இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பேராண்மை

விசாகன்


கடந்த பத்து நாட்களாகவே வண்ணமணிக்கு மனது ஒரு நிலையில் இல்லை. எதையோ இழந்துவிட்ட உணர்வு துரத்திக்கொண்டே இருந்தது. திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின் இதுபோன்றதொரு சங்கடம் வந்து தொலைக்கும் என்று கனவுகூட கண்டதில்லை அவள். ஒரு குழந்தைக்குத் தாயான பின்பும், முதுநிலை பட்டதாரியாக இருந்தும், சிலபல இடங்கள் சுற்றி வந்திருந்த அனுவங்களை வைத்திருந்தும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லாவிதச் சூழலையும் எதிர்கொள்வதற்குத் தேவையான புதிய புதிய பாடங்களை ஒவ்வொரு விநாடியும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அத்தகைய நேரங்களில் கிளம்புகின்ற ஒருவித படபடப்பும் பதற்றமும் முகத்தை வாட்டமடையச் செய்துவிடுகின்றது. வண்ணமணி பேயறைந்தது போலத்தான் நடமாடிக் கொண்டிருந்தாள். இரண்டு வாரத்திற்கு முன்பு “புராஜக்ட் ஒர்க்” என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கிவிட்டுச் சென்ற ஜெயப்பிரகாசின் அணுகுமுறைதான் இவளை இன்றுவரை உலுக்கிக் கொண்டிருக்கின்றது.

“வண்ணம், நாளைக்கு ஏங்கூட காலேஜ் மொத வருசம் படிச்ச ஜெயப்பிரகாஷ் நம்ம வீட்டுக்கு வாரதா போன்ல சொன்னான், ரெண்டு நா தங்குவாம் போலத் தெரியுது...” என்று ராஜேந்திரன் சொன்னபோது உள்ளபடியே பூரித்துத்தான் போனாள் வண்ணமணி. கணவனின் நண்பரை நல்லபடியாக உபசரித்து, தேவையானவைகளைச் செய்துகொடுத்து அனுப்ப வேண்டும் என்றபடியான அவளுடைய விருந்தோம்பல் குணம் வீருகொண்டு எழுந்தது.

ராஜேந்திரன் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது அவனுடைய தந்தையார் காலமானதால் படிப்பை நிறுத்திவிட்டு கிராமத்திற்கு வந்து நஞ்சை, புஞ்சை விவசாய வேலைகளை கவனிக்க வேண்டியதாயிற்று. அதற்கு மேல் தலைகீழாக நின்றும் அவனால் படிப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது, பின்னும் பிறகு தாமதப்படுத்த வேண்டாம் என்று அவனுடைய தாயார், கோவையில் படித்து முடித்துத் தயாராக இருந்த தன்னுடைய அண்ணன் மகள் வண்ணமணியை ராஜேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்த கையோடு அவரும் காலஞ்சென்று விட்டார். மிகக் குறைந்த வயதும் அனுபவமுமே கொண்ட ராஜேந்திரனை ஐம்பது ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மிராஸ்தாராக்கிப் பார்த்து காலம் கெக்கலிட்டு சிரித்துக் கொண்டது. இது போன்ற பல சிரிப்புகளை உணர்ந்து கொண்டானோ என்னவோ தெரியாது, ராஜேந்திரன் தன்னுடைய நிர்வாகத் திறமையை வெகு விரைவாகவே மேம்படுத்தி நல்லதொரு விவசாயியாக வலம் வரத் தொடங்கிவிட்டான்.

மனைவி வண்ணமணிக்கும் வாழ்க்கையின் வர்ணஜாலங்களை வகை வகையாக காண்பித்தும் வந்தான். பெண் குழந்தை வடிவில் புது வண்ணம் வீட்டில் மலர அந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமானது. அனுதினமும் அவர்களின் புதுப்புது கால வழிக் கற்றல் தொடர்ந்தது. பாடி பில்டிங்கில் அதிக ஆசை கொண்டிருந்த ராஜேந்திரன் விவசாயம் நீங்கலாக “ஜிம்” ஒன்றை ஊருக்குள் நிறுவி தன்னுடைய கட்டு மஸ்த்தான உடற்கட்டை பராமரித்துக் கொண்டு, இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வந்தான்.

