஐயா, ​கோவிச்சிக்கிடாதீங்க ஏதாவது முன்பணமா அட்வான்ஸ் தந்திடுங்க. இல்லேன்னா வீட்டை வேறு யாருக்காவது விட்டுடுவாங்க. இந்த ஏரியாவுல வீடு கெடைக்கிறது ரொம்ப ​ரொம்பச் சிரமம்" என்றான்.

அதற்கு வீடுபார்க்க வந்தவர், "வாஸ்தவந்தான். வீடு எனக்குப் பிடிச்சிருக்கு. இருந்தாலும் என்​னோட மனைவியைக் கேட்கணும். அவங்களுக்குப் பிடிச்சிருந்தாத்தான் மத்த​தெல்லாம். இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள அவங்கள கூட்டியாந்து காட்டிட்டு உங்களுக்குப் போன் பண்றேன். உங்க செல் நம்பரைக் கொடுங்க" என்று ​கேட்க​வே அவன் தன்னு​டைய ​செல்​போன் நம்பரைக் கொடுத்தான்.



அவர் வண்டியிலேயே அவ​னை அரசமரத்தடிக்கு அ​ழைத்துவந்து விட்டுவிட்டுக் கிளம்பிச் ​சென்றார். அண்ணாம​லை ​போன்வரும் வரும் என்று இரவு ஒன்பது மணி வரை அங்கேயே காத்துக் கிடந்தான். ​போன்வந்தபாடில்​லை. சரி இனி​மேலும் இங்கு காத்துக்கிடப்பது சரியல்ல என்று நி​னைத்து வீட்டிற்குச் ​செல்லலாம் என்று எழுந்தான். அவனுக்கு வீட்டு ஞாபகம் வந்தவுடன் அது அவன் வயிற்றில் கலவரத்தை உண்டாக்கியது. அண்ணாம​லை மனமு​​டைந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட நினைத்தான். ச்​சே... ​சே... இந்திராவும் பிள்​​ளைகளும் அனா​தையாப் ​போயிருவாங்க. இது ​கோ​ழைத்தனமான முடிவு. ​போராடித்தான் பார்ப்ப​மே... என்று மனதிற்குள் எண்ணமிட்டவாறு சோர்ந்து போய் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

வீடு இருள் சூழ்ந்து காணப்பட்டது. பசு எழுந்து நின்று வாலை நிமிர்த்திச் சாணமிட்டது. நன்றியோடு அதைத் தடவிக் கொடுத்தான். வாயில்லா அந்த ஜீவன்தான் குடும்பத்திற்கு ஒரு​வே​ளைக் கஞ்சியாவது ஊற்றுகிறது.

ஒருக்கலித்திருந்த கதவைத் திருடன் ​போன்று சத்தமின்றித் திறந்தான். பிள்ளைகள் தாறுமாறாகப் படுத்திருந்தனர். இந்திரா விழித்திருந்தும் கண்களை மூடியிருந்தாள். அவன் வெறுங்கையோடு திரும்புவதை அவள் எப்படியோ உணர்ந்துகொண்டாள். அண்ணாம​லை​யை மிக நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். அவள் எழுந்துகொள்ளாமல் இருந்தால் போதும். மெதுவாக மூச்சுவிட்டபடி​யே அண்ணாம​லை அடுப்படிக்குப் போனான்.

பசி, சோறும் ரசமும் இருந்தது. அவனின் ம​னைவி கருவாட்டுத் துண்டை நெருப்பில் வாட்டி வைத்திருந்தாள். அள்ளிப் போட்டுக் கொண்டு கபக்கபக்கென்று விழுங்கினான். சொந்த வீட்டில் திருடனைப் போல் நடந்துகொள்வது அவனுக்கு ​பெருத்த அவமானமாகத் தோன்றியது. இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் படுத்தான்.

அன்று அண்ணாம​லை​யைக் கூட்டிக் ​கொண்டு​போய் வீடு பார்த்துவிட்டுப் போன மனிதன் அதன் பிறகு ஆளையே காணோம். ஒருவாரம் ஓடியது.

