இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

வெள்ளத்தில் மீண்ட உறவு!

எஸ். மாணிக்கம்


பத்து நாட்கள் கடந்துவிட்டது, ஒரு நிலைபாட்டில் மதனில்லை. மனசுக்குள் அவ்வப்போது கரன்ட் பட்ட மாதிரியொரு பதற்றம், துடிப்பு.என்னதான் தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்தாலும், இனம் புரியாத கரம் ஒன்று நீண்டுவந்து குழப்பிப் போய்விடுகிறது.

‘இந்தச் செயலில் இறங்கும் முன்...' மனசாட்சியின் முணுமுணுப்பு எழும். மனைவி ராகிணியிடம் உண்மையை கூறி உதவியிருக்கலாம்தான், அவளின் கறார்தனம், வெட்டிவிட்ட பிடிவாதம் அப்படியே இருந்ததை யோசித்தே, மறைமுகமாகச் செய்துவிட்ட காரியமே அவனைப்போட்டு வதைக்கிறது.

மழை வேண்டும்,வேண்டும்... என்று வெயில் வெக்கையில் ஒட்டுமொத்த சென்னைவாசிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், காய்ந்திருந்த வான்மேகத்துக்கு திடீரென கடும் ஆங்காரம் வந்தாற்போல் மழையை கவிழ்த்துவிடவும், சென்னை தாங்கவில்லை. மனித வாழ்க்கை தண்ணீரில் தடம் புரண்டு போனது.

மதனின் ஒரே தங்கை கீதாவும், அவளின் காதல் கணவன் குணாவும் அதில் தப்பவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் சென்னையில் குடி புகுந்தனர், கசப்பான அனுபவங்களை மனசுகளில் சுமந்து கொண்டு.

மதனுக்குப் பதினைந்து வயது, கீதாவுக்கு பத்து, அவர்களின் பெற்றோர் கமுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்குச் சென்றபோது ரிங்ரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து. சம்பவ இடத்திலெயே ஒரு பெரியவரும், மதன் பெற்றோரும் பலியானதில் அதிக பாதிப்பு மதன், கீதாவுக்குத்தான். குகைக்குள் தள்ளிய இருட்டு உணர்வு என்ற போதும், தங்கையை வளர்க்கும் பொறுப்பு அவனைச் சார்ந்தது.

இரத்தத் தொடர் உறவுகள் கண்டுகொள்ளாது, விலகிய நிலையில் தூரத்து வழி சித்தி கைகொடுத்தாள்.

இனி இங்கே என்ன இருக்கிறது...? தினக்கூலி வேலை செய்த பெற்றோர், வாடகைவீடு, அன்றாட வாழ்க்கைக்காக, வந்து தங்கிய மதுரை செல்லூரை விட்டுச் சித்தியே கதியென திருமங்கலம் சென்றனர்.

சித்தப்பாவும் ரொம்ப நல்லவர்தான், அதே சமயத்தில் தன் நிலைமையையும் வெளிப்படையாக ‘இதோ பாருப்பா மதன், நீ விபரம் தெரிந்த பையன் புரிஞ்சுக்குவேனு நினைக்கிறேன். இங்கேயும் மூணு பிள்ளைகள் இருக்கு... பெரிய வருமான வசதியும் கிடையாது, அதனால நீ வேலைக்குதான் போகனும்' சொன்னார்.

