இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

கடைசியாக...!

பாரதியான்


இரவு மணி பதினொன்று முப்பது, உறக்கமின்றி புரண்டு படுத்தபோது தொலைபேசி சினுங்கியது, இந்த நேரத்தில்... அதுவும் வீட்டு பேசியில்... சட்டென மனசு பதைக்க, ரிசிவரை எடுத்துக் காதில் வைத்தபோது “சித்தப்பா...”முருகனின் கம்மிய குரல்.

எனக்கு புரிந்துவிட்டது,“சொல்லு முருகா ” என்றதும் எழுந்து கொண்டேன்.

“பெரியா...பெரியானு கெடப்பீகளே...” விசும்பல்... பின், அழுதுகொண்டே “தாத்தா போயிட்டார் சித்தப்பா ” சமீப நாட்களாய் நான் எதிர்பார்த்திருந்த கனமான துக்கச் செய்தி... சட்டென விசும்பல் முட்டியது.

“சரிப்பா இப்பவே கிளம்பறேன் இங்க யாருக்காவது தகவல் சொல்லனுமா?”

“ஒவ்வொருத்தருக்கா சொல்லிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமா நீங்க வரனும்னுதான் மொதல்ல சொல்றேன். சின்ன வயசுலருந்து தாத்தா மேல நீங்க பாசமா இருப்பீகல ” தொடர்பு துண்டிக்கவும், என்னில் அழுகை உடைந்துவிட்டது.

கவிதாவை கூட்டிப்போக முடியாது. நான்கு வருடக் காத்திருப்பு, நிறைய வேண்டுதல்களுக்குப்பின் கர்ப்பவதியாகியுள்ளாள். அவளைப் பத்து மணி நேரப் பயணத்துக்கு இழுத்தடிப்பது நல்லதல்ல. பல்லாவரத்தில்தான் மாமனார் வீடு அவர்களுக்கு விசயம் சொன்னால் உடனே ஆட்டோ பிடித்து இங்கே வந்து விடுவர்கள் என்ற யோசனையில் துரிதத்துடன் செயல் பட்டு, அவர்கள் வரவும், கோயம்மேடு சென்று நேரடி பேருந்து தேடி கிடைக்காமல் மதுரை செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

பெரியாவின் ஞாபகம் மொத்தமும் மனசுக்குள் வரத்தொடங்கி விட்டது.

மூன்று மாதத்திற்கு முன் ஊருக்கு போயிருந்தபோது பெரியாவைப் பார்த்தேன்... அவருக்கு பிடிக்குமேனு அருப்புக்கோட்டை பேருந்து நிலையக்கடையில் வாங்கியிருந்த கருப்பு திராட்சையைத் தரவும் ‘மறக்காம வாங்கியார என்ன...' சொன்னார். அந்தக் கடைசிப் பேச்சு இப்போது எனக்குள் எதிரொலித்தது.

‘பெரியா...'

அப்பாவின் மூத்த அண்ணன். பெரிய அப்பா, ‘பெரியப்பா ' தான் பேச்சு வழக்கில் எனக்குப் பெரியா, பெரியா என ஒட்டுதலாகிவிட்டது.



ரத்தினவேல் சேர்வை என்றால் கீகாடு மொத்தத்துக்கும் தெரியும். இந்த சேர்வைப்பட்டம் இப்போதெல்லாம் கிராமத்துக்குள் மட்டுமே... பிழைக்கப் போன இடங்களில் பிள்ளைமார் வழியில் சம்பந்தம் தொடங்கி ஊன்றிவிட்டது. அதற்குக் காரணம்... முன்னோர்கள் களவானி தொழிலில் முனைப்புடன் இருந்தனராம்,ஒருகால கட்டத் தலைமுறையினர் ‘இனி தழைக்கும் வம்சம் இப்படி இருத்தல் கூடாது என யோசித்து எடுத்த முடிவில் பிள்ளைகளைப் பட்டணம் அனுப்பினர்,ஒன்று மாறியது... அடுத்தும் தொடர்ந்து கொண்டது. இன்றைய கணக்குப்படி பெரிய தலைகள் விழுந்து விட்டால்... தலைமுறை மாற்றம் தெரியாமலே போய்விடும் எனலாம்.

