இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

சுமங்கலி வடு

பி. வித்யா


இதமான காலை வேளை. தூக்கம் உதற அடம்பிடிக்கும் வயது தனத்திற்கு. பத்தாம்வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருக்கிறாள். கூரைகள் வேயக் கிடுகு பின்னுவது குடும்பத் தொழில். சொந்த வீடு இல்லை. உறவுக்காரரின் தோட்டத்தில் அடிமை வேலை. ஊறலில் கிடக்கும் மட்டைகளை எடுத்துவிட்டார் அப்பா. சமையல் வேலைகளைச் செய்கிறாள் அம்மா. “பொம்பளப்புள்ள இன்னவரைக்குமா தூங்குவ எந்திரிடி” அம்மா லட்சுமியின் குரல்.

அப்பொழுதுதான் கண்ணன் வந்தார். என்னப்பா குபேரா? எப்படியிருக்க? பொம்பளப்புள்ள பத்தாவது எழுதியிருக்கு போல. பையனப் படிக்க வைக்க முடியாமத்தான் வண்டி பழுது பார்க்கிற கடைக்கு அனுப்பியிருக்க. பொம்பளப்புள்ளக சீக்கிரம் வளந்திரும். ஒரு நகநட்டப் போட்டுக் கல்யாணத்தப் பண்ணணும். நம்மகிட்ட அதுக்கு எங்க சக்தியிருக்கு? அதான் எம்புள்ளய நான் கோயம்புத்தூர் மில்லுல விட்டுருக்கேன். மாச மாசம் சம்பளம் அனுப்புறா. மூணு வருசம் கழிச்சு நமக்கு அம்பதாயிரம் குடுப்பாங்க. அதவச்சு அவ கல்யாணத்தப் பண்ண வேண்டியதுதான என்ன சொல்ற?

கல்யாணம் என்றதும் நெஞ்சில் பரவிய நெருப்பு முகத்தில் பரவியது குபேரனுக்கு. வார்த்தைகளைக் கோர்த்துப் பேசச் சிரமப்பட்டார்.

“ஒம்புள்ளயக்கூட அனுப்புப்பா. ஒனக்கும் ஒதவியா இருக்கும்ல. என்னப்பா யோசிக்கிற நாலு பேரப்போல நாமும் வாழணும்ல? என்று கண்ணன் சொன்னதும் குபேரன் யோசித்து, “ம் ம்” கொட்டிக் கொண்டிருந்தார்.

“அப்ப ஒம்மகள அனுப்பி வையி. போக்குவரத்துச் செலவக்கூட அவுகளே பாத்துக்குவாக. மாசத்துக்கு ஒரு தடவ நாம போன்ல பேசலாம். தோணுனாப் போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்று கண்ணன் சொல்லி முடிக்க பெருமூச்செறிந்தார் குபேரன்.

அரைகுறையாய்க் குபேரனிடம் சம்மதம் வாங்கி, தனத்தை விசைத்தறி மில்லுக்கு அனுப்ப உத்தேசமானது. திடீரென்று படிப்பில்லை, ஊரில்லை, உறவில்லை என்றானதோடு வேலை அதுவும் தெரியாத கோயம்புத்தூர்ல என்றதும் மனக்கலக்கம் அதிகமானது தனத்திற்கு.

கோயம்புத்தூர்க்கு ரயிலுவண்டில கூட்டிப் போறாங்க. முதமுதலா ரயிலுவண்டி பாக்குறா தனம் வாயப் பொளந்து. கழிவறை அருகேதான் பயணம். இறங்கி ஏதேதோ பேருந்தில் ஏறி மாறி மாறிப் பயணம். என்னென்னவோ புத்திமதிகள் சொல்லி விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

அறிந்தவர்கள் யாருமில்லாக் காடு அப்படித்தான் தோன்றியது தனத்திற்கு. ஒரு பெரிய விசாலமான அறை. ஆங்காங்கே பைகள், கண்ணாடிகள். சிலர் தூங்குகிறார்கள். சிலர் வேலைக்குக் கிளம்புகிறார்கள். பெண்களின் கூட்டம். 250 பேர் இருப்பார்கள். கழிப்பிடம் மூன்று தான். தனமும் குளித்துத் தயாரானாள்.