அதற்கு முழுமனதுடன் ஒப்புக்கொண்ட மதன், ‘சரி சித்தப்பா, ஆனா... கீதா பத்துவரை படிக்கட்டும் அரசாங்கப் பள்ளியில சேத்துவிடுங்க' என்றபோது, எதிர்காலத்தில் பெண்ணுக்கு கல்வித்தேவை அவசியம் என யோசித்து உடன்பட்டு, தனக்குத் தெரிந்த எலக்ரிஷியனிடம் சேர்த்து விட்டார். இழப்பின் ரணம் மதனை வீரியப்படுத்தியது. கற்பூரப் பற்றலாய் குறுகிய நாட்களிலேயே வேலையைக் கற்றுக் கொண்டு, முதலாளிக்கும் விசுவாசமாக இருந்ததில், தினச்சம்பளம் நூற்றி இருபதிலிருந்து இருநூறாக உயர்ந்தது. ‘அக்கரையோடு வேலை பாருப்பா... இன்னும் சம்பளம் சேத்துத்தரேன்...' முதலாளியின் அந்த ஊக்கம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அந்தந்த வாரம் வாங்கும் பணத்தை அப்படியே சித்தியிடம் தந்தான். அவளும் தன் பிள்ளைகளுக்கு இணையாக எல்லாம் கவனித்தாள். பொழுதுகளும், நாட்களும், வருடங்களும் உருண்டதில், மதனுக்குக் கல்யாண வயது வந்தது. சித்தியின் சொந்தத்தில் பெண் பார்த்தாள் மதனின் உழைப்பு, ஒழுக்கம், வருமானம் அறிந்து பலர் பெண்தர முன் வந்தனர். மதனுக்கு உயிரான தங்கை கீதா இருக்கிறாள். அவளின் தேவைகள் அனைத்தையும் கடைசிவரை அவன்தான் செய்தாகவேண்டும்... அதற்குக் கடுகளவும் முகம் சுழிக்காது, ஒத்துவரும்படியான, பெண் வேண்டுமென அலசி விசாரிக்க, ராகிணி அமைந்தாள்.



கல்யாணம் முடிந்த கையோடு, அவனின் வாழ்க்கைக்கான தொடக்கத்தை அவனின் வருமானத்தில் ஒரு பகுதி சேமிப்பை மொத்தமாய்க் கொடுத்து, ‘இனி உன்னோட வாழ்க்கையை நீயே பார்த்துக்கப்பா, மதன்' என்றபோது நெகிழ்ந்து, அழுதே விட்டான். சித்தப்பாவும் தன்பங்குக்குத் திருமணப் பரிசாக மதுரையில் உள்ள பெல்ட் தயாரிப்பு கம்பெனியில் மாத சம்பளதில், மதனை வேலைக்குச் சேர்த்து விட்டார். அங்கேயே வீடும் பார்த்துக் குடியும் வைத்து விட்டார்.

தனி வாழ்க்கை.

ராகிணி, நல்ல மனைவியாக மதனுக்கும், கீதாவுக்குத் தாயின் அரவணைப்புத் தோழியாகவும் இருந்தாள். செய்த நன்றியை மறவாது அவ்வப்போது திருமங்கலம் சித்தி வீட்டுக்கும் குடும்பத்துடன் சென்று வந்தான்.

கீதா, மூன்று மாதக் கம்யூட்டர் பயிற்சிக்குப் பின் நகரின் பெரிய ஜவுளிக்கடை வேலைக்கு சென்றாள். அக்கவுண்ட் செக்சன். அங்குதான், இதுவரை நன்மையே கொடுத்துக் கொண்டிருந்த விதி ‘காதல்' வடிவத்தில் வந்தது. உடன் பணி செய்யும் குணாவுடம் கீதாவுக்குப் பழக்கம். விசயம் கேள்விப்பட்டு ஆடிப்போனான், மதன். ராகிணியோ தன்னில் நெருப்பு சூழ்ந்தாற்போல் உக்கித்தகித்தாள். கண்டிப்பு எடுபடாது போக, வேலையிலிருந்து அவளை நிறுத்தவும், வயசு வேகத்தில் கீதா திமிரத்தான் செய்தாள். ஒருநாள் காதலர்கள் மதுரையைக் கடந்து விட்டனர்.

