இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

செம்பருத்தி..!

மதுவதனி


“இந்தா செம்பா இது நேத்தைக்கு பணம், கடைக்காசையும் சேர்த்து மொத்தமா வச்சிடு, நாளைக்கு ஆட்டோ டியு கட்டிருவோம்... இந்த டியுவோட முடிஞ்சது... இனி ஆட்டோ நம்மது..” என்ற கணவனைப் பார்த்து புன்னகைத்தபடியே,

“ம்ம்... ஆமாப்பா இதோட ஒரு பிரச்சினை முடிஞ்சது... அடுத்து பிள்ளைங்க ஸ்கூல் பணம் தான் பாக்கி, அதை அடுத்தவாரம் முடிச்சிடனும்..” என்றாள் செம்பருத்தி.

“அதைத்தான் நானும் நினைச்சேன்... இதுல ஒரு மூனாயிரம் தனியா எடுத்து வச்சிடு, நாளைக்கு பிள்ளைங்கள ஹாஸ்டல் விட போடிக்கு போகும் போது, அந்தக்காசுல கடைக்கு சரக்கு போட்டுட்டு வந்துடு..” என மாரிமுத்து கூற,

“நான் எங்கப்பா போக, கம்பெனிகாரன் முன்னாடி மாதிரியா இருக்கான், ஒரு நாள் வேலைக்கு போகலைன்னாலும், ப்ளாக் மார்க் பண்ணிடுறான்... அப்படியே டிஸ்மிஸ் நோட்டிஸ் கொடுத்துடுறான்... இந்த லட்சணத்துல நான் எங்க போக, நீங்களே போயி பிள்ளைங்கள விட்டுட்டு, சாமான் போட்டுட்டு வந்துடுங்க...” பரிதாபமாய் முடித்தாள் மனைவி.

“ம்ம் அதுவும் சரிதான்... யாரை குத்தம் சொல்ல, இங்க இருக்க தலைவர்மாருங்க அதுக்கு மேல இருக்கானுங்க, தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துடக்கூடாது, அப்படி வந்தா அதை சரி செய்யத்தான் இந்த கட்சிங்க... தலைவர்மாருங்க..! இவனுங்க என்னடான்னா கம்பெனிக்காரன்கிட்டயும் வாங்கித் திண்ணுட்டு, தொழிலார்கள்கிட்டயும் வாங்கித்திண்ணு ஏமாத்திட்டு திரியுறானுங்க...”

“சந்தா மட்டும் கேட்டுட்டு வந்துடுவானுங்க வீட்டுக்கு... இவனுங்களை யார் கேட்குறது...? என்ன செய்ய..? நம்ம பொழப்பு அப்படி... சரி விடு... நான் ஒருத்தன் டிஸ்மிஸ் ஆகி கிடக்குறது போதும்... நீயாச்சும் வேலைக்கு போ... இல்லாட்டி நாம வீடு இல்லாம தெருவுல தான் நிக்கணும்...” என தன் ஆதங்கத்தை கொட்டினான் மாரி.

“வேண்டாம்ப்பா... நாம எதுவும் பேச வேணாம்... அப்புறம் நம்மதான் பிரச்சினை செய்றோம்னு எஸ்டேட்டெல்லாம் பரப்பி விட்டுருவானுங்க... நீங்க அதை விடுங்க...”

“இந்தாப்பா பீரோ சாவி, பணத்தை நீங்களே கொண்டு போயி வச்சிடுங்க... பிள்ளைங்ககிட்ட சொல்லி ஆட்டோவை கழுவி விட சொல்லிட்டு, நீங்க சாப்பிட்டு படுங்க.. இங்க நான் பார்த்துட்டு வரேன்...”

“ரெண்டு மாசம் கழிச்சு வந்த பிள்ளைங்கள வேலை வாங்கச் சொல்றியா, அதெல்லாம் போற வழியில, அந்த அருவி பக்கத்துல நிறுத்தி கழுவிட்டு போயிடுறேன்... நீ சீக்கிரம் வந்துடு...” என்றபடியே கிளம்பினான் மாரிமுத்து.