முதல்நாள் மணிமேகலை வந்து அழைத்துப் போனாள். அவள் தனத்தின் ஊர்தான். கண்ணனின் மகள். தொழிற்சாலைக்குள் முதன்முதலாய் நுழையத் தயக்கம் பின்னிழுத்தது. உள்ளே சென்றதும் ஒரே இரைச்சல் யாரோ தலையில் ஓங்கி அடிக்க எங்கெங்கும் இரைச்சலே வியாபிப்பதுபோல். தனத்திற்குத் தலைவலி தாங்கவில்லை.

மணிமேகலை தனத்தைத் தொட்டு உலுக்கினாள். “என்னாச்சு தல வலிக்குதா?” ஒன்றும் புரியாமல் குத்துமதிப்பாக ஆமாம் என்று தலையசைத்தாள். “அப்படித்தான் முதல்ல இருக்கும் அப்பறம் சரியாயிரும்” என்றாள் மேகலை.

கண்காணிப்பாளர் வந்து தனத்திடம், “என்னம்மா புதுசா?” என்றார். அவளுக்கு இரைச்சலில் காதில் எதுவும் விழவில்லை. மேகலை வந்து “ஆமாம் சார், இன்னக்கித்தான் வந்திருக்கா...” என்றாள்.

“சரி சரி வந்து துடப்பத்த எடுத்துச் சுத்தம் பண்ணு” என்றதும், கைகாட்டிய இடத்தில் இருந்த பெருக்குமாறால் பஞ்சினைக் கூட்டித் தள்ளினாள்.

“ தண்ணி எடுத்து வந்து இந்த மிஷினக் கிளீன் பண்ணு”என்று அடுத்து அடுத்து தூள் பறத்த வேலைகளில் மூழ்கிப்போனாள் தனம். இரைச்சலில்லா தன் கிராமத்து வாழ்வு அடிக்கடி நினைவில் வந்து கண்ணில் ஈரத்தைப் பரப்பியது.

இரவு 7 மணிக்கு வேலை முடிந்தது. எல்லோரும் வெளியேற தனத்தைத் தேடி வந்தாள் மேகலை. “ வாடி ரூம் போகலாம்” என்று அழைத்துச் சென்றாள். திடீரென்று நிகழ்ந்துவிட்ட தனிமையில் இரவு முழுவதும் தூங்காமல் அழுதழுது முகம் வீங்கிப் போனது. அடுத்த நாள் ஒரு வழியாகத் தேற்றி வேலைக்கு அழைத்துச் சென்றாள் மேகலை. இப்படியாக ஒரு வாரம் உருள, அந்தவாரம் மேகலைக்குப் பாதி இரவு வேலை. தனம் தனித்து விடப்பட்டாள்.

இப்பொழுது புதுப்பயம் தொற்றிக் கொண்டது. தெரிந்த ஒருத்தியும் அருகில் இல்லை. என்ன செய்ய வேலைக்குப் போக வேண்டுமே? ஒரு வழியாகத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். பாதிக்கும் மேலாக உள்ளே ஆண்களாக இருந்தார்கள்.

அய்யோ என்று உதறல் எடுக்க, ஆண்கள் “புதுசா?” என்று கேட்டவாறு அந்த வேலையைச் செய், இந்த வேலையைச் செய் என்று ஏவிக் கொண்டிருந்தார்கள்.

“டீ எடுத்துட்டு வா” ஒரு பெரிசு கத்தியது. “இந்தாங்கண்ணே” என்று கொடுத்ததும் கையைத் தொட்டு வாங்கியது பெரிசு. “சூப்பர்வைசர்கிட்ட ஸ்குரூ டிரைவர் வாங்கிட்டு வா” இயந்திரத்தின் கீழே இன்னொரு ஆள். கேட்டு வாங்கி வந்து குனிந்து கொடுத்தாள். அவளின் மார்புப் பகுதியைத் தொட்டான் அந்த மெக்கானிக். இவள் சரட்டென்று விலகி நிற்க, திருப்பக் கேட்கவும் கொடுத்தாள். ஒன்றும் தெரியாதவனைப் போல் வாங்கிக் கொண்டான்.