வானம் பாத்த வெள்ளாமை நெறஞ்ச பெரிய கிராமத்துக்குள் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பெரியாம்பளை இருப்பார். எங்களை சார்ந்தவர்களுக்கு எல்லாமே பெரியாதான் என்றாலும் அவர் ஊருக்கேப் பெரியவர் என்பதே நிமித்தமான சொல். பாகுபாடற்ற மரியாதைக்கு உரியவர், தெருவுக்குள் அவர் நடந்து சென்றால் அப்படியொரு கம்பீரமாயிருக்கும், பொதுநலப்போக்கில் வாக்கு மாறாத நியாயஸ்த்தர், ஊர் முகப்பில் ஒரு காபிக்கடை இருக்கும், அந்தக் கடைக்குப் பெரியா போனதே கிடையாது...

காரணம்? சாதியால் ஒதுக்கப்பட்டவர்கென தனி அலுமினிய டம்ளர் முறை இருந்தது. அதில் அவருக்குத் துளியும் உடன்பாடில்லாததால் தன்வரை ஒதுங்கல்.

காட்டு வேலைக்கு ஆட்களைத் தோது பண்ணி அனுப்பிவிட்டு கத்தையான புராண ஏடு வாசிப்பதே அவருக்கு அலாதியான விருப்பம். இப்போதுள்ள வார்த்தையில் சொன்னால் லேசர் ஒளி வேகத்தில் வாசிப்பார்.

இமைகள் மூடவில்லை...பேருந்துகூட வேகம் பிடிக்கவில்லை. எப்படியும் நாளை மதியத்துக்கு மேல்தான் ஊர்போய் சேருவோமோ...?

‘அவ்வளவு பெரியதை அதற்குள் வாசித்து முடித்துவிட்டாரா...? ' அடிக்கடி எழும் இந்தக் கேள்விதான் இப்போது என்னைக் கணிணியில் இலக்கியம் படிக்கத் தூண்டுகோலாக இருந்து அதிக நேரம் அமர வைத்துள்ளது.

லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில், ராமாயணம், மகாபாரதக் கதையெல்லாம் சொல்வார், பெரியா. கேட்க ரசனையாக இருக்கும். ஊருக்குள் நல்லது என்றாலும், கெட்டது என்றாலும் ‘ரத்தினவேல் சேர்வைக்குத் தாக்கல் சொல்லுங்க ' என்பார்கள்.

அதாவது இரவு விடிய,விடிய சரித்திரக் கதை, அழகுடன்,கோர்வை நேர்த்தியாகச் சொல்வார். அவ்வப்போது கருப்பட்டி கடுங்காபி தருவார்கள். கொஞ்சமாக, கொஞ்சமாக உருஞ்சியபடியே தொடர்வார். அதிலே பெரியாவுக்கு அப்படியொரு ஆத்ம திருப்தி. என்பதை முகமலர்ச்சியோடு கூறுவார். மனப்பூர்வமான அந்தச் சேவை அவருக்கு ஓர் அடையாளம் தந்தது.

‘பத்து நிமிசம் வண்டி நிக்கும் டீ, காபி சாபிடலாம் ' குரல் கேட்டு.கண்ணாடி விலக்கிப் பார்த்தேன் திருச்சி தாண்டிய சாலையோரக் கடை தெரிந்தது.

பேருந்து மெதுவாகத்தான் பயணிக்கிறதோ... கொஞ்சமாய் விடியல் தெரிந்தது. அலைபேசியில் பார்த்தேன் ‘ஜந்து நாப்பது' நேரம் காட்டியது. எப்படிப் பார்த்தாலும் மதுரையில் இறங்கி ,அருப்புக்கோட்டை செல்லும் பேருந்தில் பயணித்தால், பதினொன்று - பணிரெண்டாகி விடும். ஊருக்கு போகும் வண்டி நாலுமணிக்குதான்... ‘ம் ' அடக்கம் செய்வதற்கு முன் சென்றுவிட வேண்டும். உள்ளுக்குள் அடித்துக் கொண்டது.