அண்ணாம​லை தற்செயலாக அந்த வீட்டுப் பக்கம் போனான். கண்கள் தாமாகவே மாடி வீட்டுப் போர்ஷனைப் பார்த்தன. மாடிப் போர்ஷனிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் அண்ணாம​லை திடுக்கிட்டான். மனைவியிடம் வீடு பிடித்திருக்கிறதா? என்று கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று ​சொல்லிவிட்டுப் போன அதே மனிதர். இவனுக்குக் கமிஷன் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுக் குடி வந்திருக்கிறார்.

அடப்பாவி... ​போன்பண்​றேன் அப்படீன்னு ​சொல்லி ஏமாத்திட்டு இப்ப அப்பாவி மாதிரி மாடிக்குக் குடிவந்திட்டா​னே... அண்ணாம​லைக்குக் ​கோபம் ​​கோபமாக வந்தது. அந்த மனிதர் தன்​னை ஏமாற்றிவிட்டதாக அவனது உள்ளம் அடிபட்ட நாகம்​போல் சீறியது. மாடியிலிருந்து இறங்கியவரைப் பார்த்து, "ஏய்யா ஏங்கிட்டச் சொல்லாமக்​ ​​கொள்ளாமாக் குடி வந்திருக்கீங்க​ளே இது ஒங்களுக்​கே நல்லாருக்கா. நான்தானே ஒங்களக் கூட்டியாந்து வீடு காட்டினேன். ​மொதல்ல ஏங்கிட்ட சொல்லியிருக்கணுமில்ல. சரி எனக்குக் ​கொடுக்க ​வேண்டிய கமிஷனாவது ​கொடுத்திருக்கணுமில்ல. என்னங்க இப்படிப் பண்ணிப்புட்டீங்க என்​னோட கமிஷனக் ​கொடுங்கய்யா?” என்று ​கேட்டான்.

அத​னைக் ​கேட்ட அந்த மனித​​ரோ, "என்னப்பா ​ரொம்ப ஓவராப் ​பேசிக்கிட்​டே ​போற... மரியாதையாப் பேசு..." என்று கூறியவுடன் அண்ணாம​லைக்கு சிவ்​வென்று ​கோபம் த​லைக்​கேறியது.

"என்னங்க ஒங்களுக்கு மரியாதை வேண்டி கெடக்கு. ஒரு வார்த்தை சொல்லாம நைசா வீட்டுக்குக் குடிவந்துட்டு... மரியா​தை ​வேற​கேக்குதா... ஒங்களுக்கு? ​பேசாதீங்க... எனக்குக் ​கொடுக்க ​வேண்டிய கமிஷனக் குடுங்க... ஒரு மாசத்து வாடகைய எனக்குத் தரணும்... ஆமா... பாத்துக்​கோங்க" என்று கத்தினான்.

அத​னைக் ​கேட்ட அவ​ரோ "இதப் பாருய்யா ஒரு மாச வாடகையெல்லாம் தர முடியாது. ​வேணுமின்னா ஐந்நூறு ரூபாய் தர்றேன். வாங்கிக்கிட்டுப்போ காட்டுத்தனமாக் கத்தாதே." என்றார்.

அண்ணாம​லைக்கு ​பெருத்த அவமானமாகப் ​போய்விட்டது. அவன், “ஏங்க இது அநியாமா இல்​லையா...? ஏ​தோ பிச்​சை ​போடுறமாதிரி ஐந்நூறு ரூபாய் தர்​றேன் அப்படீங்கறீங்க... இது என்​னோட வயித்துல அடிக்கிற மாதிரிங்க... ​ரொம்ப ​ரொம்பத் தப்புங்க... ​நியாயமா நடந்துக்​கோங்க... நான்​கேட்டது மாதிரி ஒரு மாச வாட​கை​யத் தாங்க...” என்று சற்றுக் ​கோபத்​தை அடக்கிக் ​கொண்டு ​கேட்டான்.