அக்கம் பக்கத்து விசாரிப்புகளுக்கு அஞ்சி, பத்து நாட்கள் சித்தி வீட்டில் தங்கினான். ‘அத்தெ அவளை இவரு தங்கச்சியாவா பாத்தேன்...? அவ மனசுல நான் அண்ணிங்ற எண்ணமே கொஞ்சமும் வரக்கூடாதுன்னு எவ்வளவு ஒட்டுதலாப் பழகினேன். பாவி, படிச்சவ... எதையுமே யோசிக்காம திடீர்னு இப்படி செஞ்சுட்டாளே...' விசும்பினாள். நடக்கக் கூடாத ஒன்று அரங்கேறிய பின் எத்தனை நாட்கள் சமூகத்துக்கு பயந்திருப்பது...

அன்று இரவு முழுவதும் சிந்தித்த மதன், ‘ராகிணி கிளம்பு நம்ம வீட்டுக்கு' என்றான் சித்தியும் எடுத்துச் சொன்னாள்.

‘இதோ பாருங்க உங்க தொங்கச்சி பேச்சே நீங்க எடுக்கக் கூடாது. நம்மளப் பொருத்தவரை கீதாங்கற நெனப்பு முடிஞ்சி போச்சு. மீறி ஏதாவது ஒட்டு தெரிஞ்சது... அவ்வளவுதான், நான் வேறமாதிரியான ஒரு முடிவெடுக்க வேண்டிருக்கும்' கடுமையான நிபந்தனையுடன் கிளம்பினாள்.

மதன்தான் அதிகமாய் வெதும்பினான். அவளுடன் நெருக்கமாயிருந்த சந்திராவை விசாரித்த போது, நண்பர்கள் உதவியுடன் சென்னை கிளையில் வேலைக்குச் சேர்ந்து, பக்கத்தில் ஒரு வாடகை வீடு பிடித்துத் தங்கியுள்ளதாகவும் தகவல் கேட்டு, கண் கலங்கினான். தங்கையைப்பற்றி நிறைய எண்ணங்களும், அவளுக்குப் பூர்த்தி செய்ய வேண்டிய வாழ்க்கை கடமைகளையும் கற்பனையில் வைத்திருந்தான். அவையனைத்தும் கானல் கேள்வியென மறைந்துவிட்டதே, தனக்குள் அழுத்திய கனத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக லேசுபடுத்திக்கொண்டு, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க...

சென்னையில் கனமழை, வெள்ளம்... மக்கள் தவிப்பு என்ற செய்தி...

இருப்புக் கொள்ளவில்லை, மதனுக்கு. அதே சந்திராவை அணுகி, கீதாவின் அலைபேசி எண்ணை வாங்கினான். ‘ம்...' மூண்று பொழுதுகள் கழிந்தும் தொடர்புதான் கிடைக்கவில்லை. பரிதவிப்பை வெளிக்காட்டாது இருக்க, வேலை நேரத்தில் செல் சினுங்க, எடுத்து ‘ஹலோ' என்றான்.



எதிர் முனையில் கீதாதான் பேசினாள்... எப்படியோ வெள்ளத்தில் தப்பித்து வந்து விட்டதாகவும், இப்போது மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் அழுதாள்.

காதல் கணவன் குணாவின் வீட்டுக்குச் செல்லமுடியாத நிலையில், அண்ணன் தங்களை ஆதரிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் கீதா வந்திருக்கையில் மதனால் ஒதுக்கமுடியாதே... உடன் பனிபுரியும் நண்பரிடம் விசயத்தை எடுத்துக்கூறி அவருக்குத் தெரிந்த இடத்தில் தங்க வைத்தான். அவர்களின் அப்போதைய தேவைகளுக்குப் பணஉதவி செய்தான். மதுரை கிளையில் வேலைக்கும் ஏற்பாடு செய்தான்.

இது எல்லாமே மனைவி ராகிணிக்கு தெரியாமல்தான்.