ஒருமுறை தேனையநாடாரின் குறும்புக்கார மகன் ‘ரத்தினவேல்சேர்வை இறந்துட்டார் ' என சொல்லிவிட மணி அய்யரும், ராமசாமி நாயக்கரும் விழுந்தடித்து வீட்டுக்குப் போக, உயரமான வீட்டுமுன் தின்னையில் பெரியா காலாட்டிக் கொண்டு கல்கி இதழ் படித்துக் கொண்டிருக்க, வந்த பெரியவர்களுக்கு விக்கிப்போனது. பின்னாலயே வந்த பஞ்சநாதன் சிரிக்க, விசயம் அறிந்து அனைவரும் சேர்ந்தே சிரிக்கவும், கொஞ்சமாய் கோபம் கொண்ட பெரியம்மாவோ கடுங்காபி கலந்துதர, அந்தச் சம்பவம் ஊருக்குள் மாதக்கணக்கில் ஓடியது.

எதற்கும் முகம் சுழிக்காத மனிதர்.

மாட்டு வண்டியில் பருத்தி பாரம் ஏற்றினால் போதும், புதூர் ஓட்டலின் இட்லியும்,மொச்சையும்,போண்டாவடையும் ஞாபகத்துக்குள் வர நான் மெல்லப்போய் அவரிடம் நிற்பேன்.

‘என்னடா வாரீயா... பள்ளிக்கூடத்துக்குப் போகலெனா ஒ ஆத்தா வைவா...' அவர் முடிக்கும் முன் ‘நாளைக்கு லீவு பெரியா ' என சொல்லிவிடுவேன்.

இரண்டுதாட்டு பருத்தி அடுக்குக்கு மேல் கட்டுக்கயிரை பிடித்தபடியே ஒருவிதத் துள்ளலோடு மாட்டு வண்டியில் பயணிப்பேன்.



இரவு, டூரிங்டேக்ஸில் சினிமா, முருக்கு, கல்கோனா மிட்டாய் என போதும் போமெனபெரியா வாங்கிக் கொடுப்பார்.காலையில் ஓட்டலுக்குள் நுழைந்தால் வழக்கமான அயிட்டங்கள் இலை நிரம்பிவிடும், ஆவலோடு எல்லாம் ருசித்துச் சாப்பிடுவதைப் பெரியா ரசித்துக் கொண்டிருப்பார்.

பருத்தி போட்ட பணத்தை மில்லில் வாங்கியதும் ஏர் வெயிலில் திரும்பினால் ‘என்னடா இன்னிக்கு திருப்தியா..?' கேட்பார்.

‘ம் பெரியா...' நான் தலையாட்டுகையில், மடித்த தாட்டுக்குள்ளிருந்து ஒரு பொட்டலம் எடுத்து நீட்டுவார்... தெரியும் அது மாவடலை சேவு. ஏதோ எனக்குள்ளே கும்மாளமிடும் அன்னிக்கு முழுவதும் சிரிப்பாயிருப்பேன்.

‘பெரியப்பன் கூட புதூர் மில்லுக்குப் போய் வந்துட்டா ஆளே ரெண்டாதான் மாறிடுவான் ' ராக்குப்பாட்டமா சொல்லும்.

மாட்டுத்தாவணியில் இறங்கியதும் அருப்புக்கோட்டை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் நோக்கி வேகமுடன் நடந்தேன், சாப்பிடக்கூடத் தோன்றவில்லை, பெரியாவை அடக்கம் பண்ணும் முன்பாகவே கடைசி உருவாக காணவேண்டும் என்ற எண்ணமே மேவியிருந்தது. கிளம்ப தயாராயிருந்த சந்திரா பேருந்தில் ஏறி அமர்ந்தேன்... பேசும் சொந்தங்கள் எண் நலத்தையும்,பெரியா சாவையும் விசாரித்தனர்.பங்காளி பகையான சிலரோ பார்வையிலேயே ‘ இவன் கொஞ்சம் வசதியா ஆயிட்டாம் போல...' என கருவினர்.