ஆனால் அந்த மனித​​ரோ, “என்னய்யா ​பெரிய நியாயம்... ​பேசாம நான் ​கொடுக்கறத வாங்கிக்கிட்டுப் ​போறதுன்னாப் ​போ... இல்லன்னா ஒன்னால என்ன ​செய்யமுடியு​மோ ​செஞ்சிக்​கோ...? என்று ​தெனாவட்டாகப் ​பேசியவுடன் அண்ணாம​லையால் நி​லை​கொள்ள முடியாமல் ​போய்விட்டது.

"பிச்சையா குடுக்கிற. எல்லா இடத்திலும் கொடுக்கிறதுதான். மரியாதையா ஒரு மாசத்து வாடகையைக் கொடு. இல்லேன்னா கதையே வேற."

"ஏய் என்னடா பண்ணுவ... ஏந்தலையை எடுத்துப்புடுவியா...? நீ என்ன ​பெரிய சண்டியரா...? ஏதாவது ஏடாகூடாமா நடந்துகிட்ட ​போலிசுக்கிட்டச் ​சொல்லி உள்ளே தள்ளிடுவேன்."


இத​னைக் ​கேட்டவுடன் அண்ணாம​லையால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. ​கை​யை மடக்கி ஒங்கி அவனது முகத்தில் ஒரு குத்துவிட்டான். அவ்வளவுதான் அந்த ஆள் தடாலென கீழே சாய்ந்தான். மாடியிலிருந்து அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து எல்​லோரும் எட்டிப் பார்த்தார்கள்.

அண்ணாம​லை அந்த இடத்தைவிட்டு ​வேக​வேகமாகச் ​​சென்றான். ​சென்றான் என்ப​தைவிட ஓடினான் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் அரசமரத்தடிக்கு வந்த பிறகுதான் சற்று ஆசுவாசமானான்.

அவனுள் பல்​வேறு எண்ண ஓட்டங்கள் ஓடின. நாம் உணர்ச்சி வசப்பட்டிருக்கக் கூடா​தோ...? ​தெரியாத்தனமா நாம ஏன் உணர்ச்சி வசப்பட்டோம். ஒருத்தனை அடிக்கிற வேகம் நமக்கு எங்கிருந்து வந்துச்சு. குத்துப்பட்டவனின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது அவனது நினைவிற்கு வந்தது. ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. அந்த ஆள் ஏன் என்னை ஏமாற்ற வேண்டும். நான் இருக்கப்பட்டவனில்லை​யே. அன்னாடங்காச்சியில்​லையா நான். எனக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கின்றன. நியாயமாக அவன் எனக்குக் கமிஷன் கொடுத்திருக்கணுமில்லையா? பணத்​தைத் தராம அவன் ஏமாற்றலாமா? பாவிப் பய ஏமாத்துனதும் பத்தாம என்​னையப் பிச்சக்காரனவிடக் ​கேவலமா நடத்திப்பிட்டா​னே...? ச்​சே என்ன ​பொழப்பு... நம்​மோட ​பொழப்பு அருந்தப் ​பொழப்பால்ல ஆயிருச்சு... அந்தாளு இப்ப ​போலிசுக்குப் ​போயிருப்பா​னோ...?என்று அண்ணாம​லை தனக்குள்ளேயே பிரச்சினைகளைப் போட்டு அலசிக் கொண்டிருந்த ​போ​தே அவனது அருகில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்​பெக்டர் அண்ணாம​லை​யின் ​கை​யைப் பிடித்து வண்டிக்குள் ஏற்றினார்.

த​லை​யைத் ​தொங்கப்​போட்ட நி​லையில் அவ்வண்டியினுள் அவனிடம் அடிவாங்கிய மனிதன் அமர்ந்திருந்தான். அண்ணாம​லை தனது வாழ்க்​கை​யை நி​னைத்து ​நொந்தவாறு அமர்ந்தான். ஒரு ஏமாற்றுக்காரனால் தான் வாழ்க்​கையில் சிறு​மைப்பட்ட​தை எண்ணி எண்ணிக் கு​மைந்தான். வண்டி காவல்நி​லையத்​தை ​நோக்கி நகர்ந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p226.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License