இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கிறிஸ்துமஸ் பரிசு...?

எஸ். மாணிக்கம்


என் பெயர் ஜான் பீட்டர்... சான்றிதழ், இதர பதிவுகள் தவிர்த்து வீட்டிலும், வெளிநபர்களும் ‘ஜான்' என்றே அழைப்பதால் உங்களுக்கும் அப்படியே.... இருக்கட்டுமே...! எனது அப்பாவின் அப்பாவுக்குப் பூர்வீகம் நெல்லை பாளையங்கோட்டை. ரயில்வேயில் வேலை, ஊர் ஊராகச் சுற்றியவர்... கடைசியாகத் திருச்சி வந்தவர் அவ்வூர்வாசம் பிடித்துப் போகவே, அங்கேயே... பொன்னகரத்திலேயே சொந்த வீடு வாங்கிவிட்டார், நல்ல வாழ்க்கை. ஒரே வாரிசு அப்பா... மோகன்தாஸ். நன்றாகப் படிக்க வைத்துள்ள நிலையில் அஞ்சல் துறையில் பணி... அவருக்கும் நல்ல வாழ்க்கை. அம்மா பெயர் மேரி. அம்மாவிற்கு வீட்டைக் கவனிப்பதுதான் பணி.

நானும் என் வீட்டுக்கு ஒரே பையன். கரூர் இந்தியன் வங்கிக் கிளையில் காசாளர் பணி. திருச்சியிலிருந்து தினமும் வேலைக்குக் கரூர் போய் வந்து கொண்டிருந்தேன். அந்த அலைச்சலில் நான் சோர்ந்து போகிறேன் என்றும், எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் கரூரிலேயே குடி வைத்துவிடலாம் என்றும், வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா அப்பாவைக் காண திருச்சி வந்து செல்லவேண்டுமென்றும் முடிவு செய்த என் அப்பாவும், அம்மாவும் ஒரு திட்டத்தோடு துரித நடவடிக்கை எடுத்து மதுரையைச் சேர்ந்த நிர்மலாவை எனக்குத் துணையாக்கி விட்டனர்.

நிர்மலா... ஆமாம், என் மனைவி நிர்மலா என்னுடைய எல்லா நிலைப்பாடுகளுக்கும் தராசு முள்ளாகச் சரி சொல்லுகிறவள். அதே சமயத்தில், தேவையான நேரங்களில் அதில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் சட்டெனக் குறிப்பிட்டுச் சொல்லி விடுவாள்.

நானும், நிர்மலாவும் அப்படியொரு ஒட்டுதலாக இருப்போம். விளையாட்டாகக் கூட எங்களுக்குள் மாற்றுக் கருத்து, கோபாதாபம் வந்து தலைநீட்டியதில்லை. வெட்டவெளியான விட்டுக்கொடுத்தல் வாழ்க்கை.

‘அருமையான மருமகள் அமைத்துக் கொடுத்த ஏசுவுக்கு நிறைய நன்றி...' என்று அம்மா அடிக்கடி உள்ளம் பூரித்துச் சொல்லிக் கொண்டிருப்பாள். அப்பாவும், ‘நிர்மலா நீ எங்களுக்கு ஏசு அருளிய கருணை' என்பார்.

நாட்களின் பயணத்தில் எங்களுக்கான ஓர் வரவு தள்ளியே போனது... ஆமாம், கல்யாணம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் எங்களுக்கான குழந்தை பிறப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்த வருத்தம் எனக்கு இருந்தாலும், நிர்மலாவிற்குச் சற்று கூடுதலாகத்தானிருந்தது. இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அவளை யோசனையில் இருக்க வைத்து விட்டது.

‘நிர்மலா... வாரீயாம்மா லேடி டாக்டரைப் பார்த்து நாம ஆலோசனை கேட்கலாம்...' என்று என் மனைவியையும், ‘டேய் ஜான்... ஒரு நல்ல டாக்டரைப் பார்த்துக் கன்சல்ட் பண்ணிடலாம்...’ என்று என்னையும் என் அம்மா நேரிலும், அலைபேசியிலும் விடாது வேண்டிக் கொண்டே இருந்தார். அதற்கு நான் பிடி கொடுக்காமல், எதையாவது சொல்லித் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.