தன்னுடைய அலுவலக நிமித்தம் ஒரு விவசாய புராஜக்ட் முடிக்க வேண்டி கிராமத்திற்கு வரவிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜெயப்பிரகாஷ் போன் செய்தான். அதுபோலவே வந்தான், மூன்று நாட்கள் தங்கினான், விவசாய நிலங்களுக்குப் போய் புகைப்படம், மண் சேகரிப்பு என பணிகளைப் பார்த்தான், பின்னர் சென்றுவிட்டான். ஆனால் வண்ணமணி ஏன் இவ்வாறு கிடந்து தவிக்க வேண்டும்? முதல்நாள் மாலை வந்திறங்கிய அன்றே ஜெயப்பிரகாசுக்கு வண்ணமணியின் வண்ணமிகு அழகைக் கண்டு கைகால்கள் ஓடவில்லை. வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கிக் கொண்டிருந்தான். சராசரியை மீறி துருத்திக் கொண்டிருந்த அவன் செயல்பாடுகள் அவனின் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது வண்ணமணிக்கு.



“வீட்ல வைஃப் எப்டி இருக்காங்க...? என்ன பன்றாங்க...?” என்றாள் இரவு உணவு பரிமாறும் போது.

“ம், இருக்கா இருக்கா...” என்ற ஜெயப்பிரகாஷ் உணவைச் சாப்பிட்ட பாங்கு இவளை நெளியச் செய்தது.

“இவனோட வைஃப் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டல துணை தாசில்தாரா வேல பாக்குறாங்கடீ...” என்ற ராஜேந்திரன், “சட்னிய எடுத்து ஊத்து...” என்றான்.

“இல்ல, போதும், வேண்டாம்...” என்ற ஜெயப்பிரகாசின் கண்கள் வண்ணமணியின் கால் பாதங்களை விழுங்கிக் கொண்டிருந்தது. காலையில் ராஜேந்திரன் வெகு சீக்கரமாக எழுந்து தோட்டத்திற்குச் சென்றுவிட, ஏழு மணிக்கு எழுந்து தயாரான ஜெயப்பிரகாசுக்கு சூடாகக் காபி போட்டுக் கொடுத்தாள் வண்ணமணி.

“காலேஜ் எங்க படிச்சீங்க...” சர்ர் என்று காபியை உறிஞ்சியவாறு கேட்டான் ஜெயப்பிரகாஷ்.

“கோயம்புத்தூர்ல...” சுருக்கமாகத்தான் பதிலளித்தாள் வண்ணமணி.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...”

“... ... ... ... ...”

“எனக்கு எதையும் மறச்சு வச்சப் பேசத் தெரியாது, ஒங்களப் பாத்தவொடனே ஒங்கமேல ஒரு இது வந்துருச்சு...”

“பிரண்டோட மனைவிகிட்ட இப்டி பேசுறது ஒங்களுக்கே நல்லாப்படுதா...?”

“ஓப்பனா பேசுறதுல என்ன தப்பு...?”

“அப்ப ஏங்கிட்ட பேசுனத அவர்கிட்ட அப்டியே பேசுவீங்களா...?”

“சில கேள்விக்கு பதிலே கெடையாதுங்க, அத விடுங்க, நீங்க என்ன சொல்றீங்க...”

“ரொம்ப தப்பா நினைக்கறீங்க... நடந்துக்கிறீங்க, அவருக்குத் தெரிஞ்சா ஒங்கமேல இருக்குற அபிப்ராயம் என்னாகும்...? வந்த இடத்துல நடக்குற மொற இதுதானா...?”

“யு சீ, காலேஜ் முடிச்சிருக்கீங்க, அதுவும் கோயம்புத்தூர்ல, இப்ப இதெல்லாம் சர்வ சாதாரணமாப் போச்சுல்ல...? எனக்கு ஏற்பட்ட ஆசைய நேரடியா ஒங்ககிட்ட கேக்குறேன், இதுல என்ன தப்பு...?”