எத்தனை நாட்களுக்கு இதையெல்லாம் மூடியே வைத்திருக்க முடியும்... அதை நினைக்க, நினைக்க அவனின் தலையே சுற்றிக் கொண்டிருக்கிறது. சரி உண்மையை வெளிப்படுத்தி விடலாம் என்றாலும், மனைவியோட கடைசியான எச்சரிக்கை ஞாபகத்தில் முந்தி வந்து பயம் காட்டினாலும், தன்னைச் சராசரி வெளிப்பாட்டில் காட்ட முடியவில்லையே... என்ற குற்ற உணர்வு பாடாய்ப்படுத்த, முடியாத கட்டத்தில், நீண்ட யோசனையைத் தொடர்ந்து சித்தி மூலமாக விசயத்தைத் தெரியப்படுத்தி விட வேண்டியதுதான்,என நினைத்துக் கொண்டான்.

நேரான நிலைகோட்டில் நின்றான் மதன்.

இரண்டு தினங்களுக்கு முன்...

‘ஒரு விசயம் பேசனும் சித்தி வெள்ளிக்கிழமை இங்க வாங்க' அலைபேசி அழைப்பு விடுத்தபடியே வந்திருந்த சித்தியோ மருகமளைச் சுற்றியே இணக்கமாய் இருக்க, இரண்டொரு முறை ‘மாடியறைக்கு வாங்க சித்தி ' என சைகை காட்டியும் பலன் இல்லை. மாறாக ராகிணியுடன் ஏதோ அடுப்படி வேலையாக பரபரத்துக் கொண்டிருந்ததை சாடையில் கண்டான்.

‘இன்று வார விடுப்பு... சுமையை இறக்கி வைத்துவிட்டு, தன்னை இலேசாக்கி, ராகிணியின் மன நிலையை அறிந்து அதற்கேற்ப சமாதானம் பேசலாம் என்றால்... நேரம் கூடவில்லையே...' இருப்புக் கொள்ளாது மதனிருக்க,

“என்னங்க ஒரு இடத்துக்கு கிளம்பனும்... சீக்கிறமா பேண்ட் சட்டைப் போட்டுக் கீழவாங்க ” ராகிணிதான்.

“சித்தி வந்திருக்கையில் எங்க...”

“அத்தையும் வாராங்க... மாமாவும் வந்துக்கிட்டு இருக்கார்...”

“சித்தப்பாவுமா...”

“மொதல கெளம்புங்க...” கணவனை மேலும் கேள்வி கேட்க விடவில்லை.



இப்போது மதனைச் சுற்றிக் குழப்ப வெள்ளம்.

“ம்... எல்லோரும் ரெடியா?”ஆட்டோவில் வந்திறங்கி, வீட்டுக்குள் வந்த சித்தப்பா கேட்கவும். மதனோ ஏதோ கேட்க முயன்ற போது...

“என்னங்க கொழந்தய தூக்கிக்கிட்டு ஆட்டோவுல போய் உக்காருங்க... நாங்க சாமான்கள எடுத்துட்டு வாறோம்” முடுக்கினாள்.

மகளைத் தூக்கியதும் எந்திரத்தனமுடன் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, ஏதோ விருந்துக்கு செல்லும் தொனியில் ராகிணி, சித்தி, சித்தப்பா வந்து ஏறிக்கொண்டனர். அவர்களின் முகங்களில் சந்தோச வெளிச்சம் தெரிந்தது. மதனின் முகத்தில் மட்டும் ஒன்றும் புரியாமை ரேகை, அது மேலும் அதிகரிப்பது மாதிரி ஆட்டோ, தெற்குவாசல் ரெயில்வே பாலம் தாண்டி... வில்லாபுரம் தோரன வாயில் தாண்டி... மீனாட்சிபுரம் தெரு முகப்புக்குள் நுழைய, வண்டியின் ‘தடதடத்...தட...' சத்தம் அவனின் நெஞ்சுக்குள் அதிர்ந்த மாத்திரத்தில்... ‘கடவுளே...' என மின்னலென எண்ணியவாறே ஆட்டோ நின்றது.

கீதா அந்த லையன், வீட்டொன்றில்தான் குடி இருக்கிறாள்.