இந்தவாரம் திருச்சி போயிருந்த போது, என் அம்மா, நிர்மலாவிடம், ‘குழந்தை இல்லையேன்னு கவலைப்பட வேண்டியதில்லை... இப்ப நவீன மருத்துவத்தில குழந்தை பிறப்புக்குப் பல வழிமுறைகள் வந்திடுச்சும்மா. நாம... நல்ல டாக்டராப் பார்த்து குழந்தைப் பேற்றுக்குச் சரியான வைத்தியம் பார்க்கிறதுதான் நல்லது...” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவளும் ‘அத்தை... உங்க பிள்ளை ஜான்கிட்ட கேளுங்க... அவர் சரின்னு சொல்லிட்டா எனக்கும் ஓக்கேதான்...' என்று அம்மாவின் கேள்விக்கான பதிலை என் பக்கமாகத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தாள்.

இதைத்தான் நிர்மலா கூறுவாள்... எனக்கு தெரியாதா? குழந்தை பிறப்பு என்பது ஆண்டவரின் ஆசி... அவருக்குத் தெரியும்... இந்தத் தம்பதியருக்கு எப்போது அதை அருளவேண்டும் என்பது... நம்முடைய அவசரத்துக்கு ஆண்டவன் அருள்வாரா...? அதுவுமில்லாது எனக்கு நானே நற்சான்று கொடுப்பேன்... மிகவும் நல்ல குணம் உள்ளவன், கடுகளவு கூட பிறருக்குத் தீமை நினைக்காதவன், அனைத்து ஜீவனும் நமதே என்ற சொல்லுக்கு ‘உதவுதல்' எனக்கு பிடிக்கும்... துயரம் சூழ்ந்தோரை முடிந்தவரை காப்பாற்றுவதே ஆண்டவனின் தொண்டென நினைப்பவன்... இப்படி தூய கோடிட்டிருக்கையில் நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும்' எனும் தீர்க்கமான முடிவில் நான் தெளிவாகவும், உறுதியுடனும் இருந்து வருவதுடன், நிர்மலாவுக்கும் அதையே எடுத்துச் சொல்லி அவளையும் நற்சிந்தனையுடன் பக்குவப்படுத்தி வைத்திருந்தேன்.

ஒன்றை நினைத்த பிடிமானம்... அது கிடைத்தே தீருமென்ற நம்பிக்கை... நம்மில் ஜோதியாக இருக்கும்போது நிச்சயம் அது நமக்குக் கிடைத்துவிடும்.

அப்படித்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த போதிலும், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தன் மகனின் வெற்றிடத்தில் சின்னதாகப் பயம் தொட்டமாதிரி இருந்திருக்க வேண்டும்... ‘மருத்துவப் பரிசோதனைக்கு இருவருமே இறங்கி வரனும்'என உத்தரவே போட்டார்கள். எவ்வளவு வெடி திணித்தாலும் சில பாறையை உடைக்கவே முடியாதே... அப்படித்தான் நானுமிருந்தேன். நிர்மலாவால் முடியவில்லை மன அழுத்தத்திற்கு ஆளானாள். விசயம்... மதுரையில் உள்ள அவளின் பெற்றோருக்கு எட்ட, அவர்களும் அதே‘செக்கப்'துதியைப் பாடினர். கூட்டம் துரத்திய ஓட்டம் என்னை மாற்றிச் சிந்திக்க வைக்கவும், தூரத்தில் இருந்தால் நல்லதென தோன்றியது. கரூரிலிருந்து காரைக்குடி கிளைக்கு மாற்றல் கேட்டுப் போனேன்.



புதிய இடம், புது ஆட்களின் பழக்கம் என்றாலும் ஏதோ ஓர்வித அமைதி தெரிந்தது. நிர்மலா கூட கல்யாணம் ஆன நாட்களின் மனநிலையில் மகிழ்ந்திருந்தாள். தொந்தரவு காரணமாகத்தான் கரூரிலிருந்து காரைக்குடி மாறியுள்ளேன் என்பதை உணர்ந்தார் போல், என் வீட்டிலும் சரி, மாமனார் வீட்டிலும் சரி இப்போதெல்லாம் நலம் விசாரிப்பது மட்டுமே... மருத்துவப் பரிசோதனையைப் பற்றி வாயைத் திறப்பதில்லை.