“நீங்க அவரோட ஃபிரண்டுங்றதால நான் பொறுமையா போக வேண்டியிருக்கு, புரிஞ்சு நடந்தா சரி...” என்றவாறு கோபத்துடன் அவனைக் கடந்து சென்று வீட்டிற்கு வெளியில் அமர்ந்துகொண்டாள் வண்ணமணி.

பெண்கள் தங்களின் கல்லூரி வாழ்க்கையில் சிலபல சுவாரஸ்யங்கள், தேடல்கள், காதல், காமம் எனக் கடந்து வந்திருந்தாலும், திருமணம் என்று ஆனபின்பு தமிழகக் கலாச்சாரக் குடும்பச் சூழலை ஏற்று வாழ்ந்து வருகின்ற பெரும்பாண்மைப் பெண்களுக்கு ஜெயப்பிரகாஷ் போன்றவர்களின் அணுகுமுறையை எடுத்த எடுப்பில் வெறுப்பதுதான் தற்போதைய எதார்த்த நிலை. அதுபோன்றதொரு நிலைப்பாட்டைத்தான் வண்ணமணி எடுத்தாள் என்றாலும், சராசரிப் பெண் என்ற வகையில், ஆண்களைச் சுண்டி இழுக்கின்ற தன் அழகின்மீது கர்வம் கொள்ளத்தான் செய்தாள். ஆனாலும், அவளின் மனதளவில் ஒரு பதற்றம் இல்லாமலில்லை.



இரண்டாவது நாளும் அவனது கோரிக்கைகள், எடக்கு மடக்குப் பேக்சுக்களால் பெரிதும் மனம் நொந்துபோனாள். இருப்பினும் விசயத்தை ராஜேந்திரனிடம் கொண்டு செல்ல விரும்பவில்லை. ஒரு வழியாக மூன்றாம் நாள் புராஜக்ட் ஒர்க் முடித்துவிட்டுக் கிளம்பும் போது, ராஜேந்திரன் கவனிக்காத வேளையில் சற்றும் எதிர்பார்க்காதவாறு, வண்ணமணியின் கன்னத்தைக் கிள்ளி “ஒரே ஒருவாட்டி பிளீஸ்….” என்று கெஞ்சல் தொணியில் கேட்ட ஜெயப்பிரகாசின் செய்கையில் விதிர்விதிர்த்துப் போனாள். அன்றிலிருந்து இன்றுவரை மந்திரித்து விட்டாற்போல நடமாடிக் கொண்டிருந்தாள்.

இவளின் நடவடிக்கைகளில் வித்தியாசம் கண்டு என்ன ஏது என்று ராஜேந்திரன் விசாரிக்க, இரண்டு நாட்கள் ஒன்றும் இல்லை என்று சமாளித்து வந்தவள், மூன்றாம் நாள் கன்னத்தைக் கிள்ளியதைத் தவிர மற்ற அனைத்தையும் அவனிடம் புட்டுப் புட்டு வைத்தவளுக்கு அவன் காட்டிய பொறுமை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தந்தது.

“என்ன நாஞ்சொல்லறத நம்பலையா...?” என்றாள்.

“அதில்ல...” என்று இழுத்தான் ராஜேந்திரன். திருமணத்திற்கு முன்பு அவன் செய்த செட்டைகள் லீலைகள் எல்லாம் அந்த விநாடியில் அவனுக்கு நினைவில் வந்து போகாமலில்லை.

“என்ன அதில்ல...?” எரிச்சலாய்க் கேட்டாள்.

“ரொம்ப நாளைக்குப் பெறகு பாக்குறோம், வந்த எடத்துல இப்படி நடந்துக்குவான்னு நானென்ன கனவா கண்டேன்...? விடு, போய்ட்டான்ல, அவனோட சகவாசத்த இத்தோட கட் பண்ணிடலாம்...” என்றான்.