என்னென்னவோ ஆளுக்கொரு வேலை தந்தார்கள். அவள் அங்குமிங்கும் ஓடி வேலை செய்தாளே தவிர மனது ஓரிடத்திலேயே நின்றது. வேலயும் முடிந்தது. அவள் வெளியேற, அவளைப்பார்த்துக் கையசைத்தாள் மேகலை. “நீ ரூம்க்கு போ. நான் உன்ன காலைல வந்து பாக்குறேன்டி”என்றாள். ஆனால், இவள் முகம் ஏதோ போன்று இருப்பதைப் பார்த்து,“என்னடி என்ன ஆச்சு? முகமே ஒரு மாதிரி இருக்கு?” என்றாள் மேகலை.

“ஒன்னுமில்லடி” என்று சுரத்தில்லாமல் கூறினாள் தனம். “சரிடி காலைல பார்ப்போம்” என்று இருவரும் பிரிய, அறைக்குச் சென்றவள் முந்தின நாட்களை விடத் தாங்க முடியா துயரக் கடலில் வீழ எப்பொழுது தூங்கினாள் என்றே தெரியவில்லை. இரவு உணவும் சாப்பிடவில்லை. காலையில் எழுந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. பல் தேய்த்து, ஒரு குவளை தேநீர் குடித்ததும் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள். சாப்பிட்டு வேலைக்குத் தயாரானாள். ஆலைச்சங்கு ஒலித்தது. இன்று தவறாக ஏதேனும் நடந்தால், உடனே கண்காணிப்பாளரிடம் சொல்லியாக வேண்டும் என்று உறுதியோடு நடந்தாள்.

ஒவ்வொருவரும் அழைத்து ஆளுக்கொரு வேலையைக் கொடுத்தார்கள். யாரும் இன்று தவறாக நடந்து கொள்ளவில்லை. தனத்திற்குச் சந்தேகம் உண்டானது. ஒரு வேளை தெரியாமல் நடந்திருக்குமோ? நான்தான் தவறாக நினைத்துக் கொண்டேனா? என்று உள்ளுள் ஓர் ஐயம். ஒரு வாரம் நன்றாகத்தான் போனது. மனது தெளிவாகி, நாம்தான் தவறாக நினைத்துவிட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

இந்தவாரம் தனத்திற்கு சுழற்சி பாதி இரவு வேலை. அவளோடு வேலை செய்த ஆண்கள் சிலரும் வந்திருந்தனர். அடிக்கடி வேலை வாங்கும் பெரியவர் அருகில் அழைத்து,“கண்ணு நீ எந்த ஊரு?” என்று வினவ,“நான் மதுர” என்றாள். உங்க அம்மா, அப்பா என்ன பண்றாங்க கண்ணு” இப்படியாக நீண்டு இயல்பாக வீட்டுச் சூழழை அறிந்து கொண்ட பெரியவர், “நாளை வா. உனக்குத் தறிய எப்படி ஓட்டறதுன்னு சொல்லித் தறேன். எதுவும் தேவன்னாலும் கேளு” என்றார். தனமும் “சரிங்கப்பா” என்றாள்.

அன்று அவளுக்கு நிம்மதியான உறக்கம். நாமும் வேலை கற்றுக் கொள்ளப் போகிறோம், எடுபிடி வேலை செய்யத் தேவையில்லை என்ற மகிழ்ச்சியில் உறங்கிப் போனாள். வேலைக்கு அதே உற்சாகத்துடன் கிளம்பினாள். பெரியவர் பக்கத்திலிருக்கும் ஏதோ ஊரிலிருந்து வேலைக்கு வருகிறார். அவரைத் தனது அப்பாவைப் போன்றேக் கருதினாள். சில வேலைகளை அவரிடமிருந்து கற்றும் கொண்டாள்.

பெரியவரைப் பார்க்கவும், அவருக்கு உதவவும், வேலைகளைக் கற்கவும் என்று ஒரு மாதம் மிக வேகமாக ஓடியது. இப்பொழுது பெண்களோடு இயல்பாகப் பேசவும் செய்தாள். இவள் குடும்பத்தைப் போலவே பல்வேறு காரணங்களுக்காக இவள் போன்றும், இவளை விடவும் வயதில் குறைந்த சிறுமிகளும் வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

நாட்கள் ஓடின. பெரியவர் தனத்தை அழைத்து இனிப்புக் கொடுத்தார். “என்னப்பா விஷேசமா?”என்றவளிடம், “சும்மாதான்ம்மா பாக்கெட்டுல கெடந்திச்சு அதான் கொடுத்தேன்” என்றார். “பைவ்ஸ்டார் சாக்லேட்டா? வேணாம்ப்பா” என்று மறுத்துப் பார்த்தாள். பாசமாய் கொடுக்கவும் வாங்கிக் கொண்டாள்.