வழக்கம்போல் கோவிலூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் காரைக்குடி நகரினுள் இருக்கும் வங்கிக்கு சென்று கொண்டிருந்தேன்.எனக்கு முன் சாலையில் அந்த காட்சி... அப்போதுதான் ஏதோவொரு பெரிய வண்டி அடித்திருக்கவேண்டும்... நிறை சினையுள்ள நாய் மரண வதையில் துடியாய் துடித்தபடி சாய்ந்து கிடந்தது. ஒரு பின்னங்கால் முழுவதும் சக்கரம் ஏறியதில் சேதம், அந்த நாயைப் பார்க்கவே பாவமாயிருந்தது, நாயின் பின் பகுதியில் திரவம்போல் வழிச்சல்... அனத்த ஆரம்பித்தது மனசுக்குள் பதைப்பு.

‘அதுவொரு நான்கு கால் பிராணி அடிபட்டுவிட்டது' என்ற நினைப்பு காட்டுதலுடன் சாலைவாசிகள் அதைக் கண்டும் காணாமல் கடந்து போய்க் கொண்டிருந்தனர். என்னால் அவர்களில் ஒருவனாக நகர இயலவில்லை. சாலையில் இப்படி அடிபட்டுவிடும் நாய் அடுத்த சில மணி நகர்வில் தாரில் சதை தேய்மானமாகி, பிறகு அடையாளம் அற்றுவிடும். அப்படித்தானே இந்த நாயின் நிலையும் ஆகும்...

அதன் வயிற்றுக்குள் எத்தனை குட்டி உயிர்கள் இருக்கிறதோ...? பூமியின் வெளிச்சம் காணாது தாயின் வயிற்றுக்குள்ளேயே கல்லறை காண அந்த ஜீவன்கள் என்ன பாவம் செய்தன...? என்று நினைத்தபடி வண்டியை ஓரமாக நிறுத்திப் பூட்டி, கைப்பேக்கை ஹான்ட்பாரில் மாட்டியதும் சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன். என் பார்வைக்கு எதுவும் சிக்கவில்லை. சட்டென பேண்ட் பெல்ட்டைக் கழற்றி உருவினேன். அதை நாயின் அடிபடாத ஒரு காலில் இணைத்தேன், அவசரம் காட்டாது மெல்லமாய் இழுத்தேன். எனது அச்செயல் சாலையில் போவோர் வருவோருக்குச் சிரிப்புத்தான் காட்டியது. நான் அதையெல்லாம் கவனிக்காது எனது செயலில் சிறிது வேகம் காட்டினேன்.

ஒரு வழியாக அந்த நாயை இழுத்துச் சாலையோர புளியமரத்துக்கு அருகே மஞ்சனத்திச் செடியை ஒழுங்குபடுத்தி, அதன் நிழலில் நாயை கிடத்த, அதன் பார்வைகள் என்னை நன்றி மிகுதியோடு ஏறிப்பார்க்கவும்,பெல்ட்டை கழற்றி அங்கேயே வைத்ததும், மதியத்துக்கான எனது சாப்பாட்டு டிபனைத் திறந்து, அதிலிருந்த சாப்பாட்டை அள்ளிப் படுத்திருந்த நாயின் வாயருகே வைத்து, பாட்டில் உள்ள தண்ணீரை கொஞ்சம் வாயில் ஊற்றியும், கைகளை கழுவிக்கொண்டு கிளம்பினேன்.

வங்கிப் பணியில் இருந்தாலும், என் ஞாபகம் எல்லாம் நாயின் இருப்பிடத்தில் ஊன்றிக்கொண்டது. எப்போது ஜந்தரை மணி ஆகுமென காத்திருந்து, மறக்காமல் கால்நடை மருந்தகத்தில் விசயத்தைக் கூறி காயத்திற்கு மருந்து வாங்கியதும், பேக்கரியில் ரஸ்க்கும் வாங்கிப் போனேன். வலியில் நாயிருந்தாலும் உணவு சாப்பிடிருந்த தெம்பில் அதனிடம் இனம் புரியாதொரு சாந்தமும் உணர முடிந்தது. தண்ணீர் மருந்தை நாயின் காயமடைந்த காலில் ஊற்றினேன். ரஸ்க்கை நாயின் வாய் அருகில் வைத்தபோது அதை ஆவலுடன் தின்னத் தொடங்கியது.

எனக்குள் சந்தோசம் மேலிட, மொத்தமாய் நோக்கினேன் திரவசீல் அதிகம் வழிந்துகொண்டிருந்தது... எப்போது வேண்டுமானாலும் இது குட்டிகளை ஈன்றுவிடும் என்று தெரிந்தது. ‘ஆண்டவரே இந்த ஜீவன் நலமுடன் இருத்தல் வேண்டும்...' துளி நிமிடம் என் கண்களை மூடி அந்த நாயிற்காகப் பிராத்தனை பண்ணிய அதே சமயம் சாலையின் மறுபுறமிருந்த கார் ஒன்றிலிருந்து பெரியவர் இறங்கி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் என் செயலைக் காரிலிருந்து கவனித்து இருந்திருப்பார் போல் தோன்றியது.