மூணாரின் சுற்றுலா இடங்களில் முக்கியாமானது எக்கோ பாயிண்ட் எனப்படும் இடம்... இங்கு பலவகையான கலைபொருட்களை கொண்ட சின்ன சின்ன கடைகள் அதிகம்... அப்படி ஒரு சின்னதான ஒரு கடையை தான் மாரிமுத்துவும், அவன் மனைவி செம்பருத்தியும் வைத்துள்ளனர்.

மாரிமுத்து கிளம்பவும், அங்கிருந்த செல்பி ஸ்டிக் மற்றும் சில பொருட்களை எடுத்து வந்து கடைக்கு முன்னே நின்று சுற்றுலா பயணிகளிடம் அவரவர்க்கு ஏற்றார்போல், தனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் பேசி வியாபாரத்தை தொடர்ந்தாள் செம்பா. காரணம் வடமாநிலத்தவரும், வெளிநாட்டவரும் தான் இங்கு அதிகம் வருவது...



எப்போதும் கூட்டங்கள் அலைமோதும் இடம் என்றாலும், சனி ஞாயிறுகளில் மிக அதிகம். அவர்களுக்கு ஏற்றமாதிரியான பொருட்களை, அவர்களுக்குப் பிடித்த விதத்தில், அவர்களுக்குப் புரியும்படி கூறி விற்பனை செய்வதில் செம்பருத்தி கெட்டிக்காரி.

அடுத்த சிலமணி நேரங்கள் எப்படி போனதோ செம்பாவிற்கு... பக்கத்துக் கடையில் இருந்த ஜாக்ளின் தான் அவளை உள்ளேப் பிடித்து இழுத்தாள்.

“ஏண்டி இதென்ன பேய் மாதிரி நிக்க, போ போய் முதல்ல வயித்துல கொஞ்சம் தண்ணிய ஊத்து... மணி எத்தன ஆவுது பாரு...” என்று கடிய,

“அட ஆமா மதினி, மணி மூணாவுது... எங்க நேரம் போனதே தெரியல, டீத்தண்ணிய குடிச்சா, சாப்பிட முடியாது, பேசாம சாப்பிட்டுருவோம்... நீ என்ன கொண்டாந்த....” என ஜாக்ளியிடம் விசாரித்தாள்.

“நான் என்னத்த கொண்டார, தீவாளிக்கு கரி போட்டான்னு, நேத்தைக்கு போடல போல கரிக்கடக்காரன். மீனு வந்துச்சுன்னு எடுத்தாந்தான் தம்பி, அதத்தான் வச்சேன்.. காலைல இட்லி அவிச்சு வச்சிட்டு, நான் நாலை எடுத்து டப்பால போட்டுட்டு வந்தேன்...”

“கிரைண்டர் ரிப்பேருன்னு சொல்லிட்டு இருந்தியே மதினி, எப்போ சரி பண்ண.. அந்த மணிப்பயனா பார்த்தான்...”

“அட ஏன் புள்ள நீ வேற, அதை சரி பண்ணிக்கொடுக்குறதுக்கு புதுசே வாங்கிடலாம்னு இந்தப்பையன் சொல்லிட்டான்.. அதைக்கொண்டு போயி மூனார்ல அந்தக் கடைல போட்டுட்டு புதுசு எடுக்க நேரமில்ல, கல்லுல தான் ஆட்டுனேன்... நீ என்ன எடுத்தாந்த...”

“பிள்ளைங்க நாளைக்கு ஹாஸ்டல் போகுதுங்களே... அதான் பரோட்டா போட்டுக் கொடுத்துச்சு அவங்க அப்பா... அதை தான் நானும் எடுத்துட்டு வந்தேன்...”