நடந்தவைகளைச் சேரில் அமர்ந்தவாறு அசை போட்டுக்கொண்டிருந்த வண்ணமணி என்ன நினைத்தாளோ தெரியவில்லை, கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீரைக் கொட்டத் தொடங்கினாள். இவன் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமல் இறுதியில், தன் கண்ணம் கிள்ளப்பட்ட மேட்டரையும் போட்டு உடைத்தாள். அப்படியே ஐந்து நிமிடங்கள் கச்சிப் என அமைதியான ராஜேந்திரன், மிகவும் பொறுமையாக “சரி விடு, இப்டியும் நாட்ல ஆளுங்க இருக்காங்கங்றத தெரிஞ்சுக்கிட்டோம், கவலப்படாத, எல்லாத்தையும் மறந்துரு...” என்று அவள் தலையைக் கோதிவிட்டான். பின்னர் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு வந்து பார்த்தான். அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பாப்பாவிடம் சிறிது நேரம் அமர்ந்தான். ஏதோ ஒரு உந்துதல், மீண்டும் அவன் வண்ணமணியின் அறைக்குச் சென்று அவளருகில் அமர்ந்தான். அவர்கள் இருவருக்கும் இடையிலான ஆகச் சிறந்த புணர்ச்சிகளுக்குள் ஆகச் சிறந்த புணர்ச்சி ஒன்று அரங்கேறிய பின்புதான் அன்றிரவு விடிந்தது. சற்று தாமதமாக விழித்தாலும், விரைவாகக் கிளம்பி “உரம் வாங்க டவுனுக்குப் போயிட்டு வரேன்...” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவன் நேராக ஜெயப்பிரகாஷ் வீடு நோக்கிப் பயணிக்கலானான்.

எழுபது கிலோமீட்டர் தொலைவு பயணித்து வந்த ராஜேந்திரனைப் பார்த்த ஜெயப்பிரகாஷ் முதலில் திடுக்கிட்டாலும், சுதாரித்துக்கொண்டு, “வாடா...என்ன திடீர்னு...? போன் பண்ணியிருக்கலாம்ல...? சரி சரி உள்ள வா...” என்றான்.

அமைதியாகச் சென்று இருக்கையில் அமர்ந்த ராஜேந்திரன், ஆடம்பரமான அந்த வீட்டை முழுவதுமாக நோட்டமிட்டான். யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை மாடியில் யாராவது இருக்கலாம்.

“ஆபீஸ்ல புராஜக்ட் ஒர்க்க சப்மிட் பண்ணியாச்சா...?” கீழே குனிந்து கொண்டே கேட்டான் ராஜேந்திரன்.

“ஓ, போனவாரமே அந்த ஒர்க் முடிஞ்சிருச்சு...”

“அடுத்து எந்த ஊரு, என்ன புராஜக்ட்டு...” நக்கல் தொனியுடன் ஜெயப்பிரகாஷ் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு கேட்ட ராஜேந்தினின் உள் மனதின் வெம்மையை உணரத் தொடங்கினான் ஜெயப்பிரகாஷ்.

“விருப்பமில்லங்குறவள அவ அனுமதி இல்லாம தொடலாமா நீ...”

“வந்து...”

“பேசாத...குருவி கட்டுற கூண்டுக்குள்ள குண்டு வெக்கிற வேலைய நீ செய்யலாமா...? இப்படித்தானப்பா நல்லா இருக்குற குடும்பமெல்லாம் நாசமாப் போயிறுது...? ஓ வீட்டுக்கு வந்து இதே மாதிரி நாஞ் செஞ்சா ஒனக்கு எப்டியிருக்கும்...? ஓம் பொண்டாட்டிக்கிட்ட இந்த விசயத்தச் சொன்னா ஓங் குடும்பம் என்னாகும்...?” கேள்விகளை அடுக்கினான் ராஜேந்திரன்.



“ஒன்னோட அப்ரோச் புடுச்சுப் போய் ஒருவேள எம் பொண்டாட்டி ஒனக்கு ஒத்துப் போக நெனச்சான்னா அத யாரால தடுக்க முடியும்? என்ன பொருத்தவரைக்கும் நா யாரோட தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மேல தடங்கலே சொல்ல மாட்டேன். அது எம்போண்டாட்டியே ஆனாலும் சரி. ஆனா யாரும் யாரோட சுதந்தரத்து மேலயும் அத்துமீறி நடந்துக்குறத எந்தச் சூழல்லையும் அனுமதிக்க மாட்டேன். இதெல்லாம் மனுஷங்களோட நுண்ணிய உணர்வுகள் கலந்த சமாச்சாரம், ரொம்ப பூமாதிரிதா இந்த பிரச்சனைகள கொண்டு போனும். என்னடா, நம்மளவிட கம்மியாப் படிச்ச ஆளு, பெரிய இவனாட்டம் பேசுறானேன்னு பாக்குறயா...? கிராமத்துல நாலு மக்கமாரோட பழகிப் பாரு, அவங்களோட ஒன்னுக்கொன்னா சேந்து வேல செஞ்சு பாரு...ஒவ்வொரு நிமிசமும் நமக்கு படிப்பினை கெடைக்கும்...” விடவில்லை ராஜேந்திரன்.