அடுத்தநாள் பாத்திரத்தில் பிரியாணியுடன் வந்தார். “எஞ் சம்சாரம் பண்ண பிரியாணி உனக்குக் கொஞ்சம் கொண்டு வந்தேன் ரூம் போகும்போது எடுத்துட்டுப் போ”என்றார். “வேணாம்ப்பா ரூம்ல எனக்கு சாப்பாடு இருக்கும்” தனம் கூற பெரியவரின் முகம் மாறியது.

“என்ன ஒனக்குப் பிடிக்காதா? இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாத...?” என்றதும் “சரிப்பா நான் போகும்போது எடுத்துட்டுப் போறேன்” என்றாள்.

மதியத்தில் தோழிகளோடு சாப்பிட்டாள். தோழிகள் ரசித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.“இங்க சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு” என்றாள் பிரியா. “ஆமாடி புளிச்சமாவு, தண்ணி சட்னி. ஒரு வட சாப்பிட்டா அதுக்கு தனி காசு. நம்ப சம்பளப் பணத்துல வேற கழிச்சிருவாங்க” இது நாகுவின் வருத்தம்.“என்ன பண்றது சாப்பிட ஆசயாத்தான் இருக்கு. வெளிலயும் விடமாட்டாங்க. வீட்டுக்கு காசும் அனுப்பனுமே? அத வச்சுத்தான் தம்பிக்கு வைத்தியம் பாக்க முடியும்” இது நிவேதாவின் கவலை.

“சரிங்கடி இன்னொரு தடவ கெடச்சா கொண்டு வர்றேன்.” என்றாள் தனம். பாத்திரத்தை கழுவிக் கொண்டு சென்று “ அப்பா பிரியாணி நல்லா இருந்துச்சுப்பா அம்மாகிட்ட சொல்லுங்க” என்றாள் புன்சிரிப்புடன் தனம்.

“ஒனக்கு வேற எதுவும் வேணும்னாலும் கேளு கண்ணு. காசு மெதுவா குடு. வெளில இருந்து எதுவும் தேவப்பட்டாலும் வாங்கித் தர்றேன்” என்று தனத்தை பார்த்தவாறே பெரியவர் கூறிக்கொண்டிருக்க, தனத்தை வேறு வேலைக்கு அழைக்கவும் வேலைக்கு ஓடினாள்.

அடுத்தநாள் சிறு பையுடன் பெரியவர் வந்து, அதைத் தனத்திடம் கொடுத்தார். “என்னாப்பா இது” என்று தனம் கை நீட்ட, அவளது கையைத்தடவி “ஒனக்குத்தான் இது” என்று கூறிச் சென்றவர், அவள் திறக்கப் போவதைக் கண்டு “அதைக் கொடு வேலை முடிந்ததும் தருகிறேன்” என்று படக்கென்று பையோடு சேர்த்து அவளது மார்புப் பகுதியையும் தொட்டுவிட்டார். சுருக்கென்றது தனத்திற்கு, அப்பாதானே தெரியாமல் கைபட்டிருக்கும் எனத் தேற்றிக் கொண்டாள்.

“ஒண்ணுமில்ல பிள்ளகளுக்கு தேவப்படறதுதான். வேணாண்னு சொல்லாத கண்ணு” என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டுஅகன்றார்.“சரிங்கப்பா” என்றாள் தட்டுத்தடுமாறி, அறைக்குச் சென்று திறக்க. நகப்பூச்சு, உதட்டு மை, தலைக்கு அணிபவை, வளையல்கள், பொட்டு, பவுடர் இத்யாதிகள்.

ஏன்? ஏதற்காக இவையென்று விடை தெரியாமல் விழித்தாள் தனம். அவரிடமே கொடுத்து உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இது சரியில்லை என்று நினைத்தாள். அன்று ஞாயிறு விடுமுறை நாள். இன்று வேலை செய்தாள் 150 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும். இல்லையென்றாலும், சென்றுதான் ஆக வேண்டும். பையுடன் சென்றாள். பெரியவர் வரவில்லை. குழப்பத்தோடு பையை அறைக்கு எடுத்துச் சென்றாள்.