“என்னவாம் உங்க வீட்டு திருவாத்தன் என்னமோ சொல்லிட்டு போறான்...” என நொடித்துக் கொண்டே இட்லியைப் பிய்த்து வாயில் போட்டாள் ஜாக்ளி.

“அட ஏன் மதினி நீ வேற, அந்தாளு குடிச்ச குடிக்கு, இப்போ இவ்ளோ மாறியிருக்குறதே பெருசு... எல்லாம் என் சாமி கர்த்தராலதான்... இன்னும் குடிச்சிட்டு கடைமேட்டுலத் திரிஞ்சிருந்தா, நானும் என் புள்ளைங்களும் நடுத் தெருவுலதான் நின்னுருக்கணும்...” என்ற செம்பாவைப் பார்த்து முறைத்த ஜாக்ளி,

“அட கிறுக்குப் பிடிச்சவளே, என்னப் பேச்சு பேசுற, அவன் உன்னைப் படுத்தாத கொடுமையா... அதுவும் அப்போ உனக்கு வேலையும் பெரமன்ட் (பெர்மனன்ட்) ஆகாம இருந்த... பாதி நாளு வேலை கொடுப்பானுங்க, மீதி நாளு சும்மா போட்றுவானுங்க, அப்பவும் ரெண்டு பொம்பளப்புள்ளைங்கல வச்சிட்டு சும்மா உக்காந்தா கெடந்த, இதோ இந்தக்கடையை ஒத்தப் பொம்பளையா நீ கட்டி இழுத்துட்டு வரல, விடு புள்ள, நீ பட்ட பாட்டைக் கண்ணால பார்த்தவ நானு... வேற எதுவும் பேசாத...” எனக் கோபமாய்ப் பேச,

“அதென்னமோ நெசம்தான் மதினி இந்தாளு தான் வேணும்னு ஒத்தக்கால்ல நின்னு கட்டுனேன், அப்பன் ஆத்தா தொலஞ்சு எக்கேடோ கெட்டுப்போன்னு அப்படியே விட்டுட்டாங்க, ரெண்டு புள்ளைங்களக் கொடுத்தத தவிர, வேற என்ன செஞ்சுப்புட்டான் எனக்கு... குடி... குடி... குடிதான்..! முக்கியமா போச்சு...”

“எந்த நேரமும் சண்டைதான்... வீடு வீடாவே இருந்ததில்ல, புள்ளைங்க பயந்து பயந்து தான் படுக்குங்க... நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, பச்ச மண்ணுங்கள கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டேன், அப்படியாச்சும் நிம்மதியா இருக்கட்டும்னு...”



“எல்லாம் நான் வாங்கி வந்த வரம் மதினி, லீவுக்கு வந்த பிள்ளைங்க நிம்மதியா ஒருநாள் ஒருநேரம் கஞ்சிக் குடிக்க முடியாது... அதுங்க படுற வேதனையைப் பார்த்து நானே அந்த மனுசனைக் கொன்னு போட்டுரனும்னு துணிஞ்சிட்டேன்...”

“இந்தாளு இருக்குறதும் ஒண்ணுதான், போய் சேருறதும் ஒண்ணுதான்னு மனசுக்குள்ள தோன ஆரம்பிச்சிட்டு...” என்று தொடர்ந்து பேசிய செம்பாவின் பேச்சு நின்று முகம் வேதனையில் சுருண்டது.

“பழசெல்லாம் விடு செம்பா... இப்போதான் எல்லாம் சரியா போயிடுச்சில்ல, எதையும் நினைச்சு வருந்தாத புள்ள..” என ஜாக்ளி அவளைத் தேற்ற...

“சில விசயங்கள் எப்பவும் மறக்க முடியாது மதினி, அப்படித்தான் இதுவும். அந்தாள் பண்ணக் கூத்து ஒன்னா ரெண்டா... வேலையும் போயி, வீட்டை இழுத்து மூடி, நானும் என் பிள்ளைங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... இருக்க தலைவர்மாருங்க கால்ல எல்லாம் விழாத குறைதான்... அதுலயும் ஒவ்வொருத்தனோட பார்வையும், பேச்சும் இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் கூசுது மதினி...”