வந்தவர் தன்னைச் சென்னை ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வருவதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார். பிள்ளையார்பட்டி செல்லும் வழியில் என்னுடைய செயலைக் கவனித்து இறங்கியதாகச் சொன்னார். நான் அவரை இரு கரம்கூப்பி வணங்கினேன். அவர் எனது கரங்களை அப்படியே ஆசிர்வாதமாய் பற்றி, ‘தம்பி, தாங்கள் இந்த ஜீவனிடத்தில் காட்டிய அக்கறையைப் பார்த்தேன். மனிதருக்கு மனிதரே அக்கறை காட்டாத இந்த உலகில், நாய் ஒன்றிற்கு நீங்கள் செய்யும் சேவை, உண்மையில் பாராட்டுக்குரியது. இது போன்ற சேவைகள் இறைவனுக்குச் செய்யும் சேவைகள் அனைத்தையும் விட மேலானது. இறைவன் உங்களுக்கு எல்லா வகையிலும் அருள் புரிவார்’ என்றபடி ஒரு ஆன்மிகப் புத்தகத்தினை எனக்குப் பரிசாக அளித்துச் சென்றார் அந்தப் பெரியவர்.

மறுநாள் அந்தப் பக்கம் வந்த போதுதான் பார்த்தேன். அடிபட்டிருந்த நாய் அழகான நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. நான்கு குட்டிகளும் நல்ல நிறத்துடன் பார்ப்பதற்கு அழகாய் இருந்தன. இந்தக் குட்டிகளுக்கு, பசியெடுத்தவுடன் அதன் தாயின் பாலூட்டிகளில் பால் கிடைக்குமென்று எப்படித் தெரிந்ததோ... அந்தக் குட்டிகள் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தன.



பால் கொடுக்கும் தாய்க்கு, உணவுத் தேவை அதிகமிருக்கும் என்று தோன்றியதால் அந்த நாய்க்குத் தேவையான ரஸ்க், பிஸ்கட் என்று நிறைய வாங்கி வந்து நாய்க்குக் கொடுத்தேன். மீதமிருந்தவற்றை அந்த நாய் எடுத்துக் கொள்ளும்படி அருகில் வைத்துவிட்டுத் திரும்பினேன். இப்படியே நான்கைந்து நாட்களாக நாயைப் பராமரிப்பது எனக்கான கடமையென்று ஆகிவிட்டது.

இப்போதெல்லாம் சாலைவாசிகள் நிறையப்பேர் என்னை ஒரு மாதிரியாகத்தான் பார்த்துச் செல்கிறார்கள். ஆனால், அவர்களின் ஏளனப் பார்வையை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஞாயிற்று கிழமை விடுப்பில் நான் என் மனைவி நிர்மலாவை அழைத்துப் போய் அந்தநாயையும், அதன் குட்டிகளையும் காட்டி வந்தேன்.

நாய்க்குக் காயம் ஆறிவிட்டது. இருந்தாலும், அந்த நாயால் எழுந்து நிற்க முடியவில்லை... அந்த இடத்தில் புரண்டு கொண்டே தன் குட்டிகளுக்காக அது உயிர் கொண்டிருந்தது. குட்டிகளுக்குத் தன் தாய்மைப் பண்பைக் காட்டியது. ரொட்டியோ, பாலோ நான் கொடுக்கும் போது, என்னை அது நன்றிப்பெருக்குடன் பார்த்தது. எனக்கு எப்படி இந்த நாயின் மேல் பரிவு காட்ட வேண்டுமென்கிற எண்ணம் தோன்றியது என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால், நான் அந்த நாயைத் தினமும் மறக்காமல் சென்று பார்ப்பதும், பராமரிப்பதுமாக இருந்தேன்.

வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்த வருஷம் எல்லோரும் மதுரையில் கொண்டாடுவோம் என நிர்மலாவின் அப்பா கூற, என்னுடைய அம்மா, அப்பாவும் அதற்கு சம்மதம் சொல்ல, எனக்குத் துணையாக வந்த வருஷம் முதல் மதுரையில் ஒரு முறை கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்ட நிர்மலாவின் விருப்பமும் கைகூடியதில் அவளுக்குக் குஷி.