மறுநாள் பெரியவர், “என்னா கண்ணு எல்லாப் பொருளும் ஒனக்குப் புடிச்சதா? ஒனக்கு எது பொருத்தமா இருக்கும்னு தேடிப்பார்த்து வாங்கினது” என்றார் ஒரு மாதிரியான குரூரச் சிரிப்புடன், “இல்லப்பா... இது எனக்கு வேணாம்” தனம் கூறியதும், “அப்பான்னு கூப்பிடாத” என்றார் கோபமாக.

“ஏன்ப்பா? என்னாச்சு??” என்றதும் கோபம் மாறாமல் “ஒனக்கு என்ன சொன்னாலும் புரியாதா? ஒனக்கு என்ன வேணும்னாலும் கேளுங்கிறேன். புரியமாட்டுதே?” என்று நிறுத்தி, “உள்ளாடை வேண்டுமென்றாலும் கேள்” என்றதும்,

தனத்திற்கு என்ன செய்ய ஏது செய்ய ஒன்றும் விளங்கவில்லை. திடீரென பூமியிலிருந்து அதள பாதாளத்தில் விழுந்தது போல, சிறிதாய் ஊர்ந்தாள். உடலெல்லாம் கூசி அருவருக்கத் தக்கதாய் அவள் உடலே தகித்துப் போனது.

கண்காணிப்பாளரிடம் அனுமதி வாங்கி அறைக்குச் அழுது கொண்டே சென்றாள். அன்று வீட்டிற்குத் தொலைபேசியில் பேசும் நாள். 25-வது ஆளாக இவளை அழைத்தார்கள். எதிர் முனையில் அம்மா பேசி அழவும், இவள் சொல்ல நினைத்த வார்த்தைகள் வற்றி வறுமை நினைவில் ஊமையானாள்.

மீண்டும் இயந்திரவேலை. இப்பொழுதெல்லாம் பெரியவரின் இரட்டை அர்த்தப் பேச்சுகள் அதிகமாகி, அன்று உச்சத்தைத் தொட்டது. “இங்கபாரு தனங்கண்ணு உன்ன நான் முழுங்கவா போறேன். நீ அப்பப்ப என்ன அட்ஜஸ்ட் பண்ணிக்க. உனக்கு என்ன வேணுமோ தர்றேன். காசு வேணும்னாலும் தர்றேன்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் தோளில் கைவிழ தடுமாறி கீழே விழப் போனவளை மேகலை பிடித்து விட்டாள். தொட்டது மேகலைதான்.“உங்கம்மா வந்திருக்காங்கடின்னு சொல்ல வந்தா. இப்புடி அரண்டு முழிக்கிற” என்று மேகலை கூறியதும் தனத்திற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அம்மா எனக் கத்திக்கொண்டு கட்டிப் பிடித்துக் கொண்டாள். பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மதிப்பெண் பட்டியல் வாங்க அழைக்க வந்ததாகவும் கூற, அம்மாவுடன் துடுக்குக் தனங்களை உதறிய தனம் அமைதியாக அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

சம்பளம் திரும்ப வரும்போதே கொடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. மதிப்பெண் பட்டியல் வாங்க வந்த இடத்தில், அவளது படிப்புச் செலவை ஆசிரியர்கள் ஏற்க இப்பொழுது பள்ளி செல்கிறாள். ஆனாலும் சுமங்கலித் திட்டத்தின் வடு மாறவில்லை. அதனாலேயேப் பெண்களைத் தொழிற்சாலைக்கு அனுப்ப முனையும் பெற்றோர்களைத் தடுப்பதோடு அப்பெண்கள் தொடர்ந்து பயில ஆசிரியர்களின் உதவியோடு முயன்று வருகிறாள்.

தீயினாற் சுட்டபுண் ஆறும், ஆனால் வடு? ஆண்கள் பெண்களை மதிக்கக் கற்க வேண்டும். வெறும் உடலாகப் பார்க்கக் கூடாது, என்று தனத்தின் மனம் ஏங்குகிறது? நீங்களே அதற்கு நல்ல பதிலைத் தந்திடுங்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p282.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License