“இந்தக் குடின்னால எத்தன குடும்பம் இல்லாமப் போச்சோத் தெரியல, ஆனா என் பிள்ளைங்க இப்படி ஒரு முடிவு எடுப்பாங்கன்னு கனவுல கூட நினைக்கல. என் ஈரக்கொலையே நடுங்கிப்போச்சு மதினி...” அன்றைய நாளின் நினைவில் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது செம்பாவிற்கு...

“விசயத்தைக் கேள்விப்பட்டதும் எனக்கும் அப்படிதாண்டி இருந்துச்சு... ஒலகம் தெரியாத பிள்ளைங்க உயிர விட துனிஞ்சிருக்குங்கன்னா அதுங்க மனசளவுல எவ்ளோ வேதனைப்பட்டிருக்கும்... சரி இதுவும் நல்லதுக்குத்தான, தாம் பிள்ளைங்கள அன்னைக்கு அப்படிப் பார்த்ததும், இடிஞ்சிப் போயி உக்காந்தவன் தான்... இப்போ சுத்தமா ஆளே மாறிட்டானே உன் புருசன்காரன்...” என்று மேலும் சமாதானப் படுத்தினாள் ஜாக்ளி.

“என்ன மதினி சொல்ற, இந்தாளு உணரனும்ன்றதற்காக, என் குழந்தைங்க இப்படி ஒரு முடிவு எடுத்தது எப்படி சரின்னு சொல்ல முடியும், அப்படி மட்டும் ஒன்னு கணக்கா ஒன்னு ஆகிருந்தா...? இந்த மனுஷனையும் எரிச்சிட்டு நானும் செத்துருப்பேன்... ஏதோ ஏசப்பா கிருபை நல்ல வழிக் காட்டிருக்கார்...” என்ற செம்பாவின் விழிகளில் அன்றைய நாளின் வேதனை நீராய் வழிந்தது.

“இனி என்ன அதான் நீ பெரமன்ட் ஆகிட்டியே... அப்புறம் என்ன கவலை, வீட்டுக்கு வீடு... தோட்டத்துக்கு தோட்டம் கிடைச்சிருக்கு... பாரு இனி எல்லாம் நல்லாதாத்தான் நடக்கும்... நாலு பேரு மாதிரி நீயும் நல்லா வருவ... சரி எந்திரி புள்ள, யேவாரத்தை பாப்போம்... பேசுனா பொழுதன்னைக்கும் பேசிட்டே தான் இருப்போம்... சாயங்காலம் சீக்கிரம் வரச்சொல்லிட்டு போயிருக்கான் மாரி வேற...” என்று ஜாக்ளித் தன் கடை நோக்கி நகர, செம்பாவிற்கு அன்றைய நாளின் நினைவில் இருந்து வெளிவர சிறிது நேரம் பிடித்தது.

அடுத்த சில மணிநேரங்களில் வேலையில் தன்னை மூழ்கடிக்க, பழைய நினைவுகள் எல்லாம் மனதின் ஓரத்தில் சென்றமர்ந்தது. தன்னுடைய ரத்தம் என்றதும் உண்டான தவிப்பும், துடிப்பும் ஏன் மனைவி என்ற ஒருத்தியிடம் வரவில்லை என்ற கேள்வி வழக்கம்போல் எழுந்தாலும், இன்று நல்லமுறையில் தானே நடந்துகொள்கிறான் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி கசப்பான பழையவற்றை மறக்க முயற்சிக்கிறாள் தான், ஆனால் முடியவில்லை பதின்மூன்று வருடங்களாக அனுபவித்த கஷ்டங்களை ஒரே ஆண்டில் மறந்து விடச் சொன்னால் எப்படி முடியும்...?