ம்... வழக்கம்போல் வண்டியை ஓட்டுனர் முணுக்கி நகர்த்த, நடத்துனரோ ‘காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை...' கூவினார்.

பொருளாதாரம் மட்டும் தனக்கு செழிம்பாக இருந்தால் சென்னையிலிருந்தே காரில் வந்து முதலாளாக நின்றிருப்பேன். சின்ன பெருமூச்சி வெளிப்படவும், வண்டி வேகமெடுத்தது.

பயணக்காட்சியில் நிலமும்,வானமும்,மரங்களும் பின்நோக்கிப் போவது மாதிரி மேலும்... எனக்குக் கடுமையான அம்மைக்கட்டு, ஒரு பக்கம் கன்னம் முழுவதும் பெரிய வீக்கம். ஊர் முத்துமாரி அம்மனைக் கும்பிட்டு அசயாமணி வேப்பமரத்தில் காப்பு பறித்து, அறைத்துப் போட்டாள் அம்மா.



இரவு உறக்கமின்றி தகிக்கையில் கத்தை புத்தகத்தோடு வந்தமர்ந்த பெரியா. ராமாயணத்தில் சீதையைச் சிறையெடுக்க, ராவணன் முயன்ற விதம், புள்ளிமான் உருமாற்றம் என கதையின் பாகத்தை அழகாக சொல்லிக்கொண்டு போக, மெல்லமாய்த் தூங்கிவிட்டிருந்தேன். காலையில் அம்மாவோ ‘தம்பி அம்மக்கட்டு இறங்கிருக்கு...' உண்மைதான் சோர்வும், அழுத்தமும் குறைந்திருந்ததாகவே நானும் உணர்ந்தேன்.

பரளச்சி வந்தாயிற்று, பொழுது மொத்தமும் மேற்கில் விழுந்திருந்தது இன்னும் சற்று நேரத்தில் ஊர் வந்துவிடும்.

பெரியாவின் உடலை மந்தக்காட்டில் அடக்கம் செய்திருப்பாங்களோ...? மனசுக்குள் இனம்புரியாத படபடப்பு...

பொழுதும் சாய்ந்து விட்டது, வேகமுடன் பெரியவீட்டுக்குச் சென்றேன் நினைத்துக் கொண்டிருந்த மாதிரியே பெரியா உடலை தூக்கி விட்டிருந்தனர்.

தன்னை மறந்த நிலையில் கால்கள், பூக்கள் சிதறிப்போன வழியே ஓடின. மந்தை பூவரசமரத்தடியிலிருந்து முருகன் ‘வேகமா வாங்க...வாங்க...' என கைகாட்ட, வேகமெடுத்தேன்.

மூச்சிறைக்கக் கூட்டத்தை விலக்கிப் பார்த்தேன்...

குழிக்குள் பெரியாவை உட்கார்ந்த நிலையில் வைத்திருந்தனர், பெரியதலை சத்தியக்கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டானவர், புராணங்கள் அறிந்தவர், ஒழுங்குமுறை சித்தநெறி கொண்டவர், பேச்சுக்குக் கூட யாரும் தன்னை, தன் செயலைத் தவறாகக் கருதக்கூடாது என்று நேர்மையைக் கடைப்பிடித்தவர்.

பெட்மாஸ் வெளிச்சத்தில் எனக்கு நல்ல காட்சியாகவே தெரிந்தார்... அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் ‘பெரியா...' என உடையவும், அழுகை பொங்கியது.

ஊரில் இருந்த நாட்களில் நான் பெரியாவுடன் கொண்டிருந்த ஒட்டுதலை ஞாபகப்படுத்திய அங்கிருந்தவர்கள் அனைவரும் என்னையே பார்த்தனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p234.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License