Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

இன்னுமொரு திருமணம்

முனைவர் ஜெ. ரஞ்சனி


அன்று மாலை ஆவலோடு மக்கள் எதிrபாrக்கும் நிகழ்ச்சி புகழ் பெற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியாளரை பரைசாற்றும் சூப்பர் சிங்கர் போட்டி. இல்லங்கள் தோறும் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் தொலைக்காட்சி முன் குழுமியிருந்தனர்.

குரல் வளம் நிரம்பிய காயத்திரி மக்கள் ஆதரவு பெற்றவள். அவள் பாடலை ரசிக்க ஏராளமான மக்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் திரண்டிருந்தனர். எதிர்பார்த்தது போல இறுதிக் கட்டத்தில் கடினமானப் பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றாள் காயத்திரி.

நிலை கொள்ளாத மகிழ்ச்சி, அவள் முகத்தில் தாண்டவமாடியது. ஆரவாரமும், கைத்தட்டலும் அரங்கத்தை அலற வைத்தது. பணத்தைச் செக்காக வாங்கியவள் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்துக் கையசைத்தாள்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையிலிருந்து விடுபட்டு வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானாள். எதிரில் வந்த ஆட்டோவைக் கைக்காட்டி அமர்ந்து கொண்டாள்.

“அம்மா நீங்க என்னோட ஆட்டோல வர்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா. ஒரு வருஷமா உங்கப் பாடலை கேட்டுகிட்டு இருக்கேம்மா. நீங்க தான் கண்டிப்பா ஜெயிப்பீங்கன்னு தெரியும்மா”

“மிக்க நன்றி தம்பி, உங்களைப் போன்ற ரசிகர்கள் ஆதரவு தான் நான் ஜெயிக்கக் காரணம்”

எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டாள். ஒரு வருட சென்னை வாழ்க்கை முடிந்தது. சொந்த ஊரான மதுரைக்குப் பயணித்தாள். ரயிலில் முதல் வகுப்பு மற்றும் ஜன்னலோர இருக்கை அவளுக்குச் சொந்தமானது. வெற்றியைத் தன்னுடன் பகிரக் கணவன் உயிருடன் இல்லையே என்று நினைக்கும் போதே துக்கம் நெஞ்சை அடைத்தது. பொருளாதார நெருக்கடி, மனப்போராட்டம், தொடர் துயரம் துரத்தி அடித்தக் கொடுமை அவள் கண்முன் நிழலாடியது.

வெங்கட்ராமனுக்கு கோயிலில் அர்ச்சகர் வேலை. நடுத்தரக் குடும்பம். மனைவியை இழந்தவர். இரண்டு பெண்கள். மூத்தவள் காயத்திரி, இளையவள் சந்தியா இருவரையும் தன் சக்திக்கு மீறிப் படிக்க வைத்தார். காயத்திரிக்குச் சிறு வயது முதல் இசையில் ஆர்வம். கோயில்களில் கேள்வி ஞானத்தால் பாட ஆரம்பித்தவள், ப்ளஸ் டூ முடித்ததும் டிப்ளமோ மியூசிக் கோர்ஸ் படித்தாள். அங்கு தான் அவள் விதி விளையாடியது. உடன் படிக்கும் சக்தியைக் காதலித்தாள். தந்தையிடம் தன் காதலை சொன்னாள்.

“அப்பா, நான் ஒரு விஷயம் சொன்னா வருத்தப்படமாட்டிங்களே”

“வருத்தப்படாத மாதிரி சொல்லேன்”

“அப்பா, அது வந்து… … … என் கூடப் படிக்கற பையனை… … வார்த்தையை மென்று முழுங்கினாள்.

“காதலிக்கிறே அவ்வளவு தானே”

“ஆமாம்”

ஊஞ்சலில் அமர்ந்திருந்த வெங்கட்ராமன் சடாரென்று எழுந்து நின்றார்.

“தாயில்லாதப் பெண்ணைச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு. நான் ஒரு நாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்” ஆவேசமாகக் கத்தினார்.

“அப்பா, என்னால அவர மறக்க முடியாது”

“அப்படின்னா, என்னையும், உன் தங்கையையும் மறந்துடு” கோபமாகச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் வெங்கடேசன்.இரண்டு நாள் யோசித்த காயத்திரி இருவீட்டார் எதிர்ப்புடன் சக்தியின் கரம் பற்றினாள்.

இருவரும் மதுரையில் குடிபுகுந்தனர். தங்கள் பிழைப்பிற்கு வழி தேடிக் கொண்டனர். சக்தி கீ போர்டு வாசிக்க, காயத்திரி பாட ஆரம்பித்தாள். வாய்ப்புகள் குவிந்தன.

அச்சாரமாக முன் பணம் வாங்கினர். ஒரு வருடம் கச்சேரிகள் புக் ஆனது. புகழ், பிரிந்த இரு வீட்டினரையும் இணைத்தது.