கைகால்களில் ஏற்பட்ட நடுக்கத்தை கடும் முயற்சியெடுத்து மறைத்துக்கொண்டு பேந்தப் பேந்த விழித்தவாறு அமர்ந்து கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் வாயைத் திறக்கவில்லை. அவமானத்தால் தன் உயரத்தை இழந்து கொண்டிருந்தான்.

“வண்ணமணி சொன்னப்ப நா பெரிசா எடுத்துக்கல ஜெபி, ஆனா நீ போற எடத்துல பூறா இதே மாதிரி வேலையச் செய்ற ஆளா இருந்திருப்பியோன்னு நெனச்சுத்தான் எனக்கு தூக்கி வாரிப் போட்ருச்சு, அதுக்குப்புறமும் நா வந்து உன்ன ஒன்னும் கேக்காமப் போனா, ஒனக்கு லேசாப் போயிறாது...? ஒன்னு சொல்றேன் கேட்டுக்க, கல்யாணத்துக்கு முன்னால நாம் பெரிய யோக்கியனெல்லாங் கிடையாது. ஆனா, இப்ப ஒத்த ஆளு என்னைய குத்தஞ் சொல்ல முடியாது. ஏ ஒடம்பப் பாத்தியா, அப்டியே புரூஸ்லி மாதிரி, டெய்லி ஒன்னவர் ஜிம் போடுறேன். ஒரு நாளிக்கு ஐம்பது பொம்பளைங்களோட சேந்து வேல செய்ற ஆளு நான், ஒன்ன மாதிரி இருந்தா என்ன ஆகுறது...? பொண்டாட்டியே ஆனாலுஞ் சரி, விருப்பமில்லன்னு சொல்லிட்டா பத்தடி தள்ளிப் படுக்குறவந்தாண்டா ஆம்பள, நீ ஊர் மேயிறதுக்கா ஊர்ப்பயனெல்லாம் கல்யாணங்கட்டி பொண்டாட்டிய வீட்ல வச்சுருக்காங்க...? இதையே கடைசியா வச்சுக்க ஜெபி, இல்லன்னா அப்புறம் யாரையும் எங்கையும் கிள்ளுறதுக்கு கை இருக்காது...” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய ராஜேந்திரன், வாசல் வரை வந்து மீண்டும் ஜெயப்பிரகாஷ் நோக்கித் திரும்பினான்.

ஒருவேள, வண்ணமணி என்னையவிட ஒன்னைய பெரிசா மதிக்கிறமாதிரி நிலம வந்துச்சுன்னா ஓங்காட்ல மழ விழுகுறத நாந் தடுக்குற ஆள் கிடையாது ஜெபி...” சவால் விடும் தொனியில் பேசிவிட்டு விருவிருவென்று நடந்தான்.

மாடி அறையிலிருந்து இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஒரு ஜீவன், ராஜேந்திரனின் மிக நேர்மையான வெளிப்படையானதொரு அணுகுமுறையையும், துணிச்சலையும், கட்டுமஸ்த்துடன் தெறிக்கின்ற தசைகளைக் கொண்ட அவனது உடல் உறுதியையும், வீருகொண்ட அவனது நடையும் பார்த்து அவன் மீது தாங்கமுடியாத “இது” கொண்டுவிட்டாள். ஒருவேளை அவள் துணைத் தாசில்தாராக இருக்கின்றாள் என்றால் ஜெயப்பிரகாசாலோ வேறு யாராலோ என்ன செய்ய முடியும்...?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p228.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License