‘ஜான் இந்த முறை மதுரையில் புதிதாகத் திறந்திருக்கும் அந்தப் பெரிய ஜவுளிக்கடைக்குச் சென்று ஆடைகள் வாங்க வேண்டும்... அப்படியே முப்பது வருடங்களுக்கும் மேலாக தங்கள் குடும்பத்தினருக்கு நகை வாங்கி வரும் அந்த நகைக்கடையில்... தனக்குப் பிடித்தமான புதிய நெக்லஸை வாங்க வேண்டும் வரும் வழியில் அப்படியே அந்த மதுரையில் பிரபலமான இட்லிக்கடைக்குச் சென்று பல சட்னிகளுடன் இட்லி வாங்கிச் சாபிட வேண்டுமென்று தனது விருப்பத்தை, தன்னுடைய பழைய மதுரை நினைவுகளைப் புதுப்பிக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆனால், கிறிஸ்துமஸ்க்கு இன்னும் முப்பது நாட்கள் இருக்குதுல்ல... என்று சொல்லிக் கொண்டாள்.

அன்று, ஞாயிற்று கிழமை சர்ச்சுக்கு நான் கிளம்பிவிட்டேன்.

“நிர்மலா நாம் சர்ச்சுக்குக் கிளம்பலாமா...” என்றபடி மேசை மேலிருந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டேன்.

“ஜான் நீ மட்டும் போய் தேவனிடம் வேண்டிக்கிட்டு வா...” என்ற என்னுடையவளிடம் புதியதாய் ஒளியொன்று தெரிவதை எனக்குள் எழுந்த உள்ளுணர்வு உணர்தியது, அவளை மொத்தமாக கண்களுக்குள் வாங்கி “ஏன் நிர்மலா உடம்புக்கு... முடியலையா...?” என்று இழுத்தேன். அவள் நெகிழ்ந்து, “அதொன்னும் இல்லை ஜான்... இன்று நீ மட்டும் போய்க் கர்த்தரைப் பார்த்துட்டு வாயேன்...” என்று எதையோ சொல்ல வந்தவள் முடிக்காமல் அதை அப்படியே நிறுத்திக் கொண்டாள்.

மேலும் நான் பேச முயல்கையில், ‘ம்... போய் வா ' என சைகை செய்து புன்முறுவலோடு சிரித்தாள்.

அவளின் செயலில் ஏதோ மகிழ்ச்சி கலந்திருக்கிறது, என்னவென்றுதான் தெரியவில்லை... என் சிந்தனையை மேலும் நீட்டிக்காமல், “சரி நிர்மலா, நீ வீட்டில் இரு... நான் சர்ச்சுக்குப் போயிட்டு வந்திடுறேன்...” என்றபடி கிளம்பினேன்.

சர்ச்சுக்குச் செல்லும் வழியில் என் வங்கிக்கு அடிக்கடி வந்து போகும் லெதர் கம்பெனி மேனேஜர் யூசுப் இடையில் பார்த்தார்.

“வணக்கம் சார்... நீங்க ஒரு காரில அடிபட்ட நாயைக் காப்பாத்தினிங்களாமே... ” என்றார். நானும் ‘ஆமாம் சார், அந்த நாய் சாலையில் அடிபட்டுக் கிடந்தது. அது குட்டி போடும் நிலையிலிருந்தது என்பதால் அதைச் சில நாட்கள் பராமரித்து வந்தேன். இப்போது அது குட்டி போட்டு விட்டது...” என்றேன்.

“ஆமாம்... அந்தக் குட்டிங்க நாலும் அழகா இருந்தது... நான்கு குட்டியையும் நான் என் வீட்டுக்கு எடுத்துட்டுப் போனேன்... என் வீட்டில அந்தக் கருப்புக் குட்டியை என் மகள் எடுத்துக் கொண்டாள். மற்ற நாய்க்குட்டிகளை பக்கத்து வீட்டில வாங்கிக்கிட்டாங்க... இப்போ என் மகளுக்கு அந்தக் கருப்புக் குட்டி நாய்தான் துணையா இருக்குது... அது கூடத்தான் என் மகள் விளையாடிக்கிட்டிருக்காள்...” என்று அந்த நாய்க்குட்டிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.

நான் சர்ச்சுக்குச் செல்ல வேண்டுமென்று சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன்.

இன்றைய விடியல் எனக்காகவே புலர்ந்தது போல் நெஞ்சில் சிலிர்ப்பு.