அன்று காயத்திரி வேறொரு கச்சேரியில் இருந்தாள். அதிர்ச்சி கைப்பேசி வழியாக அழைத்தது.

“அப்பா பேசறேம்மா, மாப்பிள்ளைக்கு விபத்து, தலையில் பலமா அடிபட்டிருக்கு. பாலாஜி நர்சிங் ஹோமில சேர்த்திருக்கோம், உடனே வாம்மா”

படபடப்பு, முகத்தில் கலவரம் பதறி ஓடினாள் காயத்திரி. சக்தியின் தலையில் பலமாக அடிப்பட்டிருந்தது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்தான். தலையில் அடிபட்டதால், அடிக்கடி வலிப்பு ஏற்பட்டது. சக்தி கீபோர்டு வாசிக்க முடியாத நிலை. மனக்கவலை, பொருளதாரப் பிரச்சனை, காயத்திரியை நிலைகுலையச் செய்தது. இரு குடும்பத்தாரையும் காப்பாற்றும் பொறுப்பு அவள் தலையில் விழுந்தது.

ஒரு மாத இடைவெளி அவள் பாடும் வாய்ப்பினைக் குறைத்தது. ஒவ்வொரு சபாவையையும் நாடிச் சென்றாள். அவளை உருவாக்கிய ரமணா ரசிக சபா முதலாளி கஜபதியை பார்த்தாள்.

“ஐயா...” தயக்கத்துடன் நின்றாள்.

“என்னம்மா”

“கச்சேரியில் பாட வாய்ப்பு ஏதாவது… ...” முடிக்கவில்லை.

“ஏம்மா நீயும் உன் புருஷனும் ஒத்துகிட்ட கச்சேரியை முடிச்சு தரல, முன் பணமா வாங்கின தொகைய திருப்பி தரல, உன்னால எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இப்ப எந்த முகத்தை வச்சுட்டு வாய்ப்பு கேட்டு வந்து நிக்கற”

“ஐயா என் சூழல் பாட முடியாம போயிடுச்சு. இனிமே நான் தொடர்ந்து பாடுவேன். நான் வாங்கின பணத்தைத் திருப்பி தந்தறேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்க” கெஞ்சினாள் காயத்திரி.

“முடியாதும்மா எனக்கு நிறைய வேல இருக்கு, நீ போகலாம்” விருட்டென்று உள்ளே சென்றார்.

அவளுக்கு நெஞ்சு கனத்தது. தொடர்ந்து முயற்சித்தாள். சபாக்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிறிஸ்துவ ஆலயம், கோயில்களில் பாடினாள். அதில் கிடைத்த சொற்ப வருமானம் குடும்பத்திற்குப் போதவில்லை. இரண்டு வருட தாம்பத்ய வாழ்க்கையிலும் குழந்தை இல்லை. கடவுளுக்கு மனதில் நன்றி சொன்னாள். தவிப்பும், துயரமும் அவள் வாழ்க்கையை நகர்த்தியது.

வலிப்பு நோயில் அவதிப்பட்ட சக்தியை மஞ்சள் காமாலை அரவணைத்தது. படுத்த படுக்கையானான். அன்றிலிருந்து மருத்துவச் செலவு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் எட்டியது. கதறினாள், கண்ணீர் விட்டாள். காதல் கணவன் உயிர் பிழைக்க ஓடிப் பாடி சம்பாதித்தாள்.

இறுதியில் விதி வென்றது. மரணம் சக்தியை தழுவியது. அவசரமாகத் தொடங்கிய வாழ்க்கை அவசரமாக முடிந்தது.

கணவன் காரியம் முடிந்தது. மீண்டும், பாட எத்தனித்தாள். எதிர்பாராமல் அவள் தொண்டையில் புண் ஏற்பட்டது. ஒரே மூலதனம் அவள் குரல் செயல் இழந்து விட்டதை நினைத்து வருந்தினாள். அவள் கண்களில் நீர் கூட வற்றிவிட்டது.

தொடர் மருத்துவ சிகிச்சை தொண்டைப் புண் ஆறியது. கீழே விழ விழ மீண்டும் எழுந்தாள்.

‘புகழ் பெற்ற தொலைக்காட்சியில் குரல் தேர்வு’ நாளிதழில் படித்தாள். ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து நின்றனர். அதில் காயத்திரியும் உள்ளடக்கம்.