குழந்தைகளுக்காக வேனும் வாழ்க்கையை இலகுவாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டாள். சில சில மனஸ்தாபங்கள் வந்தாலும், அதையும் தூரத் தள்ளி, தன் வாழ்க்கைப் படகைச் செலுத்திக் கொள்கிறாள். எதற்காக இத்தனைப் போராட்டங்கள்...! எல்லாம் குழந்தைகளுக்காக...! குழந்தைகளுக்காக மட்டுமே...!



மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனத்தைப் பதிக்க, அதுவும் சாத்தியமாக, அடுத்த இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை செம்பாவிற்கு.

மணி ஆறைத் தொட, அனைத்து சாமான்களையும் எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு, கடையை மூடியவள், ஜாக்ளியைத் தேடிச் செல்ல, அவளும் இவளுக்காய் காத்திருக்க, அடுத்து வந்த ஜீப்பில் நெருக்கியடித்து ஏறிக்கொண்டனர்.

ஆசுவாசமாய் அமரலாம் என்றால் அவர்கள் ஊருக்கான கடைசி வண்டி, கூட்டம், இருக்கைப் பற்றாக்குறை..! அதையெல்லாம் பெரிது பண்ணாமல் கிடைத்த சிறு இடத்தில் அமர்ந்தவளின் நினைவுகள் எல்லாம் நாளைக் குழந்தைகள் விடுதிக்குச் சென்று விடுவார்களே என்பதிலேயே இருந்தது. அவர்களுக்கானதைச் சமைக்க, எடுத்து வைக்க என்ற வேலைகள் அவளை நிதானாமாய் இருக்க விடவில்லை.

‘பெரியவளுக்கு எள்ளுப்பொடியும், சின்னவளுக்கு உளுந்துப்பொடியும் சேர்த்து செஞ்சுக் கொடுக்கணும். போன தடவைக்கு இந்தத் தடவைக் கொஞ்சம் இளைச்சிப் போயிட்டுதுங்க...’ தாயிற்கே உண்டான கவலை அவளை யோசிக்க வைக்க, அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்திருந்தது.

“மதினி நாளைக்கு ஒருநாள் கடையைப் பார்த்துக்க, பிள்ளைங்க ஊருக்கு போறதால, காப்பிக்கு கேட்ருக்கேன், காட்டுல போயி காப்பிய ஊத்திட்டு வந்துடுவேன்...” என்றவளிடம்,

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், பார்த்து சூதானமாக் கூட்டிட்டுப் போகச் சொல்லு அவன்கிட்ட...” எனவும்,

“சரி மதினி, நீ பார்த்துப்போ...” என்று ஜாக்ளிக்கு விடை கொடுத்து, வீடு நோக்கி வேக வேக எட்டுக்களை எடுத்து வைத்தவளுக்கு, தன் வீட்டின் முன் சில ஆட்கள் நிற்பதும், அழுகைச் சத்தமும், அவளை மேலும் வேகமாய் நடக்க வைத்தது.

‘அய்யோ என்னாச்சு... பிள்ளைங்களுக்கு என்னமோ... இந்தாளு எங்க போச்சோ தெரியலையே...’ என்று நொடியில் நூறு எண்ணங்களை யோசித்துக்கொண்டு வந்தவளைப் பார்த்த ஒரு வயதான பெண்மணி... “அடிப்பாதகத்தி இப்படி உன்ன மூளியா நிக்க வச்சிட்டுப் போயிட்டானே... எவனோ கட்டாயப் படுத்துனான்னு குடிச்சிட்டு வந்து, இப்படி முழுசாப் போய்ச் சேர்ந்துட்டானே..’ என்று ஒப்பாரி வைக்க...

அவளது கனவுக் கோட்டைகள் அனைத்தும் தரைமாட்டாமாக, மொத்தமாய் இடிந்து போய் நின்றாள் செம்பருத்தி...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p270.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License