திருச்சபைக் கூட்டம் நிறைவுபெறவும், என் மனைவியின் இன்றைய மகிழ்ச்சிக்கு என்ன காரணமாக இருக்கும்? என்று என்னுள் எழுந்த கேள்வி மீண்டும் எழ, வீட்டுக்குத் திரும்பினேன். வருகிற வழியில், அடிபட்டுக் கிடந்த அந்த நாய்க்கு ரஸ்க் வாங்கிப் போட்டு வந்தேன். “நீ இப்படி இங்கே அடிபட்டுக் கிடந்தாலும்... உன் குட்டிகள் நல்ல இடத்திற்குச் சென்று விட்டன...” என்றபடி அந்த நாயின் தலையைத் தடவிக் கொடுத்தேன்.

அந்த நாய் ஒருவிதமான நன்றியுடன் ‘ம்ம்ம்...' என தனது முனங்கல் மூலம் வெளிப்படுத்தியது.

வீட்டில் என் மனைவி பல சுவையான உணவுகளைச் சமைத்து வைத்திருந்தாள். நான் அதை ருசித்தபடி சாப்பிட்டு, “என்ன, நம்ம வீட்டில இன்னைக்கே கிறிஸ்துமஸ் வந்த மாதிரித் தெரியுதே...” என்றேன்.

“ஜான் நான் எதற்கு இப்படி சுவையான நமக்குப் பிடித்த உணவைச் சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்...” என்று நிர்மலா என்னிடம் கேட்டாள்.

“காலையிலிருந்து எனக்கு விடை தெரியாமல்தானே தவித்துக் கொண்டிருக்கிறேன். உன்னோட மனசில மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக்கிட்டிருக்குன்னு மட்டும் தெரியுது... ஆனால் அது எதனாலென்றுதான் தெரியலை...” என்றேன்.

“எ...னக்கு... எனக்கு... மாத விடாய் இருபத்தோறு நாள் தள்ளிப்போயிருக்கு ஜான்...” என்று சொல்லியபடி வெட்கத்தால் தனது கையால் முகத்தை மூடிக்கொண்டாள்.



எனக்கும் தேன் குவளையில் ஊறீய பலாச் சுளைகளாகத் தித்திப்பு... மகிழ்ச்சி முட்டலில் விழியோரம் நீர் கசிவு... வீட்டிற்குள் போய் அங்கு வைத்திருந்த கேக்கை எடுத்துக் கொண்டு வந்து வாயில் ஊட்டினேன். அப்படியே நிர்மலாவை என் மார்பில் சாய்த்து கன்னத்தில் முத்தமழை பொழிந்தேன். எங்கள் இருவருக்குள்ளும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது...

காத்திருந்த வருகை, கர்த்தர் அருளிய ஆசி எங்களுக்குக் கிடைத்துவிட்டது.

நானும், நிர்மலாவும் பேசிக்கொண்டு, இரு குடும்பத்தார்களுக்கும் நம் குடும்பத்திற்குப் புதிதாக வரவிருக்கும் புதிய வரவு குறித்த தகவலைச் சொல்லிக் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட காரைக்குடிக்கு வர வேண்டுமென்று சொல்ல... அவர்களும் தங்களது பிள்ளைகளின் விருப்பமே என, இதோ எங்கள் வீட்டிற்கு கிறிஸ்துமஸ்க்கு வந்து விட்டனர்.

எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. என் அம்மா, ‘எங்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசு அளித்த தேவனே... உமக்கு எம் நன்றிகளய்யா...' என்று வாய்விட்டுக் கூறி வணங்கிக் கொண்டிருந்தார். என் அத்தையும், ‘எங்கள் குறையைப் போக்கி அருள் புரிந்த ஆண்டவரே... உங்களுக்கு எங்கள் நன்றி...” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

என் மனதிற்குள் “ஆண்டவனே நீ அளித்த பரிசு... மிகப்பெரியது... சாலையோரத்தில் அடிபட்டுக் கிடந்த அந்த நாயைக் காப்பாற்றி... அதன் குட்டிகளைக் காப்பாற்றிய என் சிறிய பணிக்கு நீ அளித்தது... மிகப்பெரிய பரிசு... அற்புதப்பரிசு... எங்கள் வாழ்க்கைக்குப் பொருள் தரும் சிறப்புப் பரிசு...” என்று நினைத்தபடி எங்களுக்குக் குழந்தைப்பேறு வழங்கிய அந்த இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறேன்...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p246.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License