குரல் தேர்வில் தேர்வானவள் தொடர்ந்து போராடினாள். ஒரு வருடம் குளிர்ச்சியான உணவு பதார்த்தங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்தாள். மெலோடியஸ் பாட்டைத் தேர்ந்தெடுத்தாள். இன்று வெற்றி தேவதை அவளிடம் தஞ்சம் புகுந்தது.நினைவுகளிலிருந்து விடுபட்டாள். வழிந்த கண்ணீரைக் கர்சீப்பில் துடைத்துக் கொண்டாள். ரயில் மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மதுரை ரயில் நிலையத்தில் காயத்திரி தந்தை, தங்கை, மாமியார், மாமனார் அனைவரும் மாலையோடு நின்று வரவேற்றனர்.

உறவுகள் படை சூழ மகிழ்வோடு வீட்டிற்குச் சென்றாள்.

“காயத்திரி உனக்கு நல்ல நேரம் தொடங்கிடுச்சு, இனி தொடர்ந்து உனக்கு வாய்ப்புகள் தொலைக்காட்சியிலும், திரைப்படத்துறையிலும் குவியத் தொடங்கும் நிரந்தரமா நாம சென்னைக்குக் குடி போயிரலாம்” காயத்திரி அப்பா சொன்னார்.

“எனக்கு நிறைய பணம், புகழ் சம்பாதிக்கனும்னு ஆசை இல்லப்பா”

“என்னம்மா சொல்ற”

“இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த நான் இன்று விதியை வென்றுவிட்டேன். எனக்கு அது போதும் சூப்பர் சிங்கர் போட்டியில வெற்றி பெற்ற பணத்தை மூலதனமா வெச்சு ஒரு இசைப்பள்ளியை இந்த மதுரையிலே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதன் மூலம் நிறைய பேருக்குக் குறைந்த தொகையில் பாட்டு, கீ- போர்டு கத்துத் தரப் போகிறேன். இது தான் என் எதிர்கால ஆசை”

“சரிம்மா. உன் விருப்பம் போல செய்”

காயத்திரி தன் கணவன் பெயரில் இசைப்பள்ளி தொடங்கினாள். மாற்றுத் திறனாளி மற்றும் உடல் ஊனமுற்றோர்க்குக் குறைந்த தொகையில் பாட்டு மற்றும் கீபோர்டு சொல்லித் தரப்படும் என்ற போர்டை மாட்டினாள். இரண்டு மாதத்தில் ஐம்பதுக்கும் அதிகமானோர் இசைப்பள்ளியில் சேர்ந்தனர்.

அதில் விக்னேஷ் என்ற பத்து வயது சிறுவன் இருந்தான். அவன் சிவந்த உருவம், படர்ந்த நெற்றி. பெரிய கண்கள், உருண்டை முகம் எனப் பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். ஆனால், அவனுக்கு ஒரு கால் மட்டும் ஊனமாக இருந்தது. உடனுக்குடன் காயத்திரி சொல்வதைப் புரிந்து கொண்டு அழகாகப் பாடினான். துருதுருப் பார்வையால்; காயத்திரி மனதைக் கவர்ந்தான். இசை வகுப்பு முடிந்ததும் அவனிடம் பேசத் தொடங்கினாள்.

“நீ எந்த கிளாஸ் படிக்கிற”

“ஐந்தாம் கிளாஸ் படிக்கிறேன்”

“நீ பாடறப்ப உன் குரல் ரொம்ப இனிமையாக இருக்கு”

“நன்றி மேடம். நான் தினம் ஆறு மணிக்கு எழுந்து வீட்டுல பாடுவேன். குரல் மாறக் கூடாதுங்கறதுக்காக ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்கிச் சாப்பிட மாட்டேன்”

சின்ன வயதில் பிடித்ததைச் சாப்பிடும் சிறுவர்களுக்கிடையே விக்னேஷ் வேறுபட்டு காணப்பட்டான். தன் குரல்வளத்திற்காக ஐஸ்கிரீமைத் துறந்த சிறுவனை ஆச்சர்யம் மேலிடப் பார்த்தாள் காயத்திரி.

“உன் கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?”

“நான் ஒருத்தன்தான் எனக்கு அம்மா, அப்பா கிடையாது”

“ஏன்?”

“அவங்க என்னோட மூணு வயசுல ஒரு விபத்துல இறந்துட்டாங்க”

“அப்ப உன்னை யார் பார்த்துகிறாங்க?”

“அம்மா வழி பாட்டி என்னை பார்த்துக்கிறாங்க” சொல்லிவிட்டு கிளம்பினான் விக்னேஷ்.சிறுவனின் துயரம் காயத்திரியின் துயரத்தை லேசாக்கியது. நாள்தோறும் பாட்டு கிளாஸ் முடிந்ததும் சிறிது நேரம் அவனிடம் பேசுவது அவள் மனதிற்கு இதமாக இருந்தது.

தொடர்ந்து ஒரு வாரம் விக்னேஷ் பாட்டுக் கிளாஸிற்கு வரவில்லை. காயத்திரி சிறுவனைப் பார்க்காமல், பேசாமல் பரிதவித்தாள்.