எதிப்பார்த்துக் காத்திருந்தார் போல், ‘‘அண்ணி... வாங்க சித்தி... வாங்க சித்தப்பா...'' ஓடி வந்தவள் அண்ணனைக் கண்டதும் தர்ம சங்கடத்துடன் நெளிந்து, அவனின் தோளில் தூங்கிக் கிடந்த குழந்தையை வாங்கிக் கொள்ளவும், உடன் வந்த குணா, வணக்கமிட்டதும் “வாங்க மச்சான்” என்றான்.

அப்போது, இன்னொரு ஆட்டோ வந்து நின்றது... அதிலிருந்து மூவர் இறங்கினர். அவர்கள், குணாவின் பெற்றோர்... அக்கா... எல்லோருமே வீட்டுக்குள் நுழைந்து அமர்ந்த உடன், சந்திப்பு நெகிழ்ச்சி, உணர்வுப்பூர்வமான அமைதி நிலவியது. மதனின் சித்திதான் அதனைக் கலைத்தாள்.


“மதன்... மொதல நீதான் கொழப்பத்துல இருந்து வெளியே வரனும். நீ கீதாவுக்கு செஞ்ச எல்லாமும் எங்களுக்கு போனவாரமே நல்லாத் தெரியும். கீதாவையும் மாப்பிள்ளையையும் ஜவுளிக்கட வேலைக்குச் சேர்க்க நீ அங்க காத்திருக்கையில்தான் தற்செயலாச் சித்தப்பாதான் பாத்திருக்கார். என் கிட்ட சொன்னார். நான் ராகிணிட்ட சொல்லவும் சென்னையில நடந்த கொடுமைதான் தெரிஞ்சதே... ஆயிரந்தான் இருந்தாலும் உறவு விடுமா அழுதா... ஓம்போக்குக்கே விட்டு விசாரிக்க மாமனார்கிட்ட சொன்னா... வெள்ளத்துல தவிச்சவங்கள எந்த எதிர்பார்ப்பும் இல்லாம யார்,யாரோ உதவுறாங்க. கீதா நம்ம சொந்தம் விடவா முடியும். அதான் குணாவின் வீட்டுக்குப் போய் பேசினோம் எல்லாமே நல்லபடியா இணக்கமாச்சி. கீதாட்டையும் பேசினோம், உனக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னுதான் இப்படியொரு போக்கு காட்டினோம்பா... ஆனா... இந்த விசயத்துல ராகிணிக்கு உன்மேல வருத்தம், கோவம்பா...'' முடிக்கவில்லை...

“கோபம் வராதா... விசயத்தை மறைச்சுத் தங்கச்சிக்கு உதவியிருக்கார்... நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரியா” ராகிணி விசும்பினாள்.

“இல்ல ராகிணி ” சமாதானக் குழைவுக்குப் பின் ஏதோ பேச ஆரம்பிக்க, “மதன் விடுப்பா, இப்ப நாம கீதாவுக்கு பொங்கப்படி கொடுக்க இங்கே வந்திருக்கோம். முறைப்படி கொடுத்துப் பொங்கலுக்கு அழைப்போம் நடந்த பழசையெல்லாம் சுத்தமா ஒதுக்கிட்டுச் சந்தோஷமாய் இருப்போம்...” சித்தப்பா கூறினார்.

“ஆமா... உறவுகள் மகத்தானது. அதைச் சென்னை வெள்ளத்தவிப்பு நமக்கு இணைப்புக் கொடுத்து புரிய வெச்சுருச்சு. வாழ்க்கை நம்ம எல்லோரையும் இனிமே மகிழ்ச்சியாக மட்டுமே சந்திக்க வைக்கட்டும்” குணாவின் அப்பா.

“ராகிணி என்னை மன்னிச்சுரு...” மதன்.

ஒருவொருக்கு ஒருவர் கலந்து பேசினார்கள்... சிரித்தார்கள்... ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்... உறவு விரியுமென்கிற நம்பிக்கையுடன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p247.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License