காயத்திரியின் முகம் வாடியிருப்பதை பார்த்து அவர் தந்தை விசாரித்தார்.

“என்னம்மா ஆச்சு? ஏன் சோகமாயிருக்க”

“ஒண்ணு இல்லப்பா”

உண்மையை சொல்லாமல் உறங்கச் சென்றாள்.

காயத்திரிக்குத் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மனதில் நினைத்துக் கொண்டார் வெங்கட்ராமன்.

மறுவாரம் முதல் நாள் விக்னேஷ் வரவில்லை. அவன் வீட்டிற்குச் சென்றாள்.

“வாங்க மேடம், உட்காருங்க”

ஒரு பக்கம் மட்டும் கைப்பிடியுள்ள நாற்காலியைக் கொண்டு வந்து போட்டான் விக்னேஷ்.

நாற்காலியில் அமர்ந்தவாறே கேட்டாள் காயத்திரி.

“கிளாஸ்க்கு ஏன்ப்பா வரதுல்ல”

“பாட்டிக்கு உடம்பு சரியில்ல மேடம்”

“பாட்டி எங்க இருக்காங்க”


பாட்டி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். எழுபது வயது தேகம். தலை நரைத்து பூத்திருந்தது. சுருக்கங்கள் நிறைந்த முகம். தளர்ந்த கை, நெடுங்காலம் உழைத்து ஓய்ந்திருந்த கால்கள், பார்க்கவே பரிதாபமாக இருந்தாள். தொடர்ந்து இருமல் வேறு பாட்டியை வாட்டியது.

“பாட்டிய ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனியா? உனக்கு மாமா ஒருத்தர் இருக்கார்னு சொன்னியே, அவர் வந்து பார்க்கலயா?”

“மாமா ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போனார். பாட்டியை இனிமே குணப்படுத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால மாமா பாட்டியை தினமும் வந்து பார்த்துட்டுப் போறாரு”

“பாட்டிக்கு என்ன பிரச்சினை”

“பாட்டி சிறுநீரகம் செயலிழந்து போச்சு, அதனால வீட்டுக்கு கொண்டுட்டு போங்க என்று டாக்டர் சொல்லிட்டாங்க”

“சரிப்பா உனக்கு என்ன உதவினாலும் தயங்காமல் எனக்கு போன் பண்ணு. நான் வரேன்”

வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் அமர்ந்திருந்தனர். புதியவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

“காயத்திரி சீக்கிரம் உள்ள போய் புடவையைக் கட்டிக்கிட்டு வா, உன்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்க”

அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்தீர்கள்”

“உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணுமின்னு நினைச்சுதான் இந்த ஏற்பாடு செய்தேன்” என்றார் அப்பா.

“எனக்கு திருமணத்துல விருப்பம் இருக்கா அப்படின்னு ஒரு வார்த்த கேட்டீங்களா?”

வெங்கட்ராமன் அமைதியாக இருந்தார். இவர்கள் வாக்குவாதத்தைக் கேட்ட மாப்பிள்ளை வீட்டார் வெளியே கிளம்பினார்கள்.

காயத்திரி தொடர்ந்தாள்.

“எனக்குத் திருமணம் வேண்டாம் அப்பா”

“நீ அப்படி சொல்லக்கூடாதும்மா, முப்பது வயசுல எல்லாக் கஷ்டத்தையும் அனுபவிச்சிட்ட. இப்போ தனி மரமா நிக்கிற. உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். அதனால நான் சொல்றத. . .”

“ப்ளீஸ்ப்பா என்னை கட்டாயப்படுத்தாதீங்க, மறுபடியும் திருமண பந்தத்துல இணைய எனக்கு விருப்பம் இல்ல. மனதால நான் என் சக்தியோட வாழ்ந்துகிட்டுதான் இருக்கேன், நீங்க தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுங்க அது போதும்”

“நீ திருமணம் செஞ்சிகிட்டா உனக்குக் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தை நாளை உன்னை பார்த்தக் கொள்ளும், அதற்காகதான் சொல்றேன்”

“எனக்கு பிறந்தாதான் குழந்தையா? தத்து எடுத்தாலும் அது என் குழந்தைதானே”

“என்னம்மா சொல்ற”

“இசைப் பள்ளிக்கு வருகின்ற ஊனமுற்ற பையன் விக்னேஷ் ஆதரவற்றவன். அவனைத் தத்து எடுக்கலாமுன்னு முடிவு செய்துவிட்டேன். உங்கள் ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் எனக்கு அவசியம் தேவை. சம்மதிப்பீர்களா அப்பா?”

“உன் உயர்ந்த எண்ணங்களுக்கு என்றும் நான் துணை நிற்பேன்” என்று சொல்லியவாறே மகளின் நெற்றியில் அன்பு முத்தமிட்டார் வெங்கட்ராமன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